வேரிலிருந்து கிடைக்கும் காய்கறி

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
தண்டில் இருந்து கிடைக்கும் காய்கறிகளை விட, வேரிலிருந்து கிடைக்கும் காய்கறிகளில் ஒருசில சிறப்பான ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்திருக்கும்.

அந்த வகையில் வேரிலிருந்து கிடைக்கக்கூடிய காய்கறிகள் அதிகம் உள்ளன.

வேரிலிருந்து கிடைக்கும் காய்கறிகள் உடலுக்கு சிறப்பான அளவில் ஆற்றலைக் கொடுக்கக்கூடியவை.

ஒவ்வொரு வேர் காய்கறிகளிலும் ஒவ்வொருவிதமான சத்துக்கள் நிறைந்துள்ளன. டர்னிப்
டர்னிப் சாலட்டில் சேர்க்கக்கூடிய ஒரு சிறப்பான காய்கறி. அதிலும் முக்கியமாக இந்த டர்னிப் இதயத்திற்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒரு வேர் காய்கறி. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமான அளவில் அடங்கியுள்ளது.

பீட்ரூட்
அனைவருக்குமே பீட்ரூட் ஒரு வேர் காய்கறி என்பது தெரியும். அத்தகைய பீட்ரூட்டில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. குறிப்பாக அவை இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்களுக்கு ஒரு சிறப்பான உணவுப் பொருள். மேலும் இதில் பீட்டா-கரோட்டீன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வளமாக நிறைந்துள்ளது. உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில் ஸ்டார்ச் நிறைய உள்ளது. மேலும் இவை உடலுக்கு அதிகப்படியான ஆற்றலையும் கொடுக்கக்கூடியவை. ஆனால் உடல் எடையை குறைக்க நினைத்தால், இதனை டயட்டில் சேர்க்கக்கூடாது. வெங்காயம்
வெங்காயத்தில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி பொருள் அதிகம் நிறைந்துள்ளதால், அவை நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும்.

பூண்டு

பூண்டில் அல்லிசின் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேர்த்தால், இதயம் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

அதிலும் பச்சையாக பூண்டை சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் குணமாகிவிடும். இஞ்சி
இஞ்சியில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. இஞ்சியில் நிறைய செரிமான நொதிகள் நிறைந்திருப்பால், அவை அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது.

குறிப்பாக இருமல், சளி மற்றும் தொண்டையில் தொற்று உள்ளவர்களுக்கு இஞ்சி நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும்.

கேரட்

கேரட் சாப்பிட்டால், கண்களுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் கண்களுக்கு ஆரோக்கியத்தை தரும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. மேலும் இதனை தினமும் சாப்பிட்டால், சருமம் பொலிவாக இருக்கும். முள்ளங்கி
நீரிழிவு நோயாளிகளுக்கு முள்ளங்கி ஒரு சிறப்பான உணவுப் பொருள். ஏனென்றால் இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் இவற்றில் பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்துள்ளதால், இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும். சேனைக்கிழங்கு

சேனைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின்-பி காம்ப்ளக்ஸ் அதிகம் இருப்பதால், அவை நரம்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

சர்க்கரைவள்ளி கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உடலுக்கு வேண்டிய ஆற்றல் அதிகம் இருப்பதோடு, சாதாரண உருளைக்கிழங்கை விட குறைவாகவே ஸ்டார்ச்சானது உள்ளது. மேலும் இதில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிகம் இருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைக்கும்.

nandri;''sathiyam tv
Moderator's Note:
This Article has been published in Penmai eMagazine February 2015. You Can download & Read the magazines
HERE.
 
Last edited by a moderator:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.