வாழைத்தண்டில் இவ்ளோ இருக்கா?

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1
`பாஸ்ட் புட்' கலாசாரத்திற்கு மாறிவிட்ட இன்றைய மனிதர்கள் அருந்தும் குடிநீரின் அளவு குறைந்துவிட்டது. அதன்விளைவு... சிறுநீரக சம்பந்தப்பட்ட பல நோய்களின் வருகை அதிகரித்து விட்டது.[/FONT]
பொதுவாக சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளால் சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருப்பதாலோ அது பல பிரச்சினைகளைத்
தோற்றுவிக்கிறது. அதில் ஒன்று... சிறுநீரகத்தில் கல் ஏற்படுவது.[/FONT]

அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தேக்கப்பட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன.[/FONT]
வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. அதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.[/FONT]
வாழைத்தண்டு மேலும் பல நன்மைகளையும் மனிதனுக்கு தருகின்றது. அவை...[/FONT]
வாழைத்தண்டு நார்ச்சத்து கொண்ட உணவு என்பதால் அதிக உடல் எடையால் அவதிப்படுபவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்கள் இதை அடிக்கடி உணவாக எடுத்துக்கொள்ளலாம்.[/FONT]
உடலைக் குளிர்ச்சி அடைய வைக்கும் தன்மை வாழைத்தண்டுக்கு இருப்பதால் கோடை காலத்திலும் இதை உணவாக பயன்படுத்தலாம். வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தியும் இதற்கு இருக்கிறது.[/FONT]
பெண்கள், தங்களது மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்து வந்தால் அவர்களது உடல் பலம் பெறும். மேலும், மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நோய்க்கும் இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது.[/FONT]
உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்களும் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

-senthilvayal
[/FONT]
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.