ஶ்ரீதேவி பற்றிய 25 நினைவுகள்! #Sridevi

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,726
Location
Chennai
#1
[h=1]அம்மா செல்லம், லேடி சூப்பர்ஸ்டார், பத்மஶ்ரீ[/h]ஐம்பது ஆண்டுகளாக ஐந்து மொழிகளிலும் தனது மிகச்சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களை வசீகரித்த நடிகை ஶ்ரீதேவி இன்று மாரடைப்பால் மரணமடைந்திருக்கிறார். அவரது மரண செய்தியைக் கேட்டு ரசிகர்களும் பொதுமக்களும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இந்த நிலையில், அவர் கடந்து வந்த பாதையும் அவரைப் பற்றிய சில தகவல்களையும் பார்ப்போம்.

நடிகை ஸ்ரீதேவியின் இயற்பெயர் ஸ்ரீ அமா யங்கேர் அய்யப்பன். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள மீனம்பட்டி கிராமத்தில் ஆகஸ்ட் 13, 1963-ல் பிறந்தார். ஸ்ரீதேவியின் தந்தை அய்யப்பன் தமிழகத்தைச் சேர்ந்தவர். தாய் ராஜேஸ்வரி ஆந்திராவைச் சார்ந்தவர்.

ஸ்ரீதேவி தனது திரையுலக வாழ்வை குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பித்துவிட்டார். எம்.ஏ.திருமுகம் இயக்கிய பக்திப்படமான 'துணைவன்' திரைப்படத்தில் தனது நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாக, சிறு வயது முருகன் கதாபாத்திரத்தில் அறிமுகமானார் ஸ்ரீதேவி. 'ஜூலி' திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக இந்தியிலும் கால் பதித்தார் ஸ்ரீதேவி.

'நம் நாடு', மற்றும் 'என் அண்ணன்' திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுடன் இணைந்து நடித்தார். 'வசந்த மாளிகை' மற்றும் 'பாரத விலாஸ்' திரைப்படங்களில் சிவாஜியுடனும் நடித்தார்.

தொடர்ந்து பல்வேறு மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஸ்ரீதேவியை பதிமூன்று வயதிலேயே 'மூன்று முடிச்சு' படத்தின் மூலம் கதாநாயகியாக்கினார், ,மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர்.

 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,726
Location
Chennai
#2
தொடர்ந்து '16 வயதினிலே', 'சிகப்பு ரோஜாக்கள்' ,'ஜானி', 'வறுமையின் நிறம் சிவப்பு', 'மீண்டும் கோகிலா', 'மூன்றாம் பிறை' எனப் பல திரைப்படங்களின் மூலம் அன்றைய தமிழ் ரசிகர்களின் ஆதர்ச இடத்தைப் பிடித்து பிரபலமானார், ஸ்ரீதேவி.
ஸ்ரீதேவி, 1978-ல் 'சால்வா சாவான்' படத்தின் மூலம் கதாநாயகியாக இந்தியில் அறிமுகமானார். அதன்பிறகு 1983-ல் வெளியான 'ஹிம்மத்வாலா' திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். இந்தத் திரைப்படத்தில் இருந்துதான் ரசிகர்களால் ஸ்ரீதேவி, 'தண்டர் தைஸ்' என்னும் செல்லப்பெயரால் அழைக்கப்பட்டார்.
பாலுமகேந்திராவின் இயக்கத்தில் 1983-ஆம் ஆண்டு வெளியான 'மூன்றாம் பிறை' திரைப்படம் நடிப்பாற்றலில் ஸ்ரீதேவியின் மற்றொரு பரிமாணத்தையும் வெளிப்படச் செய்தது. மனநிலை பாதித்த பெண்ணாக ஸ்ரீதேவி நடித்த அந்த வேடமும், சுப்பிரமணி என்ற நாய்க்குட்டியுடன் கொஞ்சி விளையாடும் காட்சிகளும் பிஞ்சு மொழியைத் திரையில் பிரதிபலித்தன. இந்தத் திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி, அடுத்த தலைமுறை ரசிகர்களையும் அழ வைக்கும்.

1986-ஆம் ஆண்டில், ஸ்ரீதேவி 'இச்சாதாரி பாம்பு' வேடத்தில் நடித்து வெளியாகிய 'நாகினா' திரைப்படம் அந்த வருடத்தின் இரண்டாவது பிளாக் பஸ்டர் படம். க்ளைமாக்ஸில் 'மெயின் தேரி துஷ்மான்' பாடலுக்கு இவர் ஆடும் நடனம் இந்தி சினிமாவின் மிகச்சிறந்த நடனங்களுள் ஒன்றாகும்.

1987-ல் ஸ்ரீதேவி பத்திரிக்கையாளராக நடித்து வெளியான 'மிஸ்டர் இந்தியா' திரைப்படம் அந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்று. மேலும், இந்தி சினிமாவில் வெளியாகிய தேசப்பற்று திரைப்படங்களில் தவிர்க்கமுடியாத திரைப்படமாக இது விளங்கி வருகிறது.
இந்திய சினிமாவில் அதிக பொருட்செலவில் உருவான திரைப்படங்களில் ஒன்றான 'ரூப் கி ராணி ஷோரோன் கா ராஜா' திரைப்படம் வசூலில் தோல்வியைத் தழுவியது. ஆயினும்கூட ஸ்ரீதேவி நடித்த கதாபாத்திரத்தை, 'இதுவரை தென்னிந்திய நடிகைகள் நடித்த பாத்திரத்திலே சிறந்த பாத்திரம் இதுதான்' எனப் புகழ்ந்து கூறின அன்றைய பத்திரிகைகள்.
1996-ல் போனிகபூரைத் திருமணம் செய்துகொண்டார் ஸ்ரீதேவி. இவருக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதன்பிறகு இல்லறத்தில் ஈடுபட்ட ஸ்ரீதேவி, கலையுலக வாழ்வைவிட்டு தற்காலிகமாக விலகினார்.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,726
Location
Chennai
#3
2004-ஆம் ஆண்டில் இருந்து 'மாலினி ஐயர்' சீரியலின் மூலம் சின்னத்திரையில் கால் பதித்தார் ஸ்ரீதேவி. 'கபூம்' எனும் ரியாலிட்டி ஷோவில் நடுவராகவும் இருந்திருக்கார் ஸ்ரீதேவி.
1997-ல் இருந்து பதினைந்து வருடங்கள் பெரியதிரையில் நடிக்காமல் இருந்த ஸ்ரீதேவி, 2012-ஆம் ஆண்டு 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். ரஜினி நடித்த 'முத்து' திரைப்படத்திற்குப் பிறகு மிகப்பெரிய வசூலை ஜப்பானில் குவித்தது இந்தத் திரைப்படம்.
நடிகர் விஜய் ஸ்ரீதேவியின் தீவிர ரசிகர். 'புலி' திரைப்படத்தின் மூலம் விஜய்க்கு அத்தையாக நடித்தார் ஸ்ரீதேவி. 1986-ஆம் ஆண்டு வெளியான 'நான் அடிமை இல்லை' திரைப்படத்திற்குப் பிறகு, 'புலி' திரைப்படத்தில் தமிழில் டப்பிங் பேசினார் ஸ்ரீதேவி. 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' மூலம் அஜித்துடனும் இணைந்து நடித்துள்ளார் ஸ்ரீதேவி.
தனது சொந்த நிறுவனத்தின் தயாரிப்பில் ஸ்ரீதேவி நடித்த 'மாம்' திரைப்படம் அவரது நடிப்பில் வெளிவந்த 300-வது திரைப்படமாகும். அவர் அறிமுகமான 'துணைவன்' திரைப்படம் வெளியான ஜூலை முதல் வாரத்தில் வெளியானது. முதல் படம் வெளியாகி, ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆன ஶ்ரீதேவியின் 'மாம்' திரைப்படமும் ஜூலை முதல் வாரத்தில் வெளியானது.
ஸ்ரீதேவி ஓவியம் வரைவதற்கு ஆர்வம் காட்டுவார். 2010-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அவரது ஓவியங்கள் ஏலம் விடப்பட்டு அதில் கிடைத்த பணத்தை நிதியுதவியாக செய்தார் ஸ்ரீதேவி. மேலும், ஆசியன் அகாடமி ஆப் பிலிம் & டெலிவிஷன் போர்டில் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார், ஸ்ரீதேவி.
2012-ஆம் ஆண்டு ஆமிர்கான் நடத்திய 'சத்யமேவ ஜெயதே' டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்ரீதேவி, பாலியல் ரீதியாக தவறாக நடத்தப்பட்ட ஒரு குழந்தையின் பேட்டியைக் கண்டார். பின்பு, 'குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராக ஒரு சட்டத்தை நிறைவேற்றவேண்டும்' என்று ஆமிர்கான் அரசாங்கத்திற்கு எழுதிய கடிதத்தில் ஸ்ரீதேவியும் கையெழுத்திட்டார்.
2013-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை வென்றார் ஸ்ரீதேவி. மேலும், பத்துமுறை பிலிம்ஃபேர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, ஐந்து முறை வென்றுள்ளார். 'மூன்றாம் பிறை' திரைப்படத்தின் மூலம் தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதினை வென்றார்.

இந்தி சினிமாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார், ஸ்ரீதேவிதான். மேலும், அவரது தலைமுறையின் பெரும்பாலான பெண்கள் ஸ்ரீதேவியைப் பார்த்துதான் நடிகைகளாக மாறினர். ஸ்ரீதேவியை ரோல் மாடலாகக் கொண்டுதான் நடிக்க வந்ததாக நிறைய நடிகைகள் பேட்டி கொடுத்திருக்கின்றனர்.

மனோரமாவிற்குப் பிறகு எம்.ஜி.ஆர், சிவாஜி , ரஜினி, கமல் ஆகியோரைத் தொடர்ந்து மூன்றாவது தலைமுறையான விஜய், அஜீத்துடனும் இணைந்து நடித்தவர் ஸ்ரீதேவி மட்டும்தான். போனிகபூர் ஸ்ரீதேவியைத் 'மை ஹீரோ' எனக் குறிப்பிடுவார். மேலும், அந்தக் காலத்திலேயே 'பதினாறு வயதினிலே', 'சால்பாஸ்', 'சாந்தினி', 'நாகினா', 'காயத்ரி' போன்ற பெண்களை மையமாகக் கொண்ட வலுவான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருக்கிறார் ஸ்ரீதேவி.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,726
Location
Chennai
#4
ஸ்ரீதேவிக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகர் செந்தில். ஜெயலலிதா மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவி நடித்ததிலேயே அவருக்கு மிகவும் பிடித்த தமிழ் கதாபாத்திரங்கள் 'மூன்று முடிச்சு' செல்வியும், 'மூன்றாம் பிறை' விஜி கேரக்டர்.
சென்னையை மிஸ் பண்ணுவதாக அவர் ஒருநாளும் எண்ணியதில்லை. சென்னையில் ஸ்ரீதேவிக்கு சொந்த வீடு, தோட்டங்கள் இருக்கின்றன. அவருடைய உறவினர்கள் நிறையபேர் சென்னையில் வசிக்கின்றனர். அதனால், அடிக்கடி சென்னை வருவதால் ஒருநாளும் அவர் சென்னையை மிஸ் பண்ணவில்லை.
ஸ்ரீதேவி ஃபேஷன் மாடலாக 2008-ல் அறிமுகமானார். பல பேஷன் பத்திரிக்கைகளில் ஸ்ரீதேவியின் புகைப்படம் அட்டைப்படமாக வெளிவந்திருக்கிறது. கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த சிரோக் ஃபிலிம்ஃபேர் கிளாமர் & ஸ்டைல் ​​விருதுகளில் 'அல்டிமேட் டிவா' விருதைப் பெற்றார் ஸ்ரீதேவி. மேலும், அவர் ஒரு ஃபேஷன் ஐகானாகவும் திகழ்ந்தார்.
ஸ்ரீதேவி அம்மா செல்லம். அம்மா மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். ஷூட்டிங்கின்போது ஸ்ரீதேவியை மிகவும் கவனமாகப் பார்த்துகொள்வாராம் அவரது அம்மா. ஸ்ரீதேவி தனது தந்தையை 'லம்ஹே' திரைப்படப் படப்பிடிப்பின்போதும், தாயை 'ஜூடாய்' படப்பிடிப்பின்போதும் இழந்தார்.
கடந்த ஆண்டு கமலின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன ஸ்ரீதேவி கமலின் அரசியல் குறித்து சூசகமாக, "உங்களது புதிய முயற்சிகள் என்னவாக இருப்பினும் அதற்கு எனது வாழ்த்தினைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் கூறினார்.
தலைமுறை கடந்தும் ஐம்பது ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் இளமையாக ஜொலிக்கும் ஸ்ரீதேவியின் இறுதி மூச்சு நின்றிருக்கிறது. இருந்தாலும் காலங்கள் கடந்தும் அவரது படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் ஸ்ரீதேவி.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,726
Location
Chennai
#5
[h=1]கலையரசி ஶ்ரீதேவி... என் மயில்... என்ன சொல்றதுனு தெரியலை!" - கலங்கும் பாரதிராஜா #Sridevi[/h]ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் உலுக்கிப் போட்டியிருக்கிறது, நடிகை ஶ்ரீதேவியின் மரணம். 'துணைவன்' திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நடிகையாக வளர்ந்து, பாலிவுட்டுக்குப் பறந்து... தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய சினிமாவின் முக்கியமான முகங்களில் ஒருவராக இருந்த நடிகை இன்று இல்லை. ரசிகர்கள் முதல் நடிகர்கள் வரை... பலரும் ஶ்ரீதேவியின் திடீர் மரணத்திற்கு இரங்கல்களைத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஶ்ரீதேவியின் மரணத்திற்கு இயக்குநர் பாரதிராஜாவின் இரங்கல் இது.
"என் முதல் படம், '16 வயதினிலே'. இந்தக் கதைக்குத் தகுந்தமாதிரி 16 வயசு நடிகையைத் தீவிரமா தேடிக்கிட்டு இருந்த சமயம், மலையாளத்துல நடிச்சுக்கிட்டு இருந்த ஶ்ரீதேவியைப் பார்த்தேன். நான் ஒன்பதாம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருக்கும்போதே என மனசுல ஆழப் பதிஞ்சுபோன ஒரு ரியல் கேரக்டர், மயில். அந்தக் கேரக்டருக்கு 100% உழைப்பைக் கொடுத்து உயிர் கொடுத்தது, நடிகை ஶ்ரீதேவி. 'இந்தக் கேரக்டருக்கு ஒப்பனை தேவையில்லை. ஒரிஜினல் முகமாவே நடிக்கணும்'னு நான் சொல்ல, 'கொஞ்சமா மேக்அப் போட்டுக்குறேன் சார்'னு சொன்னார். மயில் கேரக்டருக்கு அவங்க உழைச்ச உழைப்பு, இன்னும் கண்ணுக்குள்ள இருக்கு. முழுப்படத்தையும் முடிச்சுட்டு பேக்அப் பண்ணும்போது ஶ்ரீதேவிக்கு அழுகை. 'ஏன் அழற?'னு கேட்டப்போ, 'இந்த இடத்தைவிட்டுப்போக மனசே இல்லை சார்'னு சொன்னா. ஒரு நடிகை, படப்பிடிப்பு தளத்தை சென்டிமென்ட்டா அணுகுனது, எனக்கு ஆச்சரியமா இருந்தது. அப்பேற்பட்ட நடிகை ஶ்ரீதேவி.

அதற்குப் பிறகு, 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தோட கதையைக் கேட்க சொன்னேன். 'சார்... ஷூட்டிங் எங்கேனு சொல்லுங்க, எங்கே கூப்பிட்டாலும் வர்றேன்'னு சொன்னாங்க. '16 வயதினிலே' திரைப்படம் எங்களுக்குப் பல மாற்றத்தைக் கொடுத்துச்சு. '16 வயதினிலே' கதையை இந்தியில் ரீமேக் பண்ணலாம்னு பாலிவுட்டில் இருந்து ஒரு அழைப்பு. 'அமோல் பலேகர் ஜோடியா நடிக்க எந்த ஹீரோயினை ஒப்பந்தம் பண்ணலாம்?'னு தயாரிப்பாளர் கேட்க, ஶ்ரீதேவியே நடிக்கட்டும்னு சொன்னேன். 'அந்தப் பொண்ணுக்கு இந்தி தெரியுமா?'னு அடுத்த கேள்வி. 'புத்திசாலிப் பொண்ணு சார்... ரெண்டே நாள்ல ரெடியாகிடுவா'னு நான் சொன்னேன். ஶ்ரீதேவிகிட்ட, 'இந்தியில நடிக்கிறியா?'னு கேட்டப்போகூட, 'அய்யோ... வேணாம் சார், மாட்டேன்'னு பயப்பட்டுச்சு. ஒருவழியா 'சொல்வா சவான்' படத்துல நடிச்சா... படம் சூப்பர் டூப்பர் ஹிட்.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,726
Location
Chennai
#6
ஶ்ரீதேவியை இந்தியில நான்தான் அறிமுகப்படுத்துனேன்... இந்தப் பெருமை எனக்கு என்னைக்கும் இருக்கும். ரெண்டு வருடத்துக்கு முன்னாடி ஶ்ரீதேவி கொடுத்த டிவி பேட்டியில ஒரு கேள்வி. 'உங்களோட நடிப்புத் திறமைதான், உங்க வளர்ச்சிக்குக் காரணம். இது எப்படிச் சாத்தியம் ஆச்சு?'னு ஒரு கேள்வி. 'இது பாரதிராஜாகிட்ட கத்துக்கிட்டது'னு பதில் சொன்னாங்க, ஶ்ரீதேவி. ஒரு இயக்குநரா எனக்குக் கிடைச்ச மிகப்பெரிய பெருமையா நான் இதைப் பார்க்குறேன். ஏன்னா, அவங்க நல்ல நடிகை மட்டுமில்ல, நல்ல மனுஷி. ஒருமுறை நியூயார்க் டூர் போயிருந்தப்போ, ஶ்ரீதேவியின் அம்மா உடல்நிலை சரியில்லாம ஹாஸ்பிட்டல்ல இருந்தாங்க; போய்ப் பார்த்தேன். ஹாஸ்பிட்டலுக்குப் பக்கத்திலேயே சின்னதா ஒரு அப்பார்ட்மென்ட் எடுத்துத் தங்கியிருந்த ஶ்ரீதேவியைப் பார்த்து எனக்கு ஆச்சரியம். 'என்னமா இவ்ளோ சிம்பிளா இருக்க?'னு கேட்டேன், அதுக்கு ஶ்ரீதேவி சொன்னா, 'இந்த உலகத்துக்குத்தான் சார் நான் ஒரு நடிகை... எனக்கு நான் ஶ்ரீதேவிதானே?

தென்னிந்தியாவுல இருந்து எத்தனையோ நடிகைகள் பாலிவுட்டுக்குப் போயிருக்காங்க. ஆனா, இந்தளவுக்குக் கொடிகட்டிப் பறந்தது, ஶ்ரீதேவிமட்டும்தான். 'மயில் எங்கே மயில் எங்கே'னு ஏங்கிக்கிட்டு இருந்த தமிழ் ரசிகர்களை ஶ்ரீதேவி வருத்தப்படவெச்சுட்டாங்களே... அவங்களோட இந்த இழப்பு ஆந்திரா, தமிழ்நாடு, கேரள மக்களுக்கு மட்டுமில்ல... இந்தியாவுக்கே இழப்பு, இந்தக் கலையரசியின் மரணம். அவங்க குடும்பத்துக்கும் ரசிகர்களுக்கும் என்ன ஆறுதல் சொல்றதுனு தெரியலை. சினிமாவுக்குக் கிடைச்ச 'கலைச்செல்வி' இந்த ஶ்ரீதேவி. அந்த இடத்தை நிரப்புறதுக்கான ஆட்கள் இங்கே இல்லைனு நினைக்கிறேன். எந்தக் கல்லூரியிலும் படிக்காத ஒரு பெண், இந்தியாவோட ஒன்பது மொழிகளைப் பேசுவா. கடவுள் கொடுத்த வரம் அது. இந்தப் பொண்ணுக்கு இது எப்படிச் சாத்தியம் ஆச்சுனு இப்போவரைக்கும் எனக்குத் தெரியலை. அவர் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த துக்கத்தைத் தெரிவிச்சுக்கிறேன். என் மயில் உயிரோட இல்லைங்கிற வருத்தம் எப்போவும் இருக்கும்!" எனத் தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார், பாரதிராஜா.
ஶ்ரீதேவியின் உடல் இன்று இரவு மும்பைக்கு கொண்டுவரப்படும் என துபாயில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,726
Location
Chennai
#7
[h=1]குழந்தை தெய்வம் முதல் குடும்பத் தலைவி வரை... ஸ்ரீதேவியின் அரை நூற்றாண்டு பயணம்![/h]நடிகை ஶ்ரீதேவி மாரடைப்பின் காரணமாக துபாயில் காலமானார். 54 வயதான ஶ்ரீதேவி தனது உறவினர் மோஹித் மார்வாவின் திருமணத்திற்காக மகள் குஷி மற்றும் கணவர் போனீ கபூருடன் துபாய் சென்றிருந்தார். சமீபத்தில் அந்நிகழ்விலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கலையும் அவர இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஶ்ரீதேவி போனீ கபூர் தம்பதி மகள்கள் குஷி மரூம் ஜான்வி கபூருடன் மும்பையில் தனது வசித்து வந்தனர். இவரது மறைவை பெரிய இழப்பாக இந்திய சினிமா கலைஞர்கள் அனுசரித்து வருகின்றனர். திரைத்துறையில் இவரது பயணம் பலத்தரப்பட்ட சூழ்நைலைகளையும் சந்த்தித்தே இருந்துள்ளது.
1963 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 13ஆம் தேதி சிவாகாசியிலுள்ள மீனம்பட்டியில் பிறந்தவர். வழக்கறிஞர் அய்யப்பன் ஐயங்கார் - ராஜேஸ்வரி தம்பதிக்கு மகளாக பிறந்தார்.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,726
Location
Chennai
#8
ஶ்ரீதேவி, பல படங்களில் முருகன் வேடமிட்டு குழந்தை நட்சத்திரமாக தனது நான்கு வயதில் கலையுலக வாழ்க்கையை ஆரம்பித்தவர் ஶ்ரீதேவி. வழக்கறிஞரான ஶ்ரீதேவியின் தந்தையும் கவிஞர் கண்ணதாசனும் நண்பர்கள், ஒருமுறை குழந்தை ஶ்ரீதேவியை பார்த்துவிட்டு அப்போதைய பெரியத் தயாரிப்பாளாரும் நண்பருமான சின்னப்பத் தேவரிடம் 'தனது நண்பனின் குழந்தை வேடத்தில் பொருத்தமாக இருப்பாள்' எனக் கண்ணதாசன் கூறியுள்ளார். ஶ்ரீதேவியை பார்த்த நொடியிலேயே 'எனக்கு அந்த முருகபெருமான கண்முன் வந்து நிற்பதுபோல் உள்ளது' எனக் கூறி தமிழில் வெளிவந்த தனது 'துணைவன்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் ஶ்ரீதேவி அறிமுகப்படுத்தினார் சாண்டோ சின்னப்ப தேவர்.
அதைத் தொடர்ந்து, கந்தன் கருணை அகத்தியர், குமார சம்பவம் உள்ளிட்ட பல படங்களில் அழகிய முருகன் வேடமணிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி. ஆரின் 'நம் நாடு' படத்தில் குட்டி பத்மினியின் தம்பியாக நடித்திருந்தார். தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்த அதே சமயம் தெலுங்கு, கன்னடம், மலையாளத்திலும் பின் விஜயா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவான 'ஜுலி' படம் மூலம் 1975ல் இந்தியிலும் அறிமுகமானார். அந்தநேரத்தில் குழந்தை நட்சத்திரமாக இருந்து கதாநாயகியானோரை பார்ப்பதரிது.

1976ல் தனது 13 ஆம் வயதில் இயக்குநர் பாலசந்தரால் 'மூன்று முடிச்சு' படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். கமல், ரஜினி என இருவருடனும் இணைந்து நடித்த முதல் படம். தமிழ் சினிமாவின் அடுத்த பெரிய கதாநாயகி என்று சொல்லக் கூடிய அளவிற்கு 'மூன்று முடிச்சு' படத்தில் தன்னை முன்னிருத்திக் கொண்டார் ஶ்ரீதேவி. இப்படத்தில் நடித்ததைப் பற்றி ஆங்கில நாளேட்டிற்கு அளித்தப் பேட்டியில் அமரர் பாலசந்தர் குறிப்பிடும்போது "ஶ்ரீதேவி எதையும் எளிதில் கற்றுக் கொள்ளக்கூடியவர் 13 வயதேயான ஶ்ரீதேவி ஒரு 20 வயது பெண்ணுக்கான எமோஷன்களை எளிதாக வெளிக்காட்டினார்" எனக் கூறினார்.
70'களின் மத்தியில் ஆரம்பித்து தான் நடித்து வந்த அனைத்து மொழிகளிலும் தனக்கென ரசிகர்களைக் கொண்டிருந்தார் ஶ்ரீதேவி. இன்றைய சூப்பர்ஸ்டார்கள் கமல், ரஜினியுடன் 16 வயதினிலே படத்தில் 'மயில்' கதாபாத்திரத்தில் இவர் வென்றிடாத நெஞ்சங்களே கிடையாது. கமலுடன் சிகப்பு ரோஜாக்கள், கல்யாணராமன், மீண்டும் கோகிலா உள்ளிட்டப் பல படங்களில் நடித்து வந்தார். பாலு மகேந்திரா இயக்கத்தில் 'மூன்றாம் பிறை' படத்தில் சுய நினைவிழந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்ததை யாரும் மறக்கமுடியாத ஒன்று. ரஜினியுடன் ப்ரியா, காயத்ரி,ஜானி, தர்மயுத்தம் ஆகியப் படங்களில் நடித்து இருக்கிறார். கதாநாயகர்கள் கோலோச்சியக் காலக்கட்டத்தில் தனக்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்வதிலும், கிடைக்கும் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டு வந்தார் ஶ்ரீதேவி. இன்று பரவலாக பேசப்பட்டு வரும் 'கெமிஸ்ட்ரி' என்ற வார்த்தைக்கு அன்றே இவர்களுடனான படங்களில் அர்த்தம் சொல்லியிருப்பார ஶ்ரீதேவி.
1986ல் 'நான் அடிமை இல்லை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிப்பதை குறைத்து, பாலிவுட்டில் பிசியானார். தமிழ், தெலுங்கில் இவர் நடித்த படங்கள் அதிக அளவில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட படங்களில் நடிக்கத் தொடங்கி பாலிவுட்டில் பெரிய ஹீரோயினாக வலம் வந்தார்.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,726
Location
Chennai
#9
ரிஷி கபூர், அனில் கபூர், சல்மான் கான், ஷாருக் கான் என 90' களின் டாப் ஸ்டார்களுடனும் நடித்தார். பல இன்னல்கள், சர்சசைகளுக்கு இடையே 1996ஆம் ஆண்டு பாலிவுட் தயாரிப்பாளரான் போனீ கபூரை காதலித்து மணந்தார்.2004ஆம் ஆண்டு மாலினி அய்யர் என்னும் இந்தி தொலைக்காட்சித் தொடரில் நடிக்க ஆரம்பித்த ஶ்ரீதேவி, 2012ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் ' இங்க்லீஷ், விங்க்லீஷ்' படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்தார். தமிழாக்கம் செய்யப்பட்ட இப்படத்தில் ஒரு கதாநாயகியாகவே நடித்தார். இப்படத்தில் அஜித் சிறு கௌரவத் தோற்றத்தில் நடித்திருந்தார். கடைசியாக தமிழில் விஜய் நடித்த 'புலி' படத்தில் வில்லியாக நடித்திருந்தார். இந்தியில் கடந்த வருடம் இந்தியில் வெளியான திரைப்படம் 'மாம்' இவரது 300வது திரைப்படம் . மகள் ஜான்வி அறிமுகமாகும் 'தடக்' படத்தின் படப்பிடிப்புக்கு அவருடன் சென்று வந்திருந்தார்.2013ஆம் ஆண்டு இந்திய அரசு ஶ்ரீதேவிக்கு 'பத்மஶ்ரீ' விருதுப் வழங்கி கௌரவித்தது. அரை நூற்றாண்டு கால வாழ்க்கையை சினிமாவுக்காக அர்பணித்த மாபெரும் நடிகை ஶ்ரீதேவியை இந்திய திரையுலம் இழந்துள்ளது.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,726
Location
Chennai
#10
[h=1]'ஶ்ரீதேவியை மூணு வாரத்துக்கு முன்னாடி பார்த்தப்ப கூட ரொம்ப சோர்வா இருந்தா...!'' கலங்கும் குட்டி பத்மினி[/h]குழந்தை முகம்; தேவதை உடல்வாகு' - நடிகை ஶ்ரீதேவியைப் பற்றி இயக்குநர் ஒருவர் சொன்ன வரி இது. மரணத்தின் முந்தைய இரவும் பச்சை நிறப் பட்டு ஆடையில் அழகின் உச்சமாகத்தான் ஜொலித்தார் அவர். ஶ்ரீதேவி இறப்பதற்கு சில மணி நேரம் முன்பு, ஏதோ ஓர் உள்ளுணர்வின் உந்துதலால், 'ஏதோ தப்பாப் படுது' என்ற ட்விட் செய்திருக்கிறார் நடிகர் அமிதாப் பச்சன். கார்டியாக் அரெஸ்ட்டில் இறந்ததாகச் சொல்லப்படும் ஶ்ரீதேவிக்கு, இதுவரை இதய நோய்க்கான எந்தவித அறிகுறியும் இருந்ததில்லை என்கிறார் ஶ்ரீதேவியின் மைத்துனர். ஶ்ரீதேவி மறைவுக்கு அமெரிக்கத் தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அவருடைய குழந்தைப் பருவத்துத் தோழியான குட்டி பத்மினி, ஶ்ரீதேவி குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

''ஶ்ரீதேவி என்னைவிடக் கொஞ்சம் குட்டிப் பொண்ணு. நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது, அவள் ரொம்பவே அம்மாப் பொண்ணு. ஷூட்டிங் இடத்தில் கொஞ்சம் கூட்டமாக இருந்தாலே பதற்றமாகிவிடுவாள். ஆனால், காலம் அவளை எப்போதும் ஷூட்டிங், ரசிகர்கள், பரபரப்பு, கூட்டம் என்றே வைத்துவிட்டது. ஶ்ரீதேவியின் அம்மா வேறுவேலையாகப் போகும்போதெல்லாம் என் அம்மாவிடம்தான் ஶ்ரீயை விட்டுட்டுப் போவார். அப்போதெல்லாம் அம்மா பக்கத்தில் இல்லையென தூங்கவே மாட்டாள். தூங்கும்போதும் அம்மா பக்கத்தில் இருக்க வேண்டும் அவளுக்கு. மொத்தத்தில், ஶ்ரீ ரொம்ப பயந்த குழந்தை. கொஞ்சம் வளர்ந்த பிறகும் அம்மா துணையின்றி வெளியே போகமாட்டாள். அதனால்தான், அம்மா இறந்தபோது, 'இனி, தனக்கு வாழ்க்கையே இல்லை' என்று கொஞ்ச காலம் மனம் உடைந்து போயிருந்தாள்'' என்ற குட்டி பத்மினி குரலில் தன் குழந்தைப் பருவத்துத் தோழியை இழந்த வேதனையின் சுவடு, வார்த்தைக்கு வார்த்தை தெரிந்தது.
''ஶ்ரீதேவி இறந்த செய்தியை டி.வி.யில் பார்த்தபோது நம்பவே முடியவில்லை. மூன்று வாரங்களுக்கு முன்புதான் மும்பையில் ஒரு திருமணத்தில் சந்தித்தோம். சர்ப்ரைஸ் தாங்கமுடியாமல் 'ஹாய்' என்றேன். பதிலுக்கு 'ஹாய்' சொன்ன ஶ்ரீதேவி, வேறு எந்த வார்த்தையும் பேசவில்லை. அந்த நேரத்தில் மனதுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. இப்போது யோசிக்கும்போது, வேறு தோன்றுகிறது. அன்றைக்குப் பார்த்தபோதே ஶ்ரீதேவி வெளுத்துப்போய் சோர்வாகத் தெரிந்தார். ஹெல்த் பிரச்னை இருந்திருக்கலாம். அதனால்தான் பேசமுடியாமல் சென்றுவிட்டாரோ என்னவோ. எனக்குத் தெரிந்த ஶ்ரீதேவி ரொம்ப மரியாதையான பெண். மிகுந்த பொறுமைசாலி'' என்றார்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.