விருது வழங்கி கவுரவிக்க ,கரம் கூப்பி வணங&#3021

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
Re: விருது வழங்கி கவுரவிக்க ,கரம் கூப்பி வணங&a

[h=1]ஏழை குழந்தைகளுக்காக 9 பள்ளிகளை திறந்த ரிக்ஷாதொழிலாளி[/h]அசாம் மாநிலத்தில் ரிக்ஷா தொழிலாளி ஒருவர் ஏழை குழந்தைகளுக்கு 9 பள்ளிகளை திறந்து வைத்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளார்.

அசாம் மாநிலத்தில் பா.ஜ., தலைமையிலான ஆட்சியில் சர்பானந்தா சோனவால் முதல்வராக உள்ளார். இங்குள்ள கரீம்கஞ்சு மாவட்டத்தை சேர்ந்தவர் அகமது அலி இவர் ரிக்ஷா ஓட்டுனர். இவர் குடும்ப சூழ்நிலையால் கல்வி பயில முடியாமல் இளம் வயதிலேயே ரிக்ஷா ஓட்டத் துவங்கினார். கல்வி மீது இவருக்கு தீராக தாகத்தால், எந்த ஒரு ஏழை குழந்தையும் வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை நிறுத்தி விடக்கூடாது என்று எண்ணிய இவர், ஏழை குழந்தைகளுக்காக பள்ளியை கட்ட முடிவு செய்தார்

. ஆனால் அவரிடம் பள்ளி கட்டும் அளவிற்கு போதிய பணமில்லாமல், தனது சொந்த நிலத்தை விற்று, மேலும் கிராம மக்களிடம் இருந்து பணம் சேகரித்தார்.


40 ஆண்டுகளில் 9 பள்ளிகள்
இறுதியாக, 1978ம் ஆண்டு முதன் முறையாக ஏழை குழந்தைகளுக்காக ஒரு பள்ளிகூடத்தை திறந்தார். இப்படி கடந்த 40 ஆண்டுகளில் மட்டும் தனது பகுதியில் 9 பள்ளிகளை திறந்து வைத்துள்ளார்.இவர் 3 ஆரம்ப பள்ளிகளையும், 5 ஆங்கில வழி கல்வி கற்பிக்கும் நடுநிலை பள்ளிகளையும், ஒரு உயர்நிலைப்பள்ளிகளையும் கட்டி உள்ளார். விரைவில் ஒரு கல்லூரியும் கட்ட இருக்கிறார்.

இது குறித்து அகமது கூறுகையில்,படிப்பறிவின்மை எந்த ஒரு சமூகத்திற்கும் சாபக்கேடு. இதனால் வாழ்வதற்கான ஆதாரமே இல்லாமல் போகும். மேலும் பள்ளியில் பயிலும் குழந்தைகள் நன்றாக படித்து வாழ்க்கை தரம் உயருவதே எனக்கு திருப்தி. இவ்வாறு அவர் கூறினார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,228
Likes
3,171
Location
India
மகள் உதவியுடன் ஏரியைத் தூர்வாரும் தனி ஒருவர்!’ - குவியும் பாராட்டுகள்

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தியாகராஜன், அமெரிக்காவில் இருக்கும் தன் மகள் உதவியுடன் கடந்த 2 ஆண்டுகளாக ஏரிகளைத் தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகிறார். நீராதாரத்தைப் பாதுகாக்க தனிமனிதனாக அவர் முயற்சி எடுத்து வருவதைப் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

அரியலூர் மாவட்டம், விளாங்குடியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் தியாகராஜன். இவரின் மகள் திருணத்துக்குப் பிறகு, தன் கணவருடன் அமெரிக்காவில் பணியாற்றி, தற்போது அமெரிக்கவாழ் இந்தியராக உள்ளார். இந்நிலையில் வறட்சியான பகுதியாக உள்ள தனது கிராமத்தில் நீராதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று எண்ணியவர்கள் தன் தந்தையிடம் ஆலோசித்து அதற்கான நிதியாக ரூ.3 லட்சத்தை அனுப்பியுள்ளார். இதைக் கொண்டு விளாங்குடியில் உள்ள சிறிய அளவில் பாசன வசதியுடன் கால்நடைகளுக்கான குடிநீர் ஆதாரமாக உள்ள 4 ஏக்கர் பரப்பளவுள்ள பிள்ளையார்குளம் மற்றும் 2 ஏக்கர் பரப்பளவுள்ள வீரப்பிள்ளை குட்டையை ஆழப்படுத்தும் பணி இன்று தொடங்கியது.

ஏரியில் உள்ள கருவேல மரங்களை அகற்றி ஏரியை ஆழப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல கடந்தாண்டு எய்ம்ஸ் இண்டியா பவுண்டேஷன் ஃப்ரம் அமெரிக்கா என்ற அமைப்பு கொடுத்த 1,80,000 ரூபாயுடன் தன் மகளின் பங்காக ரூ.3,70,000 சேர்த்து ரூ.5,50,000 செலவில் 10 ஏக்கர் பரப்பளவுள்ள விளாங்குடி பெரிய ஏரி தூர்வாரப்பட்டது. அந்த ஏரியில் தற்போதும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் கால்நடைகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் நிலத்தடி நீர் மட்டம் உயரவும் வழி ஏற்பட்டுள்ளது. தூர்வாரும் பணியின் தொடக்க நிகழ்ச்சியில் அரியலூர் வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து தியாகராஜன் பேசுகையில், "இனி அடுத்த யுத்தமே தண்ணீரால்தான் நடக்கப்போகிறது என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதைப் போக்க என்னால் முடிந்ததைச் செய்யத் தொடங்கியுள்ளேன். ஓய்வு பெற்ற பிறகு, வீட்டில் உட்கார்ந்திருக்காமல், என் மகளின் உதவியுடன் கிராமங்களில் உள்ள ஏரிகளை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டது மகிழ்ச்சியாக உள்ளது. இதேபோல ஒவ்வொருவரும் தன்னால் முடிந்தவரையில் நீராதாரத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் முயற்சி செய்ய வேண்டும். அரசு செய்யவில்லை என்று குறைசொல்வதை விட்டுவிட்டு, நாம் என்ன செய்தோம் என்று சிந்திக்க வேண்டும். அதற்கு எல்லோரும் முயற்சி செய்தால் போதும்" என்று முடித்தார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,228
Likes
3,171
Location
India
14 ஆண்டுகளாக தொடரும் மோர் சேவை; காயத்ரி டிரஸ்ட் அமைப்புக்கு குவியும் பாராட்டுகள்


1524598545686.png


கோடைக் காலத்தில், பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில், குரோம்பேட்டையை சேர்ந்த ஸ்ரீ காயத்ரி டிரஸ்ட் என்ற அமைப்பு, தொடர்ந்து, 14வது ஆண்டாக, சுவைமிக்க மோரை, பொதுமக்களுக்கு, இலவசமாக வழங்கி வருகிறது.

கோடைகாலம் துவங்கி விட்டால், அரசியல் கட்சி மற்றும் நல சங்கங்கள் சார்பில், ஆங்காங்கே, தண்ணீர் பந்தல் திறக்கப்படும்.அந்த பந்தல்கள், ஒரு சில நாட்களிலேயே காணாமல் போய் விடும். ஆனால், ஒவ்வொரு கோடைக் காலத்திலும், குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில், பயணியருக்கு, ஸ்ரீ காயத்ரி டிரஸ்ட் என்ற அமைப்பு, தரம், சுவை மிக்க மோரை, இலவசமாக வழங்கி வருகிறது. 14வது ஆண்டாக, தற்போதும், பொதுமக்களுக்கு மோர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த மோர், மிகவும் சுவையாக இருப்பதால், பயணியர் தேடி வந்து, விரும்பி குடிக்கின்றனர்.

இந்த அமைப்பு, மோர் வழங்குவது மட்டுமின்றி, அனாதை உடலை தகனம் செய்தல், ஏழை மாணவர்களின் கல்வி, மருத்துவ உதவி போன்றவற்றையும், சத்தம் இல்லாமல் செய்து வருகிறது.

அனாதை உடல்களை தகனம் செய்யும் நோக்கத்தில், மெட்ராஸ் டெலிபோன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற, ஜி.ராகவன், 1983ம் ஆண்டு, ஸ்ரீ காயத்ரி டிரஸ்ட்டை துவக்கினார்.

35 ஆண்டுகளாக,இதுவரை,1,000 உடல்களை,இந்த அமைப்பினர் தகனம் செய்துள்ளனர்.இதேபோல், கல்வி மற்றும் மருத்துவ உதவிகளையும், செய்து வருகின்றனர். இதுவரை, 40 பேருக்கு மருத்துவ உதவி செய்துஉள்ளனர்.

கடந்த ஆண்டு, கல்வி உதவிக்காக, நான்கரை லட்சம் ரூபாயும்; மருத்துவ உதவிக்காக, 7.5
லட்சம் ரூபாயும் செலவு செய்துள்ளனர்.இந்த அமைப்பினரை தொடர்ப்பு கொள்ள நினைப்போர்,- 94440-22033 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

ஆண்டுதோறும், ஏப்ரல் முதல் மே மாதம் இறுதி வரை, பொதுமக்களுக்கு மோர் விநியோகம் செய்து வருகிறோம். கருவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய் கலந்த சுவையான, தரம் மிக்க மோர், வழங்கி வருகிறோம்.

எஸ்.எஸ்.எம்., ரெசிடென்சியில், மோரை தயாரித்து, அனுப்புகின்றனர். மோருக்கு மட்டும், ஆண்டிற்கு, 1.75 லட்சம் ரூபாய் செலவாகிறது. நாள் ஒன்றுக்கு, 70 லிட்டர் பால் செலவாகிறது. காலை, 10:30 மணி முதல், மதியம், 2:30 மணி வரை, வழங்குகிறோம்.
-ராகவன், ஸ்ரீ காயத்ரி டிரஸ்ட் நிறுவனர்
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
சட்ராஸ் எஸ்.ஐ., அறிவுரை பேச்சு; போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டு

1524864444758.png

ஹெல்மெட் போடாத வாகன ஓட்டிகளிடையே, விபத்து குறித்து தெளிவாக அறிவுரை கூறிய, காவல் உதவி ஆய்வாளரின் பேச்சு, 'பேஸ்புக்' பக்கத்தில், பதிவு செய்யப்பட்டு, வேகமாக பகிரப்பட்டு வருகிறது. உயதிரகாரிகள் பலரும், அந்த காவல் உதவி ஆய்வாளரை பாராட்டி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஏப்., 23 முதல், 29 வரை சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்
படுகிறது.காவல் துறையும், வட்டார போக்குவரத்து அலுவலகமும் இணைந்து, மாவட்டம் முழுவதும் சாலை பாதுகாப்பு பற்றியும், விபத்து மற்றும் அதன் விளைவுகள் பற்றியும் வாகன ஓட்டிகளிடையே எடுத்து கூறி வருகின்றனர்.
சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்தில் பணியாற்றும், உதவி ஆய்வாளர், முத்துக்குமார், கடந்த 24ல், சதுரங்கப்பட்டினம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.அப்போது, ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி, அபராதம் வசூலிப்பதை தவிர்த்து, விபத்து குறித்த விழிப்புணர்வு கருத்துகளை தெரிவித்தார்.

'விபத்து ஏற்படும் போது முதலில் தலையில் தான் அடிபடும்; உயிர் போனால் திரும்ப கிடைக்காது' என தெரிவித்த அவர், வாகன ஓட்டிகளை கட்டாயமாக ஹெல்மெட் அணிய அறிவுறுத்தினார்.அவரது பேச்சு, அங்கிருந்த வாகன ஓட்டிகளை வெகுவாக கவர்ந்தது. மேலும், ஒரு தாளில், இனி ஹெல்மெட் அணிந்து தான் வண்டி ஓட்டுவேன் என, பத்து முறை எழுதி வாங்கிய பின்னர், அங்கிருந்து அனுப்பியுள்ளார்.

அவரது அறிவுரை பேச்சு, காவல் துறை பேஸ்புக் பக்கத்திலும், வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, பலரால் பகிரப்பட்டு வருகிறது. காவல்துறை உயரதிகாரிகள் பலரும், உதவி ஆய்வாளரை பாராட்டிஉள்ளனர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
ராணுவ வீரர்கள் நிம்மதியாக சுவாசிக்க நகைகளை விற்ற தம்பதி

1524895468442.png

மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த தம்பதியினர் சுமீதா - யோகேஷ் சித்தாடே. யோகேஷ் இந்திய விமானப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சுமீதா ஆசிரியையாக பணியாற்றி ஓய்வுபெற்றார்.

பணியில் இருந்து ஓய்வு பெற்ற சுமீதா, ராணுவ வீரர்களின் வீரம், தியாகம் மற்றும் பெருமைகளை குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றி வருகிறார்.

இந்நிலையில், சியாச்சினில் கடும் பனியில் பணியாற்றும் ராணுவ வீரர்களின் நலனுக்காக புனே தம்பதியினர் தங்களது நகைகளை விற்று பண உதவி செய்துள்ளனர்.

இமயமலையில் இந்திய - பாக்., எல்லையில், சியாச்சின் பனிச் சிகரம் அமைந்துள்ளது. இங்கு கடும் குளிரில் பணியாற்றும் வீரர்களுக்கு உதவி செய்ய அவர்கள் முடிவு செய்தனர்.

கடல் மட்டத்தில் இருந்து 19 ஆயிரம் அடி உயரத்தில் இருப்பதால் அங்கு பிராண வாயு அளவு குறைவாக இருக்கும். இதனால் ராணுவ வீரர்களுக்கு அடிக்கடி மூச்சு திணறல் பிரச்னை ஏற்படும். இதைப் போக்க அங்கு ஒரு பிராணவாயு நிலையம் அமைக்க முடிவானது.

இதையறிந்த, அந்த தம்பதியினர் தங்களிடம் இருந்த தங்க நகைகளை விற்றனர். அதன்மூலம் கிடைத்த 1.25 லட்சம் ரூபாயை, பிராணவாயு நிலையம் அமைக்க நன்கொடையாக வழங்கினர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், ராணுவ வீரர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவே எங்களது நகைகளை விற்றோம் என தெரிவித்துள்ளனர்.

ராணுவ வீரர்களின் நலனுக்காக தங்கள் நகைகளை விற்ற ஓய்வுபெற்ற தம்பதியினருக்கு அனைத்து தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,228
Likes
3,171
Location
India
படிச்சது இன்ஜினீயரிங்... செய்வது வெட்டிவேர் விவசாயம்!” - ஆச்சர்யக் கதையும் வியாபார வாய்ப்பும்


கடலூர் சி.கே பொறியியல் கல்லூரியில் இந்திய வெட்டிவேர் நெட்வொர்க் மற்றும் புதுச்சேரி வெட்டிவேர் நெட்வொர்க் இணைந்து நடத்திய வெட்டிவேர் சாகுபடி குறித்த கருத்தரங்கம் நடந்தது. இந்தக் கருத்தரங்கில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சுமார் 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.


இந்தக் கருத்தரங்கில் லாபகரமாக வெட்டிவேர் சாகுபடி செய்யும் முறை, அதனை விற்பனை செய்தல், மதிப்புக் கூட்டல், அரசு உதவி போன்ற பல்வேறு தலைப்புகளில் தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த வெட்டிவேர் சாகுபடி நிபுணர்கள் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினார்கள். தொடர்ந்து வெட்டிவேர் சாகுபடிக்குப் புதிய ரகங்கள், மகசூல் பெருகிட புதுமையான அணுகுமுறைகள் மற்றும் வெட்டிவேரில் மருந்து கூறுகளைப் பிரித்து எடுக்கும் அணுகுமுறைகள் மேலும் வெட்டிவேர் மூலமாகக் கைவினைப் பொருள்கள் வாய்ப்பு, சாகுபடி குறித்து முன்னோடி விவசாயிகள் கருத்துரை வழங்கினார்கள்.

முன்னதாக கடலூர் சி.கே குழும அசோக்குமார் குத்துவிளக்கு ஏற்றி கருத்தரங்கைத் தொடங்கிவைத்தார். நபார்டு வங்கி முன்னாள் தலைமைக் காசாளர் நாகூர்அலி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். தொடர்ந்து கடலூர் வெட்டிவேர் திறன்மேம்பாட்டு மையம் திறக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் பிரசன்னகுமார், இன்பரசன், செந்தூர்வேலன், வேலுமணி ஆகியோர் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

இது குறித்து மருதமலை டிரேடர்ஸ் நிறுவனர் பிரசன்னகுமார் கூறும்போது ``நான் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்தேன். ஆனால், எனக்கு ஒரு தொழில் முனைவோராக ஆக வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தது. இந்நிலையில் சிகே குழும அசோக்குமார் சார் என்னிடம் வெட்டிவேர் சாகுபடி குறித்து `உலகில் 10 சதவிகிதம் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், 90 சதவிகிதம் தேவை உள்ளது' எனக் கூறினார். அப்பொழுது `இன்ஜினீயரிங் படித்துவிட்டு விவசாயமா' என எனக்குத் தாழ்வு மனப்பான்மை இருந்தது.

அசோக்குமார் சார் அவர்கள் அதனைப் போக்கி 2015 ம் ஆண்டு சிறிய முதலீட்டில் வெட்டிவேர் மற்றும் வெட்டிவேர் கைவினைப் பொருள்களை வாங்கி விற்பனையை தொடங்கி வைத்தார். மார்கெட்டில் நல்ல தேவை இருந்ததால் நானும் என்னைப் போன்ற வேலையில்லாத இளைஞர்களும் இணைந்து கடலூர் அருகே கடற்கரையோர கிராமங்களில் பயனில்லாத உவர் நிலங்களை ரூ 5,000, 10,000 க்குக் குத்தகைக்கு எடுத்து வெட்டிவேர் பயிர்செய்தோம். அதன் பின்பு மருதமலை டிரேடர்ஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கி நாங்கள் பயிர் செய்தது போக விவசாயிகளிடம் வாங்கி ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு விற்பனை செய்து வந்தோம். மார்க்கெட்டில் வெட்டிவேர் தேவை அதிகம் உள்ளது. எங்களுக்குத் தற்பொழுது 200 டன் தேவைப்படுகிறது.

ஆனால், அந்த அளவுக்கு நம்பகுதியில் உற்பத்தி இல்லை. இதனால் விவசாயிகளுக்கு வெட்டிவேர் சாகுபடி குறித்து ஒரு விழிப்புஉணர்வை ஏற்படுத்தவே இந்தக் கருத்தரங்கை எற்பாடு செய்துள்ளோம். நாங்கள் விவசாயிகளுக்கு நாற்று இலவசமாகத் தந்து அவர்களுடன் ஒரு வருடம் பயணித்து வெட்டிவேர் உற்பத்தி தொழில்நுட்பம் அனைத்தையும் சொல்லித் தந்து நாங்களே உற்பத்தியை வாங்கிக் கொள்கிறோம். அதற்கு அக்ரிமென்ட் கூட போட்டுவிடுகிறோம். ஒரு விவசாயி ஒரு ஏக்கர் வெட்டிவேர் பயிர் செய்ய ரூ.70,000 செலவு செய்தால் ரூ 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை லாபம் பெற முடியும் என்பதை உறுதியாகக் கூற முடியும்" என்கிறார் நம்பிக்கையாக.

படித்தது மெக்கானிக்கல் இன்ஜினீயரிங். ஆனால் பார்ப்பது விவசாயம். இந்த இளைஞர்களின் நம்பிக்கை பிரமிப்பாக உள்ளது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,228
Likes
3,171
Location
India
வாழ்நாளில் 1,173 முறை ரத்த தானம் செய்து சாதனைப்படைத்த அதிசய மனிதர்

1526539816460.png

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் (81) தனது வாழ்நாளில் 1,173 முறை ரத்த தானம் செய்து சாதனைப் படைத்துள்ளார். ஜேம்ஸ் தனது 14 வயதில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அவரது ரத்தத்தை சோதனை செய்த மருத்துவர்கள் ரத்தத்தில் வித்தியாசமான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் ஆண்டி-டீ இருப்பதை கண்டறிந்தனர்.

அவரது ரத்த பிரிவின் மூலம் வயிற்றில் இருக்கும் குழந்தைகளை கிமோலைட்டிக் என்ற நோயிலிருந்து தடுக்க முடியும். இந்த நோயினால் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ரத்த சிவப்பு அணுக்கள் சிதைவிலிருந்து பாதுகாக்க ஜேம்சின் ரத்தம் உதவுகிறது.ஜேம்சிடமிருந்து 1964-ம் ஆண்டிலிருந்து ரத்தம் எடுக்கப்பட்டு கற்பமாக உள்ள பெண்களுக்கு அளிக்கப்படுகிறது. இதன்மூலம் இதுவரை 2.4 மில்லியன் குழந்தைகள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜேம்ஸ் 70 வயதை கடந்து விட்டதால் அவர் தனது கடைசி ரத்த தானத்தை வழங்கினார். ஜேம்சின் செயலுக்கு அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் இது போன்று ஆண்டி-டீ சிகிச்சைக்கு உதவும் வகையிலான ரத்தம் கொண்டவர்கள் 160 பேர் உள்ளனர்
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
குழந்தைகளுக்காக 17,000 கி.மீட்டர் தூரம் நடக்கும் இன்ஜினீயர்!

'இந்தியாவில் பிச்சையெடுக்கும் குழந்தைகளை மீட்டெடுக்க, 17,000 கி.மீட்டர் தூரம் நடக்க இலக்கு நிர்ணயித்துளேன்' என்று இன்ஜினீயர் ஆஷிஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.

சமோபூர் பட்லி நகரைச் சேர்ந்தவர் ஆஷிஷ் ஷர்மா. பி.டெக் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். ஆதரவற்ற குழந்தைகள், இந்தியாவில் உள்ள சாலைகளிலும் வீதிகளிலும் பிச்சை எடுத்துவருகின்றனர். இதை மாற்ற வேண்டும் என முடிவுசெய்து நடைப்பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், `` 2014ல் படிப்பு முடித்தபின், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவந்தேன். அப்போது, ஒன்பது வயது சிறுமி ஒருவர், என்னிடம் பிச்சை கேட்டார். அந்த நிகழ்வுதான் என்னுடைய வாழ்வின் திருப்புமுனையாக மாறியது. சிறார்கள் சாலைகளில் பிச்சை எடுப்பது மிகவும் தவறு என்று மனதில் பட்டது. இதையடுத்து, நான் குடியிருந்த பகுதியில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஏழு சிறுவர்களை மீட்டெடுத்தேன். இதேபோல இந்தியா முழுவதும், சாலைகளிலும் வீதிகளிலும் பிச்சை எடுத்து வரும் சிறுவர்களை மீட்டெடுக்க வேண்டும் என முடிவுசெய்தேன்.

மேலும், மாவட்ட அதிகாரிகள் மற்றும் பள்ளிகளின் தலைமைக் கல்வி அதிகாரிகளைச் சந்தித்து, பிச்சையெடுக்கும் குழந்தைகள்குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்துமாறு வலியுறுத்திவருகிறேன். அப்படி பிச்சை கேட்கும் குழந்தைகளுக்குப் பணம் கொடுக்காமல், பள்ளிக்குச் செல்ல வழிசெய்வோம் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்ளும்படி மாணவர்களிடம் கேட்டுக்கொள்வேன். பள்ளி நிர்வாகத்திடம் அனுமதிபெற்று, மாணவர்களிடம் விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசுவேன்'’ என்றார்.

இதனால், செய்துகொண்டிருந்த வேலையை உதறிவிட்டு, சிறுவர்களை மீட்டெடுக்க நடைபயணத்தைத் தொடங்க முடிவுசெய்தேன். 17, 000 கி.மீ தூரம் இலக்காக நிர்ணயித்தேன். உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து நடைப்பயணத்தைத் தொடங்கினேன். ஹிமாச்சலபிரதேசம், பஞ்சாப், ஹரியான, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கோவா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து, அலிகார் நகருக்கு வந்துள்ளேன். ஒரு நாளைக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை நடப்பேன். இதுவரை 5, 613 கி.மீட்டர் தூரம் கடந்துள்ளேன். மீதமுள்ள தூரத்தை நிச்சயம் கடப்பேன்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
ரம்ஜான் நோன்பைக் கைவிட்டு இந்து சிறுவனுக்கு ரத்த தானம் செய்த இஸ்லாமியர்: மதத்தை வென்ற மனிதநேயம்


பாட்னா: பிகாரில் ரம்ஜான் நோன்பைக் கைவிட்டு இந்து சிறுவனுக்கு இஸ்லாமிய வாலிபர் ஒருவர் ரத்த தானம் செய்த சம்பவம், அனைவரது மனதினையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள குச்சைக்கோடே என்ற பகுதியைச் சேர்ந்த ஒருவரின் எட்டு வயது மகன் ராஜேஷ். இச்சிறுவனுக்கு தலசீமியா என்ற ரத்தம் சம்பந்தப்பட்ட நோய் உள்ளது. இந்த நோய் வந்தவர்களுக்கு மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு ஒரு முறை ரத்தத்தினை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

இந்நிலையில் ராஜேஷூக்கு செவ்வாயன்று திடீர உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவனது தந்தை அவனை உடனே அங்கிருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள சடர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

ஆனால் அங்கே ரத்த வங்கியில் போதுமான ரத்தம் இல்லை என்றும், ரத்தம் கிடைக்க இரண்டு மூன்று நாட்களாகுமென்றும் தெரிவித்தனர். இதன் காரணமாக ராஜேஷின் தந்தை செய்வதறியாது திகைத்தார். அப்பொழுது அந்த மருத்துவமனையில் துப்புரவுப் பணியிலிருக்கும் ஒருவர் மூலமாக "மாவட்ட ரத்த தானம் செய்வோர் அணி' பற்றிய தகவல் தெரிய வந்துள்ளது.

அந்த அணியின் தலைவரான அன்வர் ஹுஸைன், அதே வகை ரத்தம் உள்ளவரும் , அவர்களது அணி உறுப்பினருமான ஜாவெத் ஆலம் என்பவரை இதற்காக மருத்துவமனைக்கு வருமாறு அழைத்துள்ளார்.

ஆனால் தான் ரம்ஜான் மாத நோன்பிலிருப்பதாக ஆலம் கூறியுள்ளார். ஆனால் அவரை சமாதானம் செய்த அன்வர் ஹுஸைன், மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களை சந்தித்து ஆலோசிக்கும்படி கூறியுளளார்.

மருத்துவமனையிலும் ஜாவெத் ஆலமிடம் அவர் நோன்பிலிருப்பதாக தெரிந்தவுடன் அவரிடம் இருந்து ரத்தம் பெற முதலில் மருத்துவர்கள் மறுத்து விட்டனர். ஆனால் பின்னர் அவர்களின் அறிவுரைப்படி, ஆலம் தனது நோன்பைக் கைவிட்டு சிறிது பழச்சாறு மற்றும் உணவு வகைகளைச் சாப்பிட்டார். அதன் பின்னர் அவர்கள் ரத்தம் எடுத்து ராஜேஷுக்கு செலுத்தினார்.

இது பற்றி பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆலம், "சக மனிதனுக்கு உதவி செய்யும் படி எனது மதம் எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது. எனவேதான் நான் எனது நோன்பைக் கைவிட்டு ராஜேஷுக்கு உதவினேன். மனிதநேயமே மற்ற எல்லாவற்றையும் விட மேலானது" என்று தெரிவித்தார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,228
Likes
3,171
Location
India
`கொஞ்சம் பொறுத்துக்க மாப்ள... ஆஸ்பத்திரி போயிரலாம்!” - தூத்துக்குடி குடும்பத்தை மீட்ட நட்பு
எவ்வளவோ கிராமங்களுக்குச் சென்றிருக்கிறேன், எவ்வளவோ பயணங்கள்... எவ்வளவோ கதைகள், எவ்வளவோ காயங்கள், எவ்வளவோ நம்பிக்கைகள்... எவ்வளவோ மனிதர்களையெல்லாம் சந்தித்து திரும்பியிருக்கிறேன். ஆனால், தூத்துக்குடி முற்றிலும் வேறொரு அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. இறப்பு, இழப்பு, வலி, காயம், தழும்பு என அவ்வளவு உணர்வுகளையும் கடந்து தூத்துக்குடி மீண்டு வரும்....
தூத்துக்குடிக்குப் பக்கத்தில் இருக்கிறது கூட்டப்புளி கிராமம். அந்தக் கிராமத்தில் இருக்கிற குடும்பத்தில் அப்பா அம்மாவோடு சேர்த்து எட்டு பேர். நான்கு ஆண் குழந்தைகள். இரண்டு பெண் குழந்தைகள். ஆறு பேருமே பள்ளிக்குப் போகிறார்கள். அம்மா குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார். அப்பா கூலி வேலை. சில வருடங்களுக்கு முன்பு அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போகிறது. ஒரு வாரத்தில் அப்பாவின் உடல் பழைய நிலைக்குத் திரும்பி விடுமென மொத்த குடும்பமும் நம்புகிறது.

நினைப்பதெல்லாம் சாதாரண மக்களுக்கு நடந்துவிடுமா? அப்பா படுத்த படுக்கையாகிவிடுகிறார். மொத்த குடும்பமும் நிலை குலைந்து போகிறது. ஆறு குழந்தைகளும் படிக்க வேண்டும். அம்மா ஒருவரால் குடும்பத்தின் பாரத்தைச் சுமக்க முடியாது என்பதால், குடும்பத்தில் மூத்த மகன் என்கிற முறையில் 16 வயது சுகுமார் குடும்ப பாரத்தை சுமக்க முன்வருகிறார். மற்றவர்கள் படிக்க வேண்டும்; குடும்பத்தை நிமிர்த்த வேண்டும் என்கிற கனவில் பெங்களூரில் இருக்கிற கடலை மிட்டாய் நிறுவனத்துக்கு வேலைக்குக் கிளம்புகிறார். மாதம் 12 ஆயிரம் சம்பளத்தில் குடும்பத்தைத் தாங்கிப் பிடிக்கிறார்.


அடுத்த ஒரு வருடத்தில் மூத்த தங்கை பருவமடைகிறார். தேவைகள் அதிகரிக்கிறது. ஓடி ஓடி உழைக்கிறார். அப்பாவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இரண்டு வருடங்களுக்கு முன்பு கூட்டப்பள்ளிக்கே திரும்பி வந்து கொத்தனார் வேலைக்குச் செல்கிறார். குடும்பச் சூழலை அறிந்துகொண்ட இன்னொரு மகன் படிப்பை எட்டாவதோடு நிறுத்திவிட்டு பெங்களூரில் சுகுமார் பணிபுரிந்த மிட்டாய் நிறுவனத்துக்கு வேலைக்குச் செல்கிறார். இதற்கு இடையில் பருவமடைந்த தங்கையின் சடங்கு நிகழ்வை நடத்த வேண்டும் என்பதால் பருவமடைந்த ஒன்றரை வருடங்கள் கழித்து சீர் செய்வது என முடிவெடுத்து அந்த வேலைகளைத் தொடங்குகிறார். பல இடங்களிலும் வேலை செய்து சேர்த்து வைத்த பணத்தில் சீர் நிகழ்வுக்கான அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறார்.

அவரோடு அவருடைய இரண்டு நண்பர்களும் சேர்ந்துகொள்கிறார்கள்.

பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழைச் சென்னை உட்பட பல ஊர்களிலிருக்கும் உறவினர்களுக்குக் கொடுத்துவிட்டு கடந்த திங்கள் கிழமை கூட்டாம்புளி ஊருக்குத் திரும்புகிறார். அடுத்த நாள் காலை அவர் பணிபுரிந்த மடத்தூரிலிருந்து ``இன்னைக்கு ஒரு நாள் மட்டும் வந்து வேலை பாத்துட்டு போங்க” என அழைப்பு வருகிறது. வேறு வழியின்றி அன்றைய தினம் காலை நண்பன் விஜய்யை அழைத்துக் கொண்டு பைக்கில் மடத்தூர் செல்கிறார்.

அந்தோனியார் புரத்தில் சாலைகள் அடைக்கப்பட்டிருந்ததால் பைக்கை அங்கேயே நிறுத்திவிட்டு நண்பர்கள் இருவரும் பைபாஸ் சாலையில் தூத்துக்குடி நோக்கி நடந்து செல்கிறார்கள். தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் தாண்டி இருக்கிற பாலத்துக்கு அருகில் வரும்பொழுது மக்கள் அதிக எண்ணிக்கையில் ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது வரை எந்தக் கலவரமோ துப்பாக்கிச் சூடோ நடக்கவில்லை. நண்பர்கள் இருவரும் மடத்தூர் செல்ல வேண்டாம்; மீண்டும் கூட்டப்புளிக்கே திரும்பிவிடலாம் என மக்களோடு சேர்ந்து நடக்கிறார்கள்.

அப்போது போராடும் மக்களும் ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்துவிடுகிறார்கள். போராடுகிற மக்களைக் கலைக்க காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள். நண்பர்கள் இருவரும் திருநெல்வேலி சாலையில் ஓட ஆரம்பிக்கிறார்கள். சில நிமிடங்களில் துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்டதால் இனி எதுவும் நடக்காது என்கிற எண்ணத்தில் ஓடுவதை விட்டு விட்டு நடக்க ஆரம்பிக்கிறார்கள். இந்த நேரத்தில் இவர்களுக்குப் பின் பக்கமிருந்து வந்த காவலர்களைக் கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள். இனி துப்பாக்கிச் சூடு இருக்காது என்கிற நம்பிக்கையில் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடக்கிறார்கள். அதற்குள் பின்னால் இருந்து வந்த காவலர்கள் 500 மீட்டர் தூரத்திலிருந்து இவர்களை நோக்கிச் சுடுகிறார்கள். துப்பாக்கிச் சூட்டில் சுகுமார் சிக்கிக்கொள்கிறார்.

குண்டு பட்டதில் கீழே விழுந்த சுகுமார் விஜய்யிடம் 'என்னை சுட்டுட்டாங்க... தொடைல ரத்தம் வருது... நடக்க முடியலடா' எனக் கத்துகிறார். நண்பன் சுடப்பட்டதை உணர்ந்த விஜய் சுகுமாரைத் தூக்கிக்கொண்டு மீண்டும் திருநெல்வேலி சாலையில் ஓடுகிறார். மருத்துவமனைக்குப் போக முடியாதபடி தடியடியும் துப்பாக்கிச் சூடும் நடக்கிறது. பக்கத்திலிருக்கும் நல்லதம்பி மருத்துவமனைக்குப் போக வேண்டுமானால் போராட்டக் களத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். ஆனால், காவல்துறை சரமாரியாகத் தாக்குகிறார்கள். வேறு வழியின்றி திருநெல்வேலி சாலையில் நண்பனை தூக்கிக் கொண்டு போகிறார்.

சர்விஸ் சாலையில் வந்த ஒரு பைக்கை நிறுத்தி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென விஜய் மன்றாடுகிறார். பெயர் தெரியாதவரின் பைக்கில் ஏறி கொரம்பள்ளம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறார்கள். ``மருத்துவமனையில் யாரும் இருக்க மாட்டாங்க... நீங்க உடனே புதுக்கோட்டை கொண்டு போங்க... என்னோட வண்டில பெட்ரோல் இல்ல" என லிஃப்ட் கொடுத்தவர் சொல்கிறார். அந்த வழியாக வந்த வேறொரு நண்பர் இருவரையும் பைக்கில் அழைத்துக்கொண்டு புதுக்கோட்டை மருத்துவமனைக்கு வருகிறார்.

சுகுமார் வலியில் கத்துகிறார். ``இன்னும் கொஞ்ச நேரம்டா மாப்ள.. ஆஸ்பத்திரி போயிரலாம்.. கொஞ்சம் பொறுத்துக்க மாப்ள“ என விஜய் ஆறுதல் சொல்கிறார். ஆனால், மருத்துவமனையில் ரத்தம் இல்லையென்பதாலும் மருத்துவ உபகரணங்கள் இல்லையென்பதாலும் உடனடியாக சுகுமாரை திருநெல்வேலி கொண்டு போகச் சொல்கிறார்கள். அவர்களுடைய இன்னொரு நண்பரான ராஜ்குமாருக்குத் தகவல் கொடுக்கிறார்கள். அவரும் புதுக்கோட்டை மருத்துவமனைக்கு வந்துவிடுகிறார். அங்கிருந்து 108 ஆம்புலன்சில் சுகுமார் திருநெல்வேலி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார். பயணத்தில் இருக்கும்பொழுதே சுகுமாரின் குடும்பத்துக்குத் தகவல் சொல்கிறார்கள்.

குடும்பத்தைச் சுமக்கிற சுகுமாருக்குக் குண்டு பட்டுவிட்டது என்றதும் குடும்பமே பதறிப் போகிறது. அம்மாவும் அப்பாவும் குழந்தைகளைவிட்டு விட்டு மருத்துவமனைக்குப் போகிறார்கள். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்து சுகுமாரின் குண்டு வெளியே எடுக்கப்படுகிறது. சுகுமாரிடம் பேசுகிற அவரது அம்மா ``விசேஷத்தை இன்னொரு நாள் வச்சுக்கலாம், நீ சரியாகி பத்திரமா வீட்டுக்கு வா" என்கிறார்.

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு, இணைய வசதிகள் இல்லை. தங்கையின் சீருக்காக ஊருக்கெல்லாம் பத்திரிகை கொடுக்கப்பட்டுவிட்டது, கடன் வாங்கி எல்லாப் பணிகளையும் கிட்டத்தட்ட முடித்துவிட்டார்கள். சுகுமார் மருத்துவமனையில் இருக்கிறார், இப்போது குடும்ப நிகழ்வை நடத்துவதா வேண்டாமா என்கிற குழப்பத்தில் மொத்த குடும்பமும் என்ன செய்வதென தெரியாமல் நிற்கிறார்கள். ஆனால், சுகுமாரின் நண்பர்கள் ``தங்கச்சிக்குச் சீர் நடக்கும், நாங்க பக்கத்துல இருந்து நடத்தி முடிக்கிறோம். நீ பத்திரமா ஆஸ்பத்திரியில் இரு” என நம்பிக்கை கொடுக்கிறார்கள்.

சுகுமார் மருத்துவமனையில் இருக்கிறார். சுகுமாரை அவரது நண்பர் விஜய் சம்பவம் நடந்த நாளிலிருந்து இப்போது வரை உடனிருந்து கவனித்து வருகிறார். சுகுமார் குடும்ப நிகழ்வை அவரது நண்பர்கள் உடனிருந்து கவனித்துக் கொள்கிறார்கள். ஞாயிறு காலை 11 மணிக்குதான் சுகுமாரின் தங்கைக்கு சீர் நிகழ்வு நடந்து முடிந்திருக்கிறது…..
இந்த நிகழ்வு மட்டுமல்ல இன்னும் எத்தனையோ நிகழ்வுகளை தூத்துக்குடி மக்கள் மிகப் பெரிய துயரத்துக்குப் பின்னால் நின்று நடத்தியிருக்கிறார்கள்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.