வெல்லமும், மிளகும் உடலுக்கு நல்லது

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#1
குளிர் காலத்தில் குழந்தைகளுக்கு ஜலதோஷம் ஏற்படுவது சகஜம். கோதுமை தவிட்டை மண் சட்டியில் போட்டு வறுத்து, ஒரு வெள்ளைத் துணியில் போட்டு, முடிச்சு போடவும். இதை, உடல் பொறுக்கும் சூட்டில் குழந்தைகள் தலைப்பகுதியில் ஒத்தி, ஒத்தி எடுக்க வேண்டும். மார்பு மற்றும் முதுகு பகுதியில் ஒத்தடம் கொடுக்கலாம்; நிவாரணம் கிடைக்கும்.

தலைக்கு குளித்தபின், சாம்பிராணி புகை போடுவது நல்லது. மாலை வேளையில் வீடு முழுக்க சாம்பிராணி புகை போடுவதால், வெது வெதுப்பாக இருப்பதோடு, கொசு தொல்லையும் இருக்காது. எண்ணெய் மற்றும் மசாலா ஐட்டங்கள் அதிகம் சேர்த்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. தினமும் காலையில், துளசி இலை நான்கை தண்ணீரில் ஊற வைத்து அருந்துவது நல்லது. குளிக்கும் போது சோப்பு பயன்படுத்தாமல், கடலை மாவு அல்லது பயிற்றம் பருப்பு மாவு தேய்த்து குளிக்கலாம். தொண்டை வலி, கமறல், இருமல் போன்றவற்றுக்கு, ஒரு கரண்டியில் நெய்யை விட்டு காய்ந்ததும், ஒரு சிறு துண்டு வெல்லத்தை போட்டு பொங்கி வரும் போது, அரை தேக்கரண்டி மிளகுப் பொடி போட்டு, அடுப்பை அணைத்து விடவும். சற்று ஆறியதும் உருட்டி வாயில் போட்டு கொண்டால் இதமாக இருக்கும்; இருமலும் அடங்கும். என்ன தோழியரே... குளிர்காலத்தை
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.