வாசிப்பில் வசப்பட்டவள் நான்

vidhyalakshmi15

Commander's of Penmai
Joined
Oct 12, 2017
Messages
1,797
Likes
1,205
Location
Switzerland
#1
வாசிப்பில் வசப்பட்டவள் நான்
வாசிப்பில் வசப்பட்டவள் நான். காகிதங்களின் ஒருங்கிணைப்பை புத்தகம் என்பதைவிடப் பொக்கிஷம் என்று கூறுவதிலேயே என் உள்ளம் மகிழ்கிறது. எனக்குள் நிரம்பியிருந்த கவிதை எழுதும் ஆர்வமே என்னைப் புத்தகங்களின் மீது நாட்டம் கொள்ள வைத்தது. புத்தக வாசிப்பை என் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது தொடங்கினேன். இதற்கு முக்கிய காரணம் என் சகோதரர் பழ.சரவணன்தான்.
புத்தகங்கள் படிக்க எனக்குக் கற்றுக்கொடுத்தவரும் அவர்தான். மனம் எங்கோ எதையோ நினைத்துக் கொண்டிருந்தாலும் என் விழிக்கு வழிகாட்ட உதடுகள் உயிரோட்டமாய் ஏதோ ஒரு புத்தகத்தின் வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டேதான் இருக்கும். எவ்வளவு பெரிய மனக் காயத்தையும் தீர்க்கும் சக்தி புத்தகங்களுக்கு உண்டு. புதிய புத்தகங்களை வாங்கும்போது நாசியினுள் புகும் அதன் காகிதங்களின் வாசனை மல்லிகையின் மணத்தையும் மிஞ்சியது. பெண்கள் சார்ந்து எழுதப்பட்ட புத்தகங்கள் என் அறை முழுவதும் நிரம்பி வழிகின்றன. புரட்சியாளர் சேகுவேராவின் வாழ்க்கை வரலாறுதான் முதன்முதலில் நான் வாசித்தப் புத்தகம்.

சேவின் புத்தகத்திற்கு பிறகே நான் பல சரித்திரங்களை தேடித் தேடிப் படித்தேன். கவிஞர் வைரமுத்து எழுதிய கருவாச்சி காவியம், வாசித்தபோது நானும் அதன் ஜீவனுள் கரைந்து புத்தகங்களில் வரும் காட்சிகளுடன் வாழ்வதுபோல் உணர்ந்தேன். பயணத்தின்போது புத்தகங்கள் படிப்பது அலாதியான அனுபவம். புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினாலே அவை என்னை மூழ்கடித்து விடுகின்றன. எனக்கான சுதந்திரத்தையும் உரிமையையும் புத்தகங்கள் மூலமாகத்தான் மேலும் விசாலமாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. மற்ற மொழிப் புத்தகங்களைவிட தாய்மொழிப் புத்தகங்கள் நம்முடைய தோழனாக மாறிவிடுகின்றன.
புத்தகங்கள் படிக்கத் தொடங்கிவிட்டாலே அவற்றுடன் நாம் பேசலாம், சண்டை போடலாம், தெரியாத விஷயங்களுக்குப் பதில்களைத் தெரிந்துகொள்ளலாம். வெறும் காகிதங்களும், அச்சிடப்பட்ட எழுத்துக்கள் மட்டும் புத்தகங்களில் இருப்பதில்லை ஒவ்வொரு புத்தகமும் நம்முடைய கையில் அமர்ந்திருக்கும் ஆசான்கள். ஆரம்பத்தில் இரவல் வாங்கிப் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கிய என் பயணம் இன்று பிறருக்கு இரவல் தரும் நிலைக்கு வந்துவிட்டது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.