வெயில் கொடுமையா... பதற வேண்டாம்!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
வெயில் கொடுமையா... பதற வேண்டாம்!'
'வெ
யில் இப்போதே வதைக்கிறது. அக்னி நட்சத்திரத்தை நினைத்தாலே, நா வறட்சியாகிறது. இந்த வெயிலின் கொடுமையில் இருந்து தற்காத்துக் கொள்ள, வீட்டில் பின்பற்றக் கூடிய, பின்பற்ற வேண்டிய ஆலோசனைகள் தருகிறார், ஹோமியோபதி மருத்துவர் ஜீவா சேகர்.

''கோடையில் வியர்வையால் உடலின் நீர்ச்சத்து அதிகமாக வெளியேறும் என்பதால், ஒரு நாளைக்கு குறைந்தது 10 டம்ளர் நீர் அருந்த வேண்டும். கோடையில் ஏற்படும் கண் எரிச்சல், கண்கட்டி, கண்களிலிருந்து நீர் வழிவது போன்ற தொல்லைகளைத் தவிர்க்க, வெளியில் சென்று வந்ததும் குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவ வேண்டும். நறுக்கிய வெள்ளரிக்காயை கண்களில் சில நிமிடங்கள் வைத்திருந்தாலும், சூடு தணியும்.வாரத்துக்கு இரண்டு முறை கண்டிப்பாக தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும். குளிக்கும் நீரில் வேப்பிலை போட்டு குளித்தால், சரும நோய்கள் அண்டாது. அடர்நிற ஆடைகள் தவிர்க்கவும். பருத்தி உடைகள் அணிவது நலம். சன்ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்தலாம். தலையில் வெயில் நேரடியாக படாதவாறு தொப்பி, குடை பயன்படுத்தலாம்.

வியர்வையை உறிஞ்சி அலர்ஜிகளைத் தவிர்க்கும் காட்டன் சாக்ஸ், கோடைக்கு நல்லது. வேனல் கட்டிகளுக்கு சந்தனமும் மஞ்சளும் கலந்து பூசி வர, நல்ல பலன் கிடைக்கும். அதிகப்படியான மேக்கப், கோடையில் வேண்டாம்.
வயிறு முட்ட உண்பதையும், காரசாரமான உணவுகளையும் தவிர்க்கவும்.

நீராகாரங்களையும், வெயில் காலங்களில் விளையும் காய்கள், பழங்களையும் அதிகமாக எடுத்துக் கொள்ளவும். பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் தவிர்த்து இளநீர், மோர் பருகலாம். மோரில் பச்சை மிளகாய்க்குப் பதில் இஞ்சி, பெருங்காயம் சேர்க்கலாம்.

குடிநீரில் குறுமிளகு, சிறிதளவு வெட்டிவேர், சீரகம் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்கவிட்டு, ஆறவைத்துக் குடிக்கலாம். முடிந்த வரை டீ, காபி தவிர்த்து எலுமிச்சைச் சாற்றில் சர்க்கரை மற்றும் உப்பு சம அளவு கலந்து குடிக்கலாம். நறுக்கிய வெள்ளரிக்காயில் மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள் தூவி சாப்பிட்டால்... நீர் கடுப்பைத் தவிர்க்கலாம். எண்ணெய்ப் பதார்த்தங்கள் தொடர்ந்து சாப்பிட்டால், மயக்கம்கூட ஏற்படலாம் என்பதால் குறைத்துக்கொள்ளவும். காலையில், ஊறவைத்த வெந்தயத்தை வெறும்
வயிற்றில் சாப்பிடுவது நல்லது

.


முகத்தில் ஏற்படும் கருமை நீங்க, கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை தலா ஒன்றை வெந்நீரில் போட்டு நாள் முழுக்க ஊறவைத்து அரைத்து, இந்தக் கலவையோடு பப்பாளிப் பழத்தைச் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்குப் பிறகு கழுவலாம். மெத்தையில் படுப்பதைவிட, தரையில் கோரைப் பாய் விரித்து உறங்கலாம். பகல் நேர தூக்கம் தவிர்த்து இரவில் குறைந்தது, எட்டு மணி நேரம் அமைதியான சூழலில் உறங்கவும்.''

 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
கோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ்!


''வெ
யில் காலத்தில் சோர்வு, தாகம், பித்தம், சருமச் சுருக்கம், வேர்க்குரு, தோல் கறுத்துப் போவது, முகப்பரு, பசியின்மை, டயரியா, உடம்பில் நீர்ச்சத்து வற்றிப் போவது போன்ற பாதிப்புகள் அதிகமாக இருக்கும். இவையெல்லாம் கோபம், பொறுமையின்மை போன்ற மனப்பிரச்னைகளையும் உருவாக்கும். எனவே, மனமும் உடலும் குளுமையாக... இதையெல்லாம் ஃபாலோ செய்யுங்கள்... கோடையிலும் தளதளவென புத்துணர்ச்சியுடன் நடைபோடுங்கள்...'' என்று சொல்லும் ஆயுர்வேத மருத்துவர் ரேச்சல் ரெபேக்கா தரும் கோடை ஸ்பெஷல் டிப்ஸ்...

தாகம் எடுத்தால் உடனே மடமடவென தண்ணீர் அருந்தவும். 'அப்புறமா குடிச்சுக்கலாம்’ என்று தள்ளிப்போட வேண்டாம். மண்பானைத் தண்ணீர் மிக நல்லது.

இயற்கை அந்தந்த காலநிலைக்கு உடலின் தேவைக்கு ஏற்பவே சீஸனல் பழங்கள் மற்றும் காய்கறிகளை விளைவிக்கிறது. எனவே, ஒவ்வொரு சீஸனிலும் அந்த சீஸனுக்குரிய பழத்தை அதிகளவில் சாப்பிடவும்.

இந்த சீஸனில் அதிகம் கிடைக்கும் மாம்பழத்தை, சூடு என்று சொல்லி சிலர் ஒதுக்குவார்கள். வேனல் கட்டிகள், வியர்க்குரு போன்ற பாதிப்பு இருப்பவர்களைத் தவிர, மற்றவர்கள் தாராளமாக மாம்பழம் சாப்பிடலாம்.

வெயிலால் தலை முழுவதும் வியர்த்து அதனால் வரும் ஜலதோஷத்துக்கு எண்ணெய்க் குளியல் பெஸ்ட் சாய்ஸ். தலையுடன் உடம்புக்கும் எண்ணெய் தேய்த்து ஊறவிட்டு குளிக்கலாம். வெயிலில் அலைபவர்கள் எண்ணெய்க்குப் பதில் உடலில் நெய் தடவி ஊறவிட்டுக் குளித்தால், வெயிலால் கறுத்த சருமம் நிறத்தை மீட்கும்.

பன்னீர் ரோஜா இதழ்களைப் பாலுடன் சேர்த்து அரைத்து முகம், கழுத்து, கை மற்றும் கால் போன்ற வெயில் நேரடியாகப் படும் இடங்களில் தடவி பத்து நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால், சருமக் கருமை நீங்குவதோடு முகம் பட்டுப்போல மிருதுவாகும்.

பச்சையாகச் சாப்பிடக்கூடிய வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளை நொறுக்குத் தீனிகளுக்குப் பதில் சாப்பிடலாம்.

கார்பன் டை ஆக்ஸைடு அடைத்த குளிர்பானங்கள் உடம்பின் எரிச்சலை இன்னும் அதிகரிக்கவே செய்யும். அவற்றைத் தவிர்த்து ஃபிரெஷ் ஜூஸ், நீர் மோர் போன்றவற்றை ஐஸ் சேர்க்காமல் குடிப்பது உடம்பையும் சருமத்தையும் குளிர்ச்சியாக்கும்.

இரவு உறங்கச் செல்வதற்கு முன் உள்ளங்கால்களில் விளக்கெண்ணைய் தடவிவிட்டு படுத்தால் உடல் குளிர்ச்சியாகும்.

கோடையிலும் இருப்போம் குளுகுளுவென!
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.