வாதாயநாசனம்

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1
செய்முறை :

முதலில் தரையில் உட்கார்ந்து, வலது கால் பாதத்தை இடது தொடை மீது வைக்கவும். அதாவது அடிவயிற்றை வலது குதிகால் தொட்டு கொண்டிருக்க வேண்டும். அடுத்து உள்ளங்கைகளை உடலுக்கு பக்கவாட்டில் தரையில் ஊன்றி மேலே எழவும்.

அப்படி செய்யும்போது வலது கால் மூட்டுபகுதியால் தரையில் முட்டிகொடுக்க வேண்டியிருக்கும். மேலும் இடது காலும் சற்று முன்பக்கம் வளைந்திருக்கும். அடுத்து மூச்சை ஆழ்ந்து உள் இழுத்து கொண்டே உடலை நேராக நிமிர்த்தி இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்றாக சேர்க்கவும்.

பிறகு மூச்சை வெளியிட்டுக்கொண்டே நெஞ்சுக்கு நேராக வணக்கம் தெரிவிப்பது போல் கைகளை மடக்கி வைக்கவும். இந்த நிலையில் 20 விநாடிகள் இயல்பான சுவாசத்தில் இருந்த பிறகு பழைய நிலைக்கு வரவும். அடுத்து கால்களை மாற்றி முன்பு செய்ததை போல் செய்யவும். இவ்வாறு 5 முதல் 7 முறை செய்ய வேண்டும்.

பலன்கள் :

முழங்கால், கணுக்கால் மற்றும் மூட்டுகளுக்கு நன்கு இயங்கும் தன்மையையும், உறுதியையும் அளிக்கிறது. இடுப்பு எலும்புகளுக்கு உறுதியையும், வலுத்தன்மையையும் அளிக்கிறது. இடுப்பு பகுதியில் ஏற்படும் தசை இறுக்கத்தை போக்குகிறது. தண்டுவட எலும்புகளை நேர்நிலையில் இருக்க வைக்கிறது. தோள்பட்டை தசைகளுக்கு வன்னையை அளிக்கிறது. கழுத்து எலும்புகளை பலப்படுத்த உதவுகிறது
 

rifan

Yuva's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 13, 2011
Messages
8,177
Likes
10,174
Location
Sri Lanka
#2
inthe yoga bones ku micham nallam pola irukku.....
thakavalkalukku nanri
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.