வியர்வையை போக்கும் சங்குப்பூ

sharamsn

Commander's of Penmai
Joined
Aug 4, 2015
Messages
1,344
Likes
2,124
Location
puducherry
#1
[h=1]வியர்வையை போக்கும் சங்குப்பூ[/h]நெறிக்கட்டிகள் வீங்கி இருக்கும் போது சங்குப்பூவின் இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, இஞ்சிச்சாறு ஒரு தேக்கரண்டி எடுத்துக் கலந்து அருந்தி வர வியர்வை நீங்கும். சங்குப்பூவின் இலைகளை வறுத்து நன்கு சூரணம் செய்து கொண்டு 250 மி.கி. முதல் 500 மி.கி. வீதம் அருந்தி வர, மலக்கட்டு நீங்கும்.

காக்காட்டான் பச்சை வேர் 40 கிராம் சிதைத்து அரை லிட்டர் நீரில் காய்ச்சி 2 மணிக்கு 1 தடவை 6 முறை சாப்பிடச் சுரம், தலைவலி ஆகியவை தீரும். வேரைப் பாலில் அரைத்து சுண்டை அளவு காலை மாலை பாலில் சாப்பிட்டு வந்தால் மேகவெள்ளை, பிரமேகம், தந்தி மேகம், சிறுநீர் பாதை அழற்சி, நீர் எரிச்சல் ஆகியவை தீரும்.

வெள்ளை காக்காட்டான் வேர், கட்டுக் கொடி இலை, கீழாநெல்லி இலை, அருகம்புல் ஒரு கை பிடியுடன் 5 அல்லது 6 மிளகு சேர்த்து மை போல் அரைத்து தயிரில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட வெள்ளை படுதல் தீரும். கருங்காக்காட்டான் வேரை பாலில் வேக வைத்து உலர்த்தி பாதியளவு சுக்குடன் பொடித்து காலை மாலை 2 சிட்டிகை வெந்நீருடன் கொள்ள வாத நோய், வாயுவலி, சீதளம் நீங்கும். நெய்யில் வறுத்து விதைச் சூரணத்தை வெந்நீருடன் சேர்த்து கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கான இழுப்பு, மூர்ச்சை, நரம்பு இழுப்பு ஆகியவை தீரும்.

விதைத்தூள் 50 கிராம், பூ 50 கிராம், சுக்குத்தூள் 25 கிராம் கலந்து தினம் 1 வேளை 3 கிராம் சாப்பிட்டு வர மலப்போக்கு பெருகி, யானைக்கால் வீக்கம் மெல்லக்குறையும். மேலும் இலையை விளக்கெண்ணெயில் வதக்கிக் கட்ட வீக்கம் குறையும். நாள் பட்ட கப நோய்களுக்கு காகட்டான் பட்டையை நன்கு இடித்து, சாறு பிழிந்து 24 கிராம் அளவு எடுத்து குளிர்ச்சியான பாலுடன் அருந்தி வர எளிதில் குணமாகும். காக்காட்டான் வேர்ப் பட்டையை ஊற வைத்த ஊறல் குடி நீரை 30 மி.லி. முதல் 60 மி.லி. வரை அருந்தி வந்தால் சிறுநீர்ப்பை நோய்களும் சிறுநீர்ப் பாதை எரிச்சல், வலி முதலிய நோய்களும் குணமாகும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.