வயிற்றில் சதையை குறைக்க உதவும் ஏரோபிக்ஸ&

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#1
வயிற்றில் சதையை குறைக்க உதவும் ஏரோபிக்ஸ்

பெண்களில் பலர் முப்பது வயதை தொடுவதற்குள் ஏகப்பட்ட மடிப்புகள் விழுந்து, சதைகள் தொங்கி இளமையிலேயே முதுமையானவர்கள்போல வாழ்கிறார்கள். இதற்கு எல்லாம் காரணம் தொடர்ந்த உடற்பயிற்சி இன்மைதான். இத்தகைய பெண்கள் எல்லாம் ஏரோபிக்ஸ் பயிற்சி செய்து வந்தால் உறுதியான உடம்புடன் கட்டழகினையும் பெறலாம்.

இப்படி சதை தொங்கி, மடிப்பு மடிப்பு ஆக விழ கொழுப்பு கூடுவதுதான் காரணம். இத்தகைய வேண்டாத கொழுப்புகளை எல்லாம் ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி கரைத்து விடும். இன்னும் சில பெண்கள் வயிற்றில் தொங்கும்

வேண்டாத சதைகளையும், பருமனான உடம்பையும், பெருத்த வயிற்றையும் குறைக்க பெல்லிரோலர், வைபிரேட்டர் போன்ற கருவிகளில் முயற்சி செய்து, பணத்தை ப்யூட்டி பார்லர்களில் செலவு செய்த பின்னரும் வயிறு சதை, குண்டான உடம்பு, பலூன் வயிறு குறையவில்லையே புலம்புவார்கள். இத்தகைய பெண்மணிகள் எல்லாம் லோ இம்பாக்ட் ஏரோபிக்ஸ் என்கிற உடற்பயிற்சியினை செய்து எளிதில் உடல் வளம் பெறலாம்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.