வீடுதான் முதல் பள்ளி

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1
பள்ளி படிப்பு என்பது வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது. சூடாரத்னா என்ற கன்னட கவி கூற்றுப்படி ஒரு தகப்பன் தன் குழந்தையைப் படிக்க வைக்கவில்லை என்றால், அக் குழந்தையை அவர் கொலை செய்வதாக ஆகும். தந்தை தன் குழந்தையை குறிப்பிட்ட வயதிற்குப் பின் பள்ளியில் சேர்க்க வேண்டும். ஆனால் சரியாகச் சொல்லவேண்டுமாயின் வீடுதான் ஒரு குழந்தையின் முதல் பள்ளிக்கூடம் எனலாம்.
கடவுள் ஒவ்வொருவருக்காகவும் வந்து நம்மை காப்பார் என்று எண்ணக்கூடாது. கடவுள் ஒவ்வொரு குழந்தைக்கும் தாயைக் கொடுத்துள்ளார். பெண்கள்தான் கடவுளின் முழுப் படைப்பு என்று சொல்லலாம். தாய்தான் பொறுமையின் பிறப்பிடம். அவளது தியாகம் பூமாதேவியின் தியாகத்திற்கு ஒப்பானதாகும். தாய்தான் வீட்டை உருவாக்குபவள். தாயின் முயற்சிதான் மனிதனை முழு ஆளுமை உடையவனாகவும் தனித்தன்மை பெற்றவனாகவும் மாற்றிவிடுகிறது. "நீங்கள் ஒரு தாயைப் பற்றி தெரிந்துகொள்ள, அவளது குழந்தைகளைப் பாருங்கள்" என்பது பழமொழி. தாயானவள் குழந்தையின் எதிர்கால வாழ்வுக்கு அடிக்கல் நடுபவர் எனலாம். சத்ரபதி சிவாஜி இந்து சாம்ராஜ்யத்தை உருவாக்க அவர் தாயார் ஜீஜாபாயின் ஊக்கம்தான் ஒரு காரணம் ஆகும். ஒரு பெண்ணின் (மகளின்) நல்ல நண்பர் என்பவர் அவரது தாயார் மட்டுமே என்றால் மிகையாகாது.
ஒரு மிருதுவான தாயார் கடினமான மகளை உருவாக்க முடியும். "தாய் எப்படியோ அப்படியே மகள்", மனிதர்கள் என்பவர்கள் அவர்களின் தாயார்களால் உருவாக்கப்படுபவர்கள். தாய் தன் கண்களை இழந்தாலும், அவள் தனது அழகிய மனக் கண்பார்வையை இழக்க மாட்டாள். "தாயை விட சிறந்ததொரு கோவில் இல்லை" என்பது தமிழ்ப் பழமொழியாகும். தாயின் நல்ல உள்ளம் கடலின் ஆழத்தை விட அதிகமானது. குழந்தையின் சுற்றுப்புற சூழலின் முதல் எதிர்வினை அதன் தாயாரிடம் இருந்துதான் தொடங்குகிறது. தாய்தான் குழந்தைகளின் மனதில் என்றும் அழியாத எண்ணங்களை உருவாக்குகிறார். தனது குழந்தைகளை தனது விருப்பத்திற்கேற்ப மாற்றியமைத்து வருகிறாள். வித்யாவதி தேவி பிரிட்டீஷாரை எதிர்த்து தன் மகன் பகத்சிங் போராட எண்ணினாள். அதன்படி நடந்தது. தனது மகன் ஒரு கதாநாயகனாக வர வேண்டும்; வாழ வேண்டும் என்று எண்ணினாள். கோழை போல் நடக்கக் கூடாது என்று விரும்பினாள். அது நடந்தது. தாய் ஸ்தானம் என்பது அவளது குணங்களை கொண்டதுதான். இது ஒரு கலை. இதில் எல்லா பெண்களும் சிறந்து விளங்க வேண்டும். தாயும் தாய்மை ஸ்தானமும் பெண்களுக்கான ஆடல் சார்ந்த பாடலாகும். தாய் என்பவள் சுயநலம் கொண்டவள் அல்ல. அவள் தன் குழந்தைகள் யாவரும் தனது உரிமைக்குரியவர் என்று நினைப்பதில்லை. தன் குழந்தைகளை அன்புடன் நேசிக்கிறாள். ஆனால் அவர்கள் தனது உரிமை என்று எப்போதும் சொன்னதில்லை.
குழந்தையை சொந்தம் கொண்டாடுவது தன் தற்காப்பிற்கில்லை. குழந்தைகளை உலகிற்கு கொண்டு வர பெண்களுக்கு கடவுள் சந்தர்ப்பமளித்தார். கலீல் ஜிப்ரான் என்ற பெரிய மதத் தலைவர் கூற்றுப்படி உங்களது குழந்தைகள் உங்களுடையதல்ல. மனிதப் பிறவி எடுத்து வாழ விரும்பிய ஜீவன்களின் மறு உருவம்தான் அவை.
தாய் தன் குழந்தை மீது அபரிமிதமான அன்பைப் பொழிகிறாள். எனவே, வீடுதான் குழந்தையின் முதல் பள்ளியாகும். வீட்டை நிர்வகிப்பவர்தான் குழந்தையின் முதல் ஆசிரியர்.
தாயார்களுக்கான குறிப்புகள்:
தாயாருக்கு தன் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்று சொல்லித் தர தேவையில்லை. நாம் இன்று மின்னணு யுகத்தில் வாழ்கிறோம். நம் நாடு முன்னேறி வருகிறது. எனவே தாயின் பொறுப்பும் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. தந்தைகூட தன் குழந்தையின் வளர்ச்சியில் சிறந்த பொறுப்பு ஏற்க வேண்டும். தாயாரும்கூட தற்காலத்தில் பணிக்குச் செல்பவராக இருக்கிறார். மின்னணு கழகம் மற்றும் மென்பொருள் தொழிற்சாலை ஆகியவற்றிற்கு வேலைக்குச் செல்கிறார்கள். பல தாயார்கள் தங்கள் 3 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பணிசெய்யும் இடத்திற்கு கொண்டு செல்கின்றனர். அங்கு குழந்தைக்கு தாய் பாலூட்டல், விளையாட வசதிகள் முதலியன செய்து தரப்படுகின்றன.
குழந்தைகளுக்கு சுதந்திரம் கொடுத்து அவர்கள் புதியனவற்றையும் பல விஷயங்களையும் கற்றுக்கொள்ள வாய்ப்பு வசதிகள் செய்து தர வேண்டும்.
தங்கள் குழந்தைகள் எந்த வேலையையும் செய்யும் திறன் படைத்தவர்களாக இருக்க வேண்டும்.
அவர்கள் சுதந்திரத்தை அனுபவிக்கட்டும். அவர்களுக்கு துணையாகவும் பாதுகாவலர்களாகவும், அவர்களது புதிய முயற்சியில் உடன் இருக்க வேண்டும்.
குழந்தைகளின் செயல்பாட்டில் குறுக்கீடு செய்ய வேண்டாம். அவர்களுக்கு சுதந்திரம் கொடுப்பது அவர்களை தவறான வழிக்கு அழைத்துச் சென்றுவிடும் என்று எண்ண வேண்டாம். இது அப்படியல்ல. அவர்களை கட்டுப்படுத்தினால் அவர்கள் அடம்பிடிப்பார்கள்.
தாய்-குழந்தை சொந்தம் கருவறையிலேயே தொடங்கி விடுகிறது. இங்கு நல்ல அரவணைப்பு அன்பு நிலவும். உண்மையில் குழந்தைகளுக்கு சுதந்திரம் கொடுப்பதால் குழந்தைகள் கெட்டுவிடலாம் என்ற பொருள் இல்லை. கெட்ட குழந்தை தாயைப் போல செயல்படும் என்பதும் உண்மையன்று.
சிறு குழந்தைகளின் வளர்ச்சியில் வீடு பெரும் பங்கு வகிக்கிறது. வீட்டிற்கு அடுத்த நிலையில் வருவது பள்ளியாகும். வீடு என்பது ஒரு பரிசாகும். ஆனால் பள்ளி என்பது அவ்வாறு அமையாது. பள்ளி என்பது நாம் தேர்வு செய்த இடம். உறுதியாக, பள்ளியில்தான் குழந்தைகள் தங்கள் திறமைகளைக் கண்டு விருத்தி செய்யவும் வெளிக்காட்டவும் முடியும்.
குழந்தைகளுக்கு தாய்மார்கள், பெரியவர்களுக்கு மரியாதை தர கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களுக்கு கீழ்படிந்து நடக்கவும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு பொதுவான இடங்களில் பயன்படுத்த வேண்டிய வார்த்தைகள் பற்றியும் கற்றுத் தர வேண்டும். உதாரணம் தயவுசெய்து, மன்னிக்கவும், மிக்க நன்றி முதலியன. உங்கள் குழந்தை காலையில் பிறரைப் பார்க்கும்போதும் நல்ல காலை வணக்கம் என்றும், தூங்கச் செல்லுமுன் நல்ல இரவு வணக்கமும் சொல்லட்டும்.


-koodal


 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.