வீட்டை அழகுசெய்வோம்!

vidhyalakshmi15

Commander's of Penmai
Joined
Oct 12, 2017
Messages
1,497
Likes
732
Location
Switzerland
#1
வீட்டை அழகுசெய்வோம்!வீடு என்பது தங்குவதற்கான ஒரு கூரை மட்டும் அல்ல. அது நம் மனத்தின் வெளிப்பாடு. அகத்தில் அழகு முகத்தில் தெரியும் என்பார்களே அதுபோல் உங்கள் மனத்தின் நிலையை வீட்டை வைத்து விருந்தினர்கள் உணர்ந்துகொள்வார்கள். வீடு இருக்கும் நிலையை வைத்துதான் நம் செயல்பாடும் இருக்கும். அதனால் வீட்டை அழகாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

வீட்டின் வரவேற்பறையைப் பூக்களால் அழகுபடுத்தலாம். அவை மனத்துக்குப் புத்துணர்வு அளிக்கும். வீட்டின் வரவேற்பறையில் அழகான பூங்கொத்துகளை வைப்பது மனமகிழ்ச்சி அளிக்கும். இயற்கையான பூங்கொத்தோ செயற்கையான பூங்கொத்தோ வைக்கலாம்.
அதுபோல வீட்டின் சுவர்களில் அழகான வேலைப்பாடுகள் உள்ள ப்ரேம்களில் ஒளிப்படங்களை மாட்டி வைத்து அழகு செய்யலாம். நம் மனத்துக்குப் பிடித்த ஓவியங்கள், வண்ணங்கள், இயற்கைக் காட்சிகள் எதை வேண்டுமானாலும் கொண்டு அழகுபடுத்தலாம்.


வீட்டின் நிறத்துக்குத் தகுந்தாற்போல ஜன்னல் சீலைகளைத் தேர்ந்தெடுத்து பயண்படுத்தலம்.அது காண்பவரை வசீகரிக்கும். வீட்டின் தோற்றத்தையே மாற்றிவிடக்கூடிய வகையில் இவை அழகுசேர்க்கும்.


வீட்டைச் சற்று ஆடம்பரமாகவும் செலவில்லாமலும் அலங்கரிக்க வேண்டுமென்றால், வீட்டின் சோபா அல்லது மெத்தைகள் மீது அழகான குஷனை ஆங்காங்கு வைத்து அலங்கரிக்கலாம்.


சோபாக்களுக்கு உரை தேர்வுசெய்யும்போது அது வீட்டின் வண்ணத்துக்குத் தகுந்தாற்போல இருப்பதாகப் பார்த்துக்கொள்ளலாம். அப்படி இருக்கும்பட்சத்தில் வீட்டின் அழகை அவை கூட்டும்.


வீட்டில் உள்ள பழமையான பொருட்களைப் பரணில் போட்டுவிடாமல் கெண்டி, பழைய வெண்கலப் பாத்திரங்கள், பழைய ஒளிப்பட ப்ரேம்கள் போன்றவற்றைத் துடைத்து அழகுபடுத்தி, கவரும்வகையில் அடுக்கி வீட்டின் தோற்றத்தை மெருகேற்றலாம்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.