வெரிகோஸை குணப்படுத்த

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,847
Likes
2,765
Location
Bangalore
#1
வெரிகோஸை குணப்படுத்த பாட்டி வைத்தியம் !! நல்ல தீர்வு!!
வெரிகோஸ் நரம்பு என்பது நரம்பு சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனையாகும். பொதுவாக சாதாரண நரம்பில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். ஆனால் வெரிகோஸ் நரம்பில் ரத்தம் பின்னோக்கியும் செல்லும். காரணம் நரம்புகள் ஒன்றோடொன்று பின்னப்பட்டும் திருகியும் காணப்படும். இதனால்தான் அங்கே சிலந்தி போல் நரம்புகள் காணப்படுகின்றன. பரம்பரையாக இது ஏற்படுவதுண்டு. அம்மாவிற்கு இருந்தால் குழந்தைக்கும் வரும் வாய்ப்புகள் உள்ளன. இது தவிர நாள் முழுவதும் அதிக நேரம் நிற்பது, அதிகமாய் கால்களுக்கு சிரமம் தருவது ஆகியற்றால் வெரிகோஸ் நரம்பு வர காரணமாகிவிடும்.
மற்ற காரணங்கள் :
வயது, ஜீன், ரத்த ஓட்டத்தில் பிரச்சனைகள் உடற்பயிற்சி போதிய அளவில் இல்லாமல் இருப்பது, ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவற்றால் இந்த வெரிகோஸ் பிரச்சனை உண்டாகும். இதனால் பெரும் பாதிப்பு இல்லையென்றாலும் அப்படியே விட்டால் பிரச்சனைகள் தரும்.
வெரிகோஸ் நரம்பை குணப்படுத்துவது எப்படி?
மிகத் தீவிரமான வெரிகோஸ் நரம்பு இருந்தால் அதனால் தாங்க முடியாத வலி உண்டாகும். நடக்க முடியாமல் அவதிப்படுவார்கள். ரத்த ஓட்டம் பாதித்து, மரத்தும் போகும். இந்த மாதிரியான தீவிர நிலையில் சரிப்படுத்த அறுவை சிகிச்சை உண்டு. மூலிகை சாறு : இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று இல்லை. இதனை வீட்டிலேயே மூலிகை சாற்றின் மூலம் குணப்படுத்தலாம். இதனால் பக்க விளைவுகள் ஏதும் இல்லை.
தேவையானவை :
ஆப்பிள் சைடர் வினிகர் - 2 ஸ்பூன்
கேரட் - அரை கப்
சோற்றுக் கற்றாழை - அரை கப்
தயாரிக்கும் முறை :
கேரட்டை பொடிபொடியாக நறுக்கி அதனுடன் கற்றாழையை கலந்துய் மிக்ஸியில் அரையுங்கள். அதில் சிறிது சிறிதாக ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து மேலும் அரையுங்கள். க்ரீம் போன்ற பதம் வரும் வரைக்கும் நைஸாக அரைக்க வேண்டும். நீர் கலக்கக் கூடாது.
எப்படி உபயோகிப்பது :
இந்த க்ரீம் போன்ற கலவையை வெரிகோஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேய்த்து, காலை மேலே தூக்கி ஏதாவது உயரமான பொருளின் மீது வைத்துக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர் கழுவலாம். இதனை அந்த நரம்புகள் மறையும் வரை தினமும் உபயோகியுங்கள். நல்ல பலனைத் தரும்.
By: Hemalatha V
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.