ஸ்டாட்டின்... கொழுப்பு மாத்திரையால் குழப&#

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஸ்டாட்டின்... கொழுப்பு மாத்திரையால் குழப்பங்கள் வருதா?

ஸ்டாட்டின்...மருத்துவம் சார்ந்த பலருக்கும், மருந்துகளோடு வாழ்க்கை நடத்துகிற நம்மைப் போன்ற சிலருக்கும் ஓரளவு தெரிந்த பெயர்தான். மற்றவர்களுக்காக ஓர் ஒற்றை வரி அறிமுகம். உடலின் கெட்ட கொழுப்பைக் குறைக்கப் பயன்படும் ஒரு மருந்துதான் ஸ்டாட்டின்.


‘மாரடைப்பைத் தவிர்க்கக் கொடுக்கப்படும் இந்த மாத்திரையால் பல மோசமான பக்கவிளைவுகள் ஏற்படு கிறது. அதனால், ஸ்டாட்டினை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று கோவையைச் சேர்ந்த, `டாக்டர் வி.ஹரிஹரன் முகநூலில் அவசர அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் எழுதியிருக்கிறார்.

‘ஸ்டாட்டின் மருந்துகள் நீரிழிவை உருவாக்கும் என்பது பலருக்கும் தெரியும். அதனால்தான், நோயாளிகளுக்கு விளையும் நன்மை தீமைகளை மனதில் கொண்டு பரிந்துரைக்க வேண்டும் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாடு நிறுவனமான எஃப்.டி.ஏ. கூறியிருக்கிறது.

இதில் மாரடைப்பு வந்த நோயாளிகளுக்கு கொழுப்பைக் குறைப்பதற்குப் பதிலாக ரத்தநாளங்களில் புதிதாக அடைப்பை உண்டாக்கி விடுகிறது ஸ்டாட்டின். இதை American College of Cardiology இதழில் வந்த ஓர் ஆய்வறிக்கை கூறியிருக்கிறது. இதேபோல, ஸ்டாட்டின்கள் ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கால்சியத்தின் அளவைக் கூட்டி மாரடைப்பின் அபாயத்தை அதிகரிக்கும் வாய்ப்பும் உண்டு’ என்று டாக்டர் ஹரிஹரன் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்மையும் தீமையும் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் மாத்திரையான ஸ்டாட்டினில் இப்படி ஒரு சிக்கல் இருக்கிறதா என்று நீரிழிவு சிறப்பு மருத்துவரான அஞ்சனா விடம் கேட்டோம்…‘‘ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் ஒரு மாத்திரைதான் ஸ்டாட்டின் (Statin). நீரிழிவு ஏற்பட்டவர்கள், ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளவர்கள், புகைப்பழக்கம் உள்ளவர்கள், கொழுப்பு உணவுகளை அதிகமாக சாப்பிடும் பழக்கம் உள்ள வர்கள், முதியோர்கள் என மாரடைப்பு ஏற்படும் அபாயம் யாருக்கெல்லாம் இருக்கிறதோ, அவர்களுக்கு ஸ்டாட்டினை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். மாரடைப்பின் அபாயம் பரிசோதனையின் மூலம் உறுதியாகத் தெரியும் பட்சத்தில், ஸ்டாட்டின் கொடுப்பதன் மூலம் மாரடைப்பு வராமல் தடுத்துவிட முடியும்.

ஸ்டாட்டினால் நீரிழிவு இல்லாதவர்களுக்கும் சர்க்கரை நோய் உண்டாக சாத்தியம் இருக்கிறது என்பது விவாதத்துக்கு உரிய விஷயம்தான். நீரிழிவு உள்ளவர்கள் ஸ்டாட்டின் எடுத்துக் கொள்ளும்போது சர்க்கரையின் அளவு அதிகரிக்கவும் வாய்ப்பு உண்டு என்றும் கூறுகிறார்கள். ஆனால், இதிலேயே மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. நீரிழிவு இருக்கும் எல்லோருக்கும் ஸ்டாட்டினால் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதில்லை. இந்த பொதுவான குற்றச்சாட்டை பல நோயாளிகளே மறுக்கிறார்கள்.

அதனால், நீரிழிவு இருப்பவர்களுக்கு மாரடைப்பு அபாயத்தைக் குறைப்பதற்காக ஸ்டாட்டின் கொடுப்பதில் தவறு இல்லை. ஸ்டாட்டினால் பிரச்னை இருக்கிறது என்பதை விட, அதனால் உண்டாகும் நன்மைகள் நிறைய இருக்கின்றன. அதைத்தான் நாம் யோசிக்க வேண்டும். மாரடைப்பு அபாயம் இருக்கிறது என்பதற்காகவே ஸ்டாட்டினை எல்லோருக்கும் கொடுப்பதுதான் தவறு. யாருக்குத் தேவைப்படுகிறதோ அவர்களுக்கு மட்டும் கொடுக்கும்பட்சத்தில் ஸ்டாட்டின் பயன் தரும் நல்ல மருந்துதான்.

ஸ்டாட்டினால் இந்த பக்கவிளைவுகள் ஏற்படுகிறது என்று சொல்லப்படுவதைப் போல, எல்லா மருந்துகளுக்குமே பக்கவிளைவுகள் உண்டு. ஒரு மருந்தில் நன்மையும் இருக்கும்... தீமையும் இருக்கும். அதுபோலவே ஸ்டாட்டினிலும் சில பிரச்னைகள் இருக்கலாம். ஒரு மருந்தால் பிரச்னை இருக்கிறது என்பதற்காகத் தவிர்த்தால், எல்லா மருந்துகளையுமே ஒதுக்க வேண்டியிருக்கும். எந்த மருந்தையும் நாம் பயன்படுத்த முடியாது.

ஸ்டாட்டினுக்கு ஆதரவாகப் பல ஆதாரங்களும் ஆய்வுகளும் இருக்கின்றன. சில நோயாளிகளுக்கு ஸ்டாட்டின் தேவைப்படும். அவர்களுக்குக் கொடுத்துத்தான் ஆக வேண்டும். சிலருக்குத் தேவை இருக்காது.

அவர்களுக்கு வேறு மருந்துகள் கொடுத்து சமாளித்துவிடலாம். இதில் நாம் தெளிவாக இருக்க வேண்டிய விஷயம், எல்லா மருந்துகளும் எல்லோருக்குமானது அல்ல. யாருக்கு என்ன தேவையோ, அவர்களுக்கு மட்டுமே கொடுக்கும்போது அது நல்ல மருந்துதான். ஸ்டாட்டின் உள்பட...’’ என்கிறார் டாக்டர் அஞ்சனா.

‘ஸ்டாட்டினால் பக்க விளைவுகள் வரும் என்பதை மறுக்க முடியாது. அளவறிந்து பயன்படுத்தினால் போதும்’ என்கிறார் இதய சிகிச்சை மருத்துவரான சொக்கலிங்கம். ‘‘ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதற்கும் தடுப்பதற்கும் ஸ்டாட்டினுக்கு சக்தி உண்டு. அதற்காக, வாழ்நாள் முழுவதும் ஸ்டாட்டின் எடுத்துக்கொண்டே இருக்கக் கூடாது. ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலான
எல்.டி.எல். அளவு 100 மில்லி கிராமுக்கு கீழ் குறைந்த பிறகு, ஹெச்.டி.எல். என்ற நல்ல கொலஸ்ட்ரால் 50 மில்லிகிராமுக்கு அதிகமாகிவிட்ட பிறகு ஸ்டாட்டினை நிறுத்திவிட வேண்டும்.

அதன்பிறகு ஸ்டாட்டின் தேவையில்லை. என்னுடைய 50 வருட அனுபவத்தில் பெரும்பாலான நோயாளிகளுக்கு ஒரு வருடத்துக்கு மேல் ஸ்டாட்டின் பரிந்துரைத்ததில்லை. காரணம், கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதற்குத் தற்காலிக உதவியாகத்தான் ஸ்டாட்டினை எடுத்துக் கொள்ளச் சொல்கிறேன்.

கெட்ட கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்ப்பது, நேர்மறை எண்ணங்களுடன் மகிழ்ச்சியாக இருப்பது, கோபம், பொறாமை போன்ற உணர்ச்சிக் கொந்தளிப்புகளை தவிர்ப்பது, நடைப்பயிற்சி, சைக்கிளிங், நீச்சல் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்வது, யோகா, தியானம் செய்வது, புகைப்பழக்கம் இல்லாமல் இருப்பது என வாழ்க்கை முறையை நல்லவிதமாக மாற்றும்போது கெட்ட கொலஸ்ட்ரால் அளவு தானாகவே குறைந்துவிடும்.

கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்போது உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவு தானாகவே அதிகரித்துவிடும். இது உடலின் பல ஆச்சரியங்களில் ஒன்று.
தொடர்ச்சியாக ஸ்டாட்டினை பயன்படுத்திக் கொண்டே இருக்கும்போதுதான் தேவையற்ற பக்கவிளைவுகள் வருகின்றன. குறிப்பாக, உடலின் தசைகள் கடுமையாக பாதிக்கப்படலாம்.

இதயத்தின் தசைகள் உள்பட உடலின் அனைத்துத் தசைகளையும் பாதிக்கும் மயால்ஜியா (Myalgia), தசைகளை செயல் இழக்கச் செய்யும் மயோபதி (Myopathy), மயோஸைட்டிஸ் (Myositis) என்கிற தசைகளில் புண்கள் வர வைக்கும் நிலை என சில ஆபத்துகள் உண்டு. இத்துடன் நுரையீரலிலும் கல்லீரலிலும் சில பிரச்னைகள் வரக்கூடும். மூளையின் செயல்திறன் மற்றும் நினைவுத்திறனை பாதிக்கும் அபாயமும் ஸ்டாட்டினில் இருக்கிறது.

அதனால் மருத்துவர்களும் தொடர்ச்சியாக ஸ்டாட்டினை பரிந்துரைக்கக் கூடாது... நோயாளிகளும் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளக் கூடாது. கொஞ்சம் மெனக்கெட்டு தங்களது வாழ்க்கைமுறை மூலம் மாரடைப்பு அபாயத்திலிருந்து தற்காத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். ஸ்டாட்டினை முற்றிலுமாகத் தவிர்க்க முடியாது. அந்த மருந்து நமக்குத் தேவை. அதனால் காலம் அறிந்து, அளவு அறிந்து பயன்படுத்தினால் போதும்’’ என்கிறார் டாக்டர் சொக்கலிங்கம்.

வள்ளுவர் சரியாகத்தான் சொன்னார்... ‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்வாய்நாடி வாய்ப்பச் செயல்’...`நோயாளியின் உடல் மாற்றங்களால் வந்துள்ள நோயை இன்னது என்று அறிந்து, அந்த நோய் வருவதற்கான மூல காரணத்தையும், அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து, அதைப் போக்குவதில் தவறு வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட வேண்டும்’ என்ற வள்ளுவரின் வழிகாட்டுதல் ஸ்டாட்டினுக்கு மட்டுமல்ல... எல்லா மருந்துகளுக்குமேதான்!

தொடர்ச்சியாக ஸ்டாட்டினை பயன்படுத்திக் கொண்டே இருக்கும்போது உடலின் தசைகள் கடுமையாக பாதிக்கப்படலாம். இதயத்தின் தசைகள் உட்பட உடலின் எல்லா தசைகளையும் பாதிக்கும் மயால்ஜியா, தசைகளை செயல் இழக்கச் செய்யும் மயோபதி, மயோஸைட்டிஸ் என்கிற தசைகளில் புண்கள் வர வைக்கும் நிலை, நுரையீரலிலும் கல்லீரலிலும் பிரச்னைகள், மூளையின் செயல்திறன் மற்றும் நினைவுத்திறனை பாதிக்கும் அபாயமும் வரலாம்.

நீரிழிவு இருப்பவர்களுக்கு மாரடைப்பு அபாயத்தைக் குறைப்பதற்காக ஸ்டாட்டின் கொடுப்பதில் தவறு இல்லை. ஸ்டாட்டினால் பிரச்னை இருக்கிறது என்பதைவிட அதனால் உண்டாகும் நன்மைகள் நிறைய இருக்கின்றன. ஸ்டாட்டினை எல்லோருக்கும் கொடுப்பதுதான் தவறு.
 
Last edited:

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#2
Re: ஸ்டாட்டின்... கொழுப்பு மாத்திரையால் குழப&a

Very good awareness share @chan ji.:thumbsup

Statins are high risk which may cause also muscle pain & liver damage.
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,491
Likes
148,301
Location
Madurai
#3
Re: ஸ்டாட்டின்... கொழுப்பு மாத்திரையால் குழப&a

Thanks for the Detailed Info, Lakshmi! Bageer nu Iruku..
 

Durgaramesh

Minister's of Penmai
Joined
Sep 12, 2015
Messages
3,234
Likes
5,305
Location
Puducherry
#4
Re: ஸ்டாட்டின்... கொழுப்பு மாத்திரையால் குழப&a

Tfs friend it's important and useful information thanks for sharing friend.:pray1:
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.