வாழ்தலின் அழகியல்

girija chandru

Penman of Penmai
Blogger
#1
வாழ்தலின் அழகியல்
=====================
இந்த தலைப்பில் ஒரு திரியினை இன்று நான் துவங்குகிறேன்.

வாழ்க்கையையு
ம் வாழ்தலின் அழகையும் நாம் குழந்தைகளிடம் மட்டுமே கண்டு கொள்ள முடியும். !!!! அனால் நாம், அவர்களுக்கு "அதைக் கற்றுக் கொடுக்கிறேன், இதைக் கற்றுக் கொடுக்கிறேன்" என்று பெயர் பண்ணிக் கொண்டு, அவர்களின் விடுதலைச் சிறகுகளை பறிக்க முயல்கின்றோம்.

நாம் என்ன செய்யலாம்??? எப்படி குழந்தைகளோடு, குழந்தைகளாக வாழ்வின் ஒவ்வொரு துளியினையும் மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம்? என்று இந்த திரியில் அலசுவோமா?

:yo::thumbsup:cheer:

 

girija chandru

Penman of Penmai
Blogger
#2
குழநதைகளோடு பழகுவதில், அவர்கள் உலகத்தைப் புரிந்துக் கொள்ள முயற்சிக்கும் போதும், பெற்றோரான நாம் எப்போதும் ஒரு முக்கியத் தவற்றை செய்துக் கொண்டே இருக்கிறோம்.

நாம் அவர்களின் அழகிய எளிமையான உலகத்துக்குள் செல்வதை விடுத்து, அந்த சிறிய பறவைகளை
நாம், "இது தான் வாழ்க்கை" என் எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு சிறிய கூண்டுக்குள் அடைக்க, அடக்க நினைக்கிறோம்.

அவர்களதுதான் அகமகிழ வேண்டும் எனில், இத்தகைய அடக்கு மனப்பான்மை எண்ணங்களை விட்டு விடுவதே நலம்.

அவர்களின் உலகத்தில், எந்த விதமான பேதங்களுக்கு புலிகளுக்கும் இடமே இல்லை. குழந்தை மனம் என்பது தெள்ளது தெளிந்த ஒரு நீரோடையினைப் போன்றது. வாய்ப்புகளுக்கு ஏற்றவாறு, வளைந்தும், நெளிந்தும், நிதானமாகவும், வேகமாகவோ,ஓடக் கூடியது. அதனைப் புரிந்துக் கொள்ள நாமும் பிள்ளைகளாக மாற வேண்டும்.

 

girija chandru

Penman of Penmai
Blogger
#3
குழந்தைகளின் மனம் எப்போதும் குதூகல மனநிலையில் உள்ளது.வெய்யில் காலத்தில் , தெருவில் மற்ற பிள்ளைகளோடு ஓடி விளையாட அது துடிக்கிறது;மழை பொழியும் தருணத்தில் தன்னை முற்றிலும் நனைத்துக் கொள்ள விழைகிறது;
நீங்கள் அவளுக்கோ/அவனுக்கோ உணவு ஊட்டும் போது, உங்கள் பொறுமையின் அளவு எவ்வளவு என்று சீண்டிப் பார்க்க நினைக்கிறது;

மிகவும் கவனமாக நாம் சில அறிவுரை கூறிக் கொண்டு இருந்தால், சரி சரி என் மேலோட்டமாக தலையாட்டி விட்டு, உதட்டு ஓரத்தில் க்ரிஷணனைப் போல ஒரு குறும்பு சிரிப்பு (நமுட்டுச் சிரிப்பு) சிரிப்பது; நீங்களா வர்களுக்கான எளிய கதை ஒன்றைச் சொல்லிக் கொண்டு இருந்தல், அவர்கள் அதற்கு ஒரு புதுப் பின்னலோ, பரிமாணம் கொடுத்து உங்கள் குழந்தையாக ரசிக்க வைப்பதுக்கு என அனுமார் வாழ் மாதிரியவர்களின் உலக ரசனைகள் நீண்டு
க் கொண்டே போகும்.

(இது எல்லா குழந்தைகளும் செய்வது தான்..... வயது வரம்பு 20 வரை...)
 

girija chandru

Penman of Penmai
Blogger
#4
அவர்களுடன் சேர்ந்து நீங்களும், உங்களுக்குள் உறங்கி கொண்டிருக்கும் அல்லது மறந்தே போன குழந்தையை மீது எடுப்பதன் மூலமாக அவர்களது உலகத்தை உல்லாசமாக்க முடியும்.

உங்கள் பிள்ளைகளுடன் நீங்கள் நேரம் செலவிடுங்கள். அப்படி செலவிடும் நேரத்தை எப்படி ஒரு துள்ளல் நேரமாக அவர்கள், 'எங்கள் அப்பா/அம்மா சூப்பரோ சூப்பர்" என்று சொல்ல வையுங்கள்....

உங்களால் முடியும்.....

(நேற்று இரவு நானும் என் மகன் கார்த்திக் கும் (வகுப்பு :- 12த், வயது 16) அரை மணி நேரம், அவன் செய்த காது போன் ப்ராஜெக்ட்... பற்றி பேசி மகிழ்ந்தோம்... நேரம் இரவு 10 முதல் 10.30 வரை.....(எங்கள் "விஞ்ஞான கலா ப்ரதர்ஷினி" கண்காட்சிக்கு செய்தது ) )

:cheer::thumbsupBye
 

girija chandru

Penman of Penmai
Blogger
#5
உங்கள் குழந்தைகளின் உலகத்துக்கு நீங்கள்
செல்வதன் முதல் படி, அவர்களுடன் மனம் திறந்து
பேசுவதில் இருந்து தான் துவங்குகிறது;

"மனம் திருநது பேசுவது" என்பது உங்கள் மனதில் பட்ட அறிவுரைகள், (அறிவுரைகள் யாரும் விரும்புவது இல்லை.....குறிப்பாக டீன் வயது குழந்தைகள்...), எண்ணங்கள், கவலைகள் அனைத்தையும் கொட்டித் தீர்ப்பது அல்ல;

அவர்களை பேச வைப்பது... நாம் செவி கொடுத்து அவர்களைத் தட்டிக் கொடுத்து, அவர்களோடு சிரித்து மகிழ்வது; அவர்களின் உலகத்தில் யார் யார் இருக்கிறார்கள்? என்னென்ன தருணங்கள் அவர்களுக்குப் பிடிக்கும்??? பள்ளி மற்றும் அவர்கள் பார்க்கும் வெளி உலகம் எப்படி பட்டது என்று புரிந்துக் கொள்ள முயலுங்களேன்....

 

girija chandru

Penman of Penmai
Blogger
#6
அவர்கள் சிந்தனையின் மேல் உங்களின் கருத்துகளைத் திணிக்காமல், அதனை அப்படியே நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்;அவர்கள் உலகின் நுழைவாயில் இதுவே;

அவர்கள் தனையாகவோ அல்லது அன்னபார்க்லடுங் விளயாடும்போது, அவர்களதுதான் சேந்து நாமம் விளையாடலாம். இது உங்களது மணக்க கவலையை, மனா அழுத்தத்தைபி பெரிதும் நீக்கும். மேலும், அவர்களுடனான நேரத்தை பயனுள்ள வகையில் செலவழித்தல் போலவும் இருக்கும்.


(i will play volleyball, chess, snakes and ladders, trade, table tennis with my son and his friends...)
 

girija chandru

Penman of Penmai
Blogger
#7
எந்த விளையாட்டாக இருந்தாலும், அவர்களுடைய நேர்மையாக விளையாடுங்கள்; அது பல்லாங்குழியாக இருந்தாலும் சரி, பரம பதமாக இருந்தாலும் சரி, உங்கள் பிள்ளைகளுக்கு
1)வெற்றி,
2)தோல்வி,
3)நேர்மை,
4)நாணயம்,
5)மற்றவர்களின் வெற்றியைக் கொண்டாடும் குணம்

என வாழ்வை ரசிக்கும் அத்தனை குணங்களையும் இங்கு தான் நீங்கள் ஒரே நேரத்தில், மிகவும் எளிமையாக,கற்றுத் தர முடியும்.

நீங்களே பங்கு ஆட்டம், அழுகுணி ஆட்டம் ஆடினால், பிள்ளையும் வாழ்க்கையில் குறுக்கு வழிகள் தவறல்ல என்று புரிந்துக் கொள்ள வாய்ப்பு உண்டு.