வெயிட் ஏறுவதை கவனிக்க வேண்டும் !!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
வெயிட் ஏறுது


குண்டு மனிதர்களின் பாரம் தாங்காமல் இந்த பூமி குடை சாய்ந்துவிடுமோ எனக் கவலைப்படும் அளவுக்கு உடல் பருமன் பிரச்னை பூதாகரமாக உருவெடுத்துள்ளது. இன்று உலக மக்கள்தொகையில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு உடல் பருமன் பிரச்னையோ, அல்லது கூடுதல் எடை பிரச்னையோ இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதாவது, இந்த பூமியில் வாழும் மனிதர்களில் அநேகமாக மூன்றில் ஒருவர், தனது உடல்வாகுக்கு உகந்ததைவிட அதிக எடையோடு இருக்கிறார்.

இவர்களில் அதீத உடல் பருமன் பிரச்னை உள்ளவர்கள், சுமார் 67 கோடி பேர். இவர்களில் பாதி பேர் பத்தே நாடுகளில் வசிக்கிறார்கள். அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, பிரேசில், மெக்சிகோ, எகிப்து, ஜெர்மனி, பாகிஸ்தான் மற்றும் இந்தோனேஷியா ஆகியவையே அந்த 10 நாடுகள்.

கடந்த 2013ம் ஆண்டில் எடுத்த கணக்கீடுகள்படி, உலகின் குண்டு மனிதர்களில் 13 சதவீதம் பேர் அமெரிக்காவில் வசிக்கிறார்கள்; இந்தியாவிலும் சீனாவிலும் சேர்த்து 15 சதவீதம் பேர் வசிக்கிறார்கள். இந்தியாவும் சீனாவும் இப்படி டாப் மூன்று இடங்களுக்குள் வந்தாலும், மக்கள்தொகை அளவில் பார்க்கும்போது இந்த நாடுகளில் குண்டு மனிதர்களின் எண்ணிக்கை குறைவு. அதாவது, இந்திய மக்களில் 3.7 சதவீத ஆண்களும், 4.2 சதவீத பெண்களும் குண்டாக இருக்கிறார்கள். சீனாவில் 3.8 சதவீத ஆண்களும், 5 சதவீத பெண்களும் குண்டு!

இந்த பத்து நாடுகளுக்கிடையே ஒப்பிடும்போது, இளவயதில் குண்டாகும் பிரச்னை உலகிலேயே இந்தியாவில்தான் குறைவு என்பதும் ஒரு ஆறுதல். 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களில் இந்தியாவில் 2.3 சதவீதம் பேர் மட்டுமே குண்டு; அமெரிக்காவிலோ 12.4 சதவீதம் பேர் குண்டு. இப்படி இளம்பெண்களில் 2.5 சதவீதம் பேர் மட்டுமே இந்தியாவில் குண்டு; அமெரிக்காவில் இது 13.4 சதவீதம்.

சில நாடுகளில் மொத்த மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குண்டாக இருப்பதும் உண்டு. டோங்கா என்ற நாட்டில் ஆண்களில் பாதிப் பேருக்கும் மேல் குண்டாக உள்ளனர். குவைத், கிரிபாட்டி, லிபியா, கத்தார், சமோவா போன்ற நாடுகளில் பெண்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் குண்டு.

ஆனால் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளைவிட, இந்தியா போன்ற வளரும் நாடுகளில்தான் உடல் பருமன் பிரச்னை கடந்த 35 ஆண்டுகளில் வேகமாக அதிகரித்து வருவதாக கவலை கொள்கிறது, உலக சுகாதார நிறுவனம். விழிப்புணர்வு வந்திருப்பதால், வளர்ந்த நாடுகளில் இந்தப் பிரச்னை இப்போது குறைந்து வருகிறது. நாமெல்லாம் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது!
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.