வளர்ச்சி (developmental disorder) நோய்.

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,251
Likes
20,719
Location
Germany
#1
செங்கல், மண், விபூதி, குச்சி, பற்பசை, கரி, சாக்பீஸ், அரிசி போன்ற சாப்பிடத் தகாதவற்றை குழந்தைகள் சாப்பிடுவது ஒரு வளர்ச்சி (developmental disorder) நோய்.

குழந்தைகள் வாயில் விரல் சப்புவது ஒரு வளர்ச்சி நிலை! ஒரு அறிந்துகொள்ளும் செயல்! (Oral phase of learning) குழந்தை எல்லாவற்றையும் வாயில் வைப்பதும், 9 - 10 மாதங்களில் எந்த சின்னப் பொருளையும் எடுத்து வாயில் போட்டுக் கொள்வதும் இந்தக் கற்றலுக்காகத்தான்! இது மிகவும் நுண்ணிய ஒரு வளர்ச்சி கோட்பாடு.


பல்முளைக்கும் பருவத்தில் வாயிலும், ஈறுகளிலும் ஒரு குறுகுறுப்பு உணர்வு ஏற்படும். ஏதாவது மெல்ல வேண்டும், கடிக்க வேண்டும் போல குழந்தை உணரும்! எது சாப்பிடும் பொருள், எது சாப்பிடக் கூடாதப் பொருள் என்றும் தெரியாத வயதல்லவா! அதனால் எதை எடுத்தாலும் கடிக்கும். குழந்தைவளர வளர இந்த செய்கை மாறி வருகிறது. 1 1/2 2வயதிற்குப் பிறகும் குழந்தை கல், மண் என்று கண்டதை சாப்பிட்டால் இது ஒரு நோயாகக் கருத வேண்டும்.


குழந்தைகள் ஏன் இப்படி செய்கின்றன?
இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. எனினும் மன ரீதியான காரணங்கள் தான் மிகவும் முக்கியமானவை.


மனரீதியான காரணங்கள்
*பெற்றோரிடையே சண்டை சச்சரவு
*சிதைந்த குடும்பம்
*பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு வளர்த்தல்
*ஒரு பாதுகாப்பு உணர்ச்சி இல்லாத சூழ்நிலை
*குழந்தைக்கு சரியான கவனிப்பு / மேற் பார்வை இல்லாத நிலை
*பெற்றோர், குழந்தையுடன் நேரம் செலவிடாமல் இருப்பது.
*தாய் வேலைக்குச் செல்லுதல்


சமூக பொருளாதார காரணங்கள்
* ஏழ்மை
* உணவுப் பற்றாக் குறை
* இடப் பற்றாக் குறை (கூட்டமாக வாழ்தல்)


சில நோய்கள்
*சத்துணவு குறைபாடு நோய்கள்
* இரத்த சோகை
* இரும்புச் சத்து குறை பாடு
* துத்தநாகக் குறைபாடு
* குடல் புழுக்கள்


உடலில் ஏற்படும் இரும்புச் சத்து மற்றும் துத்தநாகக் குறைபாடு நாக்கில் மாறுபட்ட ருசியை ஏற்படுத்துவதால் ஐஸ் மற்றும் கல், மண் சாப்பிடத் தோன்றும். கர்ப்பக் காலத்தில் மகளிர் இந்தப் பழக்கத்துக்கு ஆளாவதும் நாக்கில் ஏற்படும் இந்த மாறுபட்ட ருசியால்தான்.


இதனால் ஏற்படும் பாதிப்புகள்!
* வயிற்றில் கிருமித் தொற்று
* வயிற்றுப் போக்கு
* மலச்சிக்கல்
* குடல் புழுக்கள்
* பசியின்மை
* சத்துக் குறைபாடு நோய்கள்
* இரத்த சோகை
* இரும்புச் சத்து குறைபாடு
* உடலில் காரீய நச்சு சேருதல்
* அதிகம் எரிச்சல்படுதல்


குடல் புழுக்கள், சத்துணவு குறைபாட்டு நோய்கள், இரத்த சோகை, மன எரிச்சல், மனநல பாதிப்பு போன் றவை காரணங்களாகவும் இருக்கின்றன. விளைவாகவும் இருக்கின்றன.


இதற்கு தீர்வு

குழந்தையைத் தண்டிக்க முயற்சிக்கக் கூடாது. இது அடித்துத் திருத்த வேண்டிய பழக்கம் அல்ல! அடிப்பதால், தண்டனைகள் தருவதால் இந்த நோய் அதிகமாகும் வாய்ப்பு உள்ளது. அடிக்கு பயந்து குழந்தை மறைவில் சென்று தின்னும்; ஏமாற்றும். தின்னவில்லை என்று பொய் சொல்லும் பழக்கமும் ஏற் படும். அடி வாங்குவதால் பெற்றோர் மீது வெறுப்பு அதிகமாகி மன உளைச்சல் ஏற்பட்டு இன்னும் அதிகமாக மண் சாப் பிடத் துவங்கும். மண் தின்றாயா?" என்று கேட்டால், அதை மறைத்து மேலும் மேலும் பொய் சொல்லவும் ஆரம்பிக்கும்! இது நல்லதல்ல!


குழந்தையிடம் அன்புடன் அணுகி, அதனிடம் தகுந்த அக்கறைக் காட்ட வேண்டும். குழந்தையுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும். இப்படித் தின்ப தால் என்னென்ன தீமைகள் என்று அதன் வயதிற்கு ஏற்பப் புரிய வைக்க வேண்டும்! குழந்தைக்கு நல்ல மாறுதல் ஏற்பட வழி வகுத்துக் கொடுக்க வேண்டும் (Diversion). நல்ல விளையாட்டுக்களில் ஈடுபட வைக்கலாம்.
கதை, பாட்டு சொல்ல வைத்து கவனத்தைத் திருப்ப முயற்சிக்கலாம். வர வர இந்தப் பழக்கம் குறைந்து வருகிறதா என்று நிதானமாக மேற்பார்வை பார்க்க வேண்டும். கவனமாகச் செயல்பட வேண்டும். ஆசிரியர், சக குழந்தைகளின் உதவியையும் பெறலாம்.


குழந்தைக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை குடல் பூச்சி மருந்தினை கொடுக்க வேண்டும். குழந்தைக்கு சத்துக்குறைபாடு நோய்கள், சோகை போன்றவை இருந்தால் அவற்றிற்கு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.

அன்பும் அரவணைப்பும் தந்து குழந்தைகளைப் பேணினாலே, இந்தப் பிரச்னை மறைந்துவிடும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.