விவாதம் விவாகரத்தில் முடியும்...?! - தாம்பத்&#

sudhavaidhi

Guru's of Penmai
Joined
May 20, 2011
Messages
6,171
Likes
15,033
Location
Muscat
#1
[h=3]விவாதம் விவாகரத்தில் முடியும்...?! - தாம்பத்தியம்[/h]அன்பு நட்புகளே !

விடுமுறைக்கு பின் உங்கள் அனைவரையும் சந்திப்பதில்மகிழ்கிறேன்...தாம்பத்தியம் தொடரின் இந்த பாகத்தில் தம்பதிகளின் சாதாரணவிவாதங்கள் கூட பெரிய பிரச்சனைக்கு வழிவகுத்துவிடும் என்பதை உணர்த்தஎனக்கு தெரிந்தவரை எழுதி இருக்கிறேன்...படித்துவிட்டு நிறை குறைகளைசொல்லுங்கள்...தெளிவுபடுத்திகொள்கிறேன்.

* * *

கணவன் மனைவிக்குள் எந்த பிரச்சனை என்றாலும் அது வீட்டை விட்டுவெளியே போகக்கூடாது...'நாலு சுவத்துக்குள்ளத்தான் இருக்கணும்துன்பங்களையும் வேதனைகளையும் மனதுக்குள் போட்டு புதைச்சுக்கோ'என்று பெண்ணுக்கும், 'எல்லாத்தையும் மென்னு முழுங்க பழகிக்கோ' என்றுஆணுக்கும் அறிவுரை சொன்ன காலங்கள் மலையேறி போய் லேட்டஸ்டா "சரிபட்டு வரலைனா டைவர்ஸ் பண்ணிடு " என்ற அட்வைஸ்கள் அதிகம்கேட்கின்றன.

விவாகரத்துக்கு இப்போதெல்லாம் நீண்ட நெடிய காரணங்கள்தேவையில்லை...

ஒரு சில வார்த்தைகள் போதும்...!!

கணவன் மனைவி இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் மிக மிகமுக்கியம். பேச்சு பரிமாற்றங்கள் சரியான விதத்தில் அமையாவிட்டால்பிரிவிற்கு இதுவே அடிப்படை காரணமாகி விடுகிறது. வெறுப்பாக,எரிச்சலுடன் எடுத்தெறிந்து பேசுவது, துணை பேசுவதில் இருக்கும் அர்த்தத்தைசரியாக புரிந்துக்கொள்ளாமல் பேசுவது, ஈகோவை காயப்படுத்துவது மாதிரிபேசுவது போன்றவை. கையாளுவதில் கவனம் இல்லையென்றால் ஆபத்தில்கொண்டு போய் விட்டுவிடும். இன்றைய அவசர யுகத்தில் தம்பதியினர்பரிமாறி கொள்ளும் உரையாடல்களும் sms அளவில் சுருங்கி விட்டன.பேசப்படுவது ஒரு சில வார்த்தைகள் என்கிற நிலையில் அதையும்கவனமின்றி உதிர்த்துவிட்டால் தொலைந்தது இல்லறம் !!

ஒருவரின் குணம், விருப்பு, வெறுப்பு, சந்தோசம், கோபம் எல்லாவற்றையும்வெளிப்படுத்துவது பேச்சுக்கள் தானே?

உரையாடல்களின் போது...

=> தம்பதிகள் என்று இல்லை. காதலர்கள் இருவருக்கான உரையாடலில்ஒருவர் மற்றொருவரிடம் "ஏன் டல்லா இருக்கிற" என விசாரிக்கிறார் என்றுவைத்துக் கொள்வோம். அதற்கு இவர் காரணத்தை சொல்லி விட்டால் ' ஓ !அப்படியா, சரி சரி கவலை படாத, சரியாய் போய்டும்' என்று ஆறுதல்கூறுவதுடன் மேட்டர் ஓவர். மாறாக 'ஒண்ணுமில்ல' என்று பதில் வந்தால்உடனே உஷாராகிடவேண்டும். ஆமாம் இனிதான் வார்த்தையை கவனமாகையாளனும் !! ஒண்ணுமில்ல என்றால், "ஏதோ இருக்கிறது அதைஎன்னவென்று கேட்கமாட்டியா, மனதில் இருப்பதை உன்னிடம் கொட்டிவிட்டால் நான் சரியாகி விடுவேன்" என்ற ஏக்கம் ஆவலுடன் ஒளிந்திருப்பதைபுரிந்துகொண்டாக வேண்டும். (இந்த 'ஒண்ணுமில்ல' வார்த்தையை சொல்வதுஅனேகமாக பெண்கள் )

இந்த நிலைமை புரியாம ஏதோ பர்சனல் ப்ராபளம் போலனு விட்டுட்டா போச்சு.கதை கந்தலாகிவிடும். அந்த ஏக்கம் பொறுத்து பொறுத்து பார்த்து முடிவில்விரக்தியில் போய் விழுந்து விடும். இதனால் பெரிய சிக்கல்கள் அப்போது வரவாய்ப்பு இல்லை என்றாலும் பல விரக்திகள் ஒன்று சேர்ந்தால்...?! யோசிங்க...!

=> உரையாடல் ஒரு கட்டத்தில் சண்டையின் தொடக்கம் போல தெரிஞ்சா எதுக்கு வம்புனு 'சரி உன் இஷ்டம்' என்று கூறி ஒதுங்கி விடுவது அல்லதுஒன்றும் பேசாமல் மௌனமாகி விடுவது. இது இரண்டுமே தவிர்க்கப்படவேண்டும். இது துணையின் மீதான அக்கறையின்மையை காட்டும். அமைதியா போய்விட்டால் அவர்களை மதிப்பது போலாகும் என்பது எல்லாம்பழைய கதை...இப்போது அப்படியே தலைகீழ், சைலென்ட்டா இருந்தா 'மதிக்கவில்லை' என்று பொருள்.

=> சிலரது வீடுகளில் பேச்சு சூடு பிடிக்கத் தொடங்கியதும் உடனே சட்டையைமாட்டிகொண்டு வெளியே நடையை கட்டிவிடுவார்கள் ஆண்கள்...

ரிலாக்ஸ் பண்ண, சிக்கலை தவிர்க்க வெளியேறுவது உங்கள் உடலுக்கும்மனதுக்கும் நல்லது. ஆனால் அங்கே வீட்டில் மனதிற்குள் புழுங்கிக்கொண்டிருக்கும் மனைவியின் மனநிலை !? அதுவும் தவிர எவ்வளவு நேரம்தான் பிரச்னைக்கு பயந்து வெளியில் இருப்பீர்கள் மறுபடி வீட்டிற்குள் வந்துதானே ஆக வேண்டும் அப்போது எவ்வாறு அவளின் முகத்தைஎதிர்கொள்வீர்கள்...அசட்டு சிரிப்புடனா? முறைத்துக்கொண்டா? இரண்டையும்அலட்சியபடுத்தி விட்டு தன்னை(மட்டும்) பற்றிய சிந்தனைக்குள் விழுந்துகொண்டிருப்பாள் மனைவி.

'நான் தனியா தவிச்சி புலம்பிட்டு இருக்கிறப்போ நீ கண்டுக்காம வெளிலபோறியா, அப்படியே இரு, எனக்கும் ஒரு காலம் வரும்' என்பதாக இருந்துவிட்டால் அதன் பின் அக்கணவனின் நிலை !!? சண்டையிட சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் மனைவி , பிரச்சனை தான் முடிந்து விட்டதே எனசகஜமான நிலையில் இருக்கும் கணவன்!! வசமாக ஒரு சந்தர்ப்பத்தில்அகப்பட்டுக்கொண்டால் என்னாகும் கணவன் நிலைமை...யோசிங்க...!

=> சரிக்கு சரி மல்லு கட்டும் சண்டை கோழிகள் சிலர். சின்ன சண்டைவந்தாலும் போதும் எடுத்ததுமே உச்சஸ்தாயில் கத்துவது...'வெட்டுவேன்,குத்துவேன், நீ ஒழிஞ்சாத் தான் நிம்மதி...' இந்த ரேஞ்சில் போகும் இவர்களதுஉரையாடல்...அடுத்த சில மணி நேரம்/சில நாள் கழித்து ஒன்றுமே நடக்காதமாதிரி சகஜமாகி விடுவார்கள். இரண்டு நிலையில் எது உண்மை... சண்டைபோட்டு கத்தியது உண்மை என்றால் அடுத்துள்ள சமாதானம்? விட்டுக்கொடுத்தலா? விட்டுக்கொடுத்தல் என்றால் அது ஏன் சண்டையின் ஆரம்பத்தில்இல்லை. தெருச்சண்டை ரேஞ்சுக்கு இறங்கி சண்டை போட்டாச்சு, அப்புறம்விட்டுகொடுக்கிறாங்களாம்...என்ன லாஜிக் இது ?

சண்டையின் போது ஏற்படும் மன அழுத்தம், மன உளைச்சல் ! அதன் விளைவு ,எங்கே போய் முடியும் யோசிங்க...!

பழி வாங்கும் மனோபாவம்

நடந்த பிரச்சனையில் ஒருவர் வென்றதை போன்று இருந்தால், அதாவதுஒருவரின் பேச்சுடன் அப்பேச்சு முடிவுக்கு(?) வந்தது என்றால் தனக்கு அடுத்துஎப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என பழி வாங்க காத்திருக்கும் தம்பதிகள்உண்டு. இது மிகவும் ஆபத்தான ஒன்று. பழிவாங்குவது என்பது எங்கே சென்றுமுடியும் என்று சொல்ல முடியாது...தற்போது இது போன்ற மனநிலைஅதிகரித்திருக்கிறது என்பது கசப்பாக இருந்தாலும் உண்மை !!

ஈகோ !
(நான் என்னும் முனைப்பு)

"நம்மை பற்றிய நினைப்பும் உணர்வுகளும் தலைத்தூக்கும் வரையில் தான்நமது செயல் ஒழுங்காக இருக்கும்...வாழ்க்கையும் முன்னேற்றப் பாதையில்பயணிக்கும். ஆனால் ஈகோவானது மற்றவர்களுடன் ஒப்பிடப்பட்டு உயர்வுமனப்பான்மையாக மாறுவது தான் தவறு. இது தான் தன்னுணர்வுஅகம்பாவமாக மாறும் நிலை" என்கிறார் சிக்மண்ட் பிராய்ட்

தம்பதிக்குள் நீயா நானா என்கிற ஈகோவுக்கு இடமே தரக்கூடாது அன்பானஉறவை ஈகோ கொத்தி கிழித்து விடும். பெரும்பாலும் இது தலை தூக்கினால்எல்லாவற்றுக்கும் விவாதம் தொடங்கி விடும். இருவரில் ஒருவர் வாய் மூடும்வரை விவாதம் நடந்து கொண்டே இருக்கும். அதே சமயம் தற்காலிகமாகதுணையின் அடக்கி வைக்கபடும் உணர்ச்சிகள் எந்த நேரத்திலும்பெரிய பிரச்சனையாக வெடிக்கலாம்...

பெண்கள்

பொதுவாக சொல்வாங்க ஆண்களுக்குதான் 'தான்' என்கிற ஈகோ அதிகம்இருக்கும் என்று... அப்படியல்ல பெண்களிடமும் உண்டு.ஆணின் ஈகோபெண்ணை மட்டும் தாக்கும், ஆனால் பெண்களின் ஈகோ மொத்தகுடும்பத்தையும் பாதிக்கும். உன்னைவிட 'நான் எதில் குறைந்துவிட்டேன்நானும் உன் அளவு படித்திருக்கிறேன், வேலை பார்க்கிறேன் ' இந்த எண்ணம்விவாதத்தின் போது விஸ்வரூபம் எடுத்து ஈகோ பூதாகரமாக வெளிபடுகிறது.

ஆண்களை பொருத்தவரை அவர்கள் விவாதிப்பதை அவ்வளவாகவிரும்புவதில்லை. சில வார்த்தைகளை வேகமாக உச்சரித்து விட்டுஅமைதியாகி விடுகிறார்கள், ஆனால் ஒரு சில பெண்கள் அத்தனைக்கும் தனித்தனி அர்த்தம் கண்டுபிடித்து வாதத்தை நீடித்துக் கொண்டேசெல்வார்கள்...வாதத்திற்கு சளைத்தவர்களில்லை பெண்கள் ! இத்தகையபெண்களை ஆண்கள் விரும்புவதில்லை...இதை புரிந்துகொண்டு பெண்கள்குடும்பத்தை கொண்டு செல்லவேண்டும்....விவாதத்தில் ஜெயிப்பது முக்கியமில்லை... உறவில் ஜெயிப்பதே...!!

ச்சீ போடா, முட்டாள், இடியட், ராஸ்கல் இதை தனிமையான நேரத்தில்சொன்னா இனிமையா இருக்கும், அதையே சண்டை நேரத்தில் கோபமாசொன்னா ?!!

பல விவாதங்கள் விவாகரத்தில் போய் தான் முடிந்திருக்கின்றன என்பதைமனதில் வைத்து கொண்டு, பேச்சில் மிகுந்த கவனம் தேவை...'ஒரு சொல்வெல்லும், ஒரு சொல் கொல்லும்' என்று சொல்வாங்க...எப்படி பட்டசொல்லை வெளிபடுத்த வேண்டும் என்பது உங்க சாய்ஸ் !!

பின் குறிப்பு-

இப்படியெல்லாம் கூட நடந்து கொள்வார்களா என அவரவர் வீட்டு சூழலைஒற்றுமை படுத்தி வினா எழுகிறதா ? பிரச்னையை ஏந்திக் கொண்டு என்னிடம்வந்தவர்களை வைத்துத்தான் தாம்பத்தியம் பதிவு எழுதுகிறேன்...தொடரைதொடர்ந்து வாசிக்கிறவர்களுக்கு இது தெரியும். தெரியாதவர்களுக்காக இந்தசிறு விளக்கம். நன்றி.
 
vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#2
Re: விவாதம் விவாகரத்தில் முடியும்...?! - தாம்பத&#302

pshycological info shared by u....................
 
jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,718
Location
Bangalore
#4
Re: விவாதம் விவாகரத்தில் முடியும்...?! - தாம்பத&#302

ஆம் .....ஆம் .....அனைத்தும் உண்மை
 
sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#6
Re: விவாதம் விவாகரத்தில் முடியும்...?! - தாம்பத&#302

Dear Sudhavaidhi, you have analysed the subject in psychological angle and are the facts given by you are very much true. thank you
 
sudhavaidhi

Guru's of Penmai
Joined
May 20, 2011
Messages
6,171
Likes
15,033
Location
Muscat
#7
Re: விவாதம் விவாகரத்தில் முடியும்...?! - தாம்பத&

Dear Sudhavaidhi, you have analysed the subject in psychological angle and are the facts given by you are very much true. thank you
Thank you and welcome Sumitra.........
 
sudhavaidhi

Guru's of Penmai
Joined
May 20, 2011
Messages
6,171
Likes
15,033
Location
Muscat
#8
Re: விவாதம் விவாகரத்தில் முடியும்...?! - தாம்பத&

இது பலரின் கருத்து இங்கே பகிர்கிறேன்

கணவன்-மனைவிக்குள் சரியான புரிந்துணர்வு

இன்மை, ஒருவருக்கொருவர் மனம் விட்டு குடும்ப நிகழ்வுகளை பேசி கொள்ளாதிருத்தல் இந்த இரண்டு காரணங்களும் முக்கியம்.

ஈகோவை விட்டு கொடுத்தால் எத்தனையோ பிரச்சனைகள் சுமுகமாகும்... ஆனால் முடியுமா??

எத்தனையோ விவாகரத்து ஈகோல தான் நிக்கும்.... நாம ஏன் இறங்கி போகனும் அப்டின்னு....

ஆனால் விட்டுக்கொடுப்பதில் இருக்கும் சந்தொஷம் கண்டிப்பா வேறெதிலும் இல்லை

ஆண் தன்னையும் தன் குடுபத்தையும் உடனே,
தன் மனைவி புரிந்துக் கொள்ள வேண்டும் என்று
எண்ணம் கொள்ள,மனைவியோ தன் கணவன் தன் பேச்சை
மட்டும் கேக்கணும் என்று எண்ணம் கொள்ள ,
அறியாமையே இங்கு காரணமாக போகிறது.....

விவாகத்துக்கு குடும்பமே கூடி கேட்டு செய்வதை,
விவாகரத்துக்கு செய்வதில்லை....

தனிப்பட்ட காரணங்கள் தவிர மூன்றாம் நிலை நபர்கள் தன் மூக்கை நுழைப்பதாலும் விவாகரத்தில் முடிகிறது.

இப்பொழுதெல்லாம் விவாகரத்து கோரும் பெண்கள் யாரையும் மதிப்பது இல்லை. குறிப்பாக அவர்களின் பெற்றோரையே மதிப்பதில்லை. ஏனெனில் அவர்கள் இது தவறு என்று கூறுகின்றார்களே..
தவறு எனச்சுட்டிக்காட்டும் எவரையும் இவர்கள் எதிரிகாளாக நினைத்து விட்டு வில்குதலும் உண்டு..

நானும் சம்பாதிக்கிறேன். நல்ல நிலையில் இருக்கிறேன். அப்படி இருக்க உன்னை விட எந்த வித்த்தில் நான் தாழ்வு என்று பெண் நினைப்பதும். கொஞ்சம் இடம் கொடுத்தால் பிறகு கஷ்டம் என்று ஆண் ஆரம்பத்தில் இருந்து பிடிவாதமாக இருப்பதும் இதற்கு வழி கோலுகிறது.

இது ஆண்களுக்கும். இருவரின் விருப்பங்கள், பழக்க வழக்கங்கள் வேறு வேறாக இருக்கும். இவற்றையெல்லாம் புரிந்துகொண்டு, சில விஷயங்கள் மாறும், சில் மாறாது. முதல் இரண்டு மூன்று ஆண்டுகள்தான் புரிதல் ஏற்படாது, இந்நிலையில் விவாகரத்து கோருபவர்களே பெரும்பாலும். எப்படியும் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று இருவரும் நினைத்து ஓட்டிவிட்டால் பிறகு பழகிவிடும். (ஒன்று இவர் இப்படித்தான் என்று நினைத்து வாழப் பழகிவிடும். அல்லது புரிதல் ஏற்பட்டு விடும்)
வாழ்க்கை என்பது எப்போதும் ரோஜா மலரில் நடப்பது அல்லவே. அவ்வப்போது முள்ளும் குத்தத்தான் செய்யும். பொறுத்துக்கொள்பவர் பயணத்தைத் தொடவர்.

இன்னொன்று அதுவரை பெற்றோருக்கு அடங்கி வாழ்ந்த பெண்கள் கூட திருமணம் அவளின் சுதந்திரத்திற்கு ஒரு கருவி என்று நினைத்து தன் வாழ்க்கை முறையை( நவ நாகரிக ஆடை, உணவுக்கு எப்போதும் ஹோட்டல்) மாற்றிக்கொள்கின்றனர். அந்த மாற்றம் கூட ஓருவருக்காக மற்றவர் தம்மை மாற்றிக்கொண்டால் அன்பு அழப்படும்.
.
விவாகாரத்துக்கு முக்கிய காரணம் தனிக்குடித்தனம் என்றும் கூறலாம். ஒரு சமயம் இருவருக்குள் சண்டை வந்தால் மூன்றாமவர் த்டுக்கும் வாய்ப்பும் பறி போய்விடுகிறது.
ஒரு சில நேரங்களில் மூன்றாமவர் நுழைவும் இதற்கு காரண்மாகிறது.
என்ன சொன்னாலும் பிறருக்குத் தெரிய வேண்டாமே என்று சில பிரச்சனைகளையாவது ஒத்திப்போடுவர் அல்லவா.
1.விட்டுக்கொடுத்தல் இருவரிடமும் இருக்க வேண்டும்.
2. இவர் நம்ம கணவர் என்று அவளும் இவள் நம் மனைவி என்று அவளும் எண்ணும் போது பாசம் உண்டாகும். நல்ல இல்லறத்திற்கு அடிப்படை பாசம்.
3. அடிப்படை பாசம் வந்து விட்டால் குற்றங்கள் குறைகளாக இருவருக்கும் தெரியாது.
4. உண்மை கண்டிப்பாக பேணப்பட வேண்டும்
5. அதற்காக எல்லா உண்மையும் பகிரப்படும் போது அதுவே சில நேரங்களில் ஆபத்தாக முடியும். அதனால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள பிடிக்கும் ஓரிரு ஆண்டுகள் மறைக்க வேண்டியவற்றை மறைத்தல் நலம்.
குறைகள் இல்லாத மனிதனே இல்லை. அதனால் கணவன் மனைவி உறவாகட்டும் ந்ட்பாகட்டும் இரண்டிலும் குறைகளை அறிந்து குறைகளோடு ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளும் மன உறுதி வேண்டும்.
கண்டிப்பாக சுய நலம் இன்றி நம் நலம். நம் குடும்பம் என்று நினைப்பது அவசியமாகிறது. ”உனக்காக நான்” என்ற எண்ணம் இருவருக்கும் இருக்குமானால் வி.ர. தேவையே இருக்காது. இவையெல்லாவற்றுக்கும் மேலாக அன்பு அன்பு என்ற அடிக்கோள் நாட்டி இல்லறம் அமைக்கப்பட வேண்டும்..

விவாகரத்து: இன்றைய சமுதாய சூழலில் மிகவும் மலிவாகிவிட்ட விடயம்! அதற்கான முக்கிய காரணியாக இருப்பது பணம் மற்றும் அந்தரங்கப் பிரச்சனைகள்!

மேலும் வீட்டிலுள்ள பெரியவர்களும் இதை ஆதரிப்பதுதான் மிகவும் வேதனையாக உள்ளது! மலேசியா மற்றும் சிங்கப்பூர் தமிழர்களிடையே விவாகரத்து அதிகம் நடைபெறுகிறது!

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாததுதான் இதற்கு முக்கிய காரணம்! பெண்களும் சுயமாக சம்பாதிப்பதால் ஆண்களின் அடக்குமுறையை விரும்புவதில்லை! அதை ஆண்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்!

sudhavaidhi

Guru's of Penmai
Joined
May 20, 2011
Messages
6,171
Likes
15,033
Location
Muscat
#9

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.