வாய் புண் குறைய

#1
வாய் புண் குறைய


நன்கு பழுத்த நாவல் பழத்தை உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.

மோரில் சிறிதளவு உப்பை சேர்த்து அதை ஐந்து நிமிடம் வாயில் வைத்திருந்து பின்பு கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் வாய்ப்புண் குறையும்.

திருநீற்றுப்பச்சிலையை வாயில் போட்டு மென்று வந்தால் வாயில் ஏற்படும் புண் குறையும்.

அகத்தி இலையை தண்ணீர் விட்டு நன்கு அவித்து வடிகட்டி அந்த தண்ணீரை குடித்து வந்தால் வாய்ப்புண் குறையும்.

சமையல் சோடா, உப்பு எடுத்து வெதுவெதுப்பான நீரில் போட்டு நன்றாக கலந்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண், தொண்டைப்புண் ஆகியவை குறையும்.

வெந்தயக்கீரைகளை தண்ணீர் விட்டு நன்றாக காய்ச்சி வெதுவெதுப்பான சூட்டில் வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குறையும்.

நல்லெண்ணெய் சிறிது வாயில் வைத்து கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குறையும்.

கையளவு மணத்தக்காளிக் கீரையுடன் 4 சிட்டிகை மஞ்சளையும் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டால், வாய்ப்புண் குறையும்.