வாழ்வே கசக்கிறது

smt8

Newbie
Joined
Apr 1, 2016
Messages
1
Likes
0
Location
no
#1
எனக்கு திருமணமாகி 6 வருஷம் ஆகுது. நாங்கள் ஒரு பிள்ளையோடு வெளிநாட்டில் வசித்து வருகிறோம். என் கணவர் சென்ற வாரம் வரை நல்லவராக தான் என் கண்ணில் தெரிந்தார் நான் அந்த நிகழ்வை பார்க்கும் வரை.

நான் என் பிள்ளையின் பள்ளிக்கு சென்று விட்டு கொஞ்சம் விரைவில் எப்போதும் வருவதை விட சீக்கிரம் வீடு திரும்பிவிட்டேன். வீடிற்கு வந்து பார்கையில் என் தோழியுடன் என் கணவர் படுக்கையில் இருந்தார். இதை பார்த்து நான் என்ன செய்வதென்றே தெரியாமல் அப்போது இர்வரையும் திட்டிவிட்டேன். அவள் ஓடி விட்டால்.

என் கணவர் ஒன்றும் பேச முடியாமல் இருந்தார். இப்போது கேட்டல் நான் அப்படி தான் இருப்பேன். நீ என்ன வேண்டும் என்றாலும் செய்துகொள் என்கிறார்.

நான் என்ன செய்வது. என் பெற்றோரிடம் சொல்வதா இல்லை அவர் பெற்றோரிடம் சொல்வதா.

மிகவும் குழமிய நிலையில் உள்ளேன். உதவுங்கள். ப்ளீஸ்.
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,125
Likes
14,730
Location
California
#2
தோழி @smt8 ,
இந்த நேரத்தில் மெளனமாக இருந்து ஒதுக்கத்தை காட்டுங்கள். அதே சமயம் உங்கள் வழக்கமான வீட்டு கடமைகளை தவறாமல் செய்யுங்கள். நீங்கள் பேசாமல் இருந்து உங்கள் எதிர்ப்பை காட்டுங்கள். உடனே ஊரில் உள்ளவர்களுக்கு சொல்லி எல்லோரையும் குழப்பி விடாதீர்கள். இந்த செயல் அவரை கூனி குறுக செய்கிறதோ இல்லையோ, நீங்கள் என்ன எண்ணத்தில் இருக்கிறீர்கள் என்று அவர் தெரியாமலே குழம்ப வேண்டும். தானாகவே வந்து உங்களிடம் பேச வேண்டும். அதுவரை பொறுமை காக்க வேண்டும். கண்டிப்பாக இது இமய மலையில் ஏறுவதை விட கடினமான காரியம் தான். ஆனால் மன உறுதியோடு இருந்து சாதித்து காட்டுங்கள். கோபத்தை அடக்க முடியவில்லையா அவர் இல்லாத போது யாருக்கும் பாதிப்பில்லாத வழியில் உங்கள் கோபத்தை வெளிப்படுத்துங்கள். கூடவே ஏதாவது கலை வேலைப்பாடு போல் எதிலாவது உங்கள் மனதை செலுத்துங்கள். இது போல் இரண்டு வாரமாவது இருங்கள். அவரே பேச முனைந்தாலும் அமைதியாக இடத்தை விட்டு அகன்று விடுங்கள். அதன் பிறகு நீங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை அப்போது செய்யுங்கள்.
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#3
வேதனை தான்... உங்கள் உள்ள உணர்வுகள் புரிகிறது...
இதுவும் கடந்து போகும்.... தோழி !!!!

1) கோபத்தால் எதுவும் சாதிக்க முடியாது
2) வாதிடுவதால் பிரச்னை தீரப்போவது இல்லை.
3) பெற்றோரிடம் சொல்வது அவர்களுக்கு மேலும் வேதனையை கொடுக்கும்;
நல்லதும் அல்ல.
4) நயமாக, நிச்சியமாக உங்கள் கணவரிடம் பேசிப் பாருங்கள்.
5) இனியும் ஒரு முறை இது போல நடக்க கூடாது என்று திட்டவட்டமாக கூறுங்கள்.
6) தொடர்ந்தது என்றால், அப்போது கோருங்கள், தீவிரமாக யோசிப்போம்.
7) அது வரை விலகி, வாய் பேசாமல் மெளனமாக இருந்து எதிர்ப்பைக் காட்டுங்கள்.
8) உங்கள் தோழியிடம் நிதானமாக பேசி அவளை அறிவுறுத்த முயற்சிக்கலாம்.
 
Joined
Apr 14, 2014
Messages
53
Likes
105
Location
Chennai
#4
@smt8

உங்களது தற்போதைய நிலைமை கவலைக்குரியது . தப்பு செய்ததுமில்லாம எவ்வளவு திண்ணக்கமா, தன்னோட தவறுக்கு , துரோகத்துக்கு வருத்தப்படாம , நான் அப்படிதான் இருப்பேன் உன்னாலானதை பார்த்துக்கோன்னு சொல்றார் . ஒண்ணு மாத்திரம் மனசுல வச்சுக்கோங்க . எப்பவுமே ருசி கண்ட பூனை அதுக்கப்புறம் எப்பவுமே சும்மா இருக்காது . என்ன ஒண்ணு, இனிமே உங்க கண்ணெதிரிலே இல்லாம வேற இடங்களில் இதே துரோகங்கள் தொடர வாய்ப்புகள் மிக மிக அதிகம் . ஒருவேளை அவர் தன்னோட செயலுக்கு மன்னிப்பு கேட்டு , ஏதோ தெரியாம தவறான ஒரு சந்தர்ப்பத்துல இப்படி ஆகிடுச்சு, இனிமே இது தொடராது அப்படின்னு உறுதி தந்தாலாவது கொஞ்சம் நம்பலாம். இது எதுவுமே நடக்காத பட்சத்தில , நீங்க இப்படி ஒரு கணவரோட உங்க திருமண வாழ்க்கையை தொடருறது அபத்தம் என்றுதான் எனக்குத் தோணுது . இப்படிப்பட்ட கணவரைப் பிரிஞ்சு இருக்கறதுதான் உங்களுக்கு மனநிம்மதியைத் தரும் என்கிறது என்னோட எண்ணம் . என்ன ஒரு கஷ்டம் ...உங்க குழந்தைதான் கஷ்டப்படும் . ஆனா வேற வழியில்லை .இதே செயலை நீங்க செய்தா அவரோட reaction எப்படி இருக்கும்ன்னும் கேளுங்க .அதனால இப்போ உடனே உங்க கணவர்கிட்ட எந்த ஒரு பேச்சுவார்த்தையோ , சண்டையோ எதுவுமே போடாம , முதல்ல உங்க பெற்றோருக்கு இதை தெரிவிச்சுட்டு அவங்களை உடனே உங்க இடத்துக்கு வந்து உங்களை இங்கேர்ந்து கூட்டிட்டு போகச் சொல்லிடுங்க . இந்த விவரம் எதுவும் உங்க கணவருக்கு தெரிய வேண்டாம் . அவர் எதாவது harassment செய்ய வாய்ப்புண்டு .அவங்க வந்த பிறகு உங்க பையனோட ஸ்கூல் விவகாரங்கள் எல்லாம் கவனிச்சுட்டு,அவனையும் கூட்டிட்டு நீங்க அவங்களோட கிளம்பி போய்ட பாருங்க . அவங்க உங்க இடத்துக்கு வந்த பிறகே அவரோட பெற்றோருக்கும் இந்த விஷயத்தை சொல்லிடுங்க. அப்புறம் மேற்கொண்டு ஆகவேண்டியதை பார்க்கலாம் . நீங்க இப்படியே உங்க கணவரோட தவறை ஏத்துக்கிட்டு இருக்கறதை கண்டுட்டார்ன்னா நிலைமை மோசமாகவே வாய்ப்பு அதிகம் . உங்க பெற்றோர் இடத்துக்கு போயிட்டு நீங்க உங்களுக்கு தகுந்த ஒரு வேலையை உடனே தேடிக்கோங்க .
 
Last edited:

ponschellam

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Mar 8, 2013
Messages
7,037
Likes
29,954
Location
CVP
#5
சாரி மா ................என்ன சொல்லன்னு தெரியலை.

Who decides the expiry date of woman's dream ?

இந்த வரி உங்களை ஊக்கப்படுத்தட்டும்.
 
Last edited:

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#6
மேலே என் தோழிகள் சொன்னது போல் நீங்கள் கொஞ்சம் அமைதியாக இருங்கள்,நீங்கள் வீட்டில் சொல்லுவதினால் என்ன ஏற்பட போகிறது,ரெண்டு வீட்டு மன நிமதியும் கெடும்,நீங்கள் உள்ளுரில் இருந்தாலாது எதாவது செய்யலனு நினைபாங்க,இப்போ அதுவும் இல்லாமல் ரொம்ப கஷ்ட படுவாங்க.வேண்டாம் இப்போ வீட்டில் சொல்ல வேண்டாம்,
நீங்கள் அமைதியாக இருங்கள்,ஒரு வார்த்தை கூட பேசாதிர்கள்.அனால் அந்த தோழியை விட சொல்லலை.நன்றாக உங்களால் என்ன திட்ட முடியுமோ அப்படி திட்டுங்கள்,கோவத்தை உள்ளுக்குள் வைப்பது நல்லது இல்லை,ஒரு இடத்தில காண்பிப்பது நல்லது,அது உங்கள் வீடு,மற்றும் கணவராக இருக்க வேண்டாம்.

மன்னிப்பு கேட்காமல்,நான் அப்படிதான் சொல்லுபவரிடம் எதுவும் பேசவும் முடியாது.

நீங்கள் எந்த நாடு,என்ன படிசிரிகிங்க?வேலை செய்த முன் அனுபவம் பத்தி எதுவும் சொல்லலை.குழந்தை பத்தியும் சொல்லலை.அதனால் எதற்காகவும் அவசர பட வேண்டாம்.பொறுமைதான் முக்கியம்.திருமணம் நம் வாழ்வின் ஒரு பகுதிதான்.அதையும் தாண்டி வாழ்வு இருக்கு,தனம்பிகையும்,தைரியமும் கொண்டு வெற்றி பெறுவேன் என்பதுதான் நீங்கள் உச்சரிக்கும் வார்த்தையாக இருக்க வேண்டும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.