'ஷேக்கன் பேபி சிண்ட்ரோம் Shaken Baby Syndrome

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,251
Likes
20,718
Location
Germany
#1
பெங்களூருவில் நடந்திருக்கும் ஒரு சம்பவம், இளம் அம்மாக்களை கதிகலங்க வைத்திருக்கிறது. நிகழ்ந்த சோகம்

வழக்கம்போல தங்களுடைய ஒன்றரை வயது பெண் குழந்தையை ஒரு சிறுமியின் பாதுகாப்பில் விட்டு விட்டு, வேலைக்குச் சென்றனர் அந்தத் தம்பதி. அடுத்த சில மணி நேரத்திலேயே அவர்கள் குழந்தை இறந்து விட்டதாக செய்தி வர, அலறியடித்து ஓடி வந்திருக்கிறார்கள்.

குழந்தை இறந்ததன் காரணம்
குழந்தை விடாமல் அழுது கொண்டே இருக்க, அதன் அழுகையை நிறுத்துவதற்காக, அதைத் தூக்கி உலுக்கி இருக்கிறாள் அந்தச் சிறுமி. அந்த உலுக்கலில்தான் இறந்திருக்கிறது குழந்தை!

சும்மா அதன் பொக்கை வாய்ச் சிரிப்பை ரசிப்பதற்காகக்கூட அதைத் தூக்கிப் போட்டுப் பிடிப்பதும் உலுக்குவதும் நம் ஊரில் சகஜமான விஷயங்கள்
குழந்தைகளை குஷிப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு நாம் செய்கிற செயல்கள் பலவும், அவர்களை மரண வாசல் வரை அழைத்துச் செல்லக் கூடியவைதான்

அமெரிக்காவில் குழந்தை வன்முறையால் இறக்கிற நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தையின் மரணத்துக்கு இப்படி உலுக்குவதுதான் காரணம். அமெரிக்கா போன்ற நாடுகளில் இதை 'ஷேக்கன் பேபி சிண்ட்ரோம் எஸ்.பி.எஸ்.' (Shaken Baby Syndrome - SBS) என்கிறார்கள். அங்கு நிகழ்கிற இதுபோன்ற குழந்தை மரணங்கள் பெரும்பாலும் விபத்துக்கள் அல்ல.. கோபத்தில் செய்யப்படுகிற கொலைகள் என்பதால், அந்த அரசாங்கம் இந்தக் குற்றத்துக்குக் கடும் தண்டனை தருகிறது!

தூங்க விடாமல் அழுது கொண்டே இருக்கிற குழந்தையின் மீது எரிச்சல்பட்டு அதை உலுக்குவது, மறுமணம் செய்து கொண்டவர்கள், தங்கள் துணையின் குழந்தை மீது எரிச்சல் கொண்டு உலுக்குவது, சிறு பிள்ளைகள், தங்கை அல்லது தம்பியின் மீது பொறாமைப்பட்டு உலுக்குவது.. இப்படியெல்லாம் சோகங்கள் நிகழ்கின்றன.

அறியாமையால் உலுக்குவதால் பாதிப்பு ஏற்படுகிறது

ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்.. அதிலும் குறிப்பாக, ஒன்று முதல் மூன்று மாதம் வரை உள்ள குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். உலுக்குதல் என்றால், அதிக நேரம் உலுக்க வேண்டும் என்பதுகூட இல்லை. ஐந்து முதல் இருபது நொடிகள் அதிர்வுகூட பாதிப்பை ஏற்படுத்தும்.

காரணம், இந்த வயதில் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்கள் முழுமையான வளர்ச்சி அடைந்திருக்காது. இந்த சமயத்தில் குழந்தையைத் தூக்கிப் போடுவதாலும், உலுக்குவதாலும் ஏற்படும் அதிர்வால் ரத்தக் குழாய்கள் அறுபட்டு, ரத்தக் கசிவு ஏற்படும். இதனால் மூளை வளர்ச்சி குறைவதுடன், கண் பார்வை மற்றும் முதுகுத் தண்டும் பாதிக்கப்படக் கூடும்.

திடீரென ஏற்படும் அதிர்வால் எலும்புகளில் கீறல் விழுவதுடன், எலும்பு உடைந்தும் விடும். இதுபோன்ற விளைவுகள் உடனடியாக வெளியே தெரியாது. குழந்தைக்கு நான்கு அல்லது ஐந்து வயதாகும்போதுதான் தெரிய ஆரம்பிக்கும்

குழந்தையை உலுக்குவதால் பார்வைக் கோளாறுதான் என்றில்லை.. இன்னும் இளம் வயதிலேயே வலிப்பு, வாதம், நரம்புத் தளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைபாடு, பேசுவதிலும் புரிந்து கொள்வதிலும் பிரச்னை, கேட்கும் திறன் குறைபாடு போன்ற பல குறைபாடுகள் வரலாம்

குழந்தைகள் மெல்லிய பூவைப் போன்றவர்கள். அவர்களை மென்மையாக மட்டுமேதான் கையாள வேண்டும். காரணம், உங்கள் கையில் இருப்பது ஒரு சிறிய குழந்தை மட்டுமல்ல.. அதன் பெரிய எதிர்காலமும்
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#3
hi viji,
indha thagaval adhirchiyai yerpaduthiyadhu... vilayattu thanamaai naam seiyum kaariyangalin vilaivu ippadi vibareedhamaagavum mudiyakkoodum endru unarndha podhu vedhanayaagavum irundhadhu.... idhu theriyamal inge ethanai per kulandhaigalai thookki pottu vilayaattu kaattugirom...

immadhiriyaana thagavalgal uriya vidhamaai makkalai sendru adaya vendum....thanks viji for this new and informative post....

Anitha.
 

nlakshmi

Minister's of Penmai
Joined
May 21, 2011
Messages
2,787
Likes
3,821
Location
US
#5
yes of course viji, its very dangerous and we do it every day without knowing. kuzhandhaiyai parka varum virunthaaligal mudalil kuzhandhai thooki pottu than pidipaanga. even parents, especially dads. kuzhandaiyai thooki pottu pidikakoodathunu solrathukku ithuvum oru kaaranam. even namma kuzhandhaiyai konjum podhu kooda theriyaama shake pannidrom. even that should not be done.

Baby's skull is not fully closed when it is born. Babies will have soft spots one in the top of the head and one in the back of the head. it will take atleast 1yr to fully close. At that time shaking hard will make the baby collapse.

So its very important that Parents should know about it and educate about it when somebody is doing that to their baby.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.