விருதுநகர் சமையல் - பச்சை மிளகாய் சட்னி

Joined
May 30, 2017
Messages
47
Likes
113
Location
விருதுநகர்
#1
விருதுநகர் சமையல் - பச்சை மிளகாய் சட்னி (பெரிய பாய் கடை போல)

சுவை நரம்புகளை சுண்டி இழுக்கும் பச்சை மிளகாய் சட்னி. முதல் முதலாக விவரம் தெரிந்து 45 வருஷ்த்துக்கு முன் பெரியபாய் புரோட்டா கடையில் தான் இந்த சட்னி அறிமுகம். அவங்க கடையில் கெட்டி தேங்காய் சட்னியும் இந்த கெட்டி மிளகாய் சட்னியும் ரொம்ப பிரபலம். இந்த மிளகாய் சட்னி தெரிந்தவர்கள் கேட்டால் மட்டுமே பரிமாறப்படும். 3 டிரிபிள் புரோட்டா சுக்கா சாப்பிட்டதும் மீதி இருக்கும் இடத்தை நிரப்ப இட்லி தோசை என சாப்பிட தூண்டுவது இந்த சட்னிகளே.

எண்ணை தோசை பொரிச்ச புரோட்டா மாதிரியே ஊத்தப்பமாய் ஊற்றி எண்ணையில் பொரித்து எடுத்து தருவார்கள். சீவல் தோசை (முறுகல் தோசை), முட்டை சீவல் (முறுகல் தோசை நடுவில் ஆஃபாயில்) முட்டை தோசை (மாவில் முட்டை ஊற்றி கலந்து மெத்து மெத்துனு சுட்டு தருவாங்க). ஹ்ம்ம் இந்த பாய் கடைக்கு நான் அடிமையப்பா.

இப்போ புதுசா முனிசிபாலிடி ரோட்டில் சர்ச்க்கு எதிரில் புது கடை ஆரம்பிச்சு இருக்காங்க டேஸ்ட் சும்மா அம்சமாய் இருக்கு. பழைய டேஸ்ட் கொண்டு வந்துடார் அந்த கடை முதலாளி திரு. அப்பாவு போய் சாப்பிட்டு பாருங்க கண்டிப்பா பிடிக்கும். முக்கியமா இந்த பச்சை மிளகாய் சட்னி கேட்டு வாங்கி சாப்பிட்டு பாருங்க செமையா இருக்கும். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

ருசியா இருக்கும் அதுக்காக அள்ளி அடிச்சி வாங்கி சாப்பிடாதீக அப்புறம் பின்விளைவினால் வரும் துன்பங்களுக்கு என்னை திட்டக்கூடாது. அன்று ஒரு நாள் நான் சாப்பிடுவதை பார்த்து ஒரு அழகிய குடிமகன் கேட்டு வாங்கி ஒரே வாயில் அத்தனை சட்னியையும் சாப்பிட்டு பின் வாளி வாளியா தண்ணீர் குடித்தும் அடங்காமல் மீண்டும் வந்த இடம் நோக்கி சென்றதை கண்டு வருத்தம் தான் வந்தது.

முதலில் நல்ல காரமான பச்சை மிளகாய் வாங்கிகோங்க. மிளகாயை பிய்த்து நுகர்ந்து பார்த்தால் நெடி வரனும். கத்தரிக்காய் வாச, வரக்கூடாது. அடுத்து நல்ல ஒருப்பூடு வாங்கிக்கோங்க சீனா பூடு வாங்காதீங்க. அடுத்து கல் உப்பு அல்லது பாறை உப்பு எடுத்துக்கோங்க. கொஞ்சம் புளியை தண்ணீரில் கெட்டியாக கரைச்சி வச்சுக்கோங்க.

வாணலியில் எண்ணை விட்டு சிறுதீயில் 24 பச்சை மிளகாயை கத்தியால் குத்தியும் (இல்லையென்றால் வெடித்து சிதறும்) 6 பெரிய ஒருப்பூண்டை இரண்டாக வெட்டியும் போட்டு பாதி வேகும்வரை வதக்கி அடுப்பை அணைத்து மூடி வைக்கவும்.

நன்கு ஆறியவுடன் மிக்ஸியில் பச்சைமிளகாய் பூண்டு உப்பு சேர்த்து அரைக்கவும். நடுவே உப்பு சரிபார்த்து பின் கொஞ்சம் கொஞ்சமா புளித்தண்ணீர் சேர்த்து அரைத்து சரியான புளிப்பு வந்ததும் நிறுத்தவும் (பச்சை மிளகாய் காரத்திற்க்கேற்ப்ப புளி சேர்த்தால் தான் ருசிக்கும். இல்லாவிட்டால் புளிப்போ காரமோ கூடி சுவையை கெடுக்கும்.)

அடுத்து நல்லெண்ணையில் கடுகு உளுந்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து சேர்த்து இட்லி தோசை என எதனுடனும் சேர்த்து சாப்பிடலாம்

பின் விளைவு கருதி அளவோடு சாப்பிட்டு வளமோடு வாழவும்.


DSC_0602_SnapseedWM.jpg DSC_0614_SnapseedWM.jpg DSC_0626_SnapseedWM.jpg
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,501
Likes
84,479
Location
Bangalore
#2
இந்த செய்முறை விளக்கத்திற்கு மிக்க நன்றி தோலாண்டி. பார்க்கவே காரம் அள்ளுதே!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.