வெஜ் வொண்டர் - Veg Wonder

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
[h=1]வெஜ் வொண்டர்[/h]
பிபி எகிறுதா?

சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பது தவிர்க்கப்படுவதாகச் சொல்கிறது லேட்டஸ்ட் ஆய்வுத் தகவல் ஒன்று.



சைவ உணவுக்காரர்கள் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் நிறைந்த உணவுகளையே எடுத்துக் கொள்கிறார்கள். தாவர உணவுகளில் நார்ச்சத்து அதிகமாகவும் கொழுப்புச்சத்து குறைவாகவும் இருக்கும். அதனால் அவற்றின் மூலம் கிடைக்கிற கலோரியின் அளவும் குறைவாகவே இருக்கும். அதனால்தான் பொதுவாக சைவ உணவுக்காரர்கள், அசைவ உணவுக்காரர்களை விடவும் பருமன் குறைவானவர்களாக இருக்கிறார்கள். அளவான எடை, ரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது. தவிர, காய்கறி மற்றும் பழங்களில் சோடியத்தின் அளவு குறைவாகவும் பொட்டாசியத்தின் அளவு அதிகமாகவும் இருப்பதால், அதன் மூலமும் ரத்த அழுத்தம் அதிகரிப்பதும் தவிர்க்கப்படுகிறது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.