வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#1
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-
பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும்.

2.நாக்குப் புண் குணமாக:-
நெல்லி வேர்ப் பட்டையைப் பொடி செய்து தேனில் கலந்து சப்பிட்டு வர நாக்குப் புண் குணமாகும்.


3.உள் நாக்கு சதை வளர்ச்சி தீர:-
உப்பும், பழைய புளியும் அரைத்து தொண்டைக்குள் தடவி வர உள் நாக்கில் உண்டாகும் சதை வளர்ச்சி தீரும்.

4.வாய்ப்புண்,உதட்டில் ஏற்படும் வெடிப்பு குணமாக:-
அத்திக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து உண்டு வரத் தீரும்.அல்லது ஆலம்பாலைத் தடவி வரத் தீரும்.

5.வாய் துர் நாற்றம் தீர:-
நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து தட்டிப் பொடித்து வெந்நீரில் ஊற வைத்து வாய் கொப்பளித்து வர வாய்
துர் நாற்றம் தீரும்.

6.வாயில் ஏற்படும் துர் நாற்றம் நீங்க:-

தினசரி கோதுமைப் புல்லை வாயிலிட்டு மென்று துப்பி விடக் குணமாகும்.

7.வாய் நாற்றம் தீர:-
கொட்டைப் பாக்குடன் சிறிது கிராம்பு சேர்த்துப் பொடி செய்து சாப்பாட்டிற்குப் பின் வாயிலிட்டு பின் துப்பி விட வாய் நாற்றம் தீரும்.

8.தொண்டைப்புண் மற்றும் ஈறுகளில் இரத்தம் வடிதல் சரியாக:-

இலந்தை தளிர் இலையை கொதிக்க வைத்து உப்பிட்டு வாய் கொப்பளித்து வர தொண்டைப்புண்,ஈறுகளில் இரத்தம் வடிதல் குணமாகும்.

9.குரல் கம்மல் தீர:-
மாந்தளிர் பொடி ஒரு கிராம் கசாயம் செய்து குடித்து வர குரல் கம்மல் (தொண்டைக் கட்டு) தீரும்.

10.குரல் மாற்றத்தை சரி செய்ய:-
கடுக்காய் தோல் சிறிதளவு வாயிலிட்டு ஒதுக்கிக் கொள்ள வரும் உமிழ் நீரை விழுங்கி வர குரல் மாற்றம் தீரும்.

11.இருமல், தொண்டை வலி குணமாக:-
சுக்கு, மிளகு, திப்பிலி சம எடை எடுத்துப் பொடி செய்து சுமார் 2கிராம் அளவு தேன் சேர்த்து காலை மாலை உண்டு வர இருமல், தொண்டை வலி தீரும். தொடரும்!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.