வாழ்நாளின் அளவை அதிகரிக்கும் அற்புதமான &

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
[h=1]வாழ்நாளின் அளவை அதிகரிக்கும் அற்புதமான சில ஆரோக்கிய உணவுகள்!!![/h]யாருக்கு தான் நீண்ட நாள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்ற ஆசை இருக்காது? உலகில் உள்ள ஒவ்வொருவருக்குமே இந்த ஆசை கண்டிப்பாக இருக்கும். அப்படி இருக்க நினைக்கும் பெரும்பாலானோர் முதலில் செய்வது, அன்றாடம் கடவுளுக்கு பூஜை செய்து, வாழ்நாள் முழுவதும் பிரச்சனையின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டுவார்கள். ஆனால் அப்படி செய்வதால் மட்டும் வாழ்நாளின் அளவும் நீளாது, வாழ்நாள் முழுவதும் நோயின்றி வாழவும் முடியாது.

அதற்கு தினமும் உடற்பயிற்சிகளை செய்து வருவதோடு, ஒருசில உணவுகளையும் அன்றாட உணவில் சேர்த்து வர வேண்டும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை வாழ்நாளின் அளவை அதிகரிக்கவும், வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழவும் என்னென்ன உணவுகளை அன்றாடம் டயட்டில் சேர்க்க வேண்டுமென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றை தவறாமல் உங்கள் டயட்டில் சேர்த்து நல்ல பயனைப் பெறுங்கள்.

பசலைக்கீரை பசலைக்கீரையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக இருப்பதுடன், அதில் வைட்டமின்களும், இரும்புச்சத்தும் அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் பசலைக்கீரையில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் லூடீன் அதிகம் உள்ளது.

நார்ச்சத்து அதிகம் பசலைக்கீரையில் இருப்பதால், இரத்த அழுத்தம் சீராக இருப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் வலிமையடையும். ஆகவே முடிந்த வரையில் இதனை வாரம் மூன்று முறையாவது சமைத்து சாப்பிடுங்கள்.

கேல் கேல் கீரையில் நார்ச்சத்து, வைட்டமின் பி6, கரோட்டீன், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் அதிகம் இருக்கிறது. இது இந்தியாவில் கிடைப்பது கஷ்டம். ஆனால் இது பெரிய சூப்பர் மார்கெட்டுகளில் அல்லது ஆன்லைனில் கிடைக்கும். மேலும் உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுவதற்கு பதிலாக, கேல் சிப்ஸ் சாப்பிடுவது, உடலில் கொழுப்புக்கள் சேராமல் பாதுகாக்கும்.

க்ரீன் டீ இந்தியர்களால் கண்டிப்பாக டீ குடிக்காமல் இருக்க முடியாது. அப்படி டீ குடிப்பதாக இருந்தால், க்ரீன் டீ குடியுங்கள். ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் சி மற்றும் ஈ அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் இதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் உடலை ஆரோக்கியமாகவும், வயதாகும் தன்மையை தள்ளிப் போடும்.

அதுமட்டுமின்றி, ப்ரீன் டீ இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதோடு, புற்றுநோயின் அபாயத்தில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கும். ஆகவே பால் டீ குடிப்பதற்கு பதிலாக க்ரீன் டீயை அன்றாடம் பருகி வந்தால், உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.

மீன் மீனில் உடலுக்கு வேண்டிய புரோட்டீன், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. ஆகவே அசைவ உணவு சாப்பிட நினைப்பவர்கள் மீனை தேர்ந்தெடுத்து உட்கொள்வது நல்லது.

அதிலும் மீனில் சால்மனில் புரோட்டீன், வைட்டமின் ஏ மற்றும் பி போன்றவை அதிகமாக உள்ளது. இதனை உட்கொண்டு வந்தால் நாள்பட்ட மூட்டு வலி மற்றும் ஞாபக மறதி போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

பெர்ரிப் பழங்கள் பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, நெல்லிக்காய், ப்ளாக்பெர்ரி போன்றவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிக அளவில் நிறைந்துள்ளது. ஆகவே பெர்ரிப் பழங்களை அன்றாடம் உட்கொண்டு வந்தால், உடலில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

தேங்காய் தேங்காயில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. தினமும் உடற்பயிற்சி செய்து முடித்த பின்னர் ஒரு டம்ளர் தேங்காய் அல்லது இளநீரைக் குடித்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் சமைக்கும் போது, உணவில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால், இதயம் ஆரோக்கியமாக செயல்படும்.

மேலும் இந்த எண்ணெயில் உள்ள மிகவும் ஸ்பெஷலான ட்ரைகிளிசரைடு செயின் மூளையை சுறுசுறுப்புடன் செயல்பட உதவிப்புரியும். அதுமட்டுமின்றி, இந்த எண்ணெயில் உள்ள லாரிக் ஆசிட் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும்.

தயிர் இந்தியர்கள் தவறாமல் உணவில் சேர்க்கும் ஒரு உணவுப் பொருள் தான் தயிர். இத்தகைய தயிரில் புரோட்டீன், கால்சியம் அதிகம் இருப்பதால், இது எலும்புகளை வலிமை அடையச் செய்வதோடு, ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படாமல் தடுக்கும். மேலும் தயிர் இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாப்பதோடு, இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கும்.

டார்க் சாக்லெட் ஆம், டார்க் சாக்லெட் கூட வாழ்நாளின் அளவை அதிகரிக்க உதவும் உணவுப் பொருட்களில் ஒன்று. இதிலும் இதயம், மூளை போன்றவற்றை சீராக இயங்க உதவும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளன.

மேலும் இதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடும். இரத்தம் உறைதல் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரிப்பது போன்றவற்றையும் டார்க் சாக்லெட் தடுக்கும். ஆகவே அவ்வப்போது இதனையும் உட்கொண்டு வாருங்கள்.
 

Attachments

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#2
Re: வாழ்நாளின் அளவை அதிகரிக்கும் அற்புதமா&#298

wow. . . nice info sharing. . .. . . :thumbsup
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.