வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க உ&

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,658
Location
chennai
#1
[h=1]வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க உதவும் ஆரோக்கிய உணவுகள்![/h]நாம் ஏன் ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும்? வேறு எதுக்கு வாழ்நாள் முழுக்க உடல் வலிமையோட இருக்க தான். சரி என்ன உணவு சாப்பிட்;டால் ஆரோக்கியமாக இருக்கலாம். நாம் தினசரி சாப்பிடுகிற எல்லா உணவும் சிறந்த உணவென்று நினைக்கிறீர்களா? கிடையவே கிடையாது. சில உணவுகளில் நிறைய ஊட்டசத்து இருக்கும். சில உணவுகளில் வெறும் கலோரி மட்டும் தான் இருக்கும்.

பின் எந்த வகையான உணவு சிறந்த உணவு? எந்தெந்த உணவுகள் தினசரி சாப்பிட்டால் நாம் உடல் வலிமையோட நிறைய நாள் உயிர்வாழலாம்? தற்போதய ஃபாஸ்ட் ஃபுட் உணவு கலாச்சாரத்தினால் இயற்கை உணவுகளை விட பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தான் நாம் நிறையவே உட்கொள்கிறோம்.

இதனால் தான் இப்போது தெருவுக்கு தெரு பெட்டிக் கடைகளை விட அதிகமாய் கிளீனிக்கும் ஆஸ்பத்திரிகளும் நிறைந்திருக்கின்றன. இதில் இருந்து வேறுப்பட்டு நீங்கள் திடகாத்திரமாக திகழவேண்டுமா? இந்த கட்டுரையை படிங்க...

ப்ளூபெர்ரி ப்ளூபெர்ரியில் அப்படி என்ன இருக்கிறது என கேட்கிறீர்களா? நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் கே மற்றும் மாங்கனீஸ் போன்ற சத்துகள் நிறைந்து உள்ளதால் தினமும் ப்ளூபெர்ரி சாப்பிட்டு வந்தால் உடல்நலத்திற்கு நல்லது.

ஸ்ட்ராபெர்ரி ஸ்ட்ராபெர்ரி பழம் பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட ஸ்ட்ராபெர்ரி பிரியர்களுக்கான இன்ப செய்தி என்னவெனில் மிகவும் ருசிகரமான ஸ்ட்ராபெர்ரியில் மாங்கனீஸ், வைட்டமின் சி, ஐயோடின் போன்ற சத்துகள் கொண்டுள்ளன. ஸ்ட்ராபெர்ரியை வாரம் ஒருமுறை சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லது.

ஆளிவிதை இதுவரை உங்கள் உணவுகளில் ஆளிவிதையை உபயோகப்படுத்த மறந்திருந்தால் மிகவும் ஊட்டசத்து மிகுந்த ஆளிவிதையை இனிவரும் நாள்முதல் பயன்ப்படுத்த துவங்குங்கள். ஆளிவிதையில் வைட்டமின் பி1, மாங்கனீஸ், நார்சத்து, மெக்னீசியம் மற்றும் ஒமேகா 3 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

கேரட் பொட்டாசியம், வைட்டமின் ஏ, சி மற்றும் கே, நார்சத்து மிகுந்துள்ள கேரட் உடல்நலத்திற்கு மிகவும் தேவையான ஒன்று. முக்கியமாக தினசரி கேரட் சாப்பிடுவது கண்பார்வைக்கு நல்லது. கேரட்டை பழரசமாகவோ, நேரடியாகவோ அல்லது உணவோடு சமைத்தோ உட்கொள்வது நல்லது.

பசலைக்கீரை பசலைக்கீரையை தினசரி உணவில் உட்கொள்வது நல்லதாகும். கீரை வகைகளில் பசலைக்கீரை மிகவும் ஆரோக்கியமான உணவு. இதில் வைட்டமின் ஏ, கே, மாங்கனீசு மற்றும் மக்னீசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.

தினை 40 கிரேம் தினையில் மாங்கனீஸ், மெக்னீஸியம், பாஸ்பரஸ் மற்றும் ட்ரிப்டோஃபன் போன்ற சத்துகள் அடங்கியுள்ளன.

பருப்பு இந்திய உணவில் பருப்பு ருசிக்காக சேர்க்கப்படும் ஓர் பொருள் ஆகும். பருப்பில் நிறைய கனிமச்சத்துகளும், நார்சத்துகளும் நிறைந்துள்ளன. அப்படிப்பட்ட பருப்பு இல்லாமல் சாம்பாரினை ருசிக்க இயலுமா என்ன?

சிக்கன் இறைச்சி வகைகளில் சிக்கன் பெரும்பாளானவர் விரும்பும் உணவாகும். மிக மிக ருசியான உணவென்பதால் பலரால் விரும்பி உண்ணப்படும் உணவு சிக்கன். சிக்கனில் புரதம், செலினியம், வைட்டமின் பி 3 மற்றும் பி6 போன்ற சத்துகள் அடங்கியுள்ளன.

தக்காளி தக்காளியில் வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளன. அதுமட்டுமில்லாது பொட்டாசியம் மற்றும் நாரச்சத்துகளும் தக்காளி வழங்குகிறது. இந்திய உணவுகளில் தக்காளியின்றி உணவு சமைப்பது என்பது இன்றியமையாத ஒன்றாகும். ஏனெனில் இது உணவின் ருசியை அதிகரிக்க உதவுகிறது.

இஞ்சி இஞ்சி பல வேறுப்பட்ட வியாதிகளுக்கு நோய் நிவாரணியாய் பயன்படுகிறது. இதை தேனீரோடு உட்கொள்வது உடல்நலத்திற்கு நன்மை தரும்.

சீரகம் இந்திய உணவில் அதிகமாய் சேர்க்கப்படும் பொருட்களில் சீரகமும் ஒன்றாகும். சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் குணம் வாய்ந்தது. அதுமட்டுமின்றி இதில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்துகள் நிறையவுள்ளன.

பப்பாளி ருசி மட்டுமின்றி ஊட்டச்சத்துகளும் நிரம்பிய உணவு பப்பாளி. இதில், வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ உள்ளன. சருமம் மற்றும் நோய் எதிர்ப்பிற்கு மிக அருமையான உணவு பப்பாளி.

மஞ்சள் மஞ்சளில் உள்ள இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பி6 தோள் சார்ந்த நோய்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. மற்றும் முகப்பொழிவடையவும் பயனளிக்கிறது.

முட்டை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் உணவு முட்டை. இதில் அதிகளவில் புரதசத்து நிறைந்துள்ளது.

பாதாம் பாதாமில் இருக்கும் ஊட்டசத்துகள் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் ஈ, மக்னீசியம் மற்றும் இரும்புச்சத்துகள் ஆகும்.

பீட்ரூட் பீட்ரூட்டில் பல்வேறு வகையிலான வைட்டமின் சத்துகளும், கனிமசத்துகளும் உள்ளன. அதுமட்டுமின்றி பல வகையிலான நோய்களை எதிர்த்துப் போராட உடலுக்கு வலிமையளிக்கிறது.

பூண்டு பூண்டிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி நம்மை பல வகையிலான நோய்களிலிருந்து காத்திட உதவுகிறது. இரத்தக்கொதிப்பிற்கு பூண்டு ஒரு நல்ல இயற்கை நிவாரணம் ஆகும்
 

Attachments

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,488
Location
Ever green city
#2
Re: வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க &#29

wnrful info..................
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.