வெரிகுட் வெள்ளாட்டுப் பால்

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,134
Likes
20,710
Location
Germany
#1
வெள்ளாட்டுப் பால் இரத்தச்சோகை நோயையும், போன் டிமினரைசேசன் என்னும் எலும்பு வலுவிலத்து போகும் நோயையும் குணப்படுத்தக் கூடியது.
வெள்ளாட்டுப் பாலில் உள்ள இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாது உப்புக்கள் உடலில் எளிதில் பயன்படுத்தப்படுகிறது.

இதன் காரணமாக பாரா தைராய்டு ஹார்மோன் நன்றாக வேலை செய்து உடலில் சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ் தேவையை சரியாக வைத்திருக்க உதவு கிறது.


வெள்ளாட்டுப் பாலில் வைட்டமின்கள் தயாமின், ரிபோஃப் பிளேவின், நியாசின், பான்டோதீனிக் ஆசிட் மற்றும் ஏ.பி.ஈ.சி. விட்டமின்களும் அதிக அளவில் உள்ளன. வெள்ளாட்டுப் பாலில் தாய்ப்பாலைவிட புரதச்சத்து அதிகமாகவும் லாக்டோஸ் சத்து, குறைவாகவும் உள்ளது.


மனிதர்களுக்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் கந்தகசத்தைக் கொண்ட (Methionine) மிதியோனைன் என்னும் அமினோ அமிலம், தாய்ப்பாலைவிட வெள்ளாட்டுப் பாலில் அதிகமாக உள்ளது.


தற்போது பெரும்பாலான பெண்களுக்கு அயோடின் சத்துக் குறைவால் ஹைப்போ தெராமிசம் என்னும் நோய் ஏற்படுகிறது. இதன் காரணமாக ஒபிசிடி என்னும் உடல் பருமனாதல், மாத விடாய் சீராக இல்லாத நிலைமை, குழந் தைச் செல்வம் பெற முடியாத நிலை போன்றவை ஏற்பட்டு, பெரும்பாலான பெண்கள் வேதனைப் படுகிறார் கள். இவற்றைப் போக்குவதற்கு வெள்ளாட்டுப்பால் சிறந்த அருமருந்தாகும்.


வெள்ளாட்டுப் பாலை பருகுவதால் மால் அப்சார்ப்சன் சின்ட்ரோம் நோய், உடல் பருமனாதல் நோய், குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு நோய் போன்றவை தடுக்கப்படுகின்றன.


நெடுந்தொடர் கொழுப்பு அமிலங்கள் ஆட்டுப்பாலில் உள்ளதால், இரத்தக் குழாய் களில் கொலஸ்டிரால் படிவதைத் தவிர்க் கிறது. இதன் காரணமாக ஆர்டிரியோ ஸ்லீரோசிஸ் என்னும் இரத்தக் குழாய்கள் சுருங்குவது தவிர்க்கப்படுவதால், இரத்த அழுத்த நோய் வராமல் வெள்ளாட்டுப்பால் உதவுகிறது. பித்தப்பையில் கற்கள் ஏற்படு வதையும் வெள்ளாட்டுப்பால் தடுக்கிறது.


வெள்ளாட்டுப் பாலில் உள்ள சில சத்துக்கள், புற்றுநோய் மற்றும் குடல் புண்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது. வெள்ளாட்டுப் பாலில் பசும்பாலைவிடசோடியம் சத்து குறைவாக உள்ளதால் இதய நோய் உள்ளவர்களுக்கு, வெள் ளாட்டுப் பால் சிறந்த உணவாகும்.
 
Thread starter Similar threads Forum Replies Date
chan Healthy and Nutritive Foods 0

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.