வைட்டமின் என்றால் என்ன? - What is meant by Vitamin?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
[h=3]வைட்டமின் என்றால் என்ன?[/h]செயல்படுவதற்கு பலவகையான பொருட்கள் அதற்குத் தொடர்ந்து தேவைப்படுகின்றன. தொடர்ந்து மூச்சுவிடுவதன் மூலமும், சாப்பிடுவதன் மூலமும் அந்தப் பொருட்களை நம்முடைய உடலுக்கு நாம் வழங்கி வருகிறோம்.

வளர்ச்சி, பழுதுபார்ப்பு மற்றும் ஆரோக்கியம் பேணுதல், அவற்றுக்குத் தேவையான ஆற்றல் - இவைதான் மனித உடலின் அடிப்படைத் தேவைகள்.

மனித உடல் பலவகையான திசுக்களால் ஆனது என்றாலும் அவற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது செல்கள்தான். இந்த செல்களில் நிகழும் பல்லாயிரக்கணக்கான வேதிவினைகள்தான் மனித உடலின் வளர்ச்சிக்கும், பழுதுபார்ப்பு மற்றும் ஆரோக்கியம் பேணுவதற்கும், அவற்றுக்குத் தேவையான ஆற்றலைப் பெறுவதற்கும் காரணமாக இருக்கின்றன.

உடலின் வளர்ச்சி, பழுதுபார்ப்பு மற்றும் ஆரோக்கியம் பேணுவதற்கு புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் போன்ற பலவகையான பொருட்கள் தேவைப்படுகின்றன. உண்ணும் உணவிலிருந்து உடல் இவற்றைப் பெறுகின்றது.

உடலின் மற்ற செயல்கள் நிகழ்வதற்கு தேவைப்படும் ஆற்றலைப் பெற தரசமும், ஆக்சிஜனும் உடலுக்கு தேவைப்படுகின்றன. உண்ணும் உணவிலிருந்து தரசத்தை (மாவுப் பொருள்) உடல் எடுத்துக்கொள்கிறது. மூச்சுக் காற்றிலிருந்து தேவையான ஆக்சிஜன் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இதுதான் மனித உடலின் அடிப்படையான இயங்குமுறை. இது பற்றி இப்போது மிகவும் விரிவாகவும், நுட்பமாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரையில்கூட மனித உடலின் உணவுத் தேவை பற்றி எதுவும் கண்டறியப்பட்டிருக்கவில்லை. சில குறிப்பிட்ட உணவுப் பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதை மட்டுமே மனிதர்கள் அறிந்திருந்தனர். அந்த உணவுப் பொருட்களில் என்னென்ன உணவுச் சத்துகள் இருக்கின்றன என்பது பற்றி எதுவும் தெரியாது.

பின்னர், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பொருட்களை வேதியல் முறையில் பகுத்தாய்வதில் வளர்ச்சி ஏற்படத் தொடங்கியது. இதனால், இயற்கையாக கிடைக்கக் கூடிய பொருட்களை அவற்றின் சுத்தமான வடிவத்தில் பிரித்தெடுப்பதும், அவற்றின் வேதியல் அமைப்பை கண்டறிவதும், அவற்றை செயற்கையான முறையில் உற்பத்தி செய்வதும் சாத்தியமானது.

அந்த வளர்ச்சியின் விளைவாக, ஆராய்ச்சியாளர்களால் உணவிலுள்ள சத்துப் பொருட்களை அவற்றினுடைய சுத்தமான வடிவத்தில் பிரித்தெடுக்க முடிந்தது. அதனால், இதுபோல சுத்தமான வடிவத்தில் பிரித்தெடுக்கப்பட்ட உணவுச் சத்துகள் உடலில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை மிகவும் துல்லியமாக பரிசோதித்தறிவதும் சாத்தியமானது.

இதுபோன்ற முறையில், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தரசம் (மாவுப் பொருள்), புரதம், கொழுப்பு, தாதுப் பொருட்கள் ஆகிய உணவுச் சத்துகள் உடலின் ஆரோக்கியத்திற்கு தேவைப்படுகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் மிகவும் திட்டவட்டமாக கண்டறிந்தனர்.

இந்த உணவுச் சத்துகள் அவற்றின் சுத்தமான வடிவத்தில் பிரித்தெடுக்கப்பட்டு அவற்றின் வேதியல் அமைப்புகளும் கண்டறியப்பட்டன. அதேபோல, அவற்றை செயற்கையாக தயாரிக்கும் முறைகளும் கண்டறியப்பட்டன.

இந்த நிலையில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சில ஆராய்ச்சியாளர்கள் சோதனை பிராணிகளுக்கு இந்த உணவுச் சத்துகளை அவற்றின் சுத்தமான வடிவத்தில் கொடுத்து அவை உடலில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆராய்ந்து வந்தனர்.

ஆனால், இந்த உணவுச் சத்துகளை மட்டும் அவற்றின் சுத்தமான வடிவத்தில் தேவையான அளவுகளில் சோதனை பிராணிகளுக்கு கொடுத்து பரிசோதித்தபோது அவை விரைவிலேயே உடல் நலம் குன்றி உயிரிழப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர்.

எனவே, இந்த உணவுச் சத்துகளைத் தவிர வேறு ஏதோ சில உணவுச் சத்துகளும் மிகவும் குறைந்த அளவில் உயிர் வாழ்க்கைக்கு கட்டாயமாக தேவைப்படுகின்றன என்று அவர்கள் முடிவு செய்தனர்.

அது போன்ற அடையாளம் கண்டறியப்படாத உணவுச் சத்துகளுக்கு துணை உணவு காரணிகள் (Accessory Food Factors) என்று பெயர் சூட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த துணை உணவு காரணிகளைக் கண்டறியும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் மிகத் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினர்.

இந்த நிலையில், சில ஆராய்ச்சியாளர்கள் துணை உணவு காரணிகள் சிலவற்றைக் கண்டறிந்தனர். உயிர் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஒரு அமைனை (Amine - அமைன் என்பது வேதிப் பொருட்களில் ஒரு வகை) கண்டுபிடித்து விட்டதாக அவர்கள் நம்பினர். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அந்தப் பொருளுக்கு விட்டமைன் (Vital + Amine = Vitamine) என்று பெயர் சூட்டினர். அதைத் தொடர்ந்து மற்ற விட்டமைன்களைக் கண்டறியும் ஆராய்ச்சி முழு வேகமடைந்தது.

நூற்றுக்கணக்கானவர்கள் அந்த ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கினர். அதன் விளைவாக பல துணை உணவுக் காரணிகள் கண்டறியப்பட்டன. பின்னர் அவற்றின் பெயர் வைட்டமின் என மாற்றப்பட்டது.

வைட்டமின் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாக தேவைப்படும் ஒரு சத்துப்பொருள். பெரும்பாலான வைட்டமின்கள் வளர்சிதை மாற்றச் செயல்களில் முக்கியப் பங்கு எடுத்துக்கொள்கின்றன. எனவே, வைட்டமின்கள் பற்றாக் குறையாகும்போது சில முக்கியமான வளர்சிதை மாற்றச் செயல்கள் நிகழாமல் போகின்றன. இதனால், உடல் பலவிதமாக பாதிக்கப்படுகிறது.

வைட்டமின்கள் அவை செயல்படும் விதத்தில் ஹார்மோன்களையும், என்சைம்களையும் ஓரளவு ஒத்திருக்கின்றன. ஆனால், அவை கிடைக்கும் விதத்தில் வித்தியாசம் இருக்கிறது.

அதாவது, ஹார்மோன்களையும், என்சைம்களையும் நாம் உட்கொள்ளும் உணவிலுள்ள வேறு பொருட்களைப் பயன்படுத்தி உடலே தயாரித்துக்கொள்கிறது. ஆனால், வைட்டமின்களை அது போல நமது உடலால் தயாரிக்க இயலாது. வைட்டமின்களைத் தயாரிக்கும் திறனை நமது உடல் இழந்து விட்டது. (வேறு உயிரினங்களுக்கு அந்த திறன் இருக்கிறது.)

எனவே, வைட்டமின்கள் அதே வடிவில் நமது உடலுக்குத் தேவைப்படுகின்றன. அதாவது வைட்டமின்களைத் தயார் நிலையில் நாம் நமது உடலுக்கு வழங்க வேண்டியதிருக்கிறது. இதுபோல தயார் நிலையில் நமது உடலுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துகள் வைட்டமின்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்த காரணத்தினால் நமக்கு வைட்டமினாக இருக்கும் ஒரு பொருள் வேறு உயிரினங்களுக்கு வைட்டமினாக இருப்பதில்லை. அதாவது வேறு உயிரினங்களுக்கு அந்தப் பொருள் தயார் நிலையில் தேவைப்படுவதில்லை. உணவில் உள்ள வேறு பொருட்களிலிருந்து அந்த உயிரினங்களின் உடலே அதை தயாரித்துக்கொள்ளும்.

எனவே, வைட்டமின்கள் எனறால் தயார் நிலையில் நமது உடலுக்கு தேவைப்படும் உணவுச் சத்துகள் என்று கூறலாம். வைட்டமின்கள் பொதுவாக மிகக் குறைந்த அளவில்தான் நமது உடலுக்குத் தேவைப்படுகின்றன. அந்த மிகக் குறைந்த அளவும் கிடைக்காதபோதுதான் அவற்றின் பற்றாக்குறையால் மனித உடல் பலவிதமாக பாதிக்கப்படுகிறது.


 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
[h=3]தேவையான வைட்டமின்கள்[/h]ஊட்டச்சத்துக்களில் இரண்டு முக்கியமான பிரிவுகள் உள்ளன. ஒன்று, கொழுப்புச் சத்துக்கள், புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட்கள் அடங்கிய பெரிய பிரிவாகும். இரண்டாவது வைட்டமின்கள், கனிச்சத்துகள் அடங்கிய சிறிய பிரிவாகும்.

நம் உடலின் செல்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு வைட்டமின்கள் மிக முக்கியமானதாகும். செல்கள் வளர்ச்சியிலும், பழுதை சரி செய்வதிலும் வைட்டமின்களுக்கு பங்கு உண்டு.

ஒரு குறிப்பிட்ட வைட்டமினை தினமும் நமக்கு தேவையான அளவு எடுத்துக் கொள்ளவில்லை என்றால் நம் ஆரோக்கியம் சீர்குலைகிறது. உடலின் வளர்ச்சிக்கு மற்றும் மாற்றங்களுக்கு வைட்டமின்கள் கட்டாயத் தேவையாகும்.

ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இன்றியமையாத வைட்டமின்கள் இருவகைப்படும். அவை:

கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் - 13,

நீரில் கரையும் வைட்டமின்கள் - 27.

வைட்டமின் -"ஏ", "டி", "இ" மற்றும் வைட்டமின் "கே" ஆகியவை நம் உடலின் ஜீரண சக்திக்கு தேவையான கொழுப்புச் சத்துக்களை கொழுப்பில் கரையும் வைட்டமின்களாக மாற்றுகிறது.

பி-காம்ப்ளெக்ஸீம், வைட்டமின் - "சி" யும் நீரில் கரையும் வைட்டமின்களாகும்.

இந்த வைட்டமின் தன்னுடைய தூய்மையான வடிவத்தில் வெளிர் மஞ்சள் நிற கலவையாக இருக்கும்.

நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து பெரும் பகுதி "கெரோடின்" என்ற வைட்டமின் "ஏ" ஊட்டச்சத்துக்களை வைட்டமின் "ஏ" வாக மாற்றும் சக்தி கொண்டது நம் உடல்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
நம் உணவுப் பழக்கவழக்கங்களின் முக்கியமான ஒரு உறுப்பாக திகழும் இந்த வைட்டமின்கள் எதற்காக இவ்வளவு முக்கியமானது என்பதை கீழே காணலாம்:-

எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியம்.
உடலின் சருமத்தையும், கூந்தலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

இரவு நேரங்களிலும், மங்கலான வெளிச்சத்திலும், சாதாரணமாக பார்க்க வைட்டமின் உதவுகிறது.

என்று மேலும் பல குணங்களைக் கொண்டது இந்த வைட்டமின்கள்.

வைட்டமினின் வகைகள் மற்றும் அவற்றின் ஆற்றல்கள்:-

முட்டை, பால் - புரதச் சத்துக்கள், பச்சைக் காய்கறிகள், மஞ்சள் - ஆரஞ்சு நிறப்பழங்கள், மாம்பழம், கேரட் ஆகியவற்றில் வைட்டமின் "ஏ" சத்து அதிகம் கிடைக்கும்.

"தியாமைன்" என்று அழைக்கப்படும் வைட்டமின்களின் மிகப்பெரும் பிரிவு வைட்டமின் "பி"-காம்ப்ளெக்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

வைட்டமின் "பி1" என்பது வைட்டமின் "பி" பிரிவுகளிலேயே மிகவும் முக்கியமானது. சரியான அளவு வைட்டமின் "பி-1" எடுத்துக் கொண்டால் நம் உடலின் அனைத்துப் பகுதிகளும் சரியாக இயங்கும். ரொட்டி உள்ளிட்ட அனைத்து கோதுமை உணவுகள், கோதுமை சாதம், மீன் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றில் வைட்டமின் "பி" சத்துக்கள் ஏராளம்.

"பி-2" என்ற "ரிபோஃப்ளேவின்" வாய், நாக்கு மற்றும் நம் உடல் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
நம் உடலுக்குத் தேவையான சக்தியை உருவாக்க மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்களிலிருந்து சக்தியை வெளியிட, பல்வேறு என்சைம்களுடன் கூட்டு சேர்ந்து, சக்தி உற்பத்தியில் செல்கள் ஆக்சிஜனை பயன்படுத்த, இந்த வைட்டமின் "பி" பெரிதும் உதவுகிறது.

பால், வெண்ணை, முட்டை, பச்சைக்காய்கறிகள், கோதுமை, தானியத்திலிருந்து பெறப்பட்ட மாவு வகைகள், ஆகியவற்றில் இந்த "பி-2" சத்து அதிகம்.

அடுத்ததாக வைட்டமின் "பி" பிரிவில் முக்கியமானது "நியாசின்" என்ற "பி" வைட்டமின். இது ஜீரண மற்றும், நரம்பு அமைப்புகளை பாதுகாக்க உதவுகிறது. ஆரோக்கியமான சருமப் பாதுகாப்பிற்கும் இந்த வைட்டமின் பயன்படுகிறது. மேலும் பெருங்குடல், சிறுகுடல், வாய், நாக்கு இவற்றின் "சளிச்சவ்வில்" ஏற்படும் வீக்கத்திலிருந்து இந்த வைட்டமின் "பி-நியாசின்" பாதுகாப்பு அளிக்கிறது. மீன், காய்ந்த பீன்ஸ்களில் "நியாசின்" அதிகமாகக் கிடைக்கிறது. வைட்டமின் "பி-2" செல்களின் மரபியல் சார்ந்த வளர்ச்சிக்கு பெரிதும் தேவைப்படும் வைட்டமின். எலும்பின் உள்ளே இருக்கும் மெல்லிய கொழுப்பில் சிவப்பணு செல்களின் வளர்ச்சியை ஏற்படுத்த இது பெரிதும் உதவும் வைட்டமினாகும்.

ரத்தத்தில் இருக்கும் வைட்டமின் "பி" ரத்த சோகையை தடுக்கிறது வைட்டமின் "பி-12". இது இறைச்சி, மீன், முட்டை, ஈஸ்ட் மற்றும் பால் புரதப் பொருட்களில் பெரிதும் காணப்படுகிறது.

வைட்டமின் "டி" தவிர மற்றவை எல்லாமே தாவர உணவிலிருந்தே நமக்கு கிடைக்கும்
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
வைட்டமின் மாத்திரைகள் அறிந்ததும் அறியாததும்!

''எப்பவும் டயர்டா இருக்கு. சுறுசுறுப்பா எந்த வேலையும் செய்ய முடியலை, முடி கொட்டுது. சத்துக்குறைவா இருக்கும்னு தோணுது. ஏதாவது சத்து மாத்திரை எழுதித் தாங்க டாக்டர்' இப்படிக் கேட்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.

ஆரோக்கியமான சரிவிகித உணவை உட்கொண்டதுபோய், காலையில் இரண்டு, மதியம் ஒன்று, இரவுக்கு மூன்று என மாத்திரைகள் மூலமே ஆரோக்கியமாக வாழ்ந்துவிடலாம் என நம்பத் தொடங்கிவிட்டோம். ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியப்பட்டு டாக்டரின் ஆலோசனைப்படி மாத்திரை எடுத்துக்கொள்வதில் தவறு இல்லை. ஆனால், சுயமாக ஊட்டச்சத்து மாத்திரைகள் சாப்பிடுவதால் பாதிப்புகள்தான் அதிகம்.

யாரெல்லாம் வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம், எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளலாம், வைட்டமின் மாத்திரைகளிலும் பக்கவிளைவுகள் உண்டா என்கிற நம் சந்தேகங்களை, டாக்டர் சாய்கிஷோர் முன் வைத்தோம்.

"கண் சற்று மங்கலாக இருந்தால் அதை உணவு மூலம் எப்படி சரி செய்யலாம் என யோசிப்பதை விட்டு விட்டு, ஏதாவது மாத்திரை தருமாறுதான் கேட்கின்றனர். பொதுவாக வைட்டமின்களை, நீரில் கரைபவை, கொழுப்பில் கரைபவை என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். இதில், பெரும்பாலானவற்றை நம் உடல் தானாக உற்பத்தி செய்ய முடியாது. எனவே உணவு மற்றும் மாத்திரைகள் மூலமாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும்.

நீரில் கரையும் தன்மையுள்ள பி மற்றும் சி வைட்டமின்கள் உடலில் அதிகம் சேர்ந்தாலும் சிறுநீரில் கரைந்து எளிதில் வெளியேறிவிடும். எனவே, இந்த இரண்டு வைட்டமின் களை உணவின் மூலமாக எடுத்துக்கொள்ள முடியாத போது, மாத்திரைகளாக எடுத்துக் கொள்ளலாம்.

ஏ, டி, கே போன்ற வைட்டமின்களை கொழுப்புள்ள உணவுப் பொருட்களுடன் மட்டுமே எடுத்துக்கொள்வது நல்லது. ஏனெனில், இந்த வைட்டமின்கள் கொழுப்பு சேகரிக்கப்படும் இடங்களில் சேகரம வாதால், இந்த வகை வைட்டமின்கள் அதிகரித் தாலும் சிக்கல்தான்" என்கிறார் சாய் கிஷோர்.

வைட்டமின் அதிகரிப்பதால் வரும் பிரச்னைகள்

வைட்டமின் ஏ
வைட்டமின் ஏ அன்றாடம் சராசரியாக 4,500 மைக்ரோ கிராம் தேவை. இதற்கும் அதிகமாக இந்த வைட்டமின் நம் உடலில் சேரும்போது 'ஹைப்பர் வைட்டமினோசிஸ்’ என்னும் டாக்சிக் நிலை ஏற்படும். இதனால் பசியின்மை, வாந்தி, தலைவலி, முடி உதிர்தல், தூக்கமின்மை என சின்னச்சின்னப் பிரச்னைகளில் தொடங்கி அதிகப்படியான வைட்டமின்கள், உடலில் இருந்து வெளியேற்றப்பட முடியாமல் கல்லீரலிலே தங்குவதால், கல்லீரல் செயல்பாட்டையே பாதிப்பது வரை சென்றுவிடும். மேலும், எலும்புகளைக் கடினமடையச் செய்து சாதாரண கை, கால் அசைவின்போதுகூட வலியை ஏற்படுத்தக்கூடும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் முதல் மூன்று மாதங்கள் கண்டிப்பாக இந்த மாத்திரைகளை எடுக்கக் கூடாது. ஏனெனில் இதை எடுத்துக்கொள்வதால், குழந்தைகளின் உடலுறுப்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

வைட்டமின் டி
எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் சத்தினை உடல் உறிஞ்சிக்கொள்ள வைட்டமின் டி மிக முக்கியம். ஆனால் இது அதிகமாகும்போது, சிறுநீரகத்தில் படிந்து, கற்களை உண்டாக்கி விடும். இதனால் அடிவயிற்றில் வலி, மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு, கடைசியில் சிறுநீரகமே செயலிழக்க நேரிடும். மாதவிடாய் நின்ற பெண்கள்கூட மிகவும் அவசியமெனில் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அதிகபட்சம் வாரத்துக்கு 60,000 யூனிட்ஸ் என்ற அளவில் எட்டு வாரங்களுக்கு மட்டுமே இந்த மாத்திரைகளைத்் தொடர்ந்து எடுக்கலாம். இதன் அளவு அதிகமானால், 'ஹைப்பர் பாராதைராய்டிசம்’ என்ற ஹார்மோன் பாதிப்பு ஏற்படும் என்பது நினைவில் இருக்கட்டும்.

வைட்டமின் இ
இப்போது கடைகளில் கிடைக்கும் காஸ்மெட்டிக் பொருட்கள் பலவற்றிலும் வைட்டமின் இ நிறைந்திருக்கிறது. இன்றைய இளம் பெண்கள், முகப்பரு பிரச்னை வந்தால் தாங்களாகவே வைட்டமின் இ மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர். இது நல்லதல்ல. வைட்டமின் இ அளவு அதிகமாகும்போது, ரத்த இழப்பு பாதிப்பு ஏற்படலாம். பெண்கள் மாதவிடாய் மற்றும் கர்ப்பக் காலங்களில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இந்த மாத்திரைகளை கண்டிப்பாக எடுக்கக் கூடாது. மேலும், வைட்டமின் இ மாத்திரைகள், ஆண்தன்மைக்கான இனப்பெருக்க செயல்பாட்டை அதிகரித்தாலும், தொடர்ச்சியாக எடுக்கும்போது, அரிதாக புராஸ்டேட் கேன்சரை உண்டாக்கிவிடலாம்.

வைட்டமின் கே
ரத்தம் உறைதலுக்கு இந்த வைட்டமின் ரொம்பவும் தேவை. ஆனால், இது உடலில் அதிகமாகும்போது 'ஹைப்பர் த்ராம்போனீமியா’ என்ற பாதிப்பு ஏற்படுவதால் அளவுக்கதிகமாக ரத்தம் உறைந்து ரத்தக் கட்டிகளை உண்டாக்கிவிடும். இந்த ரத்தக் கட்டிகள், நம் ரத்த ஓட்டத்தில் கலந்து உடலின் மற்ற பகுதிகளுக்கக்ச் செல்லும்போது மூளை மற்றும் இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற் படுத்திவிடும். இதனால் திடீர் பக்கவாதம், மாரடைப்பு ஆகியவை ஏற்படலாம். மேலும் இதய நோய்களுக்காக ஆன்டி கோயாகுலன்ட்ஸ் (anti coagulants) மாத்திரைகளான வார்ஃபாரின் மற்றும் ஆஸ்பிரின் எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரைக் கேட்காமல் வைட்டமின் கே மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவே கூடாது.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
சென்னை 'க்வா நியூட்ரிஷன்' அமைப்பைச் சேர்ந்த உணவியல்
நிபுணர் கிருத்திகா ராஜன் தரும் வைட்டமின் டிப்ஸ்:

வைட்டமின் ஏ குறையும்போது, பார்வை மங்குதல், மாலைக் கண் நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும். கேரட், பப்பாளி, மஞ்சள் நிற குடமிளகாய், சர்க்கரை வள்ளிக் கிழங்கு மற்றும் கீரை இவற்றை சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் ஏ குறைபாட்டைத் தவிர்க்கலாம்.

பி வைட்டமின்களில் பலவகைகள் உள்ளன. இதில், பி12 மற்றும் பி9 (ஃபோலிக் ஆசிட்) இரண்டும் ரத்த அணுக்கள் உற்பத்திக்கு மிக முக்கியமானவை. இவற்றின் குறைபாட்டினால் ரத்த சோகை மற்றும் நரம்பு மண்டலப் பாதிப்புகள் ஏற்படலாம். இதைத் தடுக்க, முட்டை, இறைச்சி, சம்பா கோதுமை, முட்டைக்கோஸ், கீரை ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சூரிய ஒளியிலுள்ள அல்ட்ரா கதிர்களினால் உற்பத்தி செய்யப்படும் வைட்டமின் டி, எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகளவில் கிடைப்பதற்குத் தேவை. சூரிய ஒளி அதிக அளவில் கிடைக்காத சிறியவர்களுக்கு ரிக்கட்ஸ், வயதான பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க, மீன் எண்ணெய், முட்டை, இறைச்சி, ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவினைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாலுடன் கலந்து வைட்டமின் டி மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் சி அவசியம். இந்தச் சத்து குறைந்தால், ஸ்கர்வி என்னும் பல் பாதிப்பு ஏற்படும். சிட்ரஸ் வகைகளான ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லி மற்றும் பப்பாளி, கீரை வகைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் பாதிப்புகளைத் தடுக்கலாம். வைட்டமின் சி உள்ள உணவுப் பொருள்களுடன், இரும்பு நிறைந்த பேரீச்சை, திராட்சை போன்றவற்றையும் சேர்த்து உண்ணலாம்.

வைட்டமின் இ மிகச் சிறந்த 'ஆன்டி ஆக்சிடன்டாக’ செயல்பட்டு புற்றுநோயைத் தடுக்கிறது. இது குறையும்போது வயதான தோற்றம், குறைப் பிரசவம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இந்த சத்துக் குறைபாட்டைத் தவிர்க்க பாதாம், முளைகட்டிய கோதுமை, பருத்தி எண்ணெய், சூரிய காந்தி எண்ணெயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உணவு செரித்தலின்போது குடல் பகுதியில் உள்ள நுண்ணுயிரிகளால் உற்பத்தி செய்யப்படும் வைட்டமின் கே சத்தின் அளவு குறைந்தால், ரத்தம் உறைதல் பாதிப்புகள் ஏற்படும். கேரட், காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், சோயா எண்ணெய் இவற்றை தினமும் சேர்த்துக்கொள்வதன் மூலம், இந்த பாதிப்புகளைத் தடுக்கலாம்.

நன்றி டாக்டர் விகடன்
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#6
தெளிவான பார்வைக்கு வைட்டமின் ஏ

'என்ன உங்க ரெண்டு குழந்தைங்களும் கண்ணாடி போட்டிருக்காங்களே... சும்மா ஸ்டைலுக்கா?''
''இல்லை... அவங்களுக்கு ஷார்ட் சைட்...'' - இது சர்வசாதாரணமாகி விட்டது இன்று. ஏழு, எட்டு வயதுக் குழந்தைகள் கூட, கண்களில் ஏற்படும் குறைபாட்டால் கண்ணாடி அணியவேண்டியிருக்கிறது. இதற்கு வைட்டமின் ஏ சத்து குறைபாடும் ஒரு முக்கிய காரணம்.

நோய் எதிர்ப்பு சக்தி, பார்வைத் திறன், செல்களுக்கு இடையேயான தொடர்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகளுக்குத் தேவைப்படக்கூடிய ஊட்டச்சத்து தான், வைட்டமின் ஏ.

வைட்டமின் ஏ பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகள், நிவர்த்தி செய்யும் வழிகள் ஆகியவை பற்றி, மூத்த டயட் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டோம்.


'ப்ரீஃபார்ம்டு வைட்டமின் ஏ (Preformed VITAMIN A ), புரோ வைட்டமின் ஏ கரோட்டினாய்ட்ஸ் (Provitamin A carotenoids) என்று இரண்டு வகைகளில் நமக்கு வைட்டமின் ஏ கிடைக்கிறது.

ப்ரீஃபார்ம்டு வைட்டமின் ஏ என்பது பால் பொருட்கள், மீன் உள்ளிட்ட விலங்குகளில் இருந்து பெறப்படும் உணவுகள் மூலமாக கிடைக்கக்கூடியது. காய்கறிகளில் இருக்கும் பீட்டாகரோட்டின் மூலமாகவும் நமக்குக் கிடைப்பதை புரோ வைட்டமின் ஏ என்கிறோம். இதை நாம் சாப்பிடும்போது நம் உடல் இதை வைட்டமின் ஏ-வாக மாற்றிவிடுகிறது.

ஏன் தேவை?
வைட்டமின் - ஏ -யின் முக்கியப் பணி, தெளிவான கண் பார்வையைத் தருவதுதான். புரதச்சத்துத் தயாரிப்பில் பங்குகொள்வதன் மூலம், உடலில் உள்ள செல்களின் வளர்ச்சிக்கும், உடலுக்கு அதிக எதிர்ப்பு சக்தியைக் கூட்டவும், ஈறுகளை வலுப்படுத்தவும், செரிமானத்துக்கும் உதவுகிறது.

மேலும், சருமப் பாதுகாப்புக்கும், நரம்பு மற்றும் எலும்புகளை உறுதியாக்கவும் வைட்டமின் ஏ தேவை.

குறைவால் ஏற்படும் பாதிப்புகள்
வைட்டமின் ஏ குறைபாட்டால் கண்தான் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. அடுத்து தோல், எலும்பு, நரம்பு, செல்கள் பாதிக்கப்படும்.

சிறுநீரக நோய், கல்லீரல் சுருக்க நோய் மற்றும் அடைப்பு, காமாலை நோய் உள்ளவர்களுக்கு வைட்டமின் ஏ பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உண்டு. புற்றுநோய், மூச்சுக் கோளாறுகள், நரம்புத் தளர்ச்சி போன்றவை வைட்டமின் ஏ குறைபாட்டினால் வரக்கூடிய நோய்கள்.

மாலைக் கண், ஜெரோஸிஸ் கன்ஜக்டிவா (Xerosis conjunctivae) எனப்படும் கண் உலர்தல், விழித்திரை பாதிப்பு (xerosis cornea) போன்ற கண் தொடர்பான பாதிப்புகளும் வைட்ட மின் ஏ குறைவால் வருகின்றன.

இதில், கெராட்ஸ் மலேசியா (Kerats Malaycia) எனப்படும் கண் நோய் வகை, கண் பார்வையை போக வைத்துவிடும் கடைசிக் கட்டம். இந்த வைட்டமின் உடலுக்குக் கிடைப்பது குறைந்தவுடனேயே நோய்கள் ஏற்படுவது இல்லை. சுமார் நான்கு மாதங்கள் தொடர்ந்து உடலுக்கு கிடைக்காமல், கல்லீரலில் சேமித்து வைத்த வைட்டமின் ஏ சத்தும் தீர்ந்து போன பின்தான் நோய்கள் தாக்கத் தொடங்கும்.


வைட்டமின் ஏ அதிகம் உள்ள உணவுகள் என்ன?
ஈரல், முட்டை மஞ்சள் கரு, நண்டு, ஆட்டு மாமிசம், மீன் எண்ணெய், மீன் எண்ணெய், வெண்ணெய், பால், சீஸ் போன்ற உணவுகளில் அதிகம் இருக்கிறது.

கேரட், கீரைகள், முட்டைகோஸ், பரங்கிக்காய், முருங்கைக்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்ற காய்கறிகளிலும் மாம்பழம், கேரட், ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி போன்ற பழவகைகளிலும் வைட்டமின் ஏ அதிகம் இருக்கிறது.

கொஞ்சம் காலத்துக்கு முன்பு வருடா வருடம் 20,000 பேர் வைட்டமின் ஏ குறைபாட்டால் பாதிக்கப்பட்டு வந்தனர். இப்போது நியூட்ரீஷியன் பிளைன்ட்னஸ் (Nutrition blindness) என்ற அமைப்பு மூலம் அரசாங்கம் ஆறு மாதத்துக்கு ஒரு முறை கண்களுக்கு சொட்டு மருந்து விடுவது, வைட்டமின் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய விழிப்புஉணர்வு மற்றும் வகுப்புகள் எடுப்பதன் மூலம் அவை கட்டுக்குள் வந்துள்ளது. இதற்கு, 2 லட்சம் யூனிட்கள் சொட்டு மருந்து இதற்கு பயன்படுத்தப்படுகிறது.


பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க...
இது மாம்பழ சீசன்... இப்போது வாங்கிச் சாப்பிட்டால் நான்கு மாதத்துக்கு தேவையான வைட்டமின் ஏ உடலில் சேரும்.
தினமும் 200 கிராம் கேரட், பால் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

காய்கறி, பழங்கள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு மீன் எண்ணெய் மாத்திரை, மருந்து கொடுக்கலாம்.

நன்றி டாக்டர் விகடன்

 

Attachments

Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#7
எலும்பின் காவலன் வைட்டமின் டி

20 வருடங்களுக்கு முன் நாம் கேள்விப்பட்டிராத, சின்ன சின்னக் குறைபாடுகள் எல்லாம் இப்போது, சர்வசாதாரணமாகக் கேள்விப்படும் நோய்களாகிவிட்டன. அதிலும், நவீன வாழ்க்கைமுறை மாற்றத்தால் ஏற்பட்டிருக்கும் முக்கியமான பல பிரச்னைகளுள் ஒன்று, வைட்டமின் டி குறைபாடு. முந்தைய தலைமுறையைவிட, இப்போதைய தலைமுறையினரிடம்தான் இந்தக் குறைபாடு அதிகமாகக் காணப்படுகிறது. நம் உடல் கால்சியம் சத்தைக் கிரகிக்க வைட்டமின் டி தான் அடிப்படைத் தேவை. வைட்டமின் டி சத்தின் முக்கியத்துவம், அது குறைந்தால் ஏற்படும் பிரச்னைகள், சரிசெய்யும் வழிமுறைகள் போன்றவற்றுக்கு விரிவான விளக்கம் தருகிறார், சென்னை இ.எஸ்.ஐ. கல்யாணி மருத்துவமனையின் பொது மருத்துவர் டாக்டர் எழிலன்.

''மற்ற வைட்டமின்களைவிட வைட்டமின் டி கொஞ்சம் ஸ்பெஷல்தான். கொழுப்பில் கரையக்கூடிய இந்த வைட்டமினை, நம் தோலே உற்பத்தி செய்கிறது. மேலும், நம் உடலில் கால்சியம் எப்போதெல்லாம் குறைகிறதோ, அப்போது வைட்டமின் டி, குடலில் இருக்கும் கால்சியம் சத்தை அதிகமாக உறிஞ்சிக்கொள்ளும். அதே நேரம், சிறுநீரில் கால்சியம் அதிகம் வெளியேறுவதைக் குறைத்து, அதையும் ரத்தத்தில் சேர்த்துவிடும். இயற்கையின் அதிசயமான இந்தத் தொழில்நுட்பத்தால், உடலில் கால்சியத்தின் அளவைச் சீராகப் பராமரிக்க உதவுகிறது வைட்டமின் டி.

குழந்தைகளுக்கு வைட்டமின் டி குறையும்போது, 'ரிக்கட்ஸ்’ என்னும் நோய் ஏற்படும். பெரியவர்களுக்கு வைட்டமின் டி குறைபாட்டால் வரும் நோய், ஆஸ்டியோபீனியா.

தசை, எலும்பு, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் அணுக்களைப் பராமரிப்பது போன்ற அனைத்து பணிகளும், கால்சியம் வைட்டமின் டி கூட்டுமுயற்சியால் நடப்பதுதான்.

ஊட்டச்சத்து மிக்க உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பது, சூரிய வெளிச்சமே உடலில் படாமல் இருப்பது போன்ற காரணங்களால், வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது. இதனால், உடலில் கால்சியம் குறையும். அதைச் சரிசெய்ய, கழுத்தில் இருக்கும் தைராய்டு சுரப்பிக்குள் உள்ள பாராதைராய்டு சுரப்பி, PTH என்ற ஹார்மோனைச் சுரந்து, தன்னிச்சையாக எலும்பில் இருக்கும் கால்சியத்தைப் போகச்சொல்லிக் கட்டளையிடும். இதனால் எலும்பின் அடர்த்தி பாதிக்கப்படுகிறது.

வயது முதிர்ந்தவர்களுக்கு, உடலில் கால்சியம் உற்பத்தி குறைந்துவிடுவதால், எலும்பிலுள்ள கால்சியம் ரத்தத்தில் கலந்துவிடுகிறது. இதனால் எலும்புகள் வலுவிழந்து விடுகிறது. இந்த சமயத்தில், லேசாக அடிபட்டாலோ, கீழே விழுந்தாலோகூட, உடனே எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்பு உண்டு. அதிலும் ஆஸ்டியோபோரோஸிஸ் நோயாளிகளுக்கு, எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம்.


சூரிய ஒளி படும்படி வாழ்பவர்களுக்கு வைட்டமின் டி சாதாரணமாக இருக்கும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்பவர்கள் மற்றும் ஏ.சி அறை அல்லது மூடிய அறைகளிலேயே அதிக நேரம் இருப்பவர்களுக்கு வைட்டமின் டி குறைவாக இருக்கும். கை வலி, அசதி, முழங்கால் வலி, தசை வலி, இருமல், சளி போன்றவை இருந்தால், மருத்துவர் பரிந்துரையோடு, வைட்டமின் டி-யின் அளவைப் பரிசோதித்து, தேவையான சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.

பெண்களுக்கு மெனோபாஸுக்குப் பிறகு, ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் சுரப்பு குறைவதால், கை, கால், இடுப்பு வலி என உடலில் பல்வேறு பிரச்னைகள் தோன்ற ஆரம்பிக்கும். டாக்டரிடம் ஆலோசனை பெற்று, வைட்டமின் டி சத்து மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.

நாள் ஒன்றுக்கு, 200 முதல் 400 யூனிட் வரை வைட்டமின் டி-யும், 800 முதல் 1200 யூனிட் கால்சியமும் தேவை. பால், தயிர், கேழ்வரகு, மாமிச உணவுகள், வாழைத்தண்டு போன்ற உணவுகளில் இருந்து, வைட்டமின் டி சத்தை நேரடியாக நாம் பெறலாம். காய்கறிகளில் வைட்டமின் டி சத்து மிகவும் குறைவு என்பதால், அதிக அளவு காய்கறிகளை எடுத்துக்கொள்வதன் மூலம் சிறிதளவேனும் வைட்டமின் டி-யை பெறலாம். உணவு மூலமாகக் கிடைக்காதபோது, மாத்திரைகள் மூலமாகவும் எடுத்துக்கொள்ளலாம். கல்லீரல் பிரச்னைகள் மற்றும் சிறுநீரகப் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு, தேவைப்பட்டால் சதையிலேயே நேரடியாக, செயல்திறன் மிக்க வைட்டமின் டி கொடுக்கப்படுகிறது.''

- பிரேமா

சருமத்துக்கு வைட்டமின் டி எந்த அளவு தேவை என்பது குறித்து சரும நோய் நிபுணர் டாக்டர் ஓ.எஸ்.ரமணி:

சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களின் (Ultra violet rays) உதவியுடன், நம் சருமம் வைட்டமின் டி-யை தயாரித்துக்கொள்ளும். காலையில் சூரியன் உதித்த பிறகு ஒரு மணி நேரமும், மாலையில் சூரியன் அஸ்தமிக்கும் முன்பு ஒரு மணி நேரமும் (Dawn & Dusk) நம் சருமத்தில் சூரிய ஒளி படுவது நல்லது. எனவே, வாக்கிங், ஜாகிங் போன்ற பயிற்சிகளை குறிப்பிட்ட அந்த நேரத்தில் வைத்துக்கொள்வதன் மூலம் வைட்டமின் டி குறைபாடு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.நன்றி டாக்டர் விகடன்

 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#8
வலுவான உடலுக்கு வைட்டமின் சி!

''எப்பவும் டயர்டா இருக்கு. சுறுசுறுப்பா எந்த வேலையும் செய்ய முடியலை, முடி கொட்டுது. சத்துக்குறைவா இருக்கும்னு தோணுது. ஏதாவது சத்து மாத்திரை எழுதித் தாங்க டாக்டர்' இப்படிக் கேட்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.

ஆரோக்கியமான சரிவிகித உணவை உட்கொண்டதுபோய், காலையில் இரண்டு, மதியம் ஒன்று, இரவுக்கு மூன்று என மாத்திரைகள் மூலமே ஆரோக்கியமாக வாழ்ந்துவிடலாம் என நம்பத் தொடங்கிவிட்டோம். ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியப்பட்டு டாக்டரின் ஆலோசனைப்படி மாத்திரை எடுத்துக்கொள்வதில் தவறு இல்லை. ஆனால், சுயமாக ஊட்டச்சத்து மாத்திரைகள் சாப்பிடுவதால் பாதிப்புகள்தான் அதிகம்.

யாரெல்லாம் வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம், எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளலாம், வைட்டமின் மாத்திரைகளிலும் பக்கவிளைவுகள் உண்டா என்கிற நம் சந்தேகங்களை, டாக்டர் சாய்கிஷோர் முன் வைத்தோம்.

"கண் சற்று மங்கலாக இருந்தால் அதை உணவு மூலம் எப்படி சரி செய்யலாம் என யோசிப்பதை விட்டு விட்டு, ஏதாவது மாத்திரை தருமாறுதான் கேட்கின்றனர். பொதுவாக வைட்டமின்களை, நீரில் கரைபவை, கொழுப்பில் கரைபவை என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். இதில், பெரும்பாலானவற்றை நம் உடல் தானாக உற்பத்தி செய்ய முடியாது. எனவே உணவு மற்றும் மாத்திரைகள் மூலமாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும்.

நீரில் கரையும் தன்மையுள்ள பி மற்றும் சி வைட்டமின்கள் உடலில் அதிகம் சேர்ந்தாலும் சிறுநீரில் கரைந்து எளிதில் வெளியேறிவிடும். எனவே, இந்த இரண்டு வைட்டமின் களை உணவின் மூலமாக எடுத்துக்கொள்ள முடியாத போது, மாத்திரைகளாக எடுத்துக் கொள்ளலாம்.

ஏ, டி, கே போன்ற வைட்டமின்களை கொழுப்புள்ள உணவுப் பொருட்களுடன் மட்டுமே எடுத்துக்கொள்வது நல்லது. ஏனெனில், இந்த வைட்டமின்கள் கொழுப்பு சேகரிக்கப்படும் இடங்களில் சேகரம வாதால், இந்த வகை வைட்டமின்கள் அதிகரித் தாலும் சிக்கல்தான்" என்கிறார் சாய் கிஷோர்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#9
விட்டமின் ஈ அதிகம் உள்ள 10 உணவுகள்!

வைட்டமின்கள் குறைபாட்டினால் நிறைய பிரச்சனைகள் உடலும் வரும். அதிலும் சரியான உடல் வளர்ச்சிக்கு, வைட்டமின்கள் போதுமான அளவில் இருக்க வேண்டும். வைட்டமின்களில் நிறைய உள்ளன

. அவை வைட்டமின் ஏ, சி, ஈ, டி, பி12, பி11. இத்தகைய வைட்டமின்கள் நிறைய நன்மைகளை உள்ளடக்கியுள்ளன. இருப்பினும் அதில் வைட்டமின் ஈ மிகவும் முக்கியமான ஒன்று. வைட்டமின் ஈ சத்துக்கள் உடலில் அதிகம் இருந்தால், உடலில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கலாம்.

ஏனெனில் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால், கிருமிகள் உடலில் தங்காமல் இருக்கும். அதுமட்டுமில்லாமல், வைட்டமின் ஈ சத்து சருமத்திற்கும் சிறந்தது.

இந்த வைட்டமின் ஈ- நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், முதுமை தோற்றத்தை தள்ளிப் போடலாம். மேலும் உடலில் இரத்தம் உறைதல், நுரையீரலில் மாசுக்கள் படிவது போன்றவை தடுக்கப்படும்.

குறிப்பாக புற்றுநோய், நீரிழிவு, இதய நோய் உள்ளவர்கள், இந்த வைட்டமின் ஈ நிறைய உணவுகளை அதிகம் சாப்பிட்டால், இந்த நோய்களைக் கட்டுப்படுத்தி தடுக்க முடியும். இப்போது அத்தகைய நன்மைகளை உள்ளடக்கிய வைட்டமின் ஈ நிறைந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

1. பசலைக் கீரை
பச்சை இலைக் காய்கறிகளுள் ஒன்றான பசலைக் கீரையில் வைட்டமின் ஈ மற்றும் இன்னும் பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே டயட்டில் இதனை சேர்த்துக் கொண்டால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

2. ஆலிவ் ஊறுகாய்
ஆலிவ் ஊறுகாயில் 100 கிராம் வைட்டமின் ஈ உள்ளது. எனவே ஊறுகாய் மிகவும் பிடிக்கும் என்பவர்கள், இந்த ஆலிவ் ஊறுகாயை சாப்பிடலாம்.

3. உலர் மூலிகைகள்
மூலிகைகளில் நிறைய வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. எனவே சாலட், சூப் போன்றவை சாப்பிடும் போது அதில் சுவையை அதிகரிக்கவும், உடலை ஆரோக்கிமாக வைத்துக் கொள்ளவும், உலர் மூலிகைகளை சேர்த்து சாப்பிடுவது நல்லது.

4. வேர்க்கடலை
ஸ்நாக்ஸில் சிறந்ததாக இருக்கும் வேர்க்கடலையில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. குறிப்பாக இதில் கரையக்கூடிய வைட்டமின் ஈ ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், அவை சளி சுரப்பியில் இருக்கும் செல் சவ்வுகளை ஒழுங்குபடுத்தும். அதுமட்டுமின்றி இவை சருமத்துளைகள் ஈஸியாக சுவாசிக்கவும் உதவும்.

5. பாதாம்
நட்ஸில் ஒன்றான பாதாமும் சிறந்த ஸ்நாக்ஸ் ஐட்டங்களில் ஒன்று. இதனை தினமும் சாப்பிட்டால், அதில் உடலுக்குத் தேவையான வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கிடைக்கும்.

6. கடுகுக் கீரை
கடுகுக் கீரையில் வைட்டமின் ஈ சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் இதனை பச்சையாகவோ அல்லது பாதியாக வேக வைத்து சாப்பிட்டால், இதில் உள்ள முழு நன்மைகளையும் பெறலாம்.

7. ப்ராக்கோலி
சூப்பர் உணவுகளில் ஒன்றான ப்ராக்கோலியில் வைட்டமின்களான ஏ, சி, டி, ஈ மற்றும் கே போன்றவை அதிக அளவில் நிறைந்துள்ளது. இதனையும் பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிட்டால் நல்லது.

8. சிவப்பு குடைமிளகாய்
குடைமிளகாயில் சிவப்பு குடைமிளகாயில் வைட்டமின் ஈ, சி மற்றும் மற்ற சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் அடங்கியுள்ளன.

9. பிஸ்தா
நட்ஸ் சாப்பிட ரொம் பிடிக்குமா? அப்படியெனில் மறக்காமல் பிஸ்தாவை வாங்கி சாப்பிடுங்கள். அதிலும் உப்பில்லாத வறுத்த பிஸ்தாவை சாப்பிடுவது சிறந்தது.

10. மிளகாய் தூள்
மசாலா பொருட்களில் ஒன்றான மிளகாய் தூளை உணவில் சேர்த்தால், காரம் மட்டுமின்றி உணவுக்கு ஒரு நல்ல சுவையும் கிடைக்கும். மேலும் இதனை உணவில் சேர்த்தால், வைட்டமின் ஈ மற்றும் இதர ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் உடலுக்கு கிடைக்கும்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#10
Re: வைட்டமின்

விட்டமின் டி எதற்கு?

கால்சியத்தைப் போலவே விட்டமின் டி யும் வளரும் எலும்புகளுக்கு மிகவும் முக்கியம். உங்கள் உணவிலிருந்து கிடைக்கும் கல்சியத்தை உங்கள் உடல் உறிஞ்சியெடுக்க அது உதவிசெய்கிறது.

விட்டமின் டி “சூரியப் பிரகாச விட்டமின்” என்றும் அறியப்படுகிறது.

சூரியனின் உதவியுடன் உங்கள் உடல் விட்டமின் டி யை உருவாக்கமுடியும். கோடை காலத்தில், சன்ஸ்கிறீன் உபயோகிக்காமல் பத்து முதல் 15 நிமிடங்கள் சூரியவெளிச்சத்திலிருந்தால் உங்களுக்குத் தேவையான விட்டமின் டி சூரியனிலிருந்து கிடைக்கும்.

உணவிலிருந்தும் மற்ற உணவுப் பொருட்களிலிருந்தும் விட்டமின் டி யைப் பெற்றுக்கொள்வதும் முக்கியம். குளிர்காலங்களில் வீட்டுக்குள் இருக்கும்போதும் வெயில் காலங்களில் சன்ஸ்கிறீன் உபயோகிக்கும்போதும் போதியளவு சூரியவெளிச்சத்தைப் பெற்றுக்கொள்வது கடினம். சன்ஸ்கிறீன், சூரியனிலிருந்து கிடைக்கும் விட்டமின் டி யைத் தடை செய்கிறது.

சில சமுதாயங்களில், விசேஷமாகப் பிள்ளைகளில், விட்டமின் டி யின் குறைபாடு அறிக்கை செய்யப்பட்டுள்ளது
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.