வரன் தேடுகிறீர்களா? - Tips to find good groom!

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1
வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள், சுய ரூபத்தையும் கண்டறியுங்கள் திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிருக்குத் தயாரிக்கிற நிகழ்ச்சி. பெண்ணைப் பார்த்தோம், தாலியைக் கட்டினோம் என்று சுலபமாக முடியக்கூடிய காரணம் அல்ல.

`ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தை முடி` என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு `அறிவுரை` எத்தனை தரகர்கள் ஊடே நுழைந்தாலும், ஏன் நெருங்கிய உறவினர்களோ நண்பர்களோ தலையிட்டிருந்தாலும், திருமணத்திற்குரிய பெற்றோர் நேரடியாகத் தலையிட்டு பெண்ணையோ, மாப்பிள்ளையையோ தேர்வு செய்யும் முயற்சியில் இறங்க வேண்டும்.


நீங்கள் பெண் வீட்டாரா? பெண்ணை வீட்டில் வைத்திருப்பது வயிற்றில் நெருப்பைக் கட்டி வைத்திருப்பதுபோல் இருக்கிறதே என அங்கலாய்க்றீர்களா? அவசரப்பட்டு பொருத்தமில்லாத எவனுக்கோ கட்டி வைத்து வாழ்நாள் எல்லாம் அவளைக் கண்ணீர் சிந்தவிடாதீர்கள். அவள் மட்டும் அல்ல; பெற்றோர் ஆகிய நீங்களும் அவளோடு சேர்ந்து இத்து இத்து மடிய வேண்டியிருக்கும். உங்கள் பெண்ணுக்கு இனி ஒருவன் பிறக்க போகிறது இல்லை. எங்கோ இருக்கிறான்! தேட வேண்டியது உங்கள் வேலை. அல்லது யாராவது மாப்பிள்ளை வீட்டார் உங்களைத் தேடி வருவார்கள்.


`மாப்பிள்ளை குடிக்கிறாரா?` இரகசியமாக நம்பிக்கையான ஆள் வைத்து விசாரியுங்கள். மாப்பிள்ளைக்கு வேண்டியவர்கள் பொய் சொல்லி ஏமாற்றுவார்கள் உஷாராய் இருங்கள்."மாப்பிள்ளை பெரிய உத்தியோகம் பார்க்கிறார். இந்தக் காலத்தில் யார் தான் குடிக்காமல் இருக்கிறார்கள்!" என்று முலாம் பூசுவார்கள்.அவன் கத்தைகத்தையாக எத்தனை ரூபாய் சம்பாதித்தாலும் சரி, வேண்டவே வேண்டாம். உங்கள் மகளும் அவளது வருங்காலப் பிள்ளைகளும் அந்தக் குடிகாரன் கையில் அகப்பட்டு இரவு பகல் தூக்கமின்றி அவதிப்படவேண்டியுருக்கும். உங்கள் வீட்டில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் சலம்பல் பண்ணுகிறவன் அவனாகத்தான் இருப்பான்!


உங்கள் பெண்ணுக்கு தேடி வரும் மாப்பிள்ளை தங்கமான பையன் கொஞ்சம் முன் கோபம்! வெடுக்குனு கோபப்படுவார் . ஆனால் "கோபம் இருக்கிற இடத்தில் தானே குணம் இருக்கும்!" இப்படியொரு விமர்சனம். கோபப்படுகிற இடத்தில் குணம் இருக்கும் என்பது மழுங்கடிக்கப்பட்ட பழமொழி.கோபத்தில் கொடுமையான வார்த்தைகள் , அடிதடிகள், கொலை பாதகம் எல்லாம் நடந்து இருக்கின்றன.


கோபம் இல்லாத மனிதர்கள் இல்லையென்பது உண்மை தான். இருந்தாலும் பல கணவர்கள் எல்லை தாண்டிய கோபத்துக்கு அடிமையாகி பிள்ளைகளைத் தாறுமாறாக அடிப்பதும், டி.வி. பெட்டியை உடைப்பதும், மனைவியை எட்டி உதைப்பதும் போன்ற அட்டூளியங்களில் ஈடுபட்டு தெரு சிரிக்க வைக்கிறார்களே! கோபப்படுகிற பையன்கள் அவர்கள் வீட்டில், பக்கத்துக்கு வீடுகளில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று விசாரித்து மாப்பிள்ளையை தேர்வு செய்யுங்கள்.


சிலர் வெளியே பூனைபோல் இருப்பார்கள். வீட்டில் புலியாக மாறுவார்கள். கோபத்தில் தாறுமாறாக, கேவலமாக நடக்கும் பையன் உங்கள் மகளுக்குத் தேவையில்லை.


நீங்கள் தேர்வு செய்ய நினைக்கும் மாப்பிள்ளை ஏதாவது கிரிமினல் வழக்குகளில் அகப்பட்டு வழக்குகள் நிலுவையில் இருந்தால் அது யோசிக்க வேண்டிய விஷயம். பின்னால் சிக்கல் வளர வாய்ப்பு உண்டு.மாப்பிள்ளை நல்ல குணம். ஆனால் சம்பாத்தியம் இல்லை. பெண் வீட்டார் தான் அவரைத் தாங்க வேண்டும் என்ற நிலை இருந்தால் அவரை எப்படி ஏற்க முடியும்?
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#3

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#5

Mirage

Commander's of Penmai
Joined
Sep 17, 2014
Messages
1,078
Likes
6,580
Location
தார் பாலைவனம்
#6
நல்ல அறிவுரை.


நல்ல பெண்களை கண்டறியும் முறையையும் சொன்னால் தேவலாம்.
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#7
நல்ல அறிவுரை.


நல்ல பெண்களை கண்டறியும் முறையையும் சொன்னால் தேவலாம்.
sollittaa pochu........:rolleyes: All the best......:thumbsup
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#9

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#10
தேவையான குறிப்புகள் . நன்றி
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.