வொர்க்அவுட் உணவுகள் - Workout Foods!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
வொர்க்அவுட் உணவுகள்


கொழுப்பைக் கரைத்து, ஃபிட்டான தோற்றம் பெற உடற்பயிற்சி செய்கிறோம். தசைகளைப் புதுப்பித்தல், வலுவடைதல் எனும் செயல்பாடுகள் ஜிம்மில் நாம் பயிற்சி செய்யும் 45 நிமிடங்களில் நிகழ்வன அல்ல. அது, நம் உடலில் 24 மணி நேரமும் நடந்துகொண்டே இருக்கிறது. எனவே, உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ, அதுபோல, உடற்பயிற்சிக்கு முன் - பின்என்ன சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம். இந்த நேரத்தில், சரியான உணவை எடுத்துக்கொள்வது தசைகளை வலுப்படுத்தி, கொழுப்பைக் கரைக்க உதவும். உடற்பயிற்சி தொடங்குவதற்கு முன்னர் எடுத்துக்கொள்ளும் ஊட்டச்சத்து மிக்க உணவு, உடலுக்குக் கூடுதல் ஆற்றலைத் தருவதாக இருக்க வேண்டும். பயிற்சிக்குப் பின் உட்கொள்ளும் உணவானது, தசைகளை உறுதிப்படுத்தவும் மேம்படுத்தவும் உதவுகிறது.

உடல் எடையைக் குறைப்பதா... கூட்டுவதா? எனும் தேவையைப் பொறுத்து வெவ்வேறு ஊட்டச்சத்து உணவுகளைப் பின்பற்றலாம்.

`உடல் எடையைக் குறைக்கிறேன்’ எனப் பலரும், வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்கின்றனர். இது தவறு. பயிற்சிக்கு முன்னதாக எளிமையான உணவை எடுத்துக்கொள்ளலாம். பசியுடனோ வெறும் வயிற்றிலோ உடற்பயிற்சி செய்தால், விரைவில் சோர்வடைந்துவிடுவோம். மேலும், அதிகப்படியான கலோரிகளை எரிப்பது சிரமம் ஆகிவிடும்.

இதயத்துடிப்பையும் உடல் வெப்பநிலையையும் அதிகப்படுத்துவதால் மட்டுமே உடலின் இயக்கம் சரியாக இருக்கும். எவ்வளவு கடுமையாக உடற்பயிற்சி செய்கிறோமோ, அவ்வளவு அதிகப்படியான கொழுப்பு கரைக்கப்படுகிறது.

உடற்பயிற்சிக்கு முன்பாக நாம் எடுத்துக்கொள்ளும் சிற்றுண்டி நம்மை வேகமாக நகர்த்தவும், சிறப்பாகச் செயல்படவும் உதவுகிறது. உடற்பயிற்சி செய்வதற்கு முன் கண்டிப்பாக ஊட்டச்சத்துமிக்க உணவு எடுத்துக்கொள்வது அவசியம். அதை, அரை மணி நேரத்துக்கு முன் எடுத்துகொள்வது மிகவும் சிறந்தது.

உடற்பயிற்சியின்போது, தசை சுருங்கி விரியும் என்பதால், நம் தசைகள் உடலில் உள்ள கொலாஜனைச் செலவழிக்கின்றன. பயிற்சிக்குப் பின் நீண்ட நேரம் உணவு எடுக்காமல் இருப்பதால், உடல் தானாக தசைகளை எரித்துக் குறுக்குகிறது. அதனால், நிச்சயம் பயிற்சிக்குப் பின் எளிதில் செரிக்கக்கூடிய புரதம் மற்றும் கடுமையான கார்போஹைட்ரேட் உணவைச் சாப்பிடுவது, தசைகளைப் பெருக்கி, நல்ல உடல் அமைப்பைத் தரும். உடனடி எனர்ஜிக்கு புரோட்டின் மில்க் ஷேக், சாக்லேட் ஷேக் எடுத்துக்கொள்ளலாம்.

வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சி செய்வதும் தவறு. இதனால், முழுமையாகச் செய்ய முடியாது. மதியம், இரவில் உடற்பயிற்சி செய்வதாக இருந்தால், சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்துதான் பயிற்சி செய்ய வேண்டும். பயிற்சி செய்வதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு சிறிது நொறுக்குத்தீனி எடுத்துக்கொள்ளலாம். போஸ்ட் வொர்க்அவுட் சப்ளிமென்ட்டை 30 நிமிடங்களுக்குப் பிறகு எடுத்துக்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சமஅளவில் அனைத்து ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமான கட்டுமஸ்தான உடலைப் பெறுவோம்.

புரோட்டின் பார்

தேவையானவை:
ஓட்ஸ் - 1 கப் (100 கிராம்), பீனட் பட்டர் - 1/3 கப் (75 கிராம்), தேங்காய்ப்பால் அல்லது க்ரீம் - 1/4 கப், வென்னிலா புரோட்டீன் பவுடர் - 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
முதலில் பீனட் பட்டர், தேங்காய்ப்பால் மற்றும் வென்னிலா புரோட்டீன் பவுடரைச் சேர்த்து, பசைபோல் கலக்கி, அதில் ஓட்ஸ் சேர்த்து ஒரு டிரேயில் மாற்றி ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும். 2 மணி நேரத்துக்குப் பிறகு, கட் செய்து சாப்பிடலாம்.

ஓட்ஸ் மீல் வித் நட்ஸ்

தேவையானவை:
ஓட்ஸ்மீல் - 2 1/2 கப், தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன், நட்ஸ், தேன், லவங்க பட்டைத் தூள் - சிறிதளவு.

செய்முறை:
பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் விட்டு, அடுப்பில் வைக்க வேண்டும். தண்ணீர் லேசாக சூடான நிலையில் (கொதிக்கவிடக் கூடாது) ஓட்ஸைப் போட்டு, மிதமான தீயில் வைத்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். வெந்தவுடன் கிளறி இறக்கி, அதில் பட்டைத் தூள், நட்ஸ், தேன் போன்றவற்றைச் சேர்க்க வேண்டும்.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.