வெண்புள்ளிகள்(Vitiligo)-மூட நம்பிக்கைகளை ஒழிக்&#

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,657
Location
chennai
#1
வெண்புள்ளிகள்(Vitiligo)-

மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும்!

‘‘வெண்புள்ளிகள்(Vitiligo) பற்றி இந்த சமூகத்தில் தவறான பல கருத்துகள் நிலவுகிறது. அது ஒரு நோய், மற்றவருக்குத் தொற்றிக்கொள்ளும் தன்மை உடையது, பரம்பரை நோய் என்றெல்லாம் சமூகத்தில் நம்பிக்கை இருக்கிறது. அடுத்து, இதை வெண்குஷ்டம் என்றும் சொல்கிறார்கள். வெண்புள்ளி என்று சொல்லப்படுவதற்கும் குஷ்டம் என சொல்லப்படுகிற தொழுநோய்க்கும் எந்த தொடர்பும் இல்லை.​

சமஸ்கிருதத்தில் ஸ்வேத்த குஷ்டா என்று வெண்புள்ளியைக் குறிப்பிடப்படுவதாலேயே இதை வெண்குஷ்டம் என சொல்ல ஆரம்பித்தார்கள். அதுதான் உண்மை.இது போன்ற தவறான புரிதலால் வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.

இதனால்தான் 2010-ல் தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குனரிடம் இருந்து, ‘இது நோயல்ல. பிறருக்குப் பரவாது. இதை வெண்புள்ளி என்றுதான் அழைக்க வேண்டும்’ என அரசாணை பெற்றோம்’’ என்பவர், வெண்புள்ளிகளுக்கான இயக்கத்தின் பணிகள் பற்றியும் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

‘‘வெண்புள்ளிகள் பற்றிய அறிவியல்பூர்வமான உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக ‘இந்திய வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம்’ 1996-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதிலும் வெண்புள்ளியால் பாதிக்கப் பட்டவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் எங்களின் முக்கிய நோக்கம்.

வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டே இரண்டுதான் பிரச்னையாக இருக்கிறது. தோலில் வந்து வெளிப்படையாக தெரிவதால் அதை மறைப்பது முதல் பிரச்னை. ஏனென்றால், சருமத்தில் பாதிப்பு ஏற்பட்டுவிட்டால் உலகமே அதை பார்க்கும். இரண்டாவதாக, வெண்புள்ளியால் ஆரோக்கியம் தொடர்பாக எங்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லையென்றாலும் மனரீதியாக நாங்கள் பெரிதும் பாதிப்புகளை சந்தித்து வருகிறோம்.

இதுபோன்ற மன உளைச்சலில் இருப்பவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி அவர்களிடம் இருந்து பணம் சம்பாதிக்கலாம் எனவும் பலர் முயற்சிக்கின்றனர். அதனால், வெண்புள்ளி பாதிக்கப்பட்டவர்களிடமும், மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மருத்துவ முகாம்களையும், கருத்தரங்கங்களையும் நடத்தி வருகிறோம்.

வெண்புள்ளியால் அவதிப்படுபவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறோம். கடந்த 3 வருடங்களில் 387 திருமணத்தையும் நடத்தி உள்ளோம். வெண்புள்ளி பாதிப்பு உள்ள குழந்தைகளை இயல்பாக வளர்ப்பது பற்றி பெற்றோர்களுக்கும் சொல்லித் தருகிறோம்.’’
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.