ஸ்பாண்டிலோசிஸ் -கழுத்து வலி - Spondylosis

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஸ்பாண்டிலோசிஸ் எத்தனை நாட்களில் குணமாகும்?

டாக்டர் எல். மகாதேவன்கொஞ்ச நாட்களாகக் கழுத்தில் லேசாக வலி இருந்தது. அது திடீரென்று அதிகரித்து மிகவும் மோசமாகித் தோள்பட்டையின் குறிப்பிட்ட பகுதி முழுக்க மரத்துப்போனது போலாகிவிட்டது. கம்ப்யூட்டரில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்க்கும் பழக்கம் உண்டு. இது எலும்புத் தேய்மான நோயாக இருக்குமா?

நீங்கள் குறிப்பிடும் அறிகுறிகளை வைத்துப் பார்த்தால் இது Cervical spondylosis பிரச்சினை என்று தெரிகிறது. இது கழுத்தில் உள்ள சவ்வும், எலும்புகளும் தேய்கிற ஒரு நிலை. பலருக்கும் நாட்பட்ட வலிக்கு இது காரணமாக இருக்கிறது. கழுத்தெலும்பு அதிகம் பயன்படுத்தப்பட்டுவந்தால் இது ஏற்படுகிறது.

கழுத்தில் இரண்டு எலும்புகளுக்கிடையே சவ்வு போன்ற பொருள் உண்டு. சில நேரங்களில் அந்த எலும்பு அதீத வளர்ச்சியால் துருத்திக்கொள்ளும். இந்தத் துருத்தி கொள்ளும் பகுதி, கழுத்திலிருந்து வெளிவருகிற நரம்பு மண்டலத்தை அழுத்தும். சில நேரங்களில் தண்டுவடமும் அழுத்தப்படலாம். இந்த நேரங்களில் கை மட்டுமல்லாமல் காலும் பாதிக்கப்படலாம். தினமுமே இவ்வாறு கழுத்தைத் தவறான நிலையில் வைப்பதால், தேய்வுநிலை ஏற்படலாம்.

அதிக வேலைப்பளு உள்ளவர்கள், விளையாட்டில் அதிகக் கவனம் செலுத்துபவர்களை இது பாதிக்கலாம். வயது ஆகஆக இது அதிகரிக்கும். 60 வயது ஆகும்போது அனைவருக்குமே எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தால், கழுத்தெலும்பு தேய்மானம் காணப்பட வாய்ப்பு உண்டு.

இது அல்லாமல் வேறு சில காரணங்களாலும் கழுத்தெலும்புத் தேய்மானம் ஏற்படலாம். அதிகமாக உடல் பருமனுடன் இருப்பது, உடற்பயிற்சியே செய்யாமல் இருப்பது, கனமான பொருட்களைத் தூக்குவது, கழுத்தை அடிக்கடி முன் பின் அசைப்பது, வளைப்பது, கழுத்தில் அடிபடுவது, சிறு வயதில் அடிபட்டுக் கவனிக்காமல் விட்டுவிடுவது, கழுத்து தண்டுவட அறுவை சிகிச்சை, கழுத்தில் இருக்கிற சவ்வு பிதுங்குதல், கழுத்தில் வாத நீர் வருவது, கழுத்தில் கனத்தன்மை குறைகிற osteoporosis எனும் நோய் தோன்றுவது போன்றவை அந்தக் காரணங்கள்.

தேய்மான அறிகுறிகள்
இந்த நோய்க்கான அறிகுறிகள் மெதுவாகத் தோன்றும். சில நேரம் திடீரென்று கடுமையான வலியை உண்டாக்கும். வலி லேசானதாகவோ, கடுமையானதாகவோ இருக்கும். கழுத்தை அசைக்க முடியாமல் போகும். சிலருக்குக் கழுத்து வலி, தோள்பட்டை வரை பரவலாம். நின்று கொண்டிருந்தாலோ, உட்கார்ந்து கொண்டிருந்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, சிரித்தாலோ, கழுத்தைப் பின்பக்கமாக வளைத்தாலோ, நடந்தாலோ வலி கூடும்.

கை தசைகளில் பலம் குறையும். கையைத் தூக்குவதில் சிரமம் ஏற்படும். துணியைப் பிழிவதில் சிரமம் ஏற்படும். கைகளில் தசைகள் இறுகிப் போகும். கைகளில் மரத்துப் போகும் தன்மை ஏற்படும். சிலருக்குத் தலைவலி ஏற்படலாம். நடக்கும்போது தள்ளாட்டம் வரலாம். பதற்றமான சூழ்நிலைகளில் சிறுநீர், மலம் கட்டுப்பாடின்றிப் போகும். தண்டுவடம் பாதிக்கப்பட்டிருந்தால் இவ்வாறு வரும்.

பரிசோதனை முறைகள்

மருத்துவர் கழுத்தை முன்புறம், பின்புறம் மற்றும் பக்கவாட்டில் அசைக்கச் செய்து இந்த நோயைக் கண்டறிவார். வலுக் குறைவு, உணர்ச்சிக் குறைவு இருக்கிறதா என்று பார்ப்பார்.

கழுத்துப் பகுதியை எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்பார். தேவைப்பட்டால் MRI, EMG, nerve conduction study எடுப்பார். பிசியோதெரபி செய்யச் சொல்லுவார். தசைகளுக்கு வலுவூட்டுகிற பல பயிற்சிகள் உள்ளன. அவற்றைச் சரியாகப் புரிந்துகொண்டு செய்ய வேண்டும். மசாஜ் இதற்கு ஒரு சிறந்த சிகிச்சை. அக்குபங்சர் போன்ற சிகிச்சைகளைச் சிலர் செய்வதுண்டு.

நவீன மருத்துவத்தில் ஆரம்ப நிலையில் வலியைக் குறைப்பதற்கு ஐஸ் சிகிச்சையும், உஷ்ணமான சிகிச்சையையும் மாற்றி மாற்றிச் செய்வார்கள். வலி நிவாரணிகளைத் தற்காலிகமாகக் கொடுப்பார்கள். அபூர்வமாகத் தண்டுவடம் அழுத்தப்பட்டால் அறுவை சிகிச்சை தேவைப்படும். சாதாரணமாக இதை லகுவாகச் சமாளித்துவிடலாம். மலம் மற்றும் மூத்திரம் போவதைக் கட்டுப்படுத்த இயலாமை, தசைகள் இயங்குவதில் கஷ்டம், நடப்பதில் கஷ்டம் இருந்தால் சிகிச்சை செய்வதற்குக் கடினமாகும்.

ஆயுர்வேதச் சிகிச்சை முறை
கழுத்துப் பகுதி கபம் சார்ந்த பகுதி. இங்கு வாதம் சேர்கிறபோது தேய்வு வருகிறது. தசை பிதுங்குகிறது. நரம்பு மரத்துப் போகிறது. வாதமும் குளிர்ச்சியானது. கபமும் குளிர்ச்சியானது. இங்கு உஷ்ணமான சிகிச்சைகளைச் செய்ய வேண்டும். இதைக் கிரீவாகிரஹம் என்றும், கிரீவா குண்டனம் என்றும் அழைப்பார்கள்.

கழுத்து வலி நீங்குவதற்குச் சிற்றரத்தை பற்று, கொள்ளு பற்று, மூசாம்பரம் பற்று போன்ற பற்றுகளைப் போடுவார்கள். அதன் பிறகு கொட்டம் சுக்காதி எண்ணெய், பருத்தி எண்ணெய் என்ற கார்ப்பாஸாஸ்தியாதி எண்ணெய், சிஞ்சாதி எண்ணெய், பிரபஞ்சனம் எண்ணெய், விஷமுஷ்டி எண்ணெய், விஷக் கர்ப்ப எண்ணெய் போன்றவற்றைத் தேய்த்து ஆவி பிடிக்கவோ அல்லது எண்ணெயைப் பஞ்சில் முக்கி வைக்கவோ செய்வார்கள். அதன் பின் கார்ப்பா ஸாஸ்தியாதி எண்ணெயை மூக்கில் இரண்டு சொட்டு விடுவார்கள். பின்பு துணியில் மருந்துகளைக் கிழியாகக் கட்டி ஒத்தடம் கொடுப்பார்கள்.

உள்ளுக்கு மாவிலங்கப்பட்டை கஷாயமாகிய வருணாதி கஷாயம், தசமூலக் கஷாயம், ராஸ்னாபஞ்சகம் கஷாயம், ஆபாகுக்குலு, யோகராஜ குக்குலு, தான்வந்தர தைலம் வஸ்தி பாகம் போன்றவை கொடுப்பதுண்டு, பூண்டு பால் கஷாயமும் கொடுப்பதுண்டு, தலையில் எண்ணெயை அக்குபங்சர் வைக்கிற சிரோ வஸ்தி போன்ற சிகிச்சைகளும் இதற்குச் செய்வதுண்டு. வலி சற்றுக் குறைந்த பிறகு உடற்பயிற்சி, யோகா போன்றவற்றைச் செய்யலாம்.

யாருக்கு அதிகமாக வரும்?
சிலருக்குக் குடும்பத்திலேயே கழுத்து வலி வருவதுண்டு. புகை பிடிப்பவர்களுக்கு, கணினியில் வேலை செய்பவர்களுக்கு, கண்டக்டர் வேலை செய்பவர்களுக்கு, மனச் சோகம் உடையவர்களுக்கு இது வரலாம். பொதுவாக 8 வார சிகிச்சையில் 95 சதவீதம் பலன் கிடைக்கும். சிலர் மென்மையான காலர்கள் (கழுத்துப் பட்டை) அணிவதுண்டு. இது கழுத்தின் அசைவைக் கட்டுப்படுத்தும். கழுத்துக்கு ஓய்வு கிடைக்கும். இதைக் குறுகிய காலத்துக்குப் பயன்படுத்த வேண்டும். நீண்ட நாட்கள் பயன்படுத்தினால் தசைகளின் வலுவை இழக்கச் செய்துவிடும்.

எளிய தற்காப்பு முறைகள்
உயரமான தலையணை வைத்துத் தூங்கும் பழக்கம் உள்ளவர்களுக்குப் பெரும்பாலும் இந்தக் கழுத்து வலி வருவதாகக் கூறப்படுகிறது. எனவே, கழுத்து வலி வந்தால், முதலில் தலையணை வைத்துத் தூங்குவதை நிறுத்துங்கள். சமதளமான தரையில் பாய் விரித்துத் தூங்குங்கள்.
நொச்சி இலையை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி, அதைத் தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் கழித்து வெந்நீரில் குளிக்கலாம்.
வாதமடக்கி (வாத நாராயணன்) இலையைக் கொதிக்கவைத்து உடம்புக்கு ஊற்றலாம்.

அமுக்கராக் கிழங்கைத் தெளிந்த சுண்ணாம்பு நீரில் குழைத்துக் கொதிக்க வைத்துக் கழுத்தில் பற்றுப்போட்டு வந்தால், கழுத்து வலி குறையும்.
குப்பைமேனி இலையை எடுத்துச் சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து, அதேயளவு நல்லெண்ணெயுடன் கலந்து தைலப் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்துவந்தால் கழுத்து வலி குறையும்.
அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்கள், சிறிது நேரம் எழுந்து நடந்த பின் வேலை செய்யலாம். குறிப்பாக, கணினி முன் வேலை செய்பவர்கள் சிறிது ஓய்வெடுத்த பின் வேலையைத் தொடர்வது நல்லது.

வாகனங்களை மிதமான வேகத்தில் ஓட்ட வேண்டும். அடிக்கடி பிரேக் போடுவதைத் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை குறைந்த தொலைவுள்ள பகுதிகளுக்கு நடந்து செல்வது நல்லது. ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
கழுத்து வலி

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற முதுமொழி அனைவரும் அறிந்ததே.

நோய் எப்படி உண்டாகிறது?

உடல், மனம், உள்ளம் இம்மூன்றும் பாதிக்கப்படும்போது நோய்கள் தானாகவே மனிதனை ஒட்டிக்கொள்கின்றன. இவை சீராக செயல்பட்டால்தான் மனிதன் நோயின்றி வாழமுடியும்.

மனித உடலானது பல கோடி நரம்புகளாலும், தசைகளாலும், இரத்த நாளங்களாலும், எலும்புகளாலும் பின்னிப் பிணையப்பட்டதாகும். அண்டம் என்ற பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் பிண்டம் என்ற இந்த மனித உடலிலும் அமைந்துள்ளது. இவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.இயற்கையால் உருவாக்கப்பட்ட மனித இனம் நோயின் கோரப் பிடியில் சிக்கி தவிக்கிறது.குறிப்பாக முதுகுவலி, கீழ்த்தண்டு முதுகுவலி, கழுத்துவலி, கைகால் மூட்டு வலி போன்றவற்றால் அதிகம் பேர் அவதிப்படுகின்றனர். குறிப்பாக நீரிழிவு, இரத்த அழுத்த நோயாளிகள் இத்தகைய நோயின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இந்த வகையில் கழுத்துவலி என்ற தோள்பட்டை வலி நம்மில் அனேக பேரைப் பாதிக்கிறது.

“எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்” என்பது சித்தர்களின் கூற்று. மனிதர்களின் இயக்கம் அனைத்திற்கும் முக்கிய காரணமாக செயல்படுவது சிரசு என்ற தலைப்பகுதி தான்.

பிரபஞ்ச சக்திகளை உணரும் தன்மை அனைத்தும் சிரசின் வழியே தான் நடைபெறுகிறது. இந்த சிரசில் தான் மனிதனை இயக்கும் ஐம்புலன்களும் அமைந்துள்ளன.

இத்தகைய சிறப்புகள் கொண்ட தலைப்பகுதியை உடலோடு இணைக்கும் பாலம் தான் கழுத்துப்பகுதி. கழுத்துப்பகுதி வழியாகத்தான் உடலுக்கும் சிரசுக்கும் நரம்புகள், இரத்த நாளங்கள் செல்கின்றன.கழுத்தானது உடலின் முக்கிய உறுப்புகள் செயல்படும் பகுதி எனக் கூறலாம்.

கழுத்தின் மையப் பகுதியில் ஏழு தண்டு வட எலும்புகள் உள்ளன. இவற்றைச்சுற்றி தசைகளும், தசை நார்களும் இணைந்து உள்ளன. மேலும் கழுத்து எலும்பிலிருந்து தான் கைகளுக்கு போகும் நரம்புகள் வெளிவருகின்றன.
இப்படி உடலுக்கும் சிரசிற்கும் பாலமாக இருக்கும் கழுத்துப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டால் நம்முடைய அன்றாட செயல்கள் அனைத்தும் கடினமாகிவிடுகின்றன.

இது பெரும்பாலும் 40 வயதைத் தாண்டியவர்களுக்கே ஏற்படுகிறது. இந்த எலும்பு இணைப்புகளில் ஏற்படும் தேய்மானத்தைத்தான் செர்விகல் ஸ்பாண்டிலோஸிஸ் (Cervical Spondylosis) என்று ஆங்கில மருத்துவ முறைகளில் கூறுகின்றனர். இதை வர்ம மருத்துவத்தில் தோள் பட்டை வாதம் என்று அழைக்கின்றனர். இது குறிப்பாக அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வோர்களையே அதிகம் பாதிக்கிறது. உடல் உழைப்பின்மை, உடற் பயிற்சியின்மை, சீரற்ற உணவுமுறை, தூக்கமின்மை, இவற்றினாலும் உண்டாகிறது.

கழுத்துவலி வரக் காரணங்கள்

செரியாமை, மலச்சிக்கல், வாயுக்கோளாறுகள், குடல் சூடு, அஸ்த சூடு, மூலச்சூடு இவற்றினாலும்,அதீத சிந்தனை, மனஅழுத்தம், தூக்கமின்மை, கோபம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தல், அதிகமான நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்தல், தொலைக்காட்சி பார்த்தல், போன்றவற்றாலும் இத்தகைய கழுத்துவலி உருவாகிறது.

நேரங்கடந்த உணவு, அளவுக்கதிகமான உணவு, எளிதில் சீரணமாகாத உணவு, கோபம், பயம் எரிச்சல் உள்ள போது உண்பது, நீண்ட நாள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பது, பித்தத்தை அதிகரிக்கும் உணவுகள், வாயுவை அதிகரிக்கும் உணவுகள் என பலவற்றை உண்பது போன்றவற்றாலும் கழுத்துவலி உண்டாகிறது.இப்படிப்பட்ட உணவுகளை உண்பதால் குடலில் நீரானது அதிகம் சுரந்து செரியாமை ஏற்படுகிறது. பின் அது மலச்சிக்கலாக மாறுகிறது. இதனால் குடலில் அபான வாயு சீற்றம் கொண்டு குடல் நீரை மேல்நோக்கித் தள்ளுகிறது. இந்த குடல் நீர் ஆவியாகி சிரசை நோக்கி சென்று அங்கே தங்குகிறது. பின்பு தலையின் பின்பகுதி நரம்புகள் வழியாக கீழ் இறங்கி கழுத்துப் பகுதிக்கு வரும்போது அங்கு தசைகளையும் நரம்புகளையும் சுற்றிக் கோர்த்துக் கொள்கிறது. பின்பு அது பசைத் தன்மையடைந்து பந்துபோல் கழுத்து தசை எலும்புகளையும், நரம்புகளையும் இறுகச் செய்கிறது. இதனால் கழுத்துப்பகுதி திரும்ப முடியாமல் போகிறது. மேலும் அங்கு கைகளின் நரம்புகள் ஆரம்பிப்பதால் அவைகளும் தோள் பட்டை பாகங்களும் இறுகி வலியை உண்டாக்குகிறது.

உதாரணமாக கடலில் உள்ள நீரானது அதிக வெப்பத்தால் ஆவியாகி மேல் சென்று மேகமாக மாறி பின் மழை நீராக பொழிவது போல் குடலில் உள்ள நீரும் ஆவியாக மாறி சிரசை அடையும்போது அவை நீராக மாறி கழுத்துப் பகுதிக்கு இறங்குகிறது. இது அவரவர் உடற்கூறுகளுக்குத் தகுந்தவாறு பாதிப்புகளை உண்டுபண்ணுகிறது.

குறி குணங்கள்

தலைவலி, மூக்கில் நீர்வடிதல், மண்டைக்குத்து, பின் கழுத்துப் பகுதியில் பிடிப்பு போன்றவை உண்டாகும். குனிந்து நிமிரும்போது தலை சுற்றி கண்ணில் மின்னல் போல் தோன்றச்செய்யும். உடல் அதிர்ந்து நரம்புகள் இறுகும். சிலருக்கு எழுந்து நடக்கும்போது தலை சுற்றல் மயக்கம் உண்டாகும்.

கழுத்துப் பகுதியில் கைகளின் நரம்புகள், எலும்புகள் ஆரம்பிப்பதால் கைகள் மரத்துப் போகும். சுண்டு விரல் பகுதிகள் செயலிழந்து காணப்படும். மன எரிச்சல் உண்டாகும். எதிலும் விருப்பம் தோன்றாது. அதிக கோபம் உண்டாகும், தூக்கமின்மை ஏற்படும். கண் எரிச்சல் உண்டாகும். அதிகநேரம் படிக்கும்போது கழுத்துப் பகுதியில் வலி உண்டாகும். எழுதும்போது கை விரல்களில் வலி ஏற்படும்.

கழுத்துப் பகுதி தடித்துக் காணப்படும். மேலும் கழுத்து வலியானது உடற்கூறுகளுக்கு தகுந்தவாறு அறிகுறிகள் தென்படும். வாத உடற்கூறு கொண்டவர்களுக்கு கழுத்து இறுகி திரும்ப முடியாத நிலை உண்டாகும்.

பித்த உடற்கூறு கொண்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் தலைசுற்றல் ஏற்படும்.

கப உடற்கூறு கொண்டவர்களுக்கு கழுத்துப் பகுதி தடித்து உப்புநீர் கலந்து கருத்துப்போய் பட்டை பட்டையாகத் தோன்றும். மேலும், உடற்கூறுகளுக்குத் தகுந்தவாறு, ஒருசிலருக்கு ஒற்றைத் தலைவலியை உருவாக்கும்.

இதே நீர், தலையில் (சிரசில்) உள்ள தனஞ்செயனில் நின்றுகொண்டு, சித்த பிரம்மையை ஏற்படுத்தும். இதே நீர், மூக்கில் நீர்வடியச் செய்து அதுவே சைனஸ் ஆக மாறிவிடும்.

இதே நீர் அதிக பித்த நீருடன் கலந்துவிடுமானால், பித்த வாதமாக மாறி ரத்த அழுத்தத்தை உண்டுபண்ணுகிறது.

பொதுவாக எந்த உடற்கூறு கொண்டவர்களும் தோள்பட்டை வலி உண்டானால் அது கழுத்துப்பகுதியில் அதிக வியர்வையை உண்டாக்கும். ஒரு சிலருக்கு கழுத்துப் பகுதியிலிருந்து நீர் கீழ் இறங்கி தோள்பட்டைப் பகுதியில் அதிகமான வலியை ஏற்படுத்தும். சில சமயங்களில் இது நெஞ்சுவலி என நினைக்கத் தோன்றும். நெஞ்சு வலிக்கும், தோள்பட்டை வலிக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டறிவது அவ்வளவு சுலபமல்ல. இந்த கழுத்து வலியானது நாளடைவில் தலைப் பகுதியான சிரசை ஆடச் செய்துவிடும்.

கழுத்து வலியைப் போக்க

கழுத்து வலியை எக்ஸ் ரே மூலம் படம் பிடித்து பார்த்து உடனே கழுத்துப் பட்டையை அணிய பரிந்துரைக்கின்றனர் இன்றைய நவீன மருத்துவர்கள். ஆனால் இந்திய மருத்துவமுறையில் கழுத்து வலியை முழுமையாகப் போக்க சிறந்த சிகிச்சை முறைகள் உள்ளன. அகத்தியர் அருளிய வர்ம பரிகார முறையில் உள் மருந்துகள் கொடுத்தும் கழுத்து, தோள்பட்டைப் பகுதியில் மூலிகை தைலங்கள் தடவி சீராக கழுத்தை வர்ம முறையில் நீவி விட்டு வந்தால் கழுத்துப் பகுதியில் உள்ள எலும்புகளைச் சுற்றியுள்ள பசைத்தன்மை இளகி சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும். நாளடைவில் வலி நீங்குவதுடன் மேற்கண்ட குறிகுணங்களும் மாறும்.

இதுபோல் சித்தா, ஆயுர்வேத முறைகளிலும் முழுமையாக கழுத்து வலியை குணப்படுத்தலாம்.

கழுத்து வலி வராமல் தடுக்க:

இன்றும் கிராமங்களில் பெண்கள் தண்ணீரை தலையில் சுமந்து செல்கின்றனர். மூட்டை களையும் சுமக்கின்றனர். 100 கிலோ அளவு எடையைத் தாங்கும் கழுத்து. எந்தப் பொருளும் தூக்காதவர்களுக்கு தலையைத் தாங்கமுடியாமல் போவதற்கு காரணம் உணவு முறை மாறுபாடும், முறையான உடல் உழைப்பும் இல்லாததே.

உணவு முறை:

நேரம் கடந்த உணவு, அதீத உணவு, எளிதில் சீரணமாகாத உணவு, நொறுக்குத்தீனி, மது, போதைப்பொருள், நீண்ட பட்டினி, வாயு பதார்த்தங்கள் உண்பது. அல்லது அதிக குளிர்ச்சியூட்டும் உணவுகளை உண்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

மலச்சிக்கலைப் போக்குவதுடன், தினமும் மதிய வேளையில் ஒரு கீரையை சேர்த்து சாப்பிட வேண்டும். இரவில் கீரை, தயிர் இவற்றை தவிர்க்க வேண்டும்.

இரவு நேர உணவு மென்மையானதாவும், எளிதில் செரிமானம் ஆகக்கூடியதாகவும் இருக்கவேண்டும். பாதி வயிற்றுக்கு சாப்பிடுவது நல்லது. மேலும் படுக்கைக்கு செல்லும் 2 மணி நேரத்திற்கு முன் இரவு உணவை முடித்துவிட வேண்டும்.

குறிப்பாக காலை உணவை தவிர்க்க கூடாது. இரவு முழுவதும் காலியாக உள்ள வயிற்றில் காலை உணவு சாப்பிடாமல் இருந்தால் வயிற்றில் வாய்வு தொல்லை உண்டாகும். இதனால் காலை உணவை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.

பிராய்லர் கோழி, முட்டை, பதப்படுத்தப்பட்ட உணவு, ஊறுகாய் இவற்றை தவிர்ப்பது நல்லது.

உடல் உழைப்பு

உடல் உழைப்பு என்பது பலருக்கு இல்லாமல் போய்விட்டது. காரணம் கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்களே அதிகம் உள்ளனர். இவர்கள் தினமும் அரை மணி நேரமாவது ஒதுக்கி யோகா, உடற்பயிற்சி செய்வது.

யோகா ஆசிரியரை அணுகி முறைப்படி யோகா கற்றுக் கொள்வது நல்லது. மன உளைச்சல், மன எரிச்சல், மனஅழுத்தம், டென்ஷன் இவைகளை குறைக்க தியானம் செய்யலாம்.

அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் சிறிது நேரம் எழுந்து நடந்து பின் வேலை செய்யலாம். குறிப்பாக கணினி முன் வேலை செய்பவர்கள் சிறிது ஓய்வெடுத்து பின் வேலை செய்வது நல்லது.

படுக்கை

தலையணை அதிக உயரமில்லாமல் இருக்க வேண்டும். பள்ளம் மேடு இல்லாத படுக்கையிலேயே தூங்க வேண்டும். அதிக குளிர் காற்று உடலில் படும்படியாகத் தூங்கக்கூடாது.

மருத்துவமுறை

கழுத்து வலிக்கு கழுத்துப்பட்டை, அறுவை சிகிச்சை முறை மட்டும்தான் சிகிச்சைமுறை என முன்பு பலர் நினைத்தனர். ஆனால் அறுவை சிகிச்சையில்லாமல் வர்ம பரிகார முறையில் இரண்டு வாரங்கள் தொடர்ந்து உள்மருந்தும், தைலம் தடவி ஒற்றடம் கொடுத்தும் தோள்பட்டை வர்மத்தை , (தோள்பட்டை வாதம்) இயக்கி இறுகிப்போன கழுத்து பகுதிகளை சரிசெய்து வலியைப் போக்கி இரத்த ஓட்டத்தை சீர்படுத்தலாம். இதுவே கழுத்து வலிக்கு சிறந்த சிகிச்சை முறையாகும்.

மேலும் வர்ம மருத்துவத்தில் வயிற்று உபாதைகளுக்கு மருந்து கொடுத்து மீண்டும் கழுத்தில் நீர் கோர்த்துக்கொள்ளாமல் பாதுகாக்கலாம்.

வர்ம சிகிச்சை முறையில் அறுவை சிகிச்சை மற்றும் கழுத்து பட்டை அணியாமல் கழுத்து வலியை பூரண குணமடைய செய்யலாம்.

மேற்கண்ட முறைகளை முறையாகக் கடைப்பிடித்து கழுத்து வலியிலிருந்து விடுபடலாம்.
 
Last edited:

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#3
Re: கழுத்து வலி

Thank you so much letchumi @chan.
These articles helps me a lot.
Thanks again.
 
chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
Cervical Spondylosis - கழுத்து வலி.செர்விகல் ஸ்பாண்டிலோஸிஸ

கழுத்து வலி...

எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பது சித்தர்களின் முதுமொழியாகும். மனிதனின் இயக்கங்கள் அனைத்திற்கும் உள்ள சூட்சும பகுதிதான் சிரசு. பஞ்ச பூதங்களின் செயல்பாடுகள், பிரபஞ்ச சக்தியை உணரும் தன்மை அனைத்தும் சிரசின் வழியே தான் நடைபெறுகிறது. இத்தகைய சக்திகள் அனைத்தையும் தன்னுள் அடக்கி பல கோடிக்கணக்கான அணுக்களைக் கொண்ட பந்து போல தோற்றமளிக்கும் சிரசை தாங்கி நிற்பது கழுத்துப்பகுதிதான்.

கழுத்து உடலின் முக்கிய உறுப்பாகும். கழுத்தில்தான் முக்கிய நாடி நரம்புகள் நெருக்கமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கும். உடலுக்கும் சிரசுக்கும் இரத்தம் மற்றும் நரம்புகள் பிரயாணம் செய்கின்றன. கழுத்தின் மையமாக தண்டுவட எலும்புகள் உள்ளன. இதில் ஏழு எலும்புகள் உள்ளன. அந்த எலும்பு சட்டத்தைச் சுற்றி தசைகளும், தசை நார்களும் உறுதி கொடுக்கின்றன. இந்த கழுத்து எலும்பிலிருந்து தான் கைகளுக்கு போகும் நரம்புகள் வெளிவருகின்றன.

மேலும் உணவுக்குழாய், மூச்சுக்குழாய் உள்ளன. மூளைக்கும் இருதயத்திற்கும் இடையேயான இரத்த ஓட்டம் கழுத்தின் வழியேதான் நிகழ்கிறது.

முதுமைப் பருவத்தில் கழுத்து எலும்புகளின் இணைப்புகளில் ஏற்படும் தேய்மானத்தைத்தான் செர்விகல் ஸ்பாண்டிலோஸிஸ் என்று அழைக்கின்றனர். இதை தமிழில் தோள்பட்டை வாதம் என்கின்றனர். இது பொதுவாக நடுத்தர வயதுடையோரிடமும், முதியோரிடமும் குறிப்பாக ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வோரிடமும் காணப்படுகிறது.

குடல், வயிறு இவற்றின் மூலப் பகுதிகளில் உஷ்ணம் அதிகமானால் வயிற்றுப் பகுதியில் உள்ள அபான வாயுவின் அழற்சி காரணமாக குடல் மேலும் உஷ்ணப்பட்டு உடலில் உள்ள நீரானது அபான வாயுவால் மேல்நோக்கி தள்ளப்படுகிறது. இதனால் உடலில் உள்ள நீர் தலைப்பகுதிக்கு வந்து கோர்த்துக்கொள்ளும்.

பின்பு கழுத்து நரம்பு வழியாக முதுகுப் பக்கம் (பின்பகுதி) நீர் இறங்கும். இவ்வாறு இறங்கும் நீரானது கழுத்துப் பகுதிக்கு வரும்போது அதன் தன்மை மாறி பசை போல் கடினமாகிறது. பின்பு அது இறுகித் தடித்து கடினமானது போல் ஆகிவிடும். இதுதான் தோள்பட்டை வாதம். உதாரணமாக கடலில் உள்ள நீரானது அதிக வெப்பத்தால் ஆவியாவி மேல்சென்று மேகமாக மாறி பின் மழை நீராக பொழிவது போல் குடலில் உள்ள நீர் உஷ்ணமாகி ஆவியாக மாறி மேல்நோக்கி சிரசுக்கு சென்று அங்கு நீராக மாறி பிறகு கழுத்துப் பகுதிக்கு இறங்குகிறது. இதைத்தான் சித்தர்கள் அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்கின்றனர்.

கைகள் மரத்துப் போகும். சுண்டுவிரல் செயலிழுந்து போகும். மன எரிச்சல் உண்டாகும். தூக்கமின்மை ஏற்படும். எப்போதும் கோபம் கொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். கண் எரிச்சல், உண்டாகும். எழுதும்போது கை விரல்களில் வலி ஏற்படும். படிக்கும்போது கழுத்து வலி உண்டாகும். மேலும் குனியும் போதும்,நிமிரும்போதும் தலை சுற்றி கண்ணில் மின்னல் போல் தோன்றி உடல் அதிரும். நரம்புகள் இறுகும். ஒருசிலருக்கு நடக்கும்போது தலை சுற்றல் உண்டாகும்.

கழுத்து கடுத்து, தடித்து காணப்படும். மன நிம்மதியின்றி காணப்படுவார்கள். பித்த உடற்கூறு கொண்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் உண்டாகும். வாத உடலமைப்பு கொண்டவர்களுக்கு கழுத்து இறுகி திருப்ப முடியாத நிலை ஏற்படும். கப உடலமைப்பு கொண்டவர்களுக்கு கழுத்து பகுதி தடித்து உப்பு நீர் கலந்து கருத்துப்போய் பட்டை பட்டையாக தடித்து காணப்படும்.

அதிக வியர்வை உண்டாகும். கழுத்துப் பகுதியில் எரிச்சல் தோன்றும். ஒரு சிலருக்கு இடது பக்கமாக கழுத்துப் பகுதியிலிருந்து நீர் கீழிறங்கி தோள்பட்டையில் வலியை உண்டாக்கும். இது நெஞ்சு வலியைப் போன்று தோன்றும். நெஞ்சு வலிக்கும் தோள்பட்டை வலிக்கும் வித்தியாசம் கண்டறிவது கடினம்.

தொடர்ந்து பல நாட்களாக கழுத்து வலி காணப்படும் அந்த வலியானது தோள்வரை பரவும், கழுத்துப் பகுதியில் கை பட்டவுடன் வலி தோன்றும்.

கழுத்து வலி வரக் காரணம்:

மலச்சிக்கல், குடலில் வாய்வுக் கோளாறு,மூலச்சூடு, தலையில் நீர் கோர்த்தல், மன அழுத்தம் போன்ற காரணங்களால் தோள்பட்டை வலி உண்டாகிறது.

கழுத்துவலியை தவிர்க்கும் முறை:

மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும். வாயுவை உண்டாக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது தாகம் ஏற்பட்டால் குளிரூட்டப்பட்ட நீரோ, குளிர்பானங்களோ அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது.

வாகனங்களை மிதமான வேகத்தில் ஓட்ட வேண்டும். அடிக்கடி பிரேக் போடுவதை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை சிறு சிறு தூரங்களுக்கு நடந்து செல்வது நல்லது. ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

கழுத்து வலிக்கு இந்திய மருத்துவ முறையில் நிறைய மருந்துகள் உள்ளன. குறிப்பாக வர்ம பரிகார முறையில் உள் மருந்துகள் சில கொடுத்து கழுத்துப் பகுதி தோள்பட்டைப் பகுதியில் எண்ணெய் தடவி சீராக கழுத்தை நீவிவிட்டு வந்தால் நாளடைவில் இரத்த ஓட்டம் சீராகும். தோள்பட்டை வலியும் நீங்கும்.
வர்ம பரிகார முறையில் இதை எளிதாக குணப்படுத்தலாம். அறுவை சிகிச்சை தேவையில்லை.

இதுபோல் சித்த மருத்துவ முறையில் சீர்கேடடைந்த உறுப்புகளுக்கு பலம் கொடுக்க கிழி ஒற்றடம், பிழிச்சல் முதலியன செய்வார்கள். இவ்வாறு செய்து வந்தால் நோயிலிருந்து விடுபட்டு உறுப்புகளில் உள்ள வலி,குத்தல், குடைதல், இசிவு, பிடிப்பு, வீக்கம் முதலியன மெல்ல மெல்லக் குறைந்து அவற்றின் தளர்ச்சி, செயலின்மை போன்றவை நீங்கி உடல் பலம் பெறும்.

இந்த முறையில் சிகிச்சை செய்வதின் மூலம் கழுத்து வலிக்கு அறுவை சிகிச்சை செய்வதை தவிர்க்கலாம்.

உணவு :

பொதுவாக வாயுவின் சீற்றத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகளைக் குறைத்து எளிதில் சீரணமாகக் கூடிய சத்துள்ள பொருட்களை உண்பது நல்லது. கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒதுக்க வேண்டிய உணவுகள்:

மொச்சை, உருளை, தக்காளி, வாயுவை உண்டாக்கு உணவுகளை தவிர்க்க வேண்டும்.

படுக்கை:

தலையைணை இல்லாமல் தூங்குவது நல்லது. மேடுபள்ளம் இல்லாத சமமான படுக்கையே நல்லது. அதிக குளிர்காற்று உடலில் படும்படியாக படுக்கக்கூடாது.

இத்தகைய நடைமுறைகளை கடைப்பிடித்தால் தோள்பட்டைவாதம் என்ற கழுத்து வலியிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
re: Cervical Spondylosis - கழுத்து வலி.செர்விகல் ஸ்பாண்டிலோஸி&#3

Cervical spondylosis

Cervical spondylosis பிரச்சினை . இது கழுத்தில் உள்ள சவ்வும், எலும்புகளும் தேய்கிற ஒரு நிலை. பலருக்கும் நாட்பட்ட வலிக்கு இது காரணமாக இருக்கிறது. கழுத்தெலும்பு அதிகம் பயன்படுத்தப்பட்டுவந்தால் இது ஏற்படுகிறது.

கழுத்தில் இரண்டு எலும்புகளுக்கிடையே சவ்வு போன்ற பொருள் உண்டு. சில நேரங்களில் அந்த எலும்பு அதீத வளர்ச்சியால் துருத்திக்கொள்ளும். இந்தத் துருத்தி கொள்ளும் பகுதி, கழுத்திலிருந்து வெளிவருகிற நரம்பு மண்டலத்தை அழுத்தும். சில நேரங்களில் தண்டுவடமும் அழுத்தப்படலாம். இந்த நேரங்களில் கை மட்டுமல்லாமல் காலும் பாதிக்கப்படலாம். தினமுமே இவ்வாறு கழுத்தைத் தவறான நிலையில் வைப்பதால், தேய்வுநிலை ஏற்படலாம்.

அதிக வேலைப்பளு உள்ளவர்கள், விளையாட்டில் அதிகக் கவனம் செலுத்துபவர்களை இது பாதிக்கலாம். வயது ஆகஆக இது அதிகரிக்கும். 60 வயது ஆகும்போது அனைவருக்குமே எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தால், கழுத்தெலும்பு தேய்மானம் காணப்பட வாய்ப்பு உண்டு.

இது அல்லாமல் வேறு சில காரணங்களாலும் கழுத்தெலும்புத் தேய்மானம் ஏற்படலாம். அதிகமாக உடல் பருமனுடன் இருப்பது, உடற்பயிற்சியே செய்யாமல் இருப்பது, கனமான பொருட்களைத் தூக்குவது, கழுத்தை அடிக்கடி முன் பின் அசைப்பது, வளைப்பது, கழுத்தில் அடிபடுவது, சிறு வயதில் அடிபட்டுக் கவனிக்காமல் விட்டுவிடுவது, கழுத்து தண்டுவட அறுவை சிகிச்சை, கழுத்தில் இருக்கிற சவ்வு பிதுங்குதல், கழுத்தில் வாத நீர் வருவது, கழுத்தில் கனத்தன்மை குறைகிற osteoporosis எனும் நோய் தோன்றுவது போன்றவை அந்தக் காரணங்கள்.

தேய்மான அறிகுறிகள்
இந்த நோய்க்கான அறிகுறிகள் மெதுவாகத் தோன்றும். சில நேரம் திடீரென்று கடுமையான வலியை உண்டாக்கும். வலி லேசானதாகவோ, கடுமையானதாகவோ இருக்கும். கழுத்தை அசைக்க முடியாமல் போகும். சிலருக்குக் கழுத்து வலி, தோள்பட்டை வரை பரவலாம். நின்று கொண்டிருந்தாலோ, உட்கார்ந்து கொண்டிருந்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, சிரித்தாலோ, கழுத்தைப் பின்பக்கமாக வளைத்தாலோ, நடந்தாலோ வலி கூடும்.

கை தசைகளில் பலம் குறையும். கையைத் தூக்குவதில் சிரமம் ஏற்படும். துணியைப் பிழிவதில் சிரமம் ஏற்படும். கைகளில் தசைகள் இறுகிப் போகும். கைகளில் மரத்துப் போகும் தன்மை ஏற்படும். சிலருக்குத் தலைவலி ஏற்படலாம். நடக்கும்போது தள்ளாட்டம் வரலாம். பதற்றமான சூழ்நிலைகளில் சிறுநீர், மலம் கட்டுப்பாடின்றிப் போகும். தண்டுவடம் பாதிக்கப்பட்டிருந்தால் இவ்வாறு வரும்.

பரிசோதனை முறைகள்
மருத்துவர் கழுத்தை முன்புறம், பின்புறம் மற்றும் பக்கவாட்டில் அசைக்கச் செய்து இந்த நோயைக் கண்டறிவார். வலுக் குறைவு, உணர்ச்சிக் குறைவு இருக்கிறதா என்று பார்ப்பார்.

கழுத்துப் பகுதியை எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்பார். தேவைப்பட்டால் MRI, EMG, nerve conduction study எடுப்பார். பிசியோதெரபி செய்யச் சொல்லுவார். தசைகளுக்கு வலுவூட்டுகிற பல பயிற்சிகள் உள்ளன. அவற்றைச் சரியாகப் புரிந்துகொண்டு செய்ய வேண்டும். மசாஜ் இதற்கு ஒரு சிறந்த சிகிச்சை. அக்குபங்சர் போன்ற சிகிச்சைகளைச் சிலர் செய்வதுண்டு.

நவீன மருத்துவத்தில் ஆரம்ப நிலையில் வலியைக் குறைப்பதற்கு ஐஸ் சிகிச்சையும், உஷ்ணமான சிகிச்சையையும் மாற்றி மாற்றிச் செய்வார்கள். வலி நிவாரணிகளைத் தற்காலிகமாகக் கொடுப்பார்கள். அபூர்வமாகத் தண்டுவடம் அழுத்தப்பட்டால் அறுவை சிகிச்சை தேவைப்படும். சாதாரணமாக இதை லகுவாகச் சமாளித்துவிடலாம். மலம் மற்றும் மூத்திரம் போவதைக் கட்டுப்படுத்த இயலாமை, தசைகள் இயங்குவதில் கஷ்டம், நடப்பதில் கஷ்டம் இருந்தால் சிகிச்சை செய்வதற்குக் கடினமாகும்.

ஆயுர்வேதச் சிகிச்சை முறை
கழுத்துப் பகுதி கபம் சார்ந்த பகுதி. இங்கு வாதம் சேர்கிறபோது தேய்வு வருகிறது. தசை பிதுங்குகிறது. நரம்பு மரத்துப் போகிறது. வாதமும் குளிர்ச்சியானது. கபமும் குளிர்ச்சியானது. இங்கு உஷ்ணமான சிகிச்சைகளைச் செய்ய வேண்டும். இதைக் கிரீவாகிரஹம் என்றும், கிரீவா குண்டனம் என்றும் அழைப்பார்கள்.

கழுத்து வலி நீங்குவதற்குச் சிற்றரத்தை பற்று, கொள்ளு பற்று, மூசாம்பரம் பற்று போன்ற பற்றுகளைப் போடுவார்கள். அதன் பிறகு கொட்டம் சுக்காதி எண்ணெய், பருத்தி எண்ணெய் என்ற கார்ப்பாஸாஸ்தியாதி எண்ணெய், சிஞ்சாதி எண்ணெய், பிரபஞ்சனம் எண்ணெய், விஷமுஷ்டி எண்ணெய், விஷக் கர்ப்ப எண்ணெய் போன்றவற்றைத் தேய்த்து ஆவி பிடிக்கவோ அல்லது எண்ணெயைப் பஞ்சில் முக்கி வைக்கவோ செய்வார்கள். அதன் பின் கார்ப்பா ஸாஸ்தியாதி எண்ணெயை மூக்கில் இரண்டு சொட்டு விடுவார்கள். பின்பு துணியில் மருந்துகளைக் கிழியாகக் கட்டி ஒத்தடம் கொடுப்பார்கள்.

உள்ளுக்கு மாவிலங்கப்பட்டை கஷாயமாகிய வருணாதி கஷாயம், தசமூலக் கஷாயம், ராஸ்னாபஞ்சகம் கஷாயம், ஆபாகுக்குலு, யோகராஜ குக்குலு, தான்வந்தர தைலம் வஸ்தி பாகம் போன்றவை கொடுப்பதுண்டு, பூண்டு பால் கஷாயமும் கொடுப்பதுண்டு, தலையில் எண்ணெயை அக்குபங்சர் வைக்கிற சிரோ வஸ்தி போன்ற சிகிச்சைகளும் இதற்குச் செய்வதுண்டு. வலி சற்றுக் குறைந்த பிறகு உடற்பயிற்சி, யோகா போன்றவற்றைச் செய்யலாம்.

யாருக்கு அதிகமாக வரும்?
சிலருக்குக் குடும்பத்திலேயே கழுத்து வலி வருவதுண்டு. புகை பிடிப்பவர்களுக்கு, கணினியில் வேலை செய்பவர்களுக்கு, கண்டக்டர் வேலை செய்பவர்களுக்கு, மனச் சோகம் உடையவர்களுக்கு இது வரலாம். பொதுவாக 8 வார சிகிச்சையில் 95 சதவீதம் பலன் கிடைக்கும். சிலர் மென்மையான காலர்கள் (கழுத்துப் பட்டை) அணிவதுண்டு. இது கழுத்தின் அசைவைக் கட்டுப்படுத்தும். கழுத்துக்கு ஓய்வு கிடைக்கும். இதைக் குறுகிய காலத்துக்குப் பயன்படுத்த வேண்டும். நீண்ட நாட்கள் பயன்படுத்தினால் தசைகளின் வலுவை இழக்கச் செய்துவிடும்.

எளிய தற்காப்பு முறைகள்
உயரமான தலையணை வைத்துத் தூங்கும் பழக்கம் உள்ளவர்களுக்குப் பெரும்பாலும் இந்தக் கழுத்து வலி வருவதாகக் கூறப்படுகிறது. எனவே, கழுத்து வலி வந்தால், முதலில் தலையணை வைத்துத் தூங்குவதை நிறுத்துங்கள். சமதளமான தரையில் பாய் விரித்துத் தூங்குங்கள்.

நொச்சி இலையை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி, அதைத் தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் கழித்து வெந்நீரில் குளிக்கலாம்.

வாதமடக்கி (வாத நாராயணன்) இலையைக் கொதிக்கவைத்து உடம்புக்கு ஊற்றலாம்.

அமுக்கராக் கிழங்கைத் தெளிந்த சுண்ணாம்பு நீரில் குழைத்துக் கொதிக்க வைத்துக் கழுத்தில் பற்றுப்போட்டு வந்தால், கழுத்து வலி குறையும்.

குப்பைமேனி இலையை எடுத்துச் சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து, அதேயளவு நல்லெண்ணெயுடன் கலந்து தைலப் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்துவந்தால் கழுத்து வலி குறையும்.

அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்கள், சிறிது நேரம் எழுந்து நடந்த பின் வேலை செய்யலாம். குறிப்பாக, கணினி முன் வேலை செய்பவர்கள் சிறிது ஓய்வெடுத்த பின் வேலையைத் தொடர்வது நல்லது.

வாகனங்களை மிதமான வேகத்தில் ஓட்ட வேண்டும். அடிக்கடி பிரேக் போடுவதைத் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை குறைந்த தொலைவுள்ள பகுதிகளுக்கு நடந்து செல்வது நல்லது. ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.