வளர்சிதை மாற்றம் (Metabolism)

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
வளர்சிதை மாற்றம் (Metabolism)
டயாபடீஸ்ஸை metabolism கோளாறு என்கிறோம். metabolism என்பது உடலில் வளர்ச்சிக்காக ஏற்படும் வேதியல், ரசாயன மாற்றங்கள் மற்றும் ஜீரண மண்டல இயல்பாடுகள், உணவு சத்துப் பொருளாக மாற்றுதல், உயிரணுக்கள் (Cells), திசுக்கள் உண்டாக இவற்றுக்கு தேவையான எரிபொருள்சக்தி போன்ற எல்லாவித இயல்பாடுகளையும் குறிக்கும் ஒரே வார்த்தை. நம் உணவு எவ்வாறு ஜீரணிக்கப்படுகிறது என்று முதலில் நாம் தெரிந்து கொள்வோம்.

நாம் பலவித உணவுகளை பலவித இடங்களில் உண்ணுகிறோம். நாம் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சாப்பிட்டாலும் சரி, "கையேந்தி" பவன்களில் சாப்பிட்டாலும் சரி, இல்லை வீட்டில் சாப்பிட்டாலும் சரி, நம் உடல் நாம் சாப்பிடும் உணவை புரிந்து கொள்ளாது, அதற்கு தயிர் சாதமும் ஒன்று தான், மட்டன் பிரியாணியும் ஒன்று தான். அதற்கு தெரிந்த தெல்லாம், மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, விட்டமின்கள், தாதுப்பொருட்கள் இவை தான்.

நாம் உணவு உண்பது எதற்காக?

உடல் வளர்ச்சிக்காக, உடல் உறுப்புகள் சரிவர, சுறு சுறுப்பாக இயங்க, உடலை பாதுகாக்க, உடல் வலிமைக்காக, சுருக்கமாக சொன்னால் உயிருடன் வாழ உணவு தேவை. நாம் உண்ணும் உணவில் உள்ள மாவுப்பொருளை சர்க்கரையாகவும், புரதத்தை அமினோ அமிலமாகவும், கொழுப்பை, கொழுப்பு அமிலங்களாகவும் (Glycerol) கிளிஸராலாகவும் மாற்றப்படுகின்றன. இதற்கு வயிற்றில் உண்டாகும் ஜீரணத்திரவங்கள் (Gastric juices), கல்லீரலால் உண்டாகும் பித்த நீர் (Bile), கணையம் தயாரிக்கும் என்ஸைம்களும் உதவுகின்றன.

மாவுப்பொருட்கள் (Starch, Carbohydrates) மூன்று ரக சர்க்கரைகளாக மாற்றப்படுகின்றன. அவை

1. ஒற்றை சர்க்கரை (Mono – Saccharide) - இவை பழங்கள், பால் சார்ந்த உணவுகள், தேன், அத்திப்பழம் இவற்றிலிருந்து கிடைக்கும் Fructose. பழச்சர்க்கரை எளிதில் ஜீரணமாகி உடனே ரத்தத்தில் கலக்கும்.

2. இரட்டை சர்க்கரை (Di – saccharide) இரண்டு மானோ சாக்ரைடுகள் சேர்ந்தவை. மால்டோஸ் (Maltose), லாக் டோஸ் (Lactose) மற்றும் சுக்ரோஸ் (Sucrose). மால்டோஸ், முளைகட்டிய தானியங்களிலிருந்து கிடைப்பது. லாக்டோஸ் பாலில் இருந்து கிடைப்பது. சுக்ரோஸ், கரும்பு, சர்க்கரை பீட்ருட்டிலிருந்து கிடைப்பது. இந்த direct சர்க்கரையான சுக்ரோஸ் கடந்த 50 வருடங்களில் அதிகமாக உட்கொள்ளபடுவதால், பற்கள் சிதைவு, டயாபடீஸ், உடல்பருமன், இருதயநோய், இவை அதிகமாகி விட்டன.

3. பல சர்க்கரை (Poly – Saccharides) - இது அரிசி, கோதுமை, கேழ்வரகு, கிழங்குகளிலிருந்து கிடைக்கும். இது கல்லீரலில் க்ளைகோஜன்(Glycogen) என்ற சர்க்கரையாக சேமித்து வைக்கப்படுகிறது.

தசைகளும் Glycogenஐ சேமித்து வைக்கும். இந்த மாதிரி சேமித்து வைக்கப்பட்ட Glycogen ஒரு நாள் கலோரி தேவைக்கு போதுமானது.

இந்த மாதிரி மாற்றப்பட்ட சர்க்கரை சக்தியை உடலெங்குமுள்ள செல்கள் மற்றும் திசுக்களுக்கு கொண்டு செல்வது இரத்தத்தின் கடமை. பொறுப்பாக இந்த சக்தியை ரத்தம் மாத்திரம் கொண்டு சென்றால் அதை செல்கள் ஏற்காது. ரத்தத்துடன் கூட, செல்களுக்கு அறிமுகமான ஒரு ஹார்மோன் உதவியாளர் தேவை. இந்த உதவியாளர் தான் 'இன்சுலின்'.

செல்கள் ஏன் ரத்தத்தை மட்டும் அனுமதிப் பதில்லை?

உடல் செல்கள் membrane எனப்படும் சவ்வால் – சருகால் மூடப்பட்டவை இந்த membrane கள் வெறும் "பை" அல்ல. Receptors எனும் புகு வாய்களை கொண்டவை. இவை பிற செல்களை அடையாளம் கண்டு கொள்ளும் திறமை வாய்ந்தவை. யாரை உள்ளே விடுவது யாரை உள்ள விடக்கூடாது என்று தெரிந்தவை.

எதற்காக இந்த பாதுகாப்பு?

உடலின் ஒவ்வொரு உறுப்பிலும் செல்கள் உள்ளன. இவை அந்தந்த அவயத்திற்கு ஏற்ப பிரத்யேகமானவை. இவை வேறு அவயங்களுக்கு சென்று விட்டால் குழப்பம் தான். உதாரணமாக தலை முடி செல் கண்ணுக்குள் புகுந்து விட்டால், கண்களிலிருந்து முடி வளரும்!

எனவே ரத்தம் தனியாக செல்களை அணுகி, க்ளுகோஸை தள்ளி விட முடியாது. கூடவே செல்லும் இன்சுலின் தான் திறவுகோல். சாவி பூட்டைத் திறப்பது போல், இன்சுலின் உடல் செல்களுடன் ஒட்டி இணைந்து, "தாள் திறவாய்" என்று செல்லின் அனுமதியுடன் குளுகோஸை செல்லுக்குள் செலுத்த உதவும்.

எனவே தான் இன்சுலின் குறைந்தாலோ அல்லது நின்று விட்டாலோ ரத்தத்தில் சர்க்கரை தேங்கிவிடும்.

உணவில் உள்ள கார்போஹைடிரேட் சில மணி நேரங்களிலேயே ஒற்றை சர்க்கரையாக மாற்றப்படும். இந்த ஒற்றை சர்க்கரை ரத்தத்தில் காணப்படும் மற்றும் எரிசக்தியாக உடலுக்கு உதவும். சில கார்போஹைடிரேட்டுகளை மாற்றுவதில்லை. இவை பழச்சர்க்கரை. இவை நேரடியாக செல்களின் எரிபொருளாகின்றன. இவை குளூக்கோஸாக மாற்றப்படுவதில்லை. தவிர செல்லுலோஸ் எனப்படும் மாவுச்சத்தும் குளூக்கோஸாக மாற்றப்படுவதில்லை. காரணம் இவற்றை நம் உடல்களால் மாற்ற இயலாது!

நன்றி - உணவு நலம் டிசம்பர் 2011
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.