விநாயகர் சதுர்த்தி! - Vinayagar Chathurthi!

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,660
Likes
78,039
Location
Hosur
#1


ஆவணி மாதம் வரும் சதுர்த்தி' திதியை 'விநாயகர் சதுர்த்தி' என்று அழைக்கின்றோம். அன்றைய தினம் நாம் விரதமிருந்து முறையாக ஆனை முகனை வழிபட்டு அருகிலிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று அருகம்புல் மாலையிட்டு கணபதியைக் கொண்டாடினால், பெருகும் பொன்னை அள்ளி அவர் பெருமையுடன் நமக்களிப்பார்.

இந்த நாளில், அதிகாலையில் நீராடி, நித்ய கர்மங்களை நிறைவேற்ற வேண்டும். காலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்து, மாவிலைத் தோரணம் கட்ட வேண்டும். பிறகு பூஜை நடைபெறும் இடத்தைச் சுத்தப்படுத்தி, மாக்கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும். ஒரு மனையில் (பலகையில்) கோலம் போட வேண்டும்.
அதில் அவரவர் வழக்கத்துக்கு ஏற்ப கற்சிலை பிள்ளையார், களிமண் பிள்ளையார் வைக்கலாம்.

மண்ணால் பிள்ளையார் விக்கிரகம் செய்து வைத்து வழிபடுவது விசேஷம்! அழகான வண்ணக்குடை அமைத்து, அதன் கீழ் விநாயகரை அமர்த்தி, பல வண்ண மலர்கள் சாற்றி அலங்கரிக்க வேண்டும்.

விநாயகருக்கு பிடித்தமான அருகம்புல், வெள்ளெருக்கு மாலை சார்த்தி, சந்தன-குங்கும திலகமிட்டு அலங்கரிக்கலாம். மோதகம் எனப்படும் கொழுக்கட்டைதான் பிள்ளையாருக்கு பிடித்தமான உணவு பண்டம். அதாவது கொழுக்கட்டை. தேங்காய் பூர்ணத்தை உள்ளே வைத்து செய்யப்படுவது. இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம். உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம். அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்குக் கிடைக்கும். இனிப்பு கொழுக்கட்டை, உப்பு கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல், பொரி, அவல், பழவகைகள், விளாம்பழம், நாகப்பழம், கரும்பு ஆகியவற்றை படையலிட்டு சர்வ மங்களம் உண்டாகவும், தடைகள் நீங்கி மகிழ்ச்சி பொங்கவும் மனதார வேண்டி பிரார்த்தனை செய்வது வழக்கம்.

விநாயகர் காயத்ரி மந்திரம், ஔவையார் அருளிய விநாயகர் அகவல், விநாயகர் அஷ்டோத்திரம் சொல்லி பூஜைகளை முடிக்கலாம். அவருக்கு முன்னால் தோப்புக் கரணம் போட்டு, தலையில் குட்டிக் கொள்வது வழக்கம். 'தோர்பிகர்ணம்' என்பதே 'தோப்புக் கரணம்' ஆயிற்று. 'தோர்பி' என்றால் கைகளினால் என்று பொருள். 'கர்ணம்' என்றால் 'காது' என்று பொருள். கைகளினால் காதைப் பிடித்துக் கொள்ளுதல் என்பது இதன் முழுப் பொருளாகும்.

கஜமுகாசூரன் என்ற அரசனுக்கு முன்னால் தேவர்கள் பயத்துடன் தலையில் குட்டிக் கொண்டனர். அந்த அசுரனை விநாயகர் அழித்தார். எனவே, விநாயகர் முன்பும் தேவர்கள் பக்தியுடன் அதே தோப்பு கரணத்தைப் போட்டனர். அந்த பழக்கமே இப்பொழுதும் நடைமுறைக்கு வந்ததாக சொல்வர்.

மாலையில் அவரவர் பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில்களுக்கு சென்று விசேஷ பூஜைகள், அர்ச்சனை, அபிஷேகங்களில் கலந்து கொள்ளலாம். நம்மிடம் இருக்கும் தீவினைகளை சிதறுகாய் சிதறடித்துவிடும் என்பது நம்பிக்கை. அதன்படி, விநாயகரை மனதார பிரார்த்தித்து சிதறுகாய் உடைப்பது சிறப்பு.

வழிபாடு முடிந்தபின் குறிப்பிட்டதொரு நன்னாளில், விநாயகர் விக்கிரகத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலையில் சேர்க்கலாம். விநாயக சதுர்த்தியன்று ஆரம்பிக்கும் பூஜையை புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி வரை
கடைப்பிடிப்பவர்களும் உண்டு.

விநாயக சதுர்த்தி திருநாளில் பிள்ளையாரை வீட்டில் வழிபடுவதுடன், தலங்களுக்குச் சென்று தரிசிப்பதும் விசேஷ பலன் தரும்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா!


என்று ஒளவையார் பாடியது போல் இறைவனை வாழ்வில் நலம் பெற வேண்டி நிற்கின்றோம். அவரை சதுர்த்தியில் வணங்குங்கள். சந்தோஷம் காணுங்கள்.

Moderator's Note:This Article has been published in Penmai eMagazine September 2015. You Can download & Read the magazines HERE.

 

Attachments

Last edited:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,418
Likes
84,276
Location
Bangalore
#3
Thanks a lot Sumathi for sharing these details about the Vinayagar chathurthi festival
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,660
Likes
78,039
Location
Hosur
#5

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.