வரலாறு மிகவும் முக்கியம்’

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,601
Likes
73,723
Location
Chennai
#1
அறிவனின் அருங்காட்சியகம் சொல்லும் சேதி


புதுச்சேரியில் தனி நபரால் நடத்தப்படும் அருங்காட்சியகம்.


அறிவன்

புதுச்சேரியில் தனி நபரால் நடத்தப்படும் அருங்காட்சியகம்.


ரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே என்பது காமெடி வசனம் மட்டுமல்ல அவசியமும் கூட. வரலாற்றை கற்காத சமூ கம் செரிந்த வளர்ச்சியை பெறமுடியாது. வரலாற்றை அறிய பல வழிகள் உண்டு. அதில் ஒன்றுதான் கால நிகழ்வாய் நடந்த ஒன்றின் ஆவணங்களை காட்சிப்படுத்துவது. அந்த அரும்பணியை ‘அருங்காட்சியகங்கள்’ செய்து வருகின்றன.
புதுச்சேரியில் தனி ஒரு நப ரின் முயற்சியால் சிறு அருங்காட்சியகம் ஒன்று தொடங்கப்பட்டிருக்கிறது. நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்த, அருங்காட்சியகத்தை பார்வையிடச் சென்றோம். அங்கு காட்சிப்படுத்தப்பட்ட விவரங்களை நமக்கு விளக்கினார், அதை தொடங்கி நடத்தி வரும் அறிவன்.
சிறுவயதில் இருந்தே மொழி, வரலாறு மீது ஆர்வம் கொண்ட அறிவன் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு தொடங்கி பல மொழிகளை கற்றவர். ஏராளமான அரிய நூல்கள், படங்கள் என அனைத்தையும் சேகரித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் தன்னிடம் உள்ள பொக்கிஷங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்பியிருக்கிறார். அப்படி உதயமானதுதான் இந்த அருங்காட்சியகம். 8 ஆண்டு உழைப்பின் பல னாக அருங்காட்சியகத்தின் ஆரம்ப கட்டப்பணிகள் முடிந் துள்ளன.
அறிவன் நம்மிடம் கூறினார், “இந்த அருங்காட்சியகத்தில், முதல் முயற்சியாக நூற்றுக்கும் மேலான புதிய, பழைய நிலத்தியல் வரலாற்றுப் படமங்களை யும் நூற்றுக்கும் மேலான பழைய புதிய அஞ்சல் அட்டைகளையும் கொண்டு தொடங்கியுள்ளோம். அடுத்ததாக அஞ் சல் தலைகள் அருங்காட்சியகப் பிரிவு, நாணய அருங்காட்சியகப் பிரிவு ஆகியவையும் கொண்டு வர உள்ளோம். ஏராளமான அரிய புத்தகங்களை யும் சேகரித்துள்ளேன்.
தற்போது புதுச்சேரியின் முக் கிய இடங்கள், உலக வரைபடங்கள், நாடுகளில் சூழல்கள், நெப்போலியன் எழுதிய காதல் கடிதங்கள் உட்பட பல விவரங் கள் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன. புதுச்சேரியின் உள்ள ஒவ்வொரு தெரு பெயருக்கு பின்னும் ஓர் வரலாறு உண்டு. 3 ஆண்டுகளாக அதை ஆய்வு செய்து வருகிறேன். இந்த முயற்சிகள் யாவும் இந் தோ- பிரெஞ்சு அருங்காட்சிய கம் என்ற மிகப்பெரிய தளத்தின் மிகச்சிறிய அடிப்படையே” என்கிறார் இயல்பாக.
படமக் காட்சியகம் குறித்துக் கேட்டோம். ‘படமம்’ என்பது தமி ழில் துணியை குறித்து வழங்கப்படும் சொல். உலக வரைப்படங்களை குறிப்பதற்காகத் தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்ட பிரெஞ்சு சொல்லான Carte மற்றும் ஆங்கிலச் சொல்லான ‘Map’ ஆகிய சொற்கள் தற் போது பலவகை அறிவிப்புகளை மக்களுக்கு கொண்டு செல்வதற்கான சிறந்த கருவியாக பயன்படுத்தப்படுகிறது. இதற்கான அழகியத் தமிழ்ச் சொல்தான் படமம்.
படங்கள், செய்திகள் அடங் கிய அனைத்துப் பொருட்களை யும் அதாவது நில வரைபடங்கள், செய்தி, வரலாற்று, அறிவியல் மற்றும் இலக்கிய வரைபடங்கள், பழங்கால புகைப்படங் கள் என அனைத்து வகையான ஆவணங்களையும் படமக் காட்சியத்துக்குள் அடக்கலாம்” என ‘படமம்’ சொல்லுக்கு விளக்கம் அளித்தார் அறிவன்.
மதுரையில் தமிழ் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பதும் இவரின் ஆசை.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.