வீட்டை அழகுப்படுத்த இப்படியொரு வழி இருக&

Durgaramesh

Minister's of Penmai
Joined
Sep 12, 2015
Messages
3,258
Likes
5,369
Location
Puducherry
#1
கண்ணாடியை வைத்து வீட்டை எப்படியெல்லாம் அலங்கரிக்கலாம்?வீடு என்பது அழகும், தேவையான வசதியும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்க வேண்டும். இன்றைய நாகரிக வீட்டை அழகாக, பயன்பாடுமிக்கதாக மாற்றக் கடல் போல் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இவற்றில் சரியான பொருட்களைத் தேர்வு செய்வது முக்கியம். அப்படியான பொருட்களில் முக்கியமானது கண்ணாடி.

கண்ணாடி ஒன்றும் புதுமையான பொருள் அல்ல. அதை ஏற்கனவே பல இடங்களில் பயன்படுத்தி வருகிறோம். என்றாலும் முழுக்க முழுக்கக் கண்ணாடியால் கட்டிடங்களை அமைப்பது இன்றைய புதுப்பாணி. அலுவலகங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் என்று அனைத்துமே கண்ணாடியால் வடிவமைக்கப்படுகின்றன.

வீடுகளில் உள்ள அறையில் எந்த பொருள் இருந்தாலும் கூடுதலாக அங்கு ஒரு கண்ணாடி இருந்தால் அந்த அறை அழகாக இருக்கும். கண்ணாடி ஒளியை பிரதிபலிப்பது மட்டுமல்லாமல், சரியான அலங்காரங்களுடன் சுவற்றில் மாட்டி வைத்தால், கலைநயத்தையும் கொடுக்கும்.

மேலும், ஒரு கண்ணாடியை சுவற்றில் மாட்டி வைக்கும் போது அல்லது ஒரு பெரிய கண்ணாடியை ஓரிடத்தில் வைக்கும் போது, அவற்றை கலையுணர்வுடன் தேர்வு செய்ய வேண்டும். ஒரு அழகான ஓவியத்தை கண்ணாடியின் எதிர் புறத்தில் மாட்டி வைத்தால், அந்த ஓவியத்தை பிரதிபலித்து, அந்த ஓவியத்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றுகிறது.

பழைய கண்ணாடிகள் அனைத்தும் பழங்கால வசீகரத்தை தரும். சந்தைகள் மற்றும் விற்பனை நிலையங்களில் விற்பனையாகும் பழைய கண்ணாடிகளை சேகரிக்கலாம். அவற்றை அனைத்து அறைகளின் ஓரங்களில் தொங்கவிட்டால் அழகாக இருக்கும்.

சுவற்றின் இருண்ட பகுதி, சமையலறை மற்றும் அலமாரியில் ஒளி ஏற்பட கண்ணாடி துண்டுகளைப் பயன்படுத்தலாம். ஒரு அறையின் வெளிச்சத்தை அதிகரிக்க வேண்டும் என்றால் ப்ரேம் கொண்ட கண்ணாடியை வெளிச்சம் உள்ள இடத்தின் எதிரில் வைத்தால் வெளிச்சம் அதிகமாக வரும்.

பெரிய கண்ணாடி முன்பு ஒரு சிறிய ஜன்னலின் ப்ரேம்மை பயன்படுத்தி, ஒரு ஜன்னல் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கலாம். அதற்கு கீழே செடி வகைகளை வைக்கலாம். இதற்கு சிறிய மற்றும் பெரிய வகை கண்ணாடிகளிலும் பயன்படுத்தலாம்.

ஹhலில் கண்ணாடியைப் பயன்படுத்தும் போது, கடல் சிப்பிகள் மற்றும் சங்குகளைக் கொண்டு கண்ணாடி ப்ரேமை அலங்கரித்து தொங்கவிட்டால், அது மிகவும் அழகானதாக இருக்கும்.

வீட்டை அலங்கரிக்க கண்ணாடித் துண்டுகளை பயன்படுத்துவது வீட்டிற்கு அழகான தோற்றத்தை தரும். கைவினைப் பொருட்கள் மீது ஆர்வம் உள்ளவர்கள் ஒரு பலகையில் பல்வேறு நிறங்களைக் கொண்ட கண்ணாடித் துண்டுகளை ஒட்டி, சுவற்றில் தொங்கவிட்டு வீட்டை அழகுப்படுத்தலாம்.
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.