வெண்பா

Joined
Mar 24, 2018
Messages
25
Likes
41
Location
Bangalore
#12
வெண்பா
6. கொலையரசி
வணக்கம் நண்பர்களே. அனைவரின் பயணங்களும் நாட்களும் இனிதாகவே போய்க் கொண்டு இருக்கிறது என நம்புகிறேன். தெளிவான ஒரு நோக்கம், பார்வை இல்லாமல் எறியப்படும் எந்தொரு கல்லும் இலக்கை அடைவது இல்லை. அதுபோலவே லட்சியமும் புத்திசாலித்தனமும் இல்லாமல் வெறுமனே இறைக்கை வீசிப் பறக்கும் பறவை கூட வேடனால் வீழ்த்தப்படும். ஒவ்வொருவரின் வாழ்க்கையும் கழிவுகள் போலவே தெளிவற்றதாக நகர்ந்து கொண்டிருக்கிறது.லட்சியம் நோக்கம் தெளிவில்லாமல் தான் சோலையனின் வாழ்க்கையும் நகர்ந்து கொண்டிருந்தது. அவனைச்சுற்றி உள்ளவர்களால் அவன் மிகவும் சந்தோஷமாகவே இருப்பதாக உணர்ந்தான். ஆனாலும் அவனைப் பலர் தங்களின் இதழ் சிரிக்கப் பயன்படுத்தப்படும் பொழுதுபோக்காகவே நினைத்தனர். அவன் ஒரு சாதாரண க்ரானைட் குவாரியில் கல் அறுக்கும் உதவியாளாக பணிபுரிந்து வந்தான்.

எங்க ஊர் கொம்பள்ளி, ஒரு சிறு கிராமம் நாங்க எல்லாரும் கிருஷ்ணகிரி தான் அதிகமா படிக்க வருவோம். எங்க ஊருக்கும் கிருஷ்ணகிரிக்கும் ஒரு முப்பது நிமிடம் ஆகும் போகவர. ஆனால் சோலையன் அண்ணன் சூளூருக்கும் ஓசூருக்கும் நடுவில வேலை பார்த்தார். எங்க பஸ்ல இப்போ இருக்கும் கிருஷ்ணகிரி டோல் வர வருவார் அங்கிருந்து சூளகிரி நோக்கி போவார். இப்படியே ஒரு இரண்டு வருடங்கள் அவர் சூளகிரி பக்கத்துல வேலை பார்த்தார். அப்போ எல்லாம் க்ரானைட் பிசினஸ் ரொம்ப பெரிசா போகாது. ரொம்ப பணக்காரர்கள் மட்டுமே விரும்பி வாங்குவாங்க. அவரோட முதலாளி வேற புதிதாக ஆரம்பித்து இருந்தார். கொஞ்சம் கொஞ்சமா முன்னேற்றி செல்ல நினைத்தார். ஆனால் அவருடைய கெட்டநேரம் ஒரு சின்ன கவனக்குறைவு விபத்தால் அத மூடிவிட்டார்கள்.

அதன்பிறகு தான் அவர் கிருஷ்ணகிரி பக்கத்துலயே ஒரு க்ரானைட் குவாரியில் வேலைக்கு சேர்ந்தார். இந்த வேலை கிடைக்கும் முன்பு ஒரு ஆறுமாதங்கள் ஒரே ஓசிக்குடிதான். அப்போ எல்லாம் கல் எங்க ஊர்ப்பக்கம் அதிகமா கிடைக்கும். கொடம் கொடமாக வைத்தாலும் கொடுத்தாலும் குடித்துவிடுவார்.

அந்த ஆறு மாதங்கள் நரக வாழ்க்கை வாழ்ந்தார். சின்ன சின்ன வேலைக்கு போவார் குடிப்பார் குடிப்பார், அது தான் எல்லாமே. இப்படியே சென்றது. அப்பறம் தான் அவர் வாழ்க்கையில மாறுதல் ஏற்படும்னு எதிர்பார்த்தாரோ இல்லையோ. மிகப்பெரிய மாறுதல் ஏற்பட்டது. அவர் வேலைக்கு சேர்ந்த மூன்று மாதத்துலயே அவர் வேலைபார்த்த சின்ன கம்பெனி கணக்கு பார்ப்பவர் செத்துப்போக. அங்கே அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டவள் தான் அரசி. அவங்களுக்கு ஒரு பதினெட்டு வயது தான் இருக்கும்.

ரொம்ப அழகான தோற்றம். வசீகரமான உடல்வாகு கொண்டவள் அரசி என்ற பெயர்க்கு ஏற்றாற்போல். அவங்க தாண்டிக்குப்பம் எனும் ஊரிலிருந்து கிரிஷ்ணகிரிக்கு வேலைக்கு வருவாங்க.

எல்லாருக்கும் கிருஷ்ணகிரி சேலம் தர்மபுரியை சுற்றி சொல்லப்படும் சிறுகாதல் கல்யாணம் என்றாலே கொஞ்சம் பயமாகவும், அந்த காதல் ஜாதி மதம் சார்ந்து ஏதாவது பிரச்னை சந்திக்கும் என்று தோன்றும். அதுபோக வேகமாக சென்று கொண்டிருக்கும் பாதையில் வேகத்தடையாக காதலே வரும் என்று எதிர்பார்ப்போரும் பலர் உண்டு இங்கே. ஆனால் இது அப்படிப்பட்ட ஒரு காதல் இல்லைங்கோ. என்னவென்று நீங்களே வாசித்து தெரிந்துகொள்ளவும்.

அந்த க்ரானைட் குவாரி அமைந்து இருந்த இடம் கொஞ்சம் அடர்ந்த பகுதியாகவே இருந்தது. வியாபாரமும் ஓரளவு நன்றாகவே இருந்தது.
நன்றாக வியாபாரம் சென்றது என்றால் வேலையும் அங்கே அதிகமாகவே இருக்கவேண்டும். பலநேரங்களில் இரவு பகல் என்று பாராமல் சென்றது. சோலையின் பலநேரங்களில் வீட்டில் இருந்ததைவிட அந்த குவாரியில் இருந்தது தன அதிகம் இப்போ எல்லாம். ஆனாலும் எப்போ எல்லாம் ஊர்ல இருப்பாரோ எங்க கூட பஸ்க்கு காத்திருப்பாரோ அப்போ எல்லாம் எங்களுக்கு எதாவது வாங்கி கொடுத்துக்கொண்டே இருப்பார். காசு பணம் என்பதைவிட அன்பு சிறந்தது என்றே நினைத்துக்கொண்டு இருந்தார். ஆனால் அப்படி நினைப்போரின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் உண்டாகும் என அறிந்ததில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இப்படியே இரண்டு வருடங்கள் சென்றது. அவருடைய வயதும் கல்யாணம் என்ற காமத்தை வெளிக்கொணரும் நிலையை அடைந்தது. வீட்டிலும் பெண் பார்த்துக்கொண்டு இருந்தனர். எங்க ஊரு பக்கத்துலயே தனம்பட்டினு ஒரு ஊரு இருக்கு அங்கேயே ராஜாத்தி என்ற ஒரு பொண்ணப் பார்த்துக்கட்டி வைத்தனர். அவருடைய வாழ்க்கையும் ரொம்ப சந்தோசமாக போய்க்கொண்டிருந்தது.

கல்யாணம் முடிந்து ஒன்றை வருடத்தில் செய்யவேண்டிய சரியான வேலைகளை எல்லாம் அருமையாக செய்து முடித்ததன் பெருமையாக அவருக்கு ஒரு அழகான ஆண்மகன் பிறந்தான். அவனுக்கு குகன் எனப்பெயர் வைத்தார். எவ்வளவு குடித்தாலும் வீட்டில் உள்ள யாரையும் வதைக்க மாட்டார். குடித்துவிட்டால் தான் வேட்டியை வைத்தே தெரு மூலையில் மண்டபத்தில். காடு கரையிலே வாடை காற்றை அனுபவித்து உறங்குவதே அவருடைய சுகமான வாழ்க்கை.

தனது மனைவியையும் மகனையும் நல்லமுறையில் பாதுகாத்தே வந்தார். ஆனாலும் அவர்களை எமன் பின்தொடர்ந்து தான் வந்தது என்று சொல்லலாம். உயிரைக்குடிக்கும் எமனாக இருந்தால் கூட பரவாயில்லை என்றளவு. அவனின் வாழ்க்கை துன்பம் எனும் கடலில் துயில் கொண்டது. ஆம் அவனின் இரவு பகலில் அவன் செய்ய மறந்த செலுத்த மறந்த அன்பை பிறர் செலுத்தினால். வாழ்க்கை வழி மாறத்தானே அப்படியே இவன் வாழ்வும் வழி மாறியது என்று அவன் உணரும் போது அவனும் சிறைப்பட்டான்.

எங்கே எங்கே என எங்கும் அன்புநெஞ்சங்கள் எங்கட்டும் சோலையனின் வாழ்க்கையை மேலும் படிக்க. சோலையனும் அவன் ராஜாத்தியும் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள், வாழ்ந்தவர்கள், வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எந்தவொரு ஏழைக் குடும்பத்திலும் கணவனும் மனைவியும் வேலை உழைப்பு என்ற பயணத்தில் இருப்பர். சோலையின் வேலைக்கு சென்ற நேரத்தில் ராஜாத்தியும் காடு கரைக்கு தோட்டத்திற்கு வேலைக்கு செல்வாள். இவர்களின் கல்யாணம் முடிந்த இரண்டு வருடத்தில் சோலையனின் பெற்றோரும் இறந்துவிட மாமியார் கொடுமை ஏதும் இல்லாமலே அவர்களின் வாழ்க்கை நன்றாக சென்றது.

சோலையன் இரவு பகலாக வேலை செய்யும் சிலசமயங்களில் மட்டும் ஒரு இரண்டு மணிநேரம் எடுத்துக்கொள்வான் உடல் அலுப்பை போக்கிக்கொள்ள. ஏனென்றால் இப்போதான் கல் அறுக்க பாலிஷ் பண்ண எல்லாமே இயந்திரம். முன்பெல்லாம் இயந்திரம் ஏதும் இல்லை. தன்கையே தனக்கு ஆயுதம் என்பது போல தான். அப்படியே ஒரு நாள் அலுப்பை போக்கிக்கொள்ள அதிகமாக ஒரு மணிநேரம் எடுத்துக்கொண்டான். அன்று அவன் எதிர்பாராத விதமாக வீட்டுக்கு வந்திருந்தான்.

ஏழு மணிக்கு வீட்டிற்க்கு வந்து சாப்பிட்டு விட்டு ஒன்பது மணிக்கு செல்லலாம் என நினைத்தான். வீட்டில் அவன் சாப்பிட்டு கொண்டிருந்த நேரத்தில் அவன் மகன் வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அவள் மனைவி அவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தால். இரவு ஒரு எட்டு மணி இருக்கும் வெளியே அவன் மகன் விளையாடிக் கொண்டிருந்தான் அல்லவா.

யாரோ இருவர் அவனைநோக்கி வேகமாக வருகின்றனர். அவன் மகனும் அவர்கள் வருவதைக்கண்டு அவன் விளையாட்டை தொடர்கிறான். அருகில் வந்தவர்கள் அவனை நோக்கி தம்பி இங்கே சோலையன் வீடு எது என்று அவனை கேட்கிறார்கள். அது எங்கப்பா தான் என்று சொல்ல அந்த மூன்று வயது சிறுவன். அவர் எங்கே இருக்காரு, உங்க வீடு எங்கே இருக்கிறது என்று அவர்கள் கேட்க. இந்த இதுதான் என்று அவர்கள் சொல்ல. எதுவும் கேளாமல் அவர்கள் உள்ளே நுழைந்தார்கள்.

அவர்கள் வீடு ஒருசிறு ஓட்டு வீடுதான். எங்க ஊரே அருகருகே அமைந்த வீடுகளைக் கொண்டது. அவர்கள் உள்ளே நுழைந்த உடனே அவள் மனைவி எழுந்து யாருங்க நீங்க உங்களுக்கு என்ன வேணும். தொறந்த வீட்டுக்குள்ளே நாயி நுழையிற மாதிரி வர்றீங்க எனச்சொல்ல. வந்தவர்களில் ஒருவன் அவளை கைய ஓங்கி அடிக்க முயன்று நிப்பாட்டினான். இந்த சத்தங்களை எல்லாம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தோர் ஒன்று கூடிவிட்டனர். ஆனால் சத்தம் மட்டுமே அவர்களின் காதுகளில் கேட்டது. எவரும் வீட்டுக்குள் செல்லவில்லை.ஏனென்றால் ராஜாத்தி கொஞ்சம் ஒரு மாதிரி.

காசுக்கு அடிபணியும் ஆமை, பணத்தை பார்த்தால் பிடுங்கிச்செல்லும் குரங்கு என்றே சொல்லலாம். அப்படியும் வெளியில் இருந்த கூட்டங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு ஒருவர் செல்கிறார். அவர் பெயர் முருகன். அவர் தான் ஊர் பெரியவர். ஊர்ல முக்கியப்புள்ளி. உள்ளே சென்ற அவரே அதிர்ந்து நின்றார். ஏனென்றால் இதுவரை அவர்களின் ஊருக்குள்ளே எந்தவொரு போலீஸும் வந்தது இல்லை. ஏதுவாயினாலும் பஞ்சாயத்து தான். ஆனாலும் வந்திருந்த போலீசை அவருக்கு கொஞ்சம் தெரிந்து இருந்தது. அவர் உள்ளே சென்றது வணக்கம் தம்பி என்றார்.

வந்திருந்த போலீஷுகோ இவரை கொஞ்சம் நியாபகம் இருந்தது எங்கோ பார்த்தது போலே. இவர் வணக்கம் சொல்ல அவரும் பதிலுக்கு வணக்கம் சொன்னார். என்ன தம்பி இந்தப்பக்கம் என்ன பிரச்சனை ஏன் பொம்பள புள்ளைய கை நீட்டுகிறீர்கள் என்றார். அவர் உள்ளே நுழையும் போதே பார்த்துவிட்டார் அவன் கை ஓங்கியதை. இல்லை சார் விசாரிக்க வந்த இடத்துல இந்த அம்மா ஏதும் பேசவிடாம மரியாதையை இல்லாம பேசுறாங்க சார் என்றான்.

அவள் நடந்ததை என்னவென்று சொல்ல இருவருக்குள்ளும் சொல்லி சமாதானப்படுத்தினர் முருகன். சொல்லி முடித்து போலீசிடம் கேட்டார். தம்பி என்ன தம்பி எதுக்கு வந்து இருக்கீங்க சொல்லுங்க. இல்லை சார் இவரு வேலை பார்க்கும் குவாரி பக்கத்துல இருந்து எங்களுக்கு ஒரு செய்தி வந்தது யாரோ இறந்து கிடப்பதாக சொல்லி. நாங்க சென்று பார்த்தபோது அது ஒரு பொண்ணு என மட்டுமே தெரிஞ்சது.

அப்பறம் அதப்பத்தி விசாரிக்க அவளுடைய பெயர் அரசி என்றும் அவள் மீனா குவாரியில் வேலை செய்கிறார் என்றும் தெரியவந்தது. அதான் இவரிடமும் விசாரித்து விட்டு செல்லலாம் என்று வந்தோம் என்றார். இதைக்கேட்ட அவன் வெடவெடத்து நின்றான். என்னடா ஆச்சு நாம ஐந்தரை மணிக்கு கிளம்பும்போது உள்ளதானே கணக்கு எழுதிக்கொண்டு இருந்தாள். என்னடா ஆச்சு என தனக்குள்ளே நினைத்துக் கொண்டான். அவன் நினைத்துக் கொண்டிருந்த போது போலீசார் மேலும் கேட்டனர்.

நீங்க அங்க இருந்து எத்தனை மணிக்கு கெளம்புனீங்க என்றார். நான் ஒரு ஐந்தரை மணிக்கு கெளம்புனேன் சார் என்றான். நீங்க கடைசியா கிளம்பும் போது அந்தப்பொண்ணு இருந்ததா இல்லையா என்றார் அங்கே தான் சார் இருந்தது என்றான். அவர்கள் வேலை செய்யும் இடத்தில இருந்து அவள் இருக்கும் இடத்தைப் பார்க்க அவள் உக்காந்து இருப்பது போலயே தெரிந்தது அவனுக்கு. ஆனால் அவள் உட்கார்ந்து தான் இருந்தாள் எனபதல்ல உட்கார வைக்கப்பட்டாள்.

அடுத்த கேள்வியை போலீசார் கேட்டனர் உங்களுக்கு வெத்தலை பாக்கு போடும் பழக்கம் ஏதும் இருக்கா என்றான். அப்படி ஏதும் இல்லை சார் என்றான். சரி நாங்க வர்றோம் நாங்க கூப்பிடும் போதெல்லாம் உங்களின் உதவி எங்களுக்கு தேவை என்றான். கண்டிப்பாக வருகிறேன் சார் என்றான். இதெல்லாம் முடித்துவிட்டு போலீசார் கிளம்பும் தருவாயில் கூடி இருந்த மக்கள் என்ன என்னமோ பேசிக்கொண்டனர். அவளை இவன் தன கொலை செய்து இருப்பான். இவனுக்கு காம உணர்வுகள் அதிகம் அதனால் சீறிப்பாய்ந்து இருப்பான் என்றெல்லாம் பேசினார்.

ஆனால் இதெல்லாம் கேட்டு வருந்தாத அவன் மனம் அவளை நினைத்த போது வருந்தியது. ஏனென்றால் அவளுக்கு காத்து கேட்காது வாய் பேசத்தெரியது.
இருந்தும் அன்பும் பண்பும் மிக்கவள். அவளுக்கு நடந்த இந்தக்கொடுமைக்கு காரணம் அவளின் அழகு என்று தான் சொல்லவேண்டும்.

அங்கிருந்து கிளம்பிய போலீசார் தனக்குள் பேசிக்கொண்டனர் போகும் வழியில். அதில் ஒருவர் போஸ்ட் மோடம் ரிப்போர்ட் எப்போ வரும் என்றார். சார் இரண்டு நாட்கள் ஆகும்னு சொன்னார் மருத்துவர். அவர்கிட்ட சொல்லி கொஞ்சம் சீக்கிரம் முடிச்சு கொடுக்க சொல்லுங்க. இல்லைனா இன்ஸ் நம்மள திட்டுவார்யா. சரிங்க சார் என்றான் கான்ஸ்டபிள். அப்பறம் அந்தப்பொண்ணு கொலை செய்யப்பட்டு இருப்பாளா இல்லை கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருப்பாளா கான்ஸ் என்றார் சப் இன்ஸ்.

பார்த்தா பொண்ணு ரொம்ப அழகா தான் சார் இருக்கு அதனால கற்பழித்து தான் கொலை செய்யப்பட்டு இருப்பாள் சார் என்றான். நானும் அதே தான் நினைத்தேன் ஆனால் அவளுடைய உடையில் இருந்த சிவப்பு கலர் கறை ரத்தமா இல்ல பாக்கா என்று தெரியவில்லை. அத நாம கன்பார்ம் பண்ணனும்னு சொன்னான் சப் இன்ஸ். சார் அது பார்க்க பாக்கு வெற்றிலை மாதிரி தான் இருக்கு சார் என்றான் கான்ஸ். ஓகே இவனுக்கு குடி பழக்கம் தவற வேற எந்த பழக்கமும் இல்லை என்கிறான் சார் என்றான். எனக்கு என்னமோ இவன் பண்ணி இருப்பான் தோணல சார் என்றான்.

சரி அது நாம இப்போ முடிவு பண்ணக்கூடாது. சரிங்க சார் என்றான். வேற எதாவது அந்த இடத்துல கிடைச்சதா என்றான் சப் இன்ஸ். இல்லை சார் என்றான். சரி வாங்க மருத்துவமனைக்கு போவோம் என்றான். அவர்கள் இருவரும் மடுத்துவமனை நோக்கி தங்களது பயணத்தை தொடர்ந்தனர். சென்று மருத்துவரை அணுகினர். மருத்துவரை பார்த்தவுடனே சப் இன்ஸ் சார் வணக்கம் சார் என்றான். ஆன் சொல்லுங்க என்றான் சார் இது கொஞ்சம் சீரிஸ் ஆன கேஷ் பொண்ணு கொஞ்சம் தாழ்த்தப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர். உங்களுக்கே தெரியும் நாம டிலே பண்றது ரொம்ப ஆபத்து என்று சொல்ல.

அதுக்கு என்ன பண்ணமுடியும் இப்பவே கத்திய எடுத்து அறுத்துறவா என்றான். சார் அப்படி இல்ல பிரச்சனை பெரிசாகுறதுக்குள்ள முடிக்கணும் இல்லைனா என்றான். இல்லனா என்னப்பா பொறுங்க நாங்க ஒன்னும் சும்மா இல்ல. பாருங்க எவ்ளோ பேர் இருக்காங்கனு என்றார் திமிராக.

அவர் சொன்ன அடுத்த நிமிடம் பளார் என்று ஒரு சத்தம் கேட்டு எல்லாரும் திரும்பினார். தன் தம்பிக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்த அக்கா தனது க்ளாஸ்யை கீழே போட்டாள் பதறிப் போய். விழுந்த அடி வேறு யாருக்கும் இல்லை மருத்துவருக்கு தான் விழுந்தது.

அடித்தது வேறு யாருமில்லை நம்ம கான்ஸ் தம்பி தான். சப் கான்ஸ் கண் அசைக்க கான்ஸ் பளார் என்று அறைந்தார் மருத்துவரை. என்ன சார் இப்போ கொடுக்கலாமா என்றார் சப் இன்ஸ். நாளைக்கு காலையில வாங்க சார் தர்றேன் என்றார். நாளைக்கு காலை ஒன்பது மணிக்கு வருவான் இவன் கொடுக்கணும்னு சொல்லி விடை பெற்றனர்.

வெளியே வந்ததும் சார் ஏன் சார் இவ்ளோ அவசரப்படுறீங்க என்றான் கான்ஸ். கான்ஸ் இங்க ஜாதி மதக்கலவரம் நடந்த நாம்தான் பொறுப்பு. ஒரு சின்ன தீக்குச்சி காட்டை அழித்துவிடும்னு கேள்விப்பட்டது இல்லையா நீங்க. இங்க தாழ்த்தப்பட்டோருக்கு நிறைய அநீதி நடக்கு. அதேநேரம் அவங்களால அரசியலும் நடக்குது என்றான். கான்ஸ் ஏதும் பேசவில்லை. இருவரும் காவல் நிலையத்தை நோக்கிச்சென்று நடந்த விஷயங்களை இன்ஸிடம் சொல்லினர். அவரும் சப் இன்ஸை பார்த்து நீங்க பார்த்துக்கோங்க என்றார். சரிங்க அய்யா என்றான்.

மறுநாள் காலையில் மருத்துவமனைக்கு சென்ற கான்ஸிடம் ரிப்போர்ட் எல்லாம் ஒப்படைக்கப்பட்டது. ரிப்போர்ட் பார்த்த கான்ஸ் மற்றும் சப் இன்ஸ் அதிர்ந்து போயினர்.

ஆம் அவள் கற்பழிக்கப்பட்டால், அதுவும் போதை மருந்து கொடுத்து கற்பழிக்கப்பட்டு இருக்கிறாள் என்று அவர்களிடம் பரிசோதனை செய்த மருத்துவர் சொன்னார். இதை அறிந்த அவர்கள் அவள் உடையில் இருந்த கறையை பற்றி கேட்க அது பாக்கு கறையோ வெற்றிலையோ இல்லை. ரத்தம் தான் என்றார். அவர்கள் இருவரும் திகைத்து நின்றனர் சொல்வது கேட்பது ஏதும் அறியாமல். என்ன சொல்றிங்க உண்மையாவே அது ரத்தம் தான என்று இன்ஸ் கேட்டார். ஆமா சார் அது ரத்தம் தான் என்று மறுபடியும் சொல்ல அந்த ரத்தம் என்ன குரூப்னு கண்டு புடிச்சீங்களா என்றான் இன்ஸ் அந்த ரிப்போர்ட்ல தகவல் இருக்கு என்றார் மருத்துவர்.

அதை வாங்கிக்கொண்டு கிளம்பிய போலீசார் திகைத்து போய் நின்றனர். நாம நினைத்தது சரி இது கற்பழிப்பு தான். ஆனால் ரத்தம் எப்படி வந்தது என்று யோசனை செய்யலானார். யோசித்து கொண்டிருக்கும் போதே கான்ஸ் சொன்னான் சார் அப்போ நாம எதையோ மிஸ் பண்ணிருக்கோம் சார். ஆமா நாம மிஸ் பன்னிருக்கோம். இங்க அவள் கொலை செய்யப்பட்டது ஐந்து மணின்னு இருக்கு ஆனால் சோலையன் அவளை ஐந்தரை மணிக்கு பார்த்தேன் என்கிறான்.

எங்கயோ இடிக்குது என்றான் இன்ஸ். ஆமா சார் ஒருவேளை அவன் பொய் சொல்லுவானோ. இருக்கலாம் என்றான் இன்ஸ். ஆனால் கான்ஸ் பின்வருமாறு சொல்லலானான் சார் நான் நல்ல விசாரிச்சேன், அவன் அங்க இருந்து ஐந்தரை மணிக்கு தான் கெளம்புனான் என்று அக்கம் பக்கத்துல இருந்த எல்லாரும் சொன்னாங்க. சோ அவனே கொலை செஞ்சுட்டு போய் இருக்கலாமே என்றான்.

இல்லை கான்ஸ் அவன் கொலை செய்து இருந்தால் அவன் நான்கு மணிக்கு கிளம்புனேன் என்று மணியை மாற்றி சொல்லி இருக்கலாம் ஆனால் அவன் சொல்லும் நேரமும் நீங்க விசாரித்தவர் சொல்லும் நேரமும் ஒத்துபோகுது. அதனால இதை வேறு யாரோ செஞ்சு இருக்கணும் என்றார் இன்ஸ். அப்படியே இருக்கலாம் சார் என்று முடித்தான் கான்ஸ். சார் இப்போ நாம் என்ன சார் பண்ணனும்னு கேட்டான். வாங்க நாம ரெண்டு பெரும் அந்த பொண்ணு இறந்து கிடந்த இடத்துக்கு பொய் வேற ஏதாவது கிடக்குதான்னு பார்ப்போம் என்றான்.

இருவரும் அங்கே சென்று கழுகு பார்வையிலே அலசினர். அங்கும் இங்கும் சுற்றி தேடவே ஒன்றும் கிடைக்கவே இல்லை. குழப்பத்துடன் தனது மோட்டரை எடுத்து கிளப்பலாம் என்று வண்டியை எடுக்கவே ஏதோஒன்று உடைந்து தான் பூட்ஸ் காலில் குத்தி இருப்பதாய் உணர்ந்தான். என்னவென்று எடுத்து தூக்கி எறிந்தான் இன்ஸ். தூக்கி இருந்தவன் பின்னே உணர்ந்தான் ஏன் நாம் தேடிவந்தது இதுவாக இருக்க கூடாது என்று.

மறுபடியும் விழுந்த இடம் நோக்கி சென்று அந்த பீங்கானை எடுக்க அதன் மறுமுனையில் அவன் நினைத்தது போலே சிறு ரத்த கறை படிந்திருந்தது. ஆகா இங்கே நடந்து சென்றவர் ஆர் கொலை செய்தவர் காலில் இந்த பீங்கான் குத்தி இருக்கும் என்று எண்ணிக்கொண்டான். இப்படி பலவிதமான திருப்பங்கள் உண்டு என்னுடைய வெண்பாவில். சோலையன் உயிர் இல்லாதவனாக நினைவு இல்லாதவனாக இருக்கும் நிலையின் காரணம் உணர அறிய தொடர்ந்து வாசியுங்கள். நம்ம தளபதி விஜய் சொல்வது போலே சஸ்பென்ஸ் ஓடையே சாகுங்கள் என்று சொல்லமாட்டேன். சஸ்பென்ஸ் உடனே இருங்கள். அடுத்த வாரம் சந்திக்கிறேன்.


பூவிதழாக,
தமிழினியன்
 
Joined
Mar 24, 2018
Messages
25
Likes
41
Location
Bangalore
#13
வெண்பா
7. மருத்துவரும் கார்மேகமும்நம்மை நாம் எவ்வளவு தான் பாதுகாத்து கொண்டாலும் நம்மைச்சுற்றி இருக்கும் மிருகங்களின் பசி நம்மைக் கொல்லும் ஆயுதமாக இருக்கலாம். இல்லையென்றால் அவர்களின் பசியாக கூட நாமே இருக்கலாம். இதையேதும் எல்லா நேரங்களிலும் நம் மனம் உணர்வதில்லை. பசிக்காக உண்ணும் மிருகங்கள் ஏராளம். அப்படி பசிக்காக அரசி கற்பழிக்கப்பட்டாளா. இல்லை எதற்காக கற்பழிக்கப்பட்டாள். ஏன் சோலையன் மனநலம் பாதிக்கப்பட்டு தன்னிலை உணராமல் இருக்கிறார் என அறிந்துகொள்ள தொடர்ந்து வாசியுங்கள். வாழ்க்கையில் வாசிப்பு நம்மை மேன்மைப்படுத்தும் .சரி வாங்க கதைக்குள்ளே போவோம். பீங்கானை எடுத்துக்கொண்ட கான்ஸ்டபிளும் இன்ஸ்பெக்டரும் அந்த பீங்கானில் இருக்கும் ரத்த மாதிரியை உடனே கண்டுபுடிக்க வேண்டும் என்று அங்கிருந்து புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார். அங்கிருந்து கிளம்பிய அவர்கள் தங்களுக்குள்ளே பின்வருமாறு பேசிக்கொண்டனர். கான்ஸ்டபிள் நம்மகிட்ட இருக்கும் இரண்டு க்ளூ. ஒன்று அவள் ஆடையில் பட்டிருந்த ரத்த மாதிரி, இன்னொன்னு இந்த பீங்கானில் இருக்கும் ரத்தமாதிரி. இதுரெண்டும் ஒரே மாதிரியான ரத்த வகையாக இருந்தால் நமக்கு நல்லது. இல்லையென்றால் இந்த கேஷ் கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.ஆமா சார் இந்த ரத்தம் மனிதனோடதா இருக்கும் பட்சத்தில் சரி. இல்லையென்றால் மேலும் நமக்கு கஷ்டம் தான் எனச்சொல்லி கான்ஸ்டபிள் சிரித்தான். எவ்வளவு கஷ்டமா இருந்தா என்ன கான்ஸ்டபிள் நமக்கு இதுஒரு அனுபவம் தானே எனச்சொல்லி இன்ஸும் கூட சேர்ந்து சிரித்தார். ஆமாங்க சார். சரி வாங்க வேகமாக போவோம் இல்லையென்றால் அந்த மருத்துவர் இன்னொரு அடிவாங்க வேண்டியிருக்கும் என்று சொல்ல. கான்ஸ்டபிள் வண்டியை வேகப்படுத்தினார்.இருவரும் மருத்துவமனையை அடைந்தனர். உள்ளே பூட்ஸ் கால்களுடன் வேகமாக சத்தம் கேட்கவே அந்த டாக்டர் வெளியே வந்து நோக்கினார். அவரின் பார்வையில் போலீஸ் வருவது தெரிந்தவுடனே புன்னகையுடன் வாங்க சார் எண்ணவேண்டும். போலீசார் இருவரும் தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டனர். பார்த்திங்களா கான்ஸ்டபிள்! நேத்து கொடுத்த குடுப்பு எப்படி வேலை செய்து பார்த்தீங்களா எனச்சொல்ல. இருவரும் சிரித்துக்கொண்டே டாக்டர் அருகில் வர சரியாக இருந்தது. அவருக்கும் கொஞ்சம் காதில் விழுந்த மாதிரி அவரும் தனது முகத்தை கொஞ்சம் சரித்தார் சிரிப்பில் இருந்து.அருகில் சென்ற அவர்கள் டாக்டரிடம் தாங்கள் கொண்டுவந்த பீங்கான் அடங்கிய கவரை எடுத்துக்கொடுத்தனர்.அதை எடுத்து தூக்கிப் பார்த்தார் டாக்டர். ஏதும் சொல்லாமல் இருங்க சார் ஒரு முப்பது நிமிடங்களில் சோதனை செய்து ரிப்போர்ட் கொண்டுவந்து தருகிறேன் என்றுசொல்லி விடைபெற்றார்.இருவரும் ரிசப்ஷன்ல கொஞ்சம் நேரம் உட்கார்ந்து இருந்தனர். அந்த இடமே இருபது நிமிடங்கள் அமைதியாக கடந்து சென்றது எந்தவொரு சத்தமும் இல்லாமல். போலீஸ் உட்கார்ந்து இருந்தால் அனைவரும் பயம்கலந்து பேசாமல் தானே இருப்பார்கள். இந்த நாதரிப்பயலுக எதுக்கு இங்க வந்திருக்கோ என்று நினைத்து. இப்படியே அமைதியாக சென்றுகொண்டிருக்க இருவரும் கடிகாரத்தையே நோக்கிக் கொண்டிருந்தனர்.அமைதியாக இருந்த இடத்தில் டெலிபோன் ஒலிக்க அனைவரும் சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தனர். ரிசப்சனில் தான் ஒலிக்கிறது என்பதை உணர்ந்தனர். ரிசப்சனில் இருந்து நேரே போலீஷை நோக்கி வந்த அந்த பெண், சார் உங்களுக்கு தான் போன் வந்து இருக்கு என்றார். கான்ஸ்டபிள் யார் எனக்கேட்க? பேர் சொல்லவில்ல சார் . அப்படியா என்று கான்ஸ்டபிள் போய் வாங்கி பேச. இரண்டு நிமிடங்கள் பேசிய அவன் சப்-இன்ஸிடம் சார் அம்மா போன் பண்ணி இருக்காங்க.போய்ட்டு வந்துருறேன் எனச்சொல்லி கிளம்பினான்.கான்ஸ்டபிள் சென்ற இரண்டு நிமிடங்களில் டாக்டர் ரிபோர்ட்டோடு வந்துவிட்டார். அதை வாங்கிக்கொண்டு சப்-இன்ஸ் டாக்டரிடம் ரெண்டு ரத்த மாதிரியும் ஒத்துபோகுதா எனக்கேட்க. ஆமா சார் ரெண்டுமே ஒத்துபோகுது. அப்பறம் நீங்க நினைக்கிற மாதிரி இது ரெண்டுமே மனிதர்களோட ரத்தம் தான். சரி டாக்டர் உங்களோட டைம்லி உதவிக்கு நன்றி எனச்சொல்லி அடுத்து என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்து கொண்டே சென்றார்.அங்கிருந்து விடைபெற்ற அவன் குழப்பத்திலே சென்றான். யாரையும் நம்புவதில்லை என முடிவுஎடுத்து அவனே விசாரணையை துவங்கி தேடினான். தேடலில் கிடைக்காத விடை ஒன்று உள்ளதா என்ன.சோலையன் வேலை பார்த்த இடம் கொஞ்சம் அடர்ந்த காட்டுப்பகுதி அங்கிருந்து வெளியே வரவேண்டும் என்றால் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவு நடந்து வரவேண்டும். காரில் செல்பவர்களுக்கு ஒருவழியும், நடந்து செல்வோருக்கு ஒத்தையடி பாதையும் ஒன்று இருக்கும்.அவள் இறந்து கிடந்ததோ ஒத்தையடி பாதையிலே அதாவது நடந்து செல்வோர் பயணிக்கும் வழியில். ஆனாலும் அவள் ஒரு முட்புதரின் அருகிலேயே மறைத்து கிடத்தப்பட்டு கிடந்தாள். ஆக அவள் இறந்து கிடந்த போது யாராவது நடந்து சென்று இருக்கவேண்டும். அவர்களின் காலில் பீங்கான் குத்தி இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டான் சப்-இன்ஸ்.அவள் இறந்துகிடந்த இடத்தின் அருகே இருந்துகொண்டே சுற்றுமுற்றும் பார்த்தான் எதுவும் அவன் கண்களுக்கு புலப்படவில்லை. அங்கே இருந்து வெளியே வந்தான். குவாரிக்கு உள்ளே நுழையும் இடத்தில் சில கடைகள் இருந்தன. அதைப்பார்த்து வண்டியை நிறுத்தினான்.நேரா அங்கிருந்த டீ கடையை நோக்கி போனான். அவனை பார்த்த உடனே வாங்க சார் வாங்க உட்காருங்க என்றார் டீ கடை முதலாளி. இருக்கட்டும் பரவாயில்லை. இங்க யாரு சடையன். அந்தா அவரு தான் சார். அவன் சொல்ல சடையனும் அருகில் வந்து நின்றான் சாரத்தை கழட்டிவிட்டு மரியாதையுடன்.சார் சொல்லுங்க சார் என்றான் பணிவுடன். நீங்க தானே முதல போலீஸ்க்கு சொன்னது. ஆமா சார். நீங்க எங்க அங்க போனீங்க? இல்ல சார் டீ கிளாஸ் வாங்க போனேன் சார். எங்க போனீங்க. தருமர் இண்டஸ்ட்ரி இருக்கு சார் உள்ள அங்க தான் போனேன். அதுஎங்க இருக்கு. அந்த ஒத்தையடி பாதையில இருந்து வலதுபக்கம் போனா மீனா குவாரி. இடது பக்கம் போனா தர்மர் இண்டஸ்ட்ரி சார். எத்தனை மணி இருக்கும் நீங்க பார்த்தது? ஒரு ஆறுமணி இருக்கும் சார். சரி உங்கள்ல யாராவது பாத்தீங்களா, ஒரு மூன்று மணில இருந்து ஏழு மணிவரை யாரெல்லாம் உள்ள போனாங்க வந்தாங்கனு.சார் எப்பவுமே ரெண்டு மணில இருந்து ரெண்டரை மணிக்குள்ள மீனா குவாரி முதலாளி போவார் போனார் சார். அப்பறம் இங்க சாபிடவந்து போறவங்க போனாங்க சார். வேற யாராவது புதிதா போனாங்களா. அப்படி யாரும் போகல சார் என்றார்கள் அங்கிருந்த அனைவரும். சரி அந்தப்பொண்ணு கூட யாராவது வர்றது போறது பார்த்திருக்கீங்களா. அப்படி யாரும் அந்தப்பொண்ணு கூட வரமாட்டாங்க சார். ஆனா ரொம்ப நல்ல பொண்ணு சார் காது கேட்காது வாய் பேச வராது. ஓகோ! அதுவேறயா என பெரு மூச்சிவிட்டார் சப்-இன்ஸ்பெக்டர்.இதெல்லாம் கேட்டு முடித்துவிட்டு அங்கிருந்த இருவரை அழைத்துக்கொண்டு உள்ளேபோனார் மீனா மற்றும் தர்மர் இண்டஸ்ட்ரிக்கு. உள்ளேசென்ற அவர்கள் ஒருவரை அழைத்து, கூட்டத்தை கூட்டினர். ரெண்டு நாள் முன்னாடி நடந்த கொலைப்பற்றி சொல்லி. அன்று சாப்பிட சென்றவர்களை அழைத்தனர். அவர்களும் முன்னே வர, உங்க யாருக்காவது இந்த கொலைபற்றி தெரியுமா. எங்களுக்கு ஏதும் தெரியாது சார். ஆனா நாங்க சாப்பிட போகும்போது ரெண்டு மணி இருக்கும் மீனா குவாரி முதலாளி வந்தார் சார். அவரு மட்டும் தான இல்லை வேற யாரும் வந்தாங்களா. அவர் மட்டும் தான் சார்.வேரேதும் உங்களுக்கு தெரியுமா.இதைக்கேட்டு அவர் எத்தனை மணிக்கு வெளிய போனார்னு டீ கடை ஆட்களை கேட்க அவர் நாலு மணிக்கே போய்ட்டார். அவரு எப்படி என்றார். அவரு ரொம்ப நல்ல இறக்கப்பட்ட மனிதர் சார் எனச்சொல்ல. அங்கிருந்து வெளியே வந்து, மீனா க்ரானைட் நோக்கி சென்றனர்.மீனா குவாரி உள்ளே நுழைந்ததும் அங்கே இருந்த அனைவரும் இவர்களை நோக்கி வந்தனர். கூட்டத்தில் சோலையனும் இருந்தான். எல்லாரும் வந்த உடன் உங்களுக்கு அரசி கொலைப்பற்றி எதாவது தெரியுமா. எங்களுக்கு ஏதும் தெரியாது சார். நாங்க எல்லாரும் ஐந்து மணிக்கே கிளம்பி போய்ட்டோம். போகும்போது அந்த பொண்ணு அங்க இருந்து கணக்கு எழுதிட்டு இருந்தது என்றார்கள் அனைவரும். ஆனால் அவர் அறிந்தார் சோலையன் ஐந்தரை மணிக்கு கிளம்பினான் என்று.அப்போ நீங்க எல்லாரும் இங்க இருந்து ஐஞ்சரை மணிக்குள்ள கிளம்பிட்டிங்க. ஆமா சார் என்றார்கள் அனைவரும். அவர்களிடம் இருந்து வந்து மீனா க்ரானைட் முழுவதும் சுற்றி பார்த்த இன்ஸ் மனதில் சிந்தனை செய்தது என்னவென்றால்.நாலு மணிக்கே முதலாளி போய்ட்டார். இந்த கணக்கு எழுதுற அறைக்கு இரண்டுவழி இருக்கு. இந்த அறைக்கும் மக்கள் வேலை பார்க்கும் இடமும் ரொம்ப தள்ளி இருக்கு. சோ அந்த பொண்ண கற்பழித்து அங்க உட்கார வச்சு இருக்கலாம். நாலு மணிக்கு வெளியே போன முதலாளி இல்லை கொலையாளி திரும்ப பின்பக்கமா வந்து அவளை தூக்கி அந்த புதருக்கு உள்ளே போட்டு இருக்கணும். ஆனால் அவர்களின் கைரேகை ஏதும் இல்லை என நினைத்து கொண்டார் சப்-இன்ஸ். ஆனாலும் அவருக்கு சிறுகுழப்பம் அந்த ரத்த கறைகளை நினைத்து.அங்கிருந்து தனது மோட்டார் சைக்கிளில் வெளியே வந்து மெயின் சாலையில் திரும்ப முயன்றார். யாரோ தன்னை கூப்பிடுவதாக உணர்ந்து வண்டியை நிறுத்தினார். அவரை நோக்கி ஒரு மனிதன் வருகிறான்.யார் யார் அவன். அவன் டீ கடையில் வேலை பார்க்கும் சின்ன பையன். அவனைப்பார்த்து வண்டியை நிறுத்திய போலீஸ் பக்கத்தில சென்ற அவன். சார் நீங்க தான் அரசி கொலையை பற்றி விசாரிக்கிறீங்கனு அங்க சொன்னாங்க சார் அதான் வந்தேன். என்ன தம்பி சொல்லுங்க. இல்லை சார் அன்னைக்கு நான் ஒண்ணுக்கு இருக்க உள்ள போனேன்னா.அப்போ தான் சார் மீனா க்ரானைட் முதலாளி உள்ளே போனார். மணி ஒரு ரெண்டு மணி இருக்கும். அவர் போகும்போது பின் சீட்டுல ஒருத்தர் உட்காந்து இருந்தார். ஆனால் அவர் திரும்பி வரும்போது இல்லை சார் என்றான்.மனதுக்குள் தேடலுக்கு விடைகிடைத்த மகிழ்ச்சி அவனின் மனதில். சரி நீங்க எங்கிட்ட சொன்ன விஷயத்தை யார்கிட்டயும் சொல்ல வேண்டாம். சரிங்க சார் எனச்சொல்லி விடை பெற்றார்கள் அவர்கள் இருவரும் தன் வழியே. அவனிடம் இருந்து விடைபெற்ற இன்ஸ்பெக்டர் தனக்குள்ளே ரத்த மாதிரியை சேகரிக்க விரும்பினான். அதற்காக சோலையனையும் அவன் முதலாளியையும் வரச்சொல்லி இருந்தான் மருத்துவமனைக்கு.இருவரும் ஒரு ஏழுமணி இருக்கும்போது மருத்துவமனை வந்தனர். அவர்களின் ரத்த மாதிரி சேகரித்து ஆராய்ச்சி செய்யப்பட்டது. ரத்த மாதிரியை சேகரித்த உடனே அவர்களை அனுப்பிவிட்டார் சப்-இன்ஸ்பெக்டர். அவர்கள் விடைபெற்ற இருவது நிமிடம் கழித்து ரிப்போர்ட்யை வாங்கிய போலீஸ் அதிர்ந்து போய் நின்றார். ஆம் அவர்கள் சேகரித்து வைத்த ரத்த மாதிரி அனைத்தும் சோலையனுடையது. என்ன மக்களே அதிர்ந்துவிட்டீர்களா. எப்படி ரத்தக்கறை படிந்தது சோலையன் மேலும் இந்த கொலையிலும். மேலும் படியுங்கள் எனது வெண்பாவை.மீனா கிரானைட் முதலாளி பெயர் தாஸ்.அதிகமாக யாரும் முதலாளி அறைக்குள் செல்வது இல்லை. ரொம்ப நல்ல மனிதர். ஆனால் அவருடைய தொழில் வளர்ச்சிக்காக்க பாடுபட்டவர். அந்த தொழில் முடங்கும் நிலையில் வீழ்ந்தால். செய்யக்கூடாத வேலையை செய்து தானே ஆகவேண்டும். சோலையனின் மீதும் தாசின் மீதும் சந்தேகத்துடன் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் அடுத்து என்ன செய்வதென்று சிந்தனையில் தன் வீட்டை அடைந்தார். இரவு உணவை முடித்து உறங்க முயற்சித்தார்.தூக்கம் ஏதும் வராமல் துக்கமே அவர் விழிகளையும் தொண்டையையும் அடைத்தது அரசியை நினைத்து. ஒரு வாய் பேசத்தெரியாத காது கேட்காத பெண் எப்படியெப்படி உருகியிருப்பாள் தனக்கு நடந்த கொடுமையை எண்ணி என்று கோபமே அவன் மனதில் வந்தது.அதிகாலை நேரம் தாஸ் தனது வீட்டில் உணவருந்தி கொண்டிருந்தார். காலிங்பெல் சத்தம் இரண்டு மூன்று தடவை கேட்கவே "எந்த குரங்குனு தெரியலையே" என்று திட்டிக்கொண்டே கதவை திறக்க போனாள் அவனுடைய மனைவி. கதவை திறந்து யாருய்யா நீ எதுக்கு சும்மா அடிச்சுட்டே இருக்க பொறுமையா வெயிட் பண்ணமாட்டயா. கான்ஸ்டபிள் உர்ரென்ற மூஞ்சியுடனே "தாஸ் இல்லையா". நீங்க யாரு.கான்ஸ்டபிள் கீழே குனிந்து தனது சூவை சரிசெய்தார். அதைப்பார்த்த உடனே தாஸ் மனைவி "என்ன வேணும் சார்? அவர் உள்ளே சாப்டுட்டு இருக்கார். கொஞ்சம் உட்காருங்க எனச்சொல்லி உள்ளே சென்றாள். யாருடி என தாஸ் கேட்க போலீஸ் வந்திருக்கார்ங்க. என்னது போலீசா எனக்கேட்டு தாஸ் முகம் பயத்துடன் மாறியது. உடனே கை கழுவிவிட்டு எழுந்துசென்றான் ஹால்யை நோக்கி. அவன் வருவதைகண்ட இன்ஸ்பெக்டர் உட்காருங்க தாஸ்.

என்ன சார் வேணும் உங்களுக்கு. நீங்க வேணாம் உங்க பொண்டாட்டி வேணும்னு சொன்னா குடுக்கப் போறீங்களா என்ன என கிண்டலுடன் கேட்க. தாஸின் முகம் நெருப்பில் வெந்த கோழிபோல் அவனையே வெறித்து பார்த்தது.

இங்கவச்சு பேசலாமா இல்ல வெளிய போகலாமா எனகேட்டுக்கொண்டே வெளியே நடந்தான் இன்ஸ்பெக்டர். பின்னையே தாஸும் நடந்து சென்றான்.சரிங்க தாஸ் நேராவே கேட்குறேன் உங்களுக்கு அரசி கொலைப்பற்றி எண்ணத்தெரியும். நீங்க தான் அந்த நேரத்துல யார் கூடையோ வந்துட்டு தனியா போனீங்கன்னு கேள்வி பட்டேன். யார் அந்த மனிதர். உங்களுக்கும் அந்த மனிதனுக்கும் என்ன சம்மந்தம். பேந்த பேந்த முழித்த தாஸையே கோபக் கனலுடன் இரு நிமிடங்கள் பார்த்துக்கொண்டு கான்ஸ்டபிள் இருக்க. எனக்கு ஏதும் தெரியாதுங்க சார், அந்தப்பொண்ணு ரொம்ப நல்லப்பொண்ணு. பாவம் பொழைப்புக்கே வழியில்லைனு சொல்லி வேலை கொடுத்தேன்.பொழப்புக்கு வழியில்லன்னு கொடுத்து நீங்களே அனுபவித்து தூக்கி எறிந்துவிட்டிங்க. இப்படி நீங்க சொன்னா பச்சபுள்ளன்னு சொல்லி போங்கன்னு சொல்லிருவேனோ. சார் எனக்கேதும் தெரியாது. நீங்க சொல்ற மாதிரி யாரும் என் க்ரானைட் உள்ள வரல. அய்யோ தாஸ் உங்கள பார்த்தவுடனே பட்டுனு சுடக்கூடாதுனு சொல்லித்தான் துப்பாக்கியை எடுக்காம வந்து இருக்கேன் எனச்சொல்லி ஒரு அறைகொடுக்க அவன் மயங்கி கீழே விழுந்தான்.விழுந்தவன் எழுந்து சார் உண்மையிலேயே எனக்கு ஒன்னும் தெரியாது. அந்த பொண்ணு இறந்தது எனக்கே அதிர்ச்சியா தான் இருந்தது. அப்போ உன்கூட வந்த நபர் யாரு. அவரு கவர்ன்மெண்ட் ஆபீசர் வேல். அவரு எதுக்கு வந்தார். என் க்ரானைட்ல எந்தவொரு பாதுகாப்பும் இல்லைனு சொல்லி சீல் வைக்க வந்தார். வந்தப்ப இதுதான் நடந்தது.எனக்கு நோட்டீஸ் வந்தது சார் பாதுகாப்பு இல்லைனு சொல்லி. கொலைநடந்த அன்று விசிட் செய்த அரசு அதிகாரியை அழைத்து வந்து பேசிக்கொண்டு இருந்தேன். அவருக்காகவே உயர்தர மது வாங்கிவைத்து ரெண்டு பேரும் சாப்டுட்டு இருந்தோம். நாங்க அங்கயிருந்த நேரம் எல்லாரும் சாப்பிட போய்ட்டாங்க. ஆனா அரசி பொண்ணு மட்டும் கணக்கு எழுதிட்டு இருந்துச்சு. எனக்கு அந்தநேரம் பார்த்து போன் வந்துருச்சு. நான் பேச வெளியே வந்துட்டேன். முப்பது நிமிடம் பேசிட்டு உள்ளே போகும்போது வேலோட பார்வை பூரா அந்த பொண்ணு மேலயே இருந்துச்சு.

நான் தான் உடனே அந்த பொண்ண சைகையால சாப்பிட போகச்சொன்னேன்.

அவளும் என்னோட சொல்லக்கேட்டு அவளோட கூடையை எடுத்திட்டு சென்றுவிட்டாள். அவள் சென்றவுடன் நான் வேலுகிட்ட என்ன சார் அந்த பொண்ண இந்தப்பார்வை பாக்குறீங்க. ரொம்ப மூடா இருக்குயா. இவ்வளவு அழகான மல்லிகைப்பூவை பக்கத்துல வைத்துக்கொண்டு எப்படியா சும்மா இருக்க.பாவம் சார் அந்தப்பொண்ணு வாய்பேச தெரியாது காதும் கேட்காது. எப்பிடி இருந்தா என்னய்யா? இதுக எல்லாம் நமக்கு நாய் மாதிரிதானே! தேவைப்பட்டால் அடித்து சாப்பிடணும்.

அப்படி எல்லாம் இல்லை சார் ரொம்ப நல்லபொண்ணு. யோவ் ரெண்டு நாள் டைம் தர்றேன் யோசித்து சொல்லு எனச்சொல்லி அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதுதான் சார் நடந்தது.

போனவரை நீ பார்க்கவே இல்லையா, பார்த்தேன் சார். அவருக்கு வேற ஒரு பொண்ண ஏற்பாடு பண்ணிகொடுத்து ரூமும் போட்டுக்கொடுத்தேன். இதுதான் உண்மைனு நான் எப்படி நம்ப? இந்தாங்க சார் ஹோட்டல் ரூம் புக் பண்ண பில், அப்பறம் அந்த பொண்ணோட போன் நம்பர் மற்றும் முகவரி எனக்கொடுத்தான் தாஸ். வாங்கிக்கொண்ட இன்ஸ்பெக்டர் அங்கிருந்து விடைபெற்றான்.
நாம் தோற்று விட்டோமோ என்ற ஏக்கத்துடன் கீழே கிடந்த வாளியை ஒரு எத்து எத்தினான், அது பறந்து போய் விழுந்தது.

அடுத்ததாக சோலையனை சந்திக்க கிரானைட் சென்றான் இன்ஸ்பெக்டர். அங்கு அவன் வருவதை கண்ட அனைவரும் கூடிவிட்டனர். சோலையனை மட்டும் இருக்கச்சொல்லி அனைவரையும் போகச் சொல்லிவிட. சோலையன் உங்களோட ரத்தக்கறை தான் எங்களுக்கு ஆதாரமா இருக்கு. நீங்க தான் குற்றவாளியாக எங்களால் முன்னிறுத்தப்படுவீங்க. உங்களோட ரத்தக்கறை தான் அரசி இறந்துகிடந்த இடத்துல இருந்தது. எப்படி உங்க ரத்தம் அங்க படிந்தது.


சார் நான் அந்த ஒத்தையடி பாதையில நடந்து போனப்போ என் கால்ல பீங்கான் குத்தியது எனக்காட்ட. இங்கும் ஏமாற்றமே மிஞ்சியது எனநினைத்து சுற்றினான் க்ரானைட் மற்றும் இண்டஸ்ட்ரியை சுற்றி.

சுற்றி அலைந்தவன் கண்ணில் சாமிக்கு அணிந்த பூமாலை ஒன்று கண்ணில் பட்டது. அதைக்கண்டவன் வெளியேவந்து டீக்கடையில் விசாரிக்க அவர்கள் ஏதும் தெரிவில்லை எனச்சொல்ல. ஒருமனிதர் மட்டும் சார் அங்க வந்து வருடம் ஒருமுறை வைகாசி மாதம் ஒரு குடும்பம்வந்து சாமீ கும்புடுவாங்க என்றான். வேற எதாவது விவரம் தெரியுமா எங்கயிருந்து வருவாங்க என்னஏதுனு. இல்லை தெரியாது சார் ஆனா நல்ல வசதியான குடும்பம். இந்த வழிய போகமாட்டாங்களா. இல்ல சார் அந்தப்பக்கம் வேறுஒரு வழியிருக்கு.

அதாவது மக்களுக்கு சொல்வது என்னவென்றால் ஓருமலை வலதுபக்கம் தர்மர் இண்டஸ்ட்ரி இடது பக்கமா மீனா க்ரானைட் இருக்கு. பின்னால போன குப்பம் வர போக வழிஇருக்குனு சொல்ராங்க சார். முன்னாடி வந்தா இப்போ இருக்கும் நேஷனல் ஹைவேய் இருக்கு.

கொலை நடந்தன்று நடந்தது என்னவென்றால். தாஸ் அங்கிருந்து கிளம்பவே. கணக்கு எழுதிக்கொண்டிருந்த அரசி சிறுநீர் கழிக்க எழுந்து சென்றாள். அவள் அங்கே இருந்து கொண்டிருப்பது அவளுக்கு நேரெதிரே செடிகளுக்கு பின்னே மது அருந்தி கொண்டிருப்போர் ஒருவரின் கண்ணில்பட. அவன் மற்றவர்களை கண்ணசைக்க. அவர்களில் ஒருவன் எழுந்து பாம்புபோல வந்து படமெடுத்து நின்றான் அவள் பின்னே.

சிறுநீர்கழித்து முடித்தவுடனே அவன் அவளின் வாயை பொத்த மற்றவர்கள் அனைவரும் சேர்ந்து அவளை தூக்கிவிட்டு சென்றுவிட்டனர். அதிலே இருவர் அவளின் கால்களையும் இருவர் கைகளையும் புடிக்க ஒருவன் அவளின் வாயில் மதுவை ஊற்ற. சிறிது நிமிடம் கழித்து அனைவரும் அவளை பருகினர். பருகிய அவர்கள் அவளை தூக்கிக்கொண்டு அவள் அரையிலே உட்கார வைத்தனர். அனைவரும் சென்றதை அறியும் வரை அங்கேயே இருந்தனர். சென்றுவிட்டார்கள் என நினைத்து அவளை புதரில் மறைக்கவே! ஒருவன் நடந்து வருவதை உணர்ந்து அதில் ஒருவன் தனது கையில் இருந்த பாட்டிலை உடைத்து போட்டான்.

அந்த பாட்டிலே சோலையனின் கால்களில் ஏந்தியது. வேறுவழி இருக்கு என்று டீகடை நபர்கள் சொன்ன உடனையே இதை சோலையன் செய்யவில்லை எனமுடிவு செய்தான் இன்ஸ்பெக்டர். ஆனாலும் அவனுக்கு எப்படி அவளுடைய உடையில் சோலையனின் ரத்தம்பட்டது என சந்தேகம் ஏற்பட்டது. அதை தீர்த்துக்கொள்ள மருத்துவமனைக்கு சென்றான்.அவன் வருவதைக்கண்டு டாக்டர் வேகமாக உள்ளே சென்றார். இன்ஸ்பெக்டர் ஏதும் காணாது போல் உள்ளே செல்ல.

பதற்றத்துடன் காணப்பட்ட டாக்டர் கொஞ்சம் கம்பிரமான குரலில் சொல்லுங்க சார். இல்ல சார் இந்த பூமாலைய யாருக்கு போடனு தெரியல, அதான் வந்தேன் என வலதுபக்கம் பார்த்துக்கொண்டே சொல்ல. உள்ளே இருந்த அறையிலிருந்து ஒருவர் வெளியே செல்வது போலே இருக்க வேகமாக எழுந்து ஓடினான் இன்ஸ்பெக்டர். இருந்தும் அவனை புடிக்க முடியவில்லை. ஒருஇடத்தில் நின்ற இன்ஸ்பெக்டர் பின்னே யாரோ வருவதுபோலே கையை நீட்ட அது சோலையன் என உணர்ந்தான்.

இருவரும் சென்று கொண்டிருந்த வேளையில் பின்னே வேகமாக வந்த அம்பாசிடர் கார் இடித்து கீழே விழ. கான்ஸ்டபிள் வண்டியை விட்டுகீழே இறங்க. கார்மேகம் நீயா. நானே! மருத்துவரும் நானும் நண்பர்கள் எனச்சொல்லி கான்ஸ்டபிள் சப்-இன்ஸ்பெக்டரிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து அவனையே சுட்டான். கீழே விழுந்த வேகத்தில் தூர விழுந்த சோலையன் கையில் துப்பாக்கியை வைத்துவிட்டு சென்றுவிட்டான். அன்றிலிருந்து இன்றுவரை சோலையன் தன்னை அறியாமலே சுற்றிவர அவன் மனைவி முருகனுடன் உலகம் சுற்றி வருகிறாள்.

இதைக்கேட்டு கொண்டிருந்த நம்ம ஹீரோ அந்த பெரியவரை உற்று சொல்வதேதும் அறியாமல் விழிபிதுங்கி நின்றான். அவர் மேலும் சொன்னார் இவ்வளவு தான் தம்பி வாழ்க்கை மோகத்தை மாலையாக அணிந்து காமத்தோடு வழிதேடி பறந்துவிடுகிறார்கள் மக்கள் சோலையனின் மனைவி ராஜாத்தி மாதிரி.பூவிதழாக,

தமிழினியன்
 
Joined
Mar 24, 2018
Messages
25
Likes
41
Location
Bangalore
#14
வெண்பா
8. வண்ணான் மலைசோலையன் மற்றும் அரசியின் வாழ்க்கையைப் போலே இந்த சமுதாயத்தில் பலரின் வாழ்க்கை இப்படித்தான் உள்ளது. எப்போது எங்கே வழிமாறிச் செல்கிறது என்று எவரும் நடக்கும் வரை அறிவது இல்லை. சிலருக்கு வாழ்க்கை என்பது அனுபவம் என்று நினைத்து ஓடுகின்றனர். சிலருக்கு அது நரகம் ஏன் பிறந்தோம் என்று ஏங்கி வாடி நிற்கின்றனர். பலரின் மனதிற்குள்ளும் ஏன் பிறந்தோம் என்ற நினைப்பும் ஏன் வாழ்கிறோம் என்ற ஆதங்கமும் இருக்கும். ஆனாலும் ஏதோவொரு நம்பிக்கையில் கண்மூடி உறங்கி கனவிலே வாழ்கிறோம். தொடர்ந்து வாசியுங்கள் மனிதனுக்குள் மிருகம் புகுந்து அந்த மிருகம் மனிதனாக மாறியதா இல்லை மிருகமாகவே வீழ்ந்ததா என்று அறிந்துகொள்ள.

சோலையன் மற்றும் அரசியின் நிகழ்வை சொல்லிமுடித்த முந்தைய அத்தியாயத்தின் போது ரயில் அனேகல் தாண்டி சென்றுகொண்டிருந்தது. கதை மாந்தர்கள் இருவரும் இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது எமன் ஒருவன் குறுக்கிட்டான் என்று தான் சொல்லுவேன். என்னடா இது எமன் யார் என்று யோசிப்போருக்கு நான் சொல்வது என்னவென்றால், இன்பத்தை அழித்து இதயத்தில் அடிக்கும் மணியாக நாம் உணர்வது இன்றைய தொலைபேசி தானுங்கோ எமன். தொலைபேசி ஒலிக்கவே சத்தம் ஏதும் கேட்காமல் தன்னை மறந்து இருந்தான் அவன். யார் நினைப்பில் இருந்தானோ? யார் அவன் இதயத்தில் குடிகொண்டு மலர்ந்த மொட்டு என்று அவன் அறியவில்லை. ஆனாலும் அவனுடைய மனம் கனமாகவே இருந்தது.

இதை உணர்ந்த அந்த பெரியவர் தம்பி என அழைத்து "உங்கள் போன் அடிக்குது" என அவனிடம் கூற எடுத்து அட்டென்ட் பண்ணினான் மனதில் ஏதோ சிந்தனையுடன் இருந்தவன். உலருபவன் போலே யாரு என்றான். டே மச்சான் நான் தான்டா தினேஷ். ஆன் சொல்லு மச்சான். டேய் நான் இப்போ நீ சொன்ன ஹோட்டல் பக்கத்துல தான் இருக்கேன். ஆன் அப்படியா. இரு மச்சான் ஒரு ஐந்து நிமிடத்தில் கூப்பிடுறேன். சரி சீக்கிரம் கூப்பிடு என்று சொல்லி இருவரும் போன் கட்செய்தனர்.

சார் என் பிரண்ட் தான் கால் பண்ணான். நீங்க எங்க சாப்பிடுவீங்க. நான் சேலம்ல எதாவது வாங்கி சாப்பிடுவேன் தம்பி. சரி சார் ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல சாப்பாடு நல்லா இருக்கும் உங்களுக்கு என்னவேணும் சொல்லுங்க. நான் வாங்கிட்டு வரச்சொல்றேன். இல்லை தம்பி உங்களுக்கு எதுக்கு சிரமம். இதுல என்ன சார் இருக்கு என்று சொல்லிக்கொண்டே நண்பனுக்கு கால் பண்ணான் மச்சான் ஒரு கொத்து பரோட்டா வாங்கிக்கோ, ஐந்து இட்லி அப்பறம் வாழைப்பழம் வாங்கிட்டு வாடா. சரிடா எந்த கோச்? S5. சரி நான் வாங்கிட்டு வந்துடுறேன் எனச்சொல்லி போனை கட் பண்ணினான். என்னத்தம்பி இப்படித்தான் யாருக்காவது வேலை கொடுத்துட்டே இருப்பிங்களோ. இல்லை சார் எனக்கு சாப்டுட்டே பயணம் பண்றது ரொம்ப புடிக்கும். அப்படியா எனச்சொல்லி இருவரும் இயற்கையின் அழகை ரசித்துக்கொண்டு சென்றனர்.

இயற்கையின் அழகை சொல்லவேண்டும் என்றால் பெங்களூரில் இருந்து ஓசூர் அடையும்வரை தான் இயற்க்கையின் அழகை ரசிக்கமுடியும். அதற்குப்பின் இருட்டிவிடும். பெங்களூரில் இருந்து ஓசூர் அடையும்வரை ஆங்காங்கே மலர்கள் பயிரிடப்பட்டு இருக்கும். நடுநடுவே யூகலிப்டஸ் மரமும் வளர்ந்து வாசனை வீசும். கனமான இதயம் கூட மென்மையாக இதழுக்கு இதம் தரும் பெங்களூரின் அழகை ரசிக்க. அதிகமா பெங்களூரில் பயணம் என்றாலே மேலிருந்து இறங்குவது போலும் கீழிருந்து மேலே ஏறுவது போலும் இருக்கும். அப்படியென்றால் மலையேறும் அனுபவம் போலேதான் இருக்கும். இங்கே அதிகமா செம்மண் தான் ஆர்கானிக் பார்மிங் பண்ணுவாங்க கொட்டகை அமைத்து. சிலர் பூத்தோட்டம் மாதிரி அமைத்து பூ வளர்ப்பாங்க. பார்க்கவே அழகாக இருக்கும் ரயில் கடந்து செல்லும்போது. ஏனென்றால் குறுகிய பாதைதான் ஓசூர் வரை. அதனால் ரயிலின் உள்ளேயிருந்து பார்க்க அழகாக இருக்கும் இயற்கை.

இப்படியே அவர்கள் இயற்கையின் அழகை ரசிக்கொண்டேவர அவர்கள் இருவரிடமும் மௌனமே குடிகொண்டது. மௌனம் குடிகொண்டால் சொல்லவா வேண்டும். சிலநேரங்களில் மௌனம் நம்மை காக்கும் சிலநேரங்களில் மௌனம் நம்மை கொள்ளும். ஏனென்றால் பலரின் வாழ்க்கையில் பலவிதமான நினைவுகள் மௌனமாகே உறங்கிக்கொண்டு இருக்கும். அப்படியே இவர்கள் இருவரின் மனதிலும் துன்பங்களும் காதலும் அன்பும் ஆழமாக உறங்கிக்கொண்டு இருக்கிறது மௌனத்தில் பேரில். தற்போது ரயிலும் ஓசூரை அடைந்தது. நண்பனிடம் பார்சல் வாங்கிவிட்டு நன்றிசொல்லி விடைபெற்றான்.

அதேநேரத்தில் வண்டியும் தர்மபுரியை நோக்கி நகரத்தொடங்கியது. அவனும் ஏறித்தனது இருக்கையில் அமர்ந்தான்.

ஓசூரில் அதிகமான மக்கள் ஏறுவர், ஏனென்றால் இந்த எலக்ட்ரானிக் சிட்டி சில்க் போர்டு வரை இருக்கும் கம்பெனியில் வேலை செய்வோர் இங்கயே வந்து ஏறுவர். அப்படி ஏதேனும் பெண்வந்து உட்கார மாட்டார்களா என்ற ஏக்கத்திலே உட்கார்ந்து இருந்தான். S5 கோச் வழியே புகுந்து பலர் சென்றனர். ஆனால் எவரும் அவர்களுடைய கம்பார்ட்மெண்ட்யை சட்டை செய்யவே இல்லை. கடையை சாத்தும் நேரத்தில் ஒரு ஐம்பது வயதிருக்கும் பருவப்பெண் ஒருவர் வந்து அங்கே நின்று தம்பி S5 - 45 இங்க தானே. ஆமாங்க மேடம் இங்க தான் எனச்சொல்ல அந்த பருவப்பெண் அங்கே அமர்ந்தார். பருவப்பெண் எனச்சொல்ல காரணம் இருக்குங்கோ. இப்படியே அமைதியாக சென்றுகொண்டிருந்த பயணத்தில் ரயிலின் கூ கூ சத்தம் கேட்டுக்கொண்டும், புதிதாக ஏறிய பயணிகள் தங்களது இருக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். டாய்லெட் செல்வோர் சென்று கொண்டிருந்தனர்.

அவன் அவரிடம் தன் மனதில் இருந்த அடுத்த கணையை எறிந்தான். சார் நீங்க நான் கேட்ட கேள்விக்கு பதில் இன்னும் சொல்லவே இல்லை. என்னகேள்வி கேட்டிங்க நான் என்ன பதில் சொல்லலை உங்களுக்கு எனச் சிரித்துக்கொண்டே கேட்க. என்கிட்டே ஏன் இப்டி என் மனம் பிளிரும்படி பேசுனீங்க. அதான் சொன்னனே என் வழக்கமே புடிச்சவங்க கிட்ட பேசுறது தான். புடிச்சா பேசுவேன். இன்னைக்கு நீங்க ரயிலுக்கு காத்திருந்திங்களே நியாபகம் இருக்கா. இருக்கு சார் இன்றைய நாள நான் மறக்கவே முடியாது. இன்னைக்கு மஜெஸ்டிக்ல ட்ரெயின் லேட்டா தான் எடுத்துக்கொண்டு வந்து போட்டாங்க. ஆனா நீங்க ட்ரெயின் போயிருச்சோனு நினைத்து தலையில கைவைத்து இருந்திங்க இந்த ட்ரெயின் தான் நீங்க போகவேண்டியது என்பத மறந்து. ஆனாலும் எதையோ பார்த்துக் கொண்டிருந்திங்க. நீங்க பார்த்தது என்னவென்று நானும் உங்கள் முகத்தை உணர்ந்து பார்க்க ஏங்கிக்கொண்டிருந்தேன். பின்னையே தெரிந்தது உங்களின் இரக்ககுணம். அந்தப்பையன் கிட்ட நீங்க பேசிமுடித்த உடனே உங்கள் முகத்தில் ஒரு சந்தோசம் மகிழ்ச்சி ஒளியாக வீசியது. அந்த ஒளியே என்ன உங்ககிட்ட பேசவைத்தது. இதைக்கேட்டு அவன் அப்படியே அவரின் விழிகளையே பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான். எவ்வளவு ஆழமான கண்ணோட்டம் உள்ள மனிதர் என்று. அவன் பெயர் மதீ சார். தந்தி விற்கும் பையன். அவனிடம் பேசியதால் தான் உங்களிடம் அன்புடன் முகத்தில் கோபம் புறக்கணிப்பு இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறேன். தெரியும் தம்பி பார்த்தேன்.
உங்களின் வாழ்க்கையிலும் காயங்கள் ஆழமாக இருக்கும் போலயே. ஆமாம் தம்பி என்மனதிலும் காயங்கள் வடுக்கள் ஏக்கங்கள் ஏமாற்றங்கள் ஏமாற்றுக்கள் பரிதவிப்பு சோகங்கள் சோதனைகள் இதயத்தில் கண்ணீராக இன்னும் வடிந்து கொண்டிருக்கு. ஆனாலும் அதை எல்லாம் தவிர்த்து சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் உங்களமாதிரி சிலரிடம் பேசி மகிழ்ந்து.
இவ்வளவு அதிகமாக பேசும்போதே தெரியும் உங்களிடம் கற்பனைகள் கடந்த கண்ணீர் கணமாக குடிகொண்டிருக்கும் என்று. ஆமாம் தம்பி உண்மையே. அதிகமா பேசுவோர் அதிகமான சுமைகளையும் சேர்த்து தானே சுமக்க வேண்டிருக்கு. முன்ன எல்லாம் நான் இவ்வளவு அதிகமாக பேசமாட்டேன் தம்பி.
ஆனால் காலமும் மனிதர்களும் என்னை மாற்றிவிட்டனர். ஏன் என்னுடன் பிறந்தோர் என்னைப் பெற்றோர் கூட. இப்படி அவர் சொன்னவுடனே அவன் மனதில் என்னடா இந்த மனிதர் இப்படி தன் பெற்றோரை இப்படி சொல்கிறாரே என்று அவன் சிந்திப்பது போலே நீங்களும் சிந்திப்பீர்கள் என்றால் தொடர்ந்து வாசியுங்கள் வெண்பாவை.

நான் இப்போ இருக்குறது எல்லாம் மதுரையில தான் தம்பி. ஆனா நான் பொறந்து வளர்ந்தது எல்லாமே கீழக்கரை டூ ஏர்வாடி நடுல ஒரு சின்ன கிராமம். எங்க அப்பா பேரு மலையாண்டி அம்மா பேரு பரிமளம். அவங்களோட கலியாணம் முடிஞ்சு இரண்டு வருடம் கழிச்சு தான் நான் பொறந்தேன். என்ன வளர்த்தது எல்லாமே எங்க அப்பம்மா தான். அப்படினா. எங்க ஊருல அப்பாவோட அம்மாவ அப்பம்மானு சொல்லுவோம் அம்மம்மானா அம்மாவோட அம்மா.

எங்கப்பா ஒரு வண்ணான். ஒரு வயல் கூட ஒரு தோப்பு குத்தகைக்கு எடுத்து பொழப்பு நடத்திட்டு இருந்தோம். ரெண்டுமே எங்களோட தொழில். எங்கப்பா ரொம்ப நல்ல மனிதர் ஒரு சின்ன விஷயம் நடக்கும் முன்னாடி வர. ஆனா அதுக்கப்பறம் தான் எனக்கு தெரிஞ்சது அவர் ரொம்ப கேவலமான மனிதர் என்று. அவராலே நானும் என் மனம் மாறி வீழ்ந்து போனேன் என்று சொல்லலாம் சிறுவயதிலே.

எங்கப்பா ஒரு வண்ணான் என்றாலும் ரொம்பவே அழகாக இருப்பார். அந்த அழகை பார்த்தே எங்கம்மா பரிமளம் அவர கலியாணம் பண்ணினார்னு அடிக்கடி சொல்லுவாங்க.
தினந்தோறும் அவர் ஒருபக்கம் கீழக்கரை வரையும் மறுபக்கம் ஏர்வாடி வரையும் சென்று துணியெடுத்து வந்து சலவை செய்து கொடுப்பார். அந்த சலவைத்தொழிலில் வரும் பணத்தை வைத்து விவசாயம் செய்வார்.

கொஞ்சமா வருமானம் வந்தாலும் சந்தோசமா தான் வாழ்ந்தார். ஆனாலும் கல்லு குடிப்பார். குடித்துவிட்டால் எங்கம்மாவை வாடிவாடி என்று இழுத்துப்போட்டு அடிப்பார். எங்கம்மாவை அவரு அன்பாக எல்லாம் பண்ணுனார் என்று என்னால ஒருபோதும் சொல்லமுடியாது சொல்லவும் மாட்டேன்.

என்னையும் நான் உண்மையான அன்புக்கு பொறந்ததா என்னைக்குமே நெனச்சது இல்லை. ஏன்னா எங்கப்பா பண்ணின விஷயங்கள் அப்படி. தாம்பத்தியம் கூடல் உறவு எல்லாமே அன்பால நடக்கணும். ஆனால் எங்கப்பா குடித்துவிட்டு தான் எல்லாமே. அப்போ எல்லாம் எங்க ஊர்ப்பக்கம் கல்லு ரொம்ப சுலபமாக கிடைக்கும்.
முக்குக்கு முக்கு கல் இறக்குவாங்க. கொஞ்ச நேரத்திலயே காலி ஆகிடும்.

கடற்கரை ஏரியா வேறயா நிறைய தென்னை மரம், பனைமரம் இருக்கும். நல்ல வசதியானவங்க என்ன பன்னுவாங்கனா எல்லாத்தையும் குத்தகை மாதிரி பாதுகாக்க யார்ட்டயாவது கொடுத்துடுவாங்க. அவங்களுக்கு மாசம் மாசம் கிடைக்கிற காசுல பாதி கொடுக்கனும். எங்கப்பன் பாதுகாப்பது போக சலவைத்தொழிலும் செய்து வந்தார்.
விளைச்சல் நேரத்துல பயிர் செய்வோம். மத்த நேரத்துல எல்லாம் சலவைத்தொழில் தான்.


கீழக்கரை ஏர்வாடி பக்கம் எல்லாம் முஸ்லிம் தான் அதிகம். அவங்க கிட்டதான் நாங்க நிலம் குடி இருப்போம். விவசாயம் பண்ணுவோம்.

எங்கப்பா சலவைக்கு எடுக்க போறது எல்லாம் பல வருச பழக்கம் நிறைய பேரு. அதுலயும் முஸ்லிம் மக்கள் பெரும்பாலும் அந்த காலத்துல சலவை செய்துதான் உடுப்பு போடுவாங்க.ஒருநாள் எங்கப்பா கீழக்கரையில இருந்து உடுப்பு எடுத்து வந்திட்டு இருக்க. மழை மேகமா இருந்திருக்கு உடனே கழுதைய வேகமாக பத்திட்டு வந்திருக்கார். வருண பகவான் லேசா எட்டிப்பார்க்க இவரும் வேகமாகவே வந்திருக்கார்.

இவரு வேகத்தவிட அதிகமான வேகத்தில வருண பகவான் மண்ணில் விழ தொப தொபனு நனைஞ்சு விட்டார். சரி இனிமே நனைஞ்ச ஜூரம் வந்துரும்னு ஒருதோட்டத்து வாசலில் உள்ள படிக்கு கீழ மழை தம்மேல விழாமல் நின்னிட்டு இருந்திருக்கார். அஞ்சு பத்து நிமிசம் கழிச்சும் மழை நின்னபாடில்லை. கொஞ்சநேரம் போக போக அப்படியே கால் விரிச்சு படுத்தமாதிரி உட்கார்ந்து இருக்க. யாரோ விறுவிறுனு வேகமாக வந்து நின்னு இருக்காங்க.

நின்னு இருந்த ஆள் சுத்திமுத்தி பாத்துட்டு கழுதை ஓரமா கட்டப்பட்டு இருக்க. ஆள் யாரும் இருக்காங்க போலயேனு நினைச்சுட்டே மழையில தொப தொப நனைந்த படியே நிக்க. கீழே உட்கார்ந்து இருந்தவன் எழுந்து வெளியை வந்து இருக்கான். வெளியே மழையில நனைந்தபடி இருக்கறது ஒரு பொண்ணு தான்னு உணர்ந்தவர் பேச ஆரம்பித்துவிட்டார். யாருமா நீ எங்க போற. இந்த மழையில ஏன் நனைஞ்சுட்டு இருக்க.

ஆன் மழைக்கு என்னோட ஓடம்பு ரொம்ப பிடிச்சு இருக்கு அதான் நனையிறேன். என்னடா இவ நம்மகிட்ட குதற்க்கமா பேசுறா. அப்படியே பதில் சொல்லிட்டு இருந்தவள் தன் தலையில் இருந்த தயிர் விற்கும் சட்டியை இறக்கி கீழே வைத்தாள். குறுகுறுனு பார்த்துட்டே இருந்த மலையாண்டி, என்ன தயிர் விக்கிறவளாக்கும் நீ. ஏன் நீங்க தயிர் தருவிகளாக்கும். நான் தயிர் தர்றது இருக்கட்டும். தயிர் சமஞ்சதா இல்ல சமயாததா. மழையில் நனைந்த எந்தவொரு உடலும் ஆடை இருந்தும் மோகத்தைத் தூண்டும்.

மலையாண்டியின் மனமும் மாறியது. தயிர் சமஞ்சு கையில நெய்யும் இருக்கு வெண்ணெய்யும் இருக்கு. ஆனா கடைய ஆள் இல்ல. பால் கறக்க ஆள் எதிர்பாரக்கறயாக்கோம். யோ நான் ஒன்னட்ட சொன்னேனா. சும்மா நீ கேட்கறதுக்கு குதற்க்கமா பதில் சொன்னா ஒம்பாட்டுக்கு பேசுற. பல்ல ஒடச்சுப் புடுவேன் போயா எனச்சொல்லி மழைவிட்டதை உணரந்து முன்னே நடந்து சென்றுவிட்டாள். அவள் நடந்து செல்லும் மோகன அழகை வர்ணிக்க எழுதும் பேனாவிற்கே இதயம் ஒன்று இருந்தால் மையல் கொள்ளும் அவளுடைய மேனி அழகில்.

அப்படியொரு கருப்புப் அழகி அவள். மனதில் குடிகொண்ட தேகம் மனதை பறித்ததோ என்னவோ அவளைத் தொடர்ந்து அவனும் செல்லத் தொடங்கினான்.

எதிர்பாராத திருப்பங்கள் இல்லாமல் உப்பில்லாத உணவாக முடித்துள்ளேன் இந்த வாரத்தை. மீண்டும் சந்திப்போம் அடுத்த வாரம் மெரு கூட்டப்பட்ட வெண்பாவின் மோகத்தில்.

பூவிதழாக,
தமிழினியன்
 
Joined
Mar 24, 2018
Messages
25
Likes
41
Location
Bangalore
#15
வெண்பா
9. சாரட்டு வண்டி
வணக்கம் வாசக நெஞ்சங்களே. முந்தைய அத்தியாயம் "வண்ணான் மலையை" சூடாக பிறர் மனம் சுடும் நெருப்பு போலே முடிக்கவில்லை என்ற ஏக்கம் என்னுள் உண்டு. அந்த வருதத்தை இந்த அத்தியாயத்தில் அழுத்தமாக பதிய விரும்புகிறேன். படித்து அழுதத்தை உணர்ந்து கருத்திட வேண்டுகிறேன்.

இமைமூடி உறங்க இரவு தேவைப்படா விட்டாலும், இதயத்தில் வலியில்லா இன்பம் இமயமென பொங்க வேண்டும். அதுபோலவே நாம் வாழ்ந்த வாழ்க்கை பிறரின் மனதில் பதிந்து நாம் பயணிக்கும் இறுதிப் பல்லாக்கு இன்பங்களை சுமந்து செல்லவேண்டும்.

ஆனால் மலையாண்டியின் பல்லாக்கு இன்பமாக சென்றது என்று என் நாயகர்கள் கதையை சுமந்துசென்று ஒருபோதும் சொல்லமாட்டார்கள். வாருங்கள் வயல்வெளி கொஞ்சும் புல்லின் மீது பனித்துளி கொண்ட மோகம் காமத்தின் கதை களத்தில் நீங்களும் வாள்வீசும் வீரனாக.

முந்தய பகுதியில் மழவிட்டு நகரத்தொடங்கிய தயிர்காரியின் பின்னயே நடந்து தன் கழுதயையும் பிடிச்சுட்டே போனான் மலையன்(அவன அப்படித்தான் எல்லாரும் அழைப்பர்). கழுதயும் "க க க" என கத்திக்கொண்டே நடக்க. கழுத சத்தத்த கேட்டு முன்ன போற அவளும் பின்ன பாத்திட்டே போனா.

அவன் அவ பின்னாடியே போவக் காரணம் அவ பேச்சோட முன்னுக்குப் பின் முரன்பாடான இரட்டை அர்த்தம் தான். அவள் எப்பயுமே இப்படித்தான் வேறுபட்ட அர்தத்த வார்த்தைக்குள்ள பொதிச்சு பேசுவா. குறும்பு கொணம் இருக்க எறும்பு எப்பயுமே அரக்கன் கையில மாட்டும். எப்படி மாட்டியது எங்கே மாட்டியது?

" கண்டாங்கி சீலை உடுத்தி

காச்செலம்பு அணிஞ்சு

மின்னாடி போறவளே,

இலைகளும்

ஒன் செலம்பொலி கேட்டு

உதிருதோ,

மாராப்பு பட்ட எடம்

மலையென இருக்க,

வீராப்பு கொண்ட

வெள்ள மனசும்

கள்ள நெனப்பு கொண்டு,

ஒளிஞ்சு கெடக்கும்

ஒன் உடல் அழகத் தேடுதே,

காத்து தேன்

என்ன தவம் செஞ்சதோ,

ஒன் இடிப்பு மடிப்ப

எட்டிப்பாத்து முத்தமிடுதே,

இருட்டு ஒளியில ஓன்

கருத்த ஒடம்பும்

பட்டுப் போல மின்ன,

ஏன் மனசயும் உசுரயும்

பறிச்சுப் போறயே நீ"

என தன் பெண் பசி ஏக்கத்த மனசில வச்சு, நாக்குல ஊத்துப் போல பெருகும் நீரோட அவ பின்னாடியே நடந்தான். மனிச இனம் எப்பயுமே இப்படித்தான் எதிர் பாலினத்து மேல கொடூரமான எண்ணங்களக் கொண்டு திரியும்.

தன் மனசுல படிஞ்ச கறையோட மலையனும் அத சட்டை செய்யாம ரோட்டு ஓரத்துல நடந்து சென்று கொண்டிருக்க. வருணபகவான் கொஞ்சம் லேசா மருக்கா துளிர் விட. இலைகளும் மழைய பேரன்புடன் காத்துவீசி வரவேற்றது. மேகங்களும் கருநிறச் சாயம் பூசி தன் அழகு குறைவில்லை எனச்சொல்ல.

ஏ புள்ள மருக்கா மழை பெய்யற மாதிரிதேன் இருக்கு. வாயேன் கொஞ்சம் ஒதுங்கிட்டுப் போவோம். முகத்தில் கோபக் கனலுடன்,

"போயா அங்கிட்டு பல்ல ஒடச்சி காய் அடிச்சுருவேனாக்கும்"

என கை விரலை அசைச்சு சொல்ல. அடியாத்தி காயடிக்கற மூஞ்சா இது,

"கல் மனச கரைச்சு செலையாக்கும் பொட்ட மனசு புள்ள ஓன் மனசு" என சிரிச்சு வேடிக்கையா சொல்லி அவளின் பின்னழகை உற்று ரசித்தான்.

முன்ன போய்ட்டு இருந்தவ மனசுல சிரிச்சு, ஒதட்டுலயும் கண்ணுலயும் கோவத்த வச்சு, சடாரென ஒரு நிமிசம் திரும்பி,

"அறிவு கெட்ட முட்டாப்பய மாதிரி பேசாதயா"

எனச்சொல்லி முன்னே சிடுசிடுவென நடந்து போய்ட்டா.

போனவளின் மனசில இவன் கலியாணம் ஆனவனா இருப்பானா? இல்ல ஒண்டிக்கட்டயா. பாக்க நல்லா சந்தன மேனில தவள்ற நிலவப் போலதான் இருக்கு என சிரிச்சு நினைச்சுகிட்டே வேகமா நடந்தாள்.

அவளபத்தி சொல்லனும்னா கலியாணம் ஆகாத கொமரிதான். தயிர், பால், நெய் வித்து பொழப்பு நடத்துரவ. அப்பப்ப காட்டுவேளை தோட்ட வேளைக்கும் போவா.

அவ ஊரும் மலையன் ஊரும் குருக்கா அமைஞ்சது போல ஒரு மூனு கி.மீ தூரம் இருக்கும். ரெண்டு ஊருக்கும் நடுல இருந்து கிழக்க கீழக்கரையும், மேற்க ஏர்வாடியும் இருக்கு. முள்ளுவாடில இருந்து கீழக்கரை ரெண்டர கி.மீ, மாயகுளத்துல இருந்து அஞ்சி கி.மீ. மலையன் மாயங்குலத்திலும் அவள் முள்ளுவாடியிலும் வாழ்ந்து வந்தனர். இரு ஊர்லயும் முஸ்லிம், இந்து மக்கள் சேந்து வாழ்ந்தனர்.

காட்டுவேள, தோட்டவேள செய்றதுக்கு இந்த ஊருக்காரங்க அங்கயும் அந்த ஊர்காரங்க இங்கயும் போவங்க. அந்தளவு அவங்களுக்கு ஒரு ஒத்தும இருந்துச்சு. அவள நினைச்சு பொதி சொமந்த கழுதயோட ஊருக்குள்ள நடந்து போய்ட்டு இருந்தான் மலையன்.

அதுவொரு முட்டுச்சந்து வலப்புறமா திரும்பிப் போனா மலையனோட தோட்டத்துக்கு போவும். இடப்புறம் வழி ஒன்னும் இல்ல. முட்டுச்சந்து பக்கமிருந்து மலையனுக்கு எதுக்கா வந்தான் ஒருத்தன்.

அடே மலையா நில்லுடாயென அவன் சொல்ல. கழுதைய நிப்பாட்டி கைகட்டி மருவாதயோட பணிந்து சொல்லுங்க அய்யா என்றான்.

அடேய் எப்படியிருக்க? நல்லா இருக்கேன் அய்யா. நீங்க எப்படி இருக்கீங்க? எனப் பணிவுடனும் கைகட்டியே கேட்க. ஆன் ஆன் நல்லா இருக்கேன். நாளைக்கு நம்ம முள்ளுவாடி தோட்டத்துல வேளை இருக்கு அதான் சொல்லிட்டு போக வந்தேன் டா. சரிங்க அய்யா நானும் என் பொஞ்சாதியும் வந்துர்ரோம் அய்யா.

செரி எனக்கு ஆள் கூப்டவேண்டி இருக்கு நான் வாரேன். கழுதயோட நடந்தவன் வீட்ட அடைஞ்சான். மழை விட்டது போல இருக்க. காற்று மட்டும் குளிர் கலந்த மண் வாசனையுடன் வீச,

" குழல் எடுத்து

நீ வாசித்த

இசை யுருவாக,

தழலும்

புகை வேட மணிந்து

ஒன் தலை மார்பை

சுத்துதே"

பரிமளம் வாசலில் அடுப்பூதிக் கொண்டிருந்தா, மகன் சிலேட்டுல எழுதிக்கிட்டு இருந்தான்.

மலையன் வருவதக் கண்டவள் யோ என்னயா இம்புட்டு சீக்கரமா வந்துட்ட. அதும் "கள்ளு குடிக்காம" வந்திருக்க எனச்சொல்லி ஆச்சரியத்துடன் தன் கன்னத்துல கை வைக்க.

பக்கத்தில நடந்து போனவன் "அவ விழிக்கு நேரெதிரா நின்னு" பெருமூச்சுடன் தாழ்ந்த குரலில்,

"கனிஞ்ச பழத்த

காக்காக்கு கொடுக்கவா

நான் பறிச்சுட்டு வந்தேன்,

நான் பருகத்தானே பறிச்சேன்"

என அவள் நாசிக்குள் தன் கனல் படச்சொல்ல,

"போக்கத்த கருவேலம் நீருள்ள இடமெல்லாம் தழைக்குமாம்"

என தன் வாய்க்குள்ள அவசொல்லி நகர. என்னடி சொன்னா

"கருவேலம் செழிக்காம இருந்தா அங்க ஒன்னு சிலேட்டுல எழுத இருக்குமா"

உனக்கு மலடினு பேருதான் இருக்கும். எப்பவுமே இப்படித்தான் அவன் வேணும் என அவள் வேண்டாமென இருப்பாள்.

அன்றைக்கு இரவு அவளோட மகனை கட்டியணைத்து ஒறங்கிவிட்டாள். அருகில் படுத்திருந்தவன் வீதியில பாத்த தயிர்ல இருந்து நெய் கடயும் யோசனையில் இருந்தான். அவள் பெயர் என்னவா இருக்கும்? எந்த ஊருக்காரியா இருப்பா என மனசுலாம் கொதிச்சது. கொதிச்ச மனசு கொதிப்புடயே உறங்கிவிட்டது. கொதிச்ச மனசு என்னாகும் என்ன ஆனதென்று தெரிய தொடர்ந்து வாசியுங்கள்.

கோழி கூவும் அதிகால வேளை. கதிரவன் தன் பேரழகால் ஒளிவீச தொடங்கிய நேரம். கடலுக்கு சிலர் பேசிக்கொண்டே வண்ணமீன்களை வலைகொண்டு சிறைபிடிக்கச் சென்ற குளிர் நேரம். சுத்தி இருந்த தோட்டத்து மண்வாசம் மனச விலகேட்ட நேரம். பரிமளம் விழித்து எழுந்தாள். வாசத் தெளிச்சு, கோலம் போட்டு சமைச்சு முடிச்சு தூக்குச்சட்டிய தூக்கியோட இருந்த நேரத்துல எழுந்த மலையன்.

அடியே எங்க போறவா? ஏன் ஆத்தா கூப்டாலாக்கும் களத்து வேளைக்கு அதான் போறேன் எனசொல்லி வெடுக்குனு ஓடிட்டா. அப்படியே கோபத்துடன் வேட்டிய மடிச்சு சாப்பிடாம கெளம்பி தோட்டத்து வேளைக்கு போய்ட்டான்.

தோட்டத்து உள்ள நுழைவத பாத்த அம்பலார் "என்னடா மலையா ஒன் பொஞ்சாதி வரலயா" இல்ல அய்யா அவ அவங்கம்மா வீட்டு வர நேத்தே பொய்ட்டா. சரி போ பொய் வேலயப்பாரு. சரிங்க அய்யா என்று தாழ்ந்து சொல்லி உள்ளே நடந்து சென்றான்.

மலையனுக்கு மரம் ஏறத்தெரியும். அம்பலார் நாப்பது ஏக்கர் தோப்பு வச்சிருக்கார். பெரிய பண்ணயார். சாதி, மத பேதம் இல்லாத நல்லவர் "காமராஜர்" வழிநடப்பவரு.

அவரு தோப்புல "தேங்கா பறிக்க" பறிச்சத உரிக்க பல ஆள் கூப்ட்டு இருக்கார். அவரு ஒசந்தவர், எல்லாரும் சமம் என்று பிறர தாழ்த்தி தீட்டு என நினைக்காத நல்ல மனுசன். பார்க்க வேளைக்கு கூலி ஒடனே கொடுத்துடுவாரு. தேங்கா பறிக்க உரிக்க நூறு ரூவா, உரிக்க அம்பது ரூவா கொடுப்பாரு. அதனாலயே எல்லாரும் கூப்டாமக்கூட வந்துருவாங்க வேள இருக்குனு தெரிஞ்சா.

தோப்புக்கு நடுவுல தட்டிவைத்து கட்டிய சிறிய வீடு. அதன் இடப்பக்கம் ஒரு சின்னத் தொட்டி, வலப்பக்கம் சின்னதா கொஞ்சம் இடம் தேங்கா உரிக்க.

மலையன் மரம் ஏறி வியர்வ களைப்புடன் தண்ணீர் குடிக்க தோப்புக்குள்ள இருந்த தொட்டிக்கிட்ட போய் கைகால் கழுவிட்டு நடந்தான். நடந்தவன் அஞ்சு நிமிசம் ஒக்காந்துட்டு தேங்காய் உரிக்கப் போனான். அங்க ரொம்ப பேரு தேங்கா உரிச்சுட்டு இருந்தாங்க. இவன் உரிச்சுட்டு இருந்தப்படியே இடப்பக்கமாக திரும்ப, "பாம்பு போல் நெளிந்த கருநிற மேனி" இவனுள் வெஷத்த ஊத்தியதப் போல உணர்ந்தான்.

தீடிரென "அம்மா என்ற ஓர் கூச்சல் ஒலிக்க" அனைவரும் ஒருவர ஒருவர் திரும்பித்திரும்பி பார்த்தனர். பார்க்க மலையன் கண்ண மூடி வலியால கைய உதறிக்கொண்டே முகத்தைச் சுழிச்சான்.

பாம்போட வெஷம் அவன் கைகள பதம் பார்த்துவிட்டது. தேங்காய் உரிக்க கூர்மையான கம்பிதான் உபயோகிப்பாங்க அப்போ எல்லாம்.

சுற்றி இருந்த முப்பது பேரும் கூடிவிட்டனர். சத்தம்கேட்டு வந்த அம்பலார் "யேம்மா சரசு" அந்த தட்டில துணி இருக்கும் எடுத்துட்டு வா. அவளும் எடுத்து அங்க வந்தாள். பக்கத்துல வரவே அவளும் அவனும் ஒருவர ஒருவர் பார்க்க. அவளக் காணாததால விழிகள் பொழியுர கண்ணீராகவே அவளும் அவனும் எண்ணினர் படிஞ்ச இரத்தத்த.

மலையன் என உணர்ந்த "சரசு" வேகத்த கூட்டி ஓடியாந்தாள். யாரயும் எதிர்பாராமல் துணிய கிழிச்சு அவன் இடது கையில் இறுக்கி கட்டினாள். அவ இதயமே வலிச்சு உடல் கனல் வீசியது அவன ஏங்கி. படிஞ்ச இரத்தத்த பாத்து. அவள் கொடுத்த காற்றயே அவன் சுவாசிச்சு தன்னெல அடைஞ்சான்.

இருவரும் சொர்க்க லோகத்தில் "பூக்கள் செறிந்த தோட்டத்தின்" நடு அமைந்த அந்தபுரத்தில் "அனிச்சம்" பூவினாலான சாரட்டில் மதனன் ரதிதேவி உருக்கொண்டனர்.

மீண்டும் அடுத்தவாரம் இன்னும் சில சுவாரஸ்யமான நிகழ்வுகளுடனும் கற்பனைகளுடனும் சந்திப்போம்.


பூவிதழாக,

தமிழினியன்
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.