வில்லங்க சான்றிதழ் பற்றிய தகவல்கள்!

Durgaramesh

Minister's of Penmai
Joined
Sep 12, 2015
Messages
3,258
Likes
5,369
Location
Puducherry
#1
விலை கொடுத்து வாங்கும் வில்லங்கம் எது என்று தெரியமா?

வில்லங்க சான்று :

வில்லங்க சான்றிதழ் (நுnஉரஅடிசயnஉந ஊநசவகைiஉயவந - நுஊ)இ ஒரு சொத்துக்கு யார் உரிமையாளர் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு சான்றாக உள்ளது. வில்லங்க சான்றிதழ் என்பது ஒரு சொத்து யாருடைய கைகளில் இருந்து எப்படி மாறி வந்துள்ளது, சொத்து உரிமை யாருக்கு மாற்றப்பட்டது போன்ற விவரங்களை அறிந்துகொள்ளும் ஆவணமாக உள்ளது. வில்லங்க சான்றிதழில் குறிப்பிட்டள்ள சொத்தின் மீதான சட்டபூர்வமான வில்லங்கங்கள் தெரியவரும்.

ஒரு சொத்தை வாங்க விரும்புவர்கள், அந்தச் சொத்தில் ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா, சொத்தை விற்பவர் பெயரில்தான் அந்தச் சொத்து உள்ளதா என்பதை அறிவதற்காக, சொத்து விவரத்தைத் தெரிவித்துக் கொள்வதற்காக வில்லங்க சான்றிதழை எடுத்துப் பார்ப்பார்கள். ஆன்லைன் வசதி வருவதற்கு முன்பாகப் பத்திரப்பதிவு அலுவலகத்துக்குச் சென்று வில்லங்க சான்றிதழுக்காக விண்ணப்பித்து காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.

இப்போது அதை எளிதில் ஆன்லைனிலேயே நொடிப் பொழுதில் பார்க்கவும் முடிகிறது. தேவைப்பட்டால் அதை பதிவிறக்கமும் செய்துகொள்ள முடிகிறது. மேலும் தமிழ்நாடு அரசு பத்திரப் பதிவுத் துறை இணையதளத்திலும் வில்லங்க சான்றிதழைப் பெறலாம்.

இணையத்தில் வில்லங்க சான்று பெறும் முறை :

சில ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தனி; மூலம் விண்ணப்பித்து, வில்லங்க சான்றிதழை விரைவாக பெறும் சேவையை பத்திர பதிவு துறை தொடங்கியது. இணையத்தின் மூலம் வில்லங்க சான்று பெற விரும்புபவர்கள் உரிய கட்டணத்தை இணையத்தில் செலுத்தி தபால் மூலம் அல்லது சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து இரண்டு நாட்களுக்குள் பெற்று கொள்ளலாம்.

உங்களின் பொழுதுபோக்கினை பயனுள்ளதாக்கும் தமிழ் விளையாட்டுகளை உங்களது மொபைலில் விளையாட நித்ரா தமிழோடு விளையாடு - சொல்லியடி செயலியை னுழறடெழயன செய்யுங்கள்.
நித்ரா தமிழோடு விளையாடு-சொல்லிஅடி செயலியை
னுழறடெழயன செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்!
இணையத்தின் மூலம் வில்லங்க சான்றிதழை இலவசமாகப் பெறவேண்டுமானால் தமிழகப் பதிவுத்துறையின் றறற.வசெநபiநெவ.நெவ என்ற இணையதளத்திற்கு செல்லவேண்டும்.

அந்த இணையதளத்தில் வில்லங்க சான்றை பார்ப்பதற்கும், பதிவிறக்கம் செய்வதற்கும் தனி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வில்லங்க சான்றை பார்ப்பதற்கு, நஉஎநைற.வசெநபiநெவ.நெவ என்ற லிங்கினை க்ளிக் செய்வதன் மூலம் வில்லங்க சான்றிதழை இலவசமாகப் பார்க்கலாம்.

வில்லங்க சான்றை பெற, யுppடல ழடெiநெ என்ற லிங்கினை க்ளிக் செய்வதன் மூலம் இணையத்தில் விண்ணப்பிக்கும் படிவம் திறக்கும். பெயர், தொலைப்பேசி எண், பதிவு மண்டலம், பதிவு மாவட்டம், சார்பதிவாளர் அலுவலகம், சொத்து அமைந்துள்ள கிராமம், சர்வே எண், தேதி மற்றும் மாதங்கள் உட்பட எத்தனை ஆண்டுகளுக்கு வில்லங்க சான்றிதழ் தேவைப்படுகிறது என்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட பத்திரத்தின் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட சார்பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ள ஊர் ஆகிய தகவல்களை பதிவு செய்ததும் வில்லங்க சான்று விவரங்களை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

அதே பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள ரகசியக் குறியீட்டு எண்ணை தருவதன் வாயிலாக 10 நிமிடங்களுக்குள் வில்லங்க சான்று விவரங்களை இணையத்தில் பார்க்க இயலும். அத்துடன் Pனுகு வடிவத்திலும் வில்லங்க சான்று விவரங்களை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

தமிழகத்திலுள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதால் இணையத்தின் மூலம் வில்லங்க சான்று விவரங்களை இலவசமாகப் பெறுவது சுலபமான ஒன்றாகிவிட்டது.
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.