விருந்துக்கு வாங்க!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
விருந்துக்கு வாங்க!

"தமிழர்களின் விருந்தோம்பல் புல்லரிக்க வைக்கிறது!"
மிழர்களின் பண்பாடுகளில் விருந்தோம்பலும் ஒன்று. விருந்து என்றால் புதுமை, புதியவர் என்று பொருள். விருந்தே புதுமை என்பார் தொல்காப்பியர். வீட்டிற்கு வரும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் விருந்தினர் என்கிறோம். ஆனால் பண்டைக்காலத்தில் வீடு தேடி வரும், முன் அறியாதவர்களையே விருந்தினர் என்றனர்.

போக்குவரத்து வசதிகள் இல்லாத அக்காலத்தில், கால்நடையாகத்தான் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு செல்லவேண்டியிருந்தது. அப்படிச் செல்லும்போது உணவிற்கும், தங்குவதற்கும் செல்லும் வழியில் இருக்கும் ஊர்களையே நம்பவேண்டியிருந்தது. ஆகவே புதிதாக வருவோர்க்கு பசிக்கு உணவளிக்க வேண்டிய நிலை இருந்தமையால் விருந்தோம்பல் பண்பாடு தமிழக இல்லங்களில் உருவாயிற்று. இப்படி வருவோர்கள் இளைப்பாறுவதற்கும், இரவு நேரங்களில் தங்குவதற்கும்தான் வீடுகளில் திண்னை வைத்துக் கட்டினார்கள்.


வீட்டில் எப்போதும் சமைக்கும்போது, எல்லோருக்கும் போக, அதிகமாக ஒரு நபர் சாப்பிடும் அளவிற்கு சமைப்பார்கள். அதற்கு காரணம் , திடீரென வீட்டிற்கு ஏதேனும் விருந்தினர் வந்துவிட்டால் அவர்களுக்கு உணவளிக்கவே ஆகும்.

விருந்தினராக வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்று, முதலில் அருந்துவற்க்கு நீர் அல்லது மோர் கொடுத்து உபசரிப்பது தமிழர் பண்பாடு.


பிறகு விருந்தினருக்கு உணவிட்டு உபசரிப்பார்கள். தமிழர்கள் உணவு பரிமாறும் விதம் புல்லரிக்க வைக்கிறது.
1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது
2.
மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால்,உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில்
3,6.
நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்
5.
குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்
4.
அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்


பலஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்:

முதலில் பருப்பு மற்றும் நெய்(செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயைதன்மையாக்கும் பொருட்கள் ),
பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவுகுழாயை வருடும் ),
பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ),
பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் )..

ஏன் உணவுபரிமாற வாழை இலையைப் பயன்படுத்துகிறோம்?


அ. வாழைஇலை, பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால்நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும்.

ஆ. வாழை இலையில் உணவுபரிமாறுவது தமிழர்களாகிய மது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம்வகிக்கிறது.

இ. நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போதுஅதில் ஒருவித மணம் தோன்றும்.அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கைஉண்டு. இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம்.

ஈ. வாழை இலையில்தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும்.

உ. உடல் நலம் பெறும்.மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும்.

ஊ. அழல்எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

எ. வாழையிலைஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மைகொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின்மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன்வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது.

ஏ. நன்கு பசியைத் தூண்டும்.வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.


தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு . சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை. இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள் .
விருந்தோம்பலுக்குத் தனி அதிகாரமே தந்த வள்ளுவர், முகர்ந்து பார்த்தாலே வாடிவிடக் கூடிய தன்மை படைத்தவர் விருந்தினர் என்றும், அவர் முகம் வாடாமல் விருந்தோம்பல் செய்யவேண்டும் என்பதை,

"மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து"
என்பார்.

"விருந்தோம்பலில் தமிழரகளை விடச் சிறந்தவர்கள் வேறு எவரும் இருக்க முடியாது!"

"தமிழனின் பெருமைகள் என்றும் அழியாப் புகழ்ப்பெற்றவை என்பதில் ஐயமில்லை."

 
Last edited:

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.