ஸ்டெம் செல் தானம் - Stem Cell donation

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,261
Likes
73,630
Location
Chennai
#1
ஸ்டெம் செல் தானமளிப்பவர்ளின் பதிவகமான தாத்ரி 100,000 பதிவுகளை கடந்து சாதனை!

ந்தியாவின் மிகப்பெரிய ஸ்டெம் செல் தானமளிப்பவர்களின் பதிவகமான தாத்ரி, தாலசீமியா, லுக்கேமியா மற்றும் ரத்தம் தொடர்பான பிற கோளாறுகளினால் பாதிக்கப்பட்டு, தங்களுக்கு பொருத்தமான ரத்த ஸ்டெம் செல் தானமளிப்பவரை தேடுகின்ற நோயாளிகளுக்கு உதவும் நோக்கில் தொடங்கப்பட்ட அமைப்பாகும்.

சென்னையை தலைமையகமாகக் கொண்டு, லாபநோக்கமின்றி இயங்கிவரும் தாத்ரி அமைப்பில், இந்தியா முழுக்க ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர். உலக மஜ்ஜை (stem cell) தானமளிப்பவர் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தில் இதுவரை 16,000த்துக்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர் என்று தாத்ரி அமைப்பு அறிவித்தது.
சென்னை தரமணியில் உள்ள வி.ஹெச்.எஸ், கே.எஸ்.சஞ்சீவி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தாத்ரி அமைப்பின் இணை-நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ரகு ராஜகோபால், அப்போலோ மருத்துவமனையின் குழந்தைகளுக்கான ரத்தநோய் மற்றும் புற்றுநோய் மருத்துவர் ரேவதி ராஜ், ரோட்டரி சென்ட்ரல் - டி.டி.கே., வி.ஹெச்.எஸ் ரத்த வங்கியின் இயக்குநரான பாலசுப்ரமணியன், வி.ஹெச்.எஸ் மருத்துவர்களான ஜானகி மற்றும் மைதிலி ஆகியோர் பங்கேற்று பேசினர்.
தாத்ரி அமைப்பு ஒரு லட்சம் பதிவுகளை பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய ரகு ராஜகோபால், இன்னும் மூன்று ஆண்டுகளில் பத்து லட்சம் பதிவுகளை பெறும் இலக்குடன் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். மருத்துவர் ரேவதி ராஜ், ஸ்டெம் செல் தானமளிக்க அனைவரும் முன் வர வேண்டும் என்றார்.
சிகிச்சை பெற்ற குழந்தைகளின் தந்தைகளும் தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர். எட்டு வயதாகும் தனது மகளுக்கு வி.ஹெச்.எஸ் சார்பாக இலவசமாக ரத்த பரிமாற்றம் செய்யப்பட்டதாக கூறிய ஷேக் அப்துல் ரகுமான், தாத்ரி அமைப்பின் மூலம் தானமளிப்பவரை பெற்று, ஸ்டெம் செல் மாற்று சிகிச்சைக்குப் பின் தனது மகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு செல்வதாகவும் கூறினார்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த அதுல் குமார் என்பவர், தனது ஏழு வயது மகளுக்காக, பல மாநிலங்களில் சிகிச்சைக்காக அலைந்ததாகவும், பின் தாத்ரி அமைப்பின் மூலமாக தானமளிப்பவரை பெற்றதாகவும் கூறி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மேற்கு வங்க மாநிலத்திலிருந்து வந்திருந்த தீபங்கர் சக்ரவர்த்தி, தனது மகனுக்கான பொருத்தமான தானமளிப்பவரை தாத்ரி அமைப்பின் மூலம் தேடிக் கொண்டிருப்பதாக கூறினார். அவர், தாத்ரி அமைப்பிற்காக உழைக்க விரும்புவதாகவும் கூறினார்.
ஸ்டெம் செல் தானமளித்த விமல் ஃபெர்னான்டஸ் பேசுகையில், தனது தாயே தன்னை தானமளிக்க ஊக்கப்படுத்தியதாக கூறி பெருமைபட்டார். பூரண உடல் பரிசோதனை மேற்கொண்டு, தான் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்த பின் தான், தான் தானமளித்ததாக கூறினார். அதுதான் தனது வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்றும், விமல் கூறினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் “ஈதல்” எனும் குறும்படத்தின் குறுந்தகடு வெளியிடப்பட்டு, அந்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டது.
18 வயதிளிருந்து 50 வயது வரை உள்ளவர்கள் ஸ்டெம் செல் தானத்திற்கு பதிவு செய்யலாம். 60 வயது வரை தானம் செய்யலாம். இதன் மூலம் நாமும் ஓர் மனிதனின் உயிரை காப்பாற்றலாம் தானே!

செய்தி, படங்கள்: ஜெ. விக்னேஷ்
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,860
Likes
140,750
Location
Madras @ சென்னை
#2
re: ஸ்டெம் செல் - Stem Cell

Nice info Kaa.

:thumbsup​
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,261
Likes
73,630
Location
Chennai
#3
Re: ஸ்டெம் செல் - Stem Cell

Nice info Kaa.

:thumbsup​
thanks visu........
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#4
Thanks for the details.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.