விருது வழங்கி கவுரவிக்க ,கரம் கூப்பி வணங&#3021

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,401
Likes
20,836
Location
Germany
அரசு பள்ளி மாணவர்கள் பயணிக்க ஆட்டோவுக்கு மாதம் ரூ.20 ஆயிரம்: ஓய்வூதியரின் தாராள மனசு

1528003545982.png

சிவகங்கை அருகே 24 அரசு பள்ளி மாணவர்கள் பயணிக்க, ஆட்டோ கட்டணமாக மாதம் 20 ஆயிரம் ரூபாயை சித்தலூரைச் சேர்ந்த ஓய்வூதியர் வழங்குகிறார்.


கோவானூரில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் சித்தலூர் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வில் தொடர்ந்து 'சென்டம்' எடுக்கிறது. இரு ஊர்களுக்கும் இடையேயான பாதை மாயமானதால், 10 கி.மீ., சுற்றி செல்ல வேண்டும். இதனால் கோவானுரைச் சேர்ந்த 24 மாணவர்கள் பெரியக்கோட்டையில் படித்தனர். அவர்களை சித்தலூர் பள்ளியில் சேர்க்க தலைமை ஆசிரியர் பீட்டர் முயற்சி எடுத்தார். வாகன வசதி ஏற்படுத்தி கொடுத்தால் மட்டுமே குழந்தைகளை அனுப்புவதாக பெற்றோர் தெரிவித்தனர்.

சித்தலூர் பள்ளியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற முனியாண்டி, 2 ஆட்டோக்களை ஏற்பாடு செய்தார். ஆதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாயை மாதந்தோறும் வழங்கவும் ஒப்புக் கொண்டார். இதனால், குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
முனியாண்டி கூறியதாவது: எனது மகன் நல்ல நிலையில் உள்ளார். இதனால், ஓய்வூதியத் தொகையை ஏழை மாணவர்களுக்கும், பணிபுரிந்த பள்ளிக்கும் செலவழிக்கிறேன். சமீபத்தில் பள்ளிவசதிக்காக 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். மாணவர்கள் சிரமமின்றி வந்து செல்ல சாலையில், இருபுறமும் இருந்த சீமைக்கருவேல மரங்களை சொந்த செலவில் அகற்றினேன். கோவனூர், சித்தலூர் இடையே பாதையை கண்டறிந்து விரைவில் தார் சாலை அமைத்தால், மாணவர்களுக்கு அலைச்சல் குறையும் என்றார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,401
Likes
20,836
Location
Germany
பசித்தவருக்கு உணவு கொடுங்கள்; ருசியான வாழ்வு உங்களை தேடி வரும்!

1529268463797.png

பசி இல்லை என்று சொல்பவர்கள் ஒருபுறம். பசிக்கு ஒருவாய் உணவு இல்லை என்று பரிதவிப்பவர்கள் மறுபுறம். சாலையோரங்களில், ஆதரவின்றி வசிப்போர், இன்றும் மூன்று வேளை உணவு கிடைக்காமல் அல்லல்படுவதை, பார்க்கிறோம்.


நம்மில் அநேகம் பேர், அனுதாபத்தோடு நின்றுவிடுகின்றனர். இவர்களுக்கு மத்தியில் கொஞ்சம் வித்தியாசமானவர், கோவை ரமேஷ். இவர் ஒரு படி மேலே போய், தினந்தோறும், 300 ஆதரவற்றோர்கள் மற்றும் முதியோர்களுக்கு உணவளித்து, அவர்களின் பசியாற்றி வருகிறார்.

ராம்நகர், விஜய் பார்க்இன் ஓட்டல் நிர்வாக இயக்குனரான இவர், நம்மிடம் பகிர்ந்த சுவாரசிய தகவல்கள்... ஒவ்வொரு பருக்கைச் சோற்றிலும் ஒருவரின் பசி அடைக்கப்பட்டிருப்பதை அறியாமலே குப்பையில் கொட்டப் படுகிறது பழைய சாதம். அதிலும் கல்யாண மண்டபங்களில், வீட்டு விழாக்களில், ஓட்டலில் மீதமாகும் உணவுகள் தினந்தோறும் வீணாவதை கண்டுகூடாக பார்க்கும்போது வேதனையாக இருக்கும்.

அதற்கும் வழியில்லாமல் சாலையோரங்களில் வசித்து வரும் ஆதவற்றவர்கள் நிலையை யோசிக்கும்போது, இந்த ஐடியா வந்தது. தெருவில் உணவிற்காக மற்றவர்களிடம் கையேந்துபவர்களும், சாலையில் பராமரிப்பின்றி வாடும் முதியவர்களுமே எங்களுடைய இலக்கு.

எங்கள் விருந்தினர்களுக்கு செய்யும் அதே தரத்தில் இட்லி, பொங்கல், கிச்சடி, சேவை, உப்புமா என, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வெரைட்டீஸ் தயார் செய்து இப்பகுதியை சுற்றியுள்ள ஆதவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஏழை எளிய மக்களுக்கு, சுடசுட காலை உணவளித்து வருகிறோம். முதலில் 150ஆக இருந்த இந்த எண்ணிக்கை, ஓரிரு நாட்களில், 300 ஆக உயர்ந்தது. சரியாக காலை 9:00 மணி ஆனதும் அனைவரும் ஆஜராகி விடுவர். பெரிய பிசினஸ் ஆட்கள் முதல் எத்தனையோ பேர் எங்கள் ஓட்டலில் பசியாற்ற வருகின்றனர். இருப்பினும், ஏழை மக்களின் பசியாற்றி பின்னரே அனைவருக்கும் விருந்தளிக்கிறோம்.

ஆரம்பத்தில் ஆதரவற்றவர்கள், குழந்தைகளுக்கு மட்டும்தான் வழங்கினோம். ஒருமுறை, பேன்ட் சர்ட்டோடு, ஷூ போட்டு, 80 வயது முதியவர் ஒருவர் வந்து நின்றார்.நாங்கள், 'ஆதரவற்றவர்களுக்கு மட்டும்தான் உணவு' என்றதும், சுருங்கிய முகத்துடன், 'எங்க பசங்க வீட்டுல சோறு போடமாட்டீங்கராங்க தம்பி' என்றார் அந்த முதியவர்.

'இந்த காலத்தில் வயதானவர்களுக்கும், ஆதரவற்றவர்கள் நிலைதான் போல' என, முதியவர்களுக்கும் உணவு கொடுக்க ஆரம்பித்தோம்.

மாற்றுத்திறனாளி சிறுவன், வீட்டுக்கு அருகில் வசிக்கும் படுத்த படுக்கையில் வாடும் மூதாட்டிக்கு எங்களிடம் இருந்து உணவு வாங்கி செல்வான். தேவையான நேரத்தில் தேவைப்படும் நபருக்கு செய்தால்தானே உதவி.

அதை சரியான முறையில் செய்கிறோம் என்பதை உணர்ந்த தருணம் அது.கூடவே, நண்பர்கள் உதவியுடன், 2,400 ஆதரவற்றவர்கள மற்றும் அரசு மருத்துவமனை பொது வார்டில் அவதிப்படுவோருக்கு பெட்சீட், கம்பளிகள் தானமாக அளித்தோம். எதிர்காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் வழங்க திட்டமிட்டுள்ளோம். மேலும், மதிய உணவு வழங்கும் ஐடியாவும் உண்டு.

எங்களுடன் கரம் கோர்க்க 98422 57177 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

வேறு எதிலும் கிடைக்காத மனநிறைவு, பிறர் பசியை போக்கும்போது கிடைக்கிறது. பசித்தவருக்கு உணவு கொடுங்கள்... ருசியான வாழ்வு உங்களை தேடி வரும்!
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,705
Likes
3,187
Location
India
நகை-பணத்துக்கு பதில் 1001 மரக்கன்றுகளை வரதட்சணை கேட்ட ஆசிரியர்

1529907015190.png

திருமணத்தின்போது மணப்பெண் வீட்டாரிடம் பணம், நகை மற்றும் வாகனம் போன்றவற்றை மணமகன் குடும்பத்தினர் வரதட்சணையாக கேட்டு பெறுகின்றனர்.

ஆனால் இதற்கு விதிவிலக்காக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் பணம், நகைக்கு பதிலாக 1001 மரக்கன்றுகளை மணமகளின் தந்தையிடம் வரதட்சணையாக கேட்டுப் பெற்றார்.

அவரது பெயர் சரோஜ் காந்த் பிஸ்வால் (33). ஒடிசா மாநிலம் கேந்திரபாரா பகுதியில் உள்ள பாலா பகதர்பூர் கிராமத்தை சேர்ந்தவர். இவர் தனது திருமணத்துக்கு பெண் தேடினார். இறுதியில் அதே பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியை ராஷ்மிரேகாவை திருமணம் செய்ய முடிவு செய்தார்.

அப்போது மணப்பெண்ணின் தந்தையிடம் எனக்கு வரதட்சணையாக பணம், நகை வேண்டாம். திருமணத்தின் போது ஆடம்பரமாக பூ அலங்காரம், பந்தல் அலங்காரம் தேவையில்லை. வாணவேடிக்கை வேண்டாம் என்பன போன்ற நிபந்தனைகள் வைத்தார்.

இதை சற்றும் எதிர்பாராத மணப்பெண்ணின் தந்தை மகிழ்ச்சியுடன் திருமணத்துக்கு சம்மதித்தார். அதைத் தொடர்ந்து கடந்த 22-ந்தேதி ஆசிரியர் சரோஜ் காந்த் பிஸ்வால்-ராஷ்மிரேகா திருமணம் நடந்தது.

அதில் கிராம மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர். திருமணத்தின் போது தான் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி மணமகளின் தந்தை ஒரு லாரி நிறைய பழ மரக்கன்றுகளை கொண்டு வந்து ஆசிரியர் சரோஜ் காந்த் பிஸ்வாலிடம் வரதட்சணையாக கொடுத்தார்.அவற்றை கிராம மக்களிடம் மணமக்கள் பரிசாக வழங்கினர். அனைத்து மரக்கன்றுகளையும் நட்டு வளர்த்து மரமாக வளர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதை கிராம மக்கள் ஏற்றுக் கொண்டனர்.

ஆசிரியர் பிஸ்வால் ‘மரம் நண்பன்’ என்ற அமைப்பில் பிரசாரகராக இருக்கிறார். எனவே தனது திருமணத்தின் மூலம் மரம் வளர்ப்பை பிரபலப்படுத்த திட்டமிட்டு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டார்.

இதுகுறித்து கூறும்போது, “நான் வரதட்சணைக்கு எதிரானவன். மரம் வளர்ப்பு மற்றும் அதை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும், அதை எனது திருமணத்தில் பயன்படுத்தி கொள்ளவும் முடிவு செய்தேன். அதன்படி கிராம மக்களிடம் மரக்கன்று பரிசளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறேன்.

எனது மனைவியும் ஆசிரிரியையாக இருக்கிறார். நாங்கள் இருவரும் மரம் வளர்ப்பதன் முக்கியத்துவத்தை மாணவர்களிடம் எடுத்துரைத்து ஊக்குவிப்போம். பொதுமக்களிடம் எடுத்துக்கூறி மரம் வளர்ப்பை ஊக்குவிப்போம்” என்றார்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.