விளையாடும் வயதில்...

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
விளையாடும் வயதில்...
பெண் குழந்தைகளைப் பொத்தி பொத்தி வளர்த்த காலம் போய், '10 வயசுதான் ஆகுது அதுக்குள்ள வயசுக்கு வந்துட்டா... என்னத்தைச் சொல்ல...' என்று அனைவரிடமும் பகிரங்கமாகப் புலம்பும் நிலை இன்று பரவலாக இருக்கிறது. தவிரவும், தன் பெண்ணுக்கு எட்டு வயது ஆகிவிட்டது என்றாலே 'எப்போ வயசுக்கு வருவாளோ?’ என்று இன்றைய நவீன அம்மாக்கள் கவலைப்பட ஆரம்பித்துவிடுகின்றனர். தான் யார் என்பதையே அறிந்து, புரிந்துகொள்வ தற்குள் பூப்பெய்திவிட்ட ஒரே காரணத்தால் 'இவள் பெண்’ என்ற முத்திரை இன்றைய சிறுமிகளின் மீது குத்தப்படுவதுதான் மிகவும் வேதனை. என்றாலும் காலமாற்றம் என இதுவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.


பெண் குழந்தைகள் இளம் வயதில் பூப்பெய்திவிட காரணங்கள் என்ன? தடுக்க வழிமுறைகள் உள்ளனவா? மாறி வரும் இன்றைய உணவுப் பழக்கங்களும் ஒரு காரணமா? என்ற பல்வேறு சந்தேகங்கள் குறித்து மகப்பேறு சிறப்பு மருத்துவர் சித்ரா ரவிசங்கர் பேசினார்.

'அந்தக் காலத்தில் 1216 வயதில்தான் பெண் குழந்தைகள் பூப்பெய்துவார்கள். ஆனால், 10 வயதுக்குள் பூப்பெய்துவது என்பது இன்று சர்வசாதாரணம். உடலும், உள்ளமும் முழுமையான வளர்ச்சி யடையும் குறிப்பிட்ட வயதுக்கு முன்பு பூப்பெய்துவதையே 'முன் பூப்படைதல்’ என்கிறோம். இந்தியாவில் 2010க்குப் பிறகு பூப்பெய்தும் சராசரி வயது பத்தரைக்கும் கீழாக மாறிவிட்டது.

நம் மூளையில் உள்ள 'ஹைப்போ தாலமஸ்’ மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகளின் தூண்டலினால் சினைப் பையில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்தான் பூப்பெய்துவதற்கு முக்கியமான காரணம். தற்போது, நம் அன்றாட தேவைகளுக்காகப் பயன்படுத்தும் பொருட்களில், கண்களுக்குத் தெரியாமல் இருக்கும் வேதிப்பொருட்கள், இந்த ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதால் முன்கூட்டியே பூப்பெய்துதல் நிகழ்கிறது.
இன்று உணவு உற்பத்தியை செயற்கை முறையில் அதிகரிக்க பயன்படுத்தப்படும்
உரங்கள்மற்றும் பூச்சிக் கொல்லிகள் நம் உடலிலுள்ள ஈஸ்ட்ரோஜென் போன்றே வேலை செய்து இளம் வயதில் பூப்படைய வைக்கிறது. குழந்தைகள் விரும்பி உண்ணும் பொரித்த கோழி இறைச்சி மற்றும் துரித உணவுகள் மற்றும் உடல் பருமனும் இளம் வயதில் பூப்படையத் தூண்டுகின்றன.

இறைச்சிக்காகவே வளர்க்கப் படும் கோழிகளுக்கு அபரி மிதமான வளர்ச்சிக்காக ஈஸ்ட்ரோஜென் ஊசிகள் போடப்படுகின்றன. இதை குழந்தைகள் அதிகமாக உண்ணும்போது நம் உட லிலுள்ள ஈஸ்ட்ரோஜென் இரு மடங்காக அதிகரிக்கிறது.

அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அழகு சாதனப் பொருட்களில் உள்ள வேதிப்பொருட் களும், பிளாஸ்டிக்கிலுள்ள பிஸ்பீனால் (ஙிவீsஜீலீமீஸீஷீறீ) என்ற வேதிப்பொருளும் ஈஸ்ட்ரோ ஜென் சுரப்பை அதிகரிக் கின்றன. அதீத ஊட்டச் சத்துக்கள் மூலம் நம் குழந்தை களின் உடலில் சுரக்கும் லெப்டின் என்ற ஹார்மோன் அளவு அதிகரிப்பதும் இளம் வயதுப் பூப்படைதலுக்கு ஒரு காரணம்தான்.

தடுக்கும் முறைகள்

நம் உணவுப்பழக்கத்தில், சிறிது கவனம் செலுத்தினாலே இந்தப் பிரச்னையைத் தவிர்க்க முடியும். வேதிப்பொருட்கள் நிறைந்த உணவை உண்பதையும், பயன்படுத்துவதையும் தவிர்த்தாலே போதும். ஓடி விளையாட குழந்தைகளை பெற்றோர்கள் அனுமதிக்கவேண்டும். இதனால், உடலுக்கு வேலை கொடுக்கப்பட்டு, வளர்ச்சி ஹார்மோன்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.தினமும் அரை மணி நேரம் சூரிய ஒளியில் நின்றால் வைட்டமின் 'டி’ குறைபாட்டினால் ஏற்படும் இளம் வயது பூப்படைதலைத் தவிர்க்கலாம். குழந்தைகள் பூப்படைந்தபின் வரும் மாதவிடாய் பிரச்னை களைத் தவிர்க்க மாதம் ஒரு முறை ஹார்மோன் ஊசிகளைப் பயன்படுத்துகின்றனர். தவிர்க்க இயலாத நிலையில் இதுவும் சிறந்த தடுப்பு முறையே.

உடல் ரிதியான பாதிப்புகள்

மிக இளம் வயதிலேயே பூப் படைவதனால் அந்த வயதி லேயே அவர்களுக்கு பாலுணர்வு தூண்டப்படுகிறது. ஈஸ்ட்ரோ ஜென், ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியின்போதும் ரத்தத்தை அடர்த்தியாக்கும். இதனால் மற்ற பெண்களைவிட சீக்கிரமே பூப்படையும் பெண் களுக்கு மார்பக புற்றுநோய், இதய நோய், சர்க்கரை நோய் போன்றவை வர வாய்ப்புகள் அதிகம். மேலும், சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத் துவது பற்றிய போதிய விழிப்பு உணர்வை குழந்தை களுக்கு ஏற்படுத்த இயலாத காரணத்தால் பல தொற்று நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்' என்கிறார்.

உளவியல்ரீதியான பாதிப்புகள்

இளம் வயதிலேயே பூப்படைவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான பாதிப்புகள் குறித்து மனநல மருத்துவர் ஆ.நிஷாந்த் கூறுகையில், 'இளம் வயதிலேயே பூப்படைவதால், மற்ற குழந்தைகளிடம் இருந்து அவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். மேலும், மற்றவர்களின் கேலி, கிண்டல்களுக்கு ஆளாகும் சூழலில் தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். இதனால் கவனச் சிதறல் ஏற்பட்டு படிப்பில் கவனம் குறையும். எனவே, பெற்றோர்கள்தான் இது குறித்த புரிதலை குழந்தைகளுக்கு ஏற்படுத்தவேண்டும். ஏழு வயதுக்கு முன்பே குழந்தைகளின் உடல் உறுப்புகளில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கினால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. இந்த மாற்றம் இயல்பானதுதானா என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.

7 வயது மகள் பருவமடைந்துவிட்டால் அவளுக்குப் புரியவைப்பது கடினம். இருந்தாலும் நாம் அவர்களுக்குக் கற்றுத்தரும் அடிப்படையான பாலியல் கல்விதான் அவளது எதிர்காலத்தைக் கட்டமைக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது. இளம் வயதில் பூப்படைந்த ஒரே காரணத்தால் அவளுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பது தவறு. அவளிடம் அன்பாகவும் ஆதரவாகவும் இருந்து பூப்படைதல் குறித்த குழந்தைகளின் சந்தேகங்களை தெளிவுபடுத்தவேண்டும்.

எது குட் டச், எது பேட் டச்?’

என தொடுதலைப் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தவேண்டும்். அவர்களின் விருப்பம் இல்லாமல் யாரும் தொடக்கூடாது என்பதனை உணரவைக்க வேண்டும். குழந்தைகளுக்கு இது தொடர்பாக மனச்சோர்வு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால், உரிய மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டியது அவசியம்.'
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.