வெள்ளரி...உள்ளே வெளியே !

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
வெள்ளரி...உள்ளே வெளியே !

வெள்ளரியில் உள்ள ஃபிஸ்டின் (Fisetin) என்ற ரசாயனம், வீக்கத்தைக் கட்டுப்படுத்தும். வயதாவதால் மூளை செல்களில் ஏற்படும் பாதிப்பில் இருந்து காக்கும். நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து வெள்ளரியில் நிறைவாக உள்ளன.

வெள்ளரிக்காய் தோலில் நீரில் கரையாத நார்ச்சத்து உள்ளது. இது செரிமான மண்டலத்தை சீராக்கி, நச்சுப் பொருட்கள் எளிதாக வெளியேற உதவுகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.

ஒரு கப் வெள்ளரியில் 16 கலோரிகள்உள்ளன. அதிக நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து உள்ளதால், மிகச் சீக்கிரத்தில் செரிமானம் ஆகாது. ஆனால் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.

பொட்டாசியம் நிறைவாக இருப்பதால், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதில் அதிக அளவில் உள்ள சிலிக்கா, மூட்டுகள் மற்றும் இணைப்புத் திசுக்களின் ஆரோக்கியத்தை மேம்படச் செய்கிறது.

கேரட் மற்றும் வெள்ளரிச் சாற்றைக் குடிப்பதன் மூலம் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைத்து மூட்டுவலியில் இருந்து விடுபடலாம்.

வெள்ளரியில் உள்ள பாலிபீனால்கள் புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்பட்டு, மார்பகம், கர்ப்பப்பை, சினைப்பை, புராஸ்டேட் போன்ற புற்றுநோய்களுக்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

வெளியே
வெள்ளரிக்காயை ஃபேஸ்பேக் ஆக போடும்போது, அது சருமத்தைப் புதுப்பிக்கிறது. மேலும், சருமம் தளர்வு அடைவதில் இருந்து பாதுகாக்கிறது. சருமத்துக்கு இளமையான தோற்றத்தையும் அளிக்கிறது.

வெள்ளரிக்காய்சாற்றை சருமத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், சருமம் பொலிவு பெறும். வெள்ளரிச் சாற்றுடன் இளநீர் சம அளவு கலந்தும் பூசலாம்.

புறஊதாக் கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கக்கூடிய ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு.

வெள்ளரிக்காய் சாறு ஒரு சிறந்த டோனராக செயல்படுகிறது.

வெள்ளரிக்காயுடன் எலுமிச்சை, முட்டையின் வெள்ளைப் பகுதி, கற்றாழை, தேன், தக்காளி இவற்றில் ஏதேனும் ஒன்றைச் சேர்த்து கலந்து, முகத்தில் பூசி10 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், சருமம் புத்துணர்வுடன் இருக்கும்.

வெள்ளரியில் உள்ளஆஸ்பாரிக் அமிலம், நீர்ச்சத்து போன்றவை, சருமத்துக்கு ஈரப்பதத்தை அளிக்கின்றன. வெள்ளரியை நறுக்கி, கண் மேல் வைத்தால், கண் வீக்கத்துக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும், இதில் உள்ள சிலிக்கா கண்களைச் சுற்றியுள்ள கருவளையத்தையும்போக்கும். 
Last edited:

Uma manoj

Guru's of Penmai
Joined
Feb 28, 2012
Messages
5,422
Likes
18,409
Location
Chennai
#3
இந்த வெயில்கு வெள்ளரி இல்லாமல் இருக்க முடியாது..தகவலக்கு நன்றி லஷ்மி.........
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.