ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்போன் செய்திகள் !!

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,263
Likes
3,171
Location
India
#31
ரூ.1.25 லட்சம் விலையில் வெளியாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்?

சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் நீண்ட காலமாக அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கென பிரத்யேக ஹார்டுவேர் பயன்படுத்த இருப்பதாகவும், இதனால் ஸ்மார்ட்போனின் விலை KRW 20,00,000 (இந்திய மதிப்பில் ரூ.1,25,000) வரை இருக்கும் என கூறப்படுகிறது.

பார்சிலோனாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் (MWC) அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் 2019 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் (CES) அறிமுகமாக இருக்கிறது.

மடிக்கக்கூடிய சாம்சங் ஸ்மார்ட்போன் கேலக்ஸி எக்ஸ் என அழைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. சமீபத்திய பேட்டியில் சாம்சங் மொபைல் பிரிவு தலைமை செயல் அதிகாரி டி.ஜெ. கோ புதிய ஹார்டுவேர் வெற்று தகவல் கிடையாது என்றவாக்கில் கருத்து தெரிவித்திருந்தார். முன்னதாக சர்வசேத நுகர்வோர் மின்சாதன விழாவில் சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய சாதனத்தின் ப்ரோடோடைப் பிரீவியூ செய்திருந்தது.புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் குறித்து கொரியா டைம்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களின்படி மடிக்கக்கூடிய வடிவமைப்புக்கான உபகரணங்கள் நவம்பர் மாத வாக்கில் தயாரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மற்ற பணிகள் அடுத்தடுத்து துவங்கும் என கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விலை 20 லட்சம் KRW (இந்திய மதிப்பில் ரூ.1.25 லட்சம்) வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே வெளியான தகவல்களில் சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் 7.3 இன்ச் டிஸ்ப்ளே பேனல் கொண்டிருக்கும் என்றும் உள்புறம் மடிக்கக்கூடியதாக இருக்கும் என கூறப்படுகிறது. வெளிப்புறம் மடிக்கக்கூடிய சாதனம் பின்னாட்களில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

தனியார் ஆய்வு நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் கிம் ஜாங் யோல் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி மடிக்கப்பட்ட நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் திரை 4.5 இன்ச் அளவு கொண்டிருக்கும் என தெரிவித்திருக்கிறார். இதேபோன்று ஷின்ஹான் வணிக வல்லநுர் பார்க் ஹூங் வூ வெளியிட்டிருக்கும் தகவல்களில் புதிய சாதனத்தில் இரண்டு டிஸ்ப்ளே பேனல்கள் இருக்கும் என்றும், இதில் ஒன்று வெளிப்புறம் இருக்கும் என தெரிவித்திருந்தார்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
#32
புதிய நிறத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ் இந்தியாவில் வெளியிடப்பட்டது

1529061476766.png

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் சன்ரைஸ் கோல்டு எடிஷன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி எஸ்9 பிளஸ் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. முதற்கட்டமாக கோரல் புளு, லிலாக் பர்ப்பிள் மற்றும் மிட்நைட் பிளாக் என மூன்று நிறங்களில் வெளியிடப்பட்ட நிலையில் புதிய நிறம் இந்தியாவில் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் மொபைலில் இருந்து டிவியை இயக்கும் வசதியை ஸ்மார்ட்திங்ஸ் செயலியில் (SmartThings app) சேர்த்துள்ளது. டிவி கன்ட்ரோல் என அழைக்கப்படும் இந்த விட்ஜெட் முன்னதாக செயலியில் செயல்படுத்தப்பட்டு இருந்தது. இந்த அம்சம் செயல்படுத்தப்பட்டால், பயனர்கள் டிவியின் அருகில் சென்றால் ஸ்மார்ட்போனில் விட்ஜெட் தானாக தோன்றும். இந்த விட்ஜெட் பயனர்களை இருவித-ஸ்கிரீன் மற்றும் சவுன்ட் மிரரிங் செய்யும்.

டிவி கன்ட்ரோல் விட்ஜெட்-இல் வியூ ஸ்கிரீன் மோட் (View Screen mode) மூலம் பயனர்கள் தொலைகாட்சியை வீட்டில் எந்த அறையில் இருந்தும் பார்க்க முடியும். இதே போன்று கேம் மற்றும் ஸ்மார்ட்போன் தரவுகளை தொலைகாட்சிகளில் மிரர் செய்ய முடியும்.இந்த டிவி கன்ட்ரோல் விட்ஜெட் பிளே சவுன்ட் ஆப்ஷன் வழங்குவதால், பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் இருக்கும் மியூசிக்-ஐ தொலைகாட்சியில் இயக்கலாம். அந்த வகையில் இது ப்ளூடூத் ஸ்பீக்கர் போன்று பயன்படுத்த முடியும். டிவி டு டிவைஸ் (TV to Device) ஆப்ஷன் தொலைகாட்சியில் உள்ள ஆடியோவை மொபைல் சாதனங்களில் கேட்க வழி செய்யும்.

புதிய சன்ரைஸ் கோல்டு நிற கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் 128 ஜிபி வேரியன்ட்-இல் கிடைக்கிறது. இதன் விலை ரூ.68,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ப்ளிப்கார்ட் தளத்தில் முன்பதிவு செய்யப்படும் புதிய ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் ஜூன் 20-ம் தேதி முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஒரு முறை ஸ்கிரீன் சரி செய்யும் வசதி, தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டு அல்லது பேடிஎம் மால் மூலம் பணம் செலுத்துவோருக்கு ரூ.9000 கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
#33
ரூ.4,000 பட்ஜெட்டில் ஈசிஃபோன் கிரான்ட் அறிமுகம்

1529351522833.png

சீனியர்வொர்ல்டு எனும் நிறுவனம் தனது ஈசிஃபோன் பிரான்டின் கீழ் புதிய மொபைல் போனினை அறிமுகம் செய்துள்ளது. ஈசோஃபோன் கிரான்ட் என அழைக்கப்படும் இந்த மொபைல் போன் முதியோருக்கு ஏற்ற வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த காலத்துக்கு ஏற்ப பாதுகாப்பாகவும், எந்நேரமும் இணைப்பில் இருக்க ஏதுவாக இந்த மொபைல் போன் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக சீனியர்வொர்ல்டு தெரிவித்துள்ளது.

ஒலியை கட்டுப்படுத்த பிரத்யேக தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இந்தியாவின் முதல் மற்றும் ஒற்றை மொபைல் போனாக ஈசிஃபோன் கிரான்ட் இருக்கிறது. காது கேட்கும் குறைபாடு இருப்பவர்களில் கூடுதல் உபகரணங்களை பயன்படுத்த விரும்பாதோருக்கு இந்த மொபைல் சிறப்பான தீர்வாக இருக்கும்.ஈசிஃபோன் கிரான்ட் மொபைலில் பயன்படுத்தப்படும் விசேஷ தொழில்நுட்பம் ஆடியோவை அழைப்புகள் மட்டுமின்றி தொலைகாட்சிகளை பார்க்கும் போது மட்டுமின்றி, மற்றவர்களுடன் பேசும் போதும் சிறப்பாக வேலை செய்கிறது. முதியோருக்கு ஏற்ற வகையில் ஆடியோ அதிக ஒலியை வழங்குவதோடு, அது சீராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போன் டையலிங், விருப்பமான கான்டாக்ட்களுக்கு கீ ப்ரெஸ் அம்சம், எஸ்ஓஎஸ் பட்டன் (அவசர அழைப்புகளை மேற்கொள்ளலாம்) உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பெரிய எழுத்துக்கள், குவாட் பேன்ட், ரிமைன்டர் அம்சம், எஸ்எம்எஸ் மற்றும் சைரன் மற்றும் எஃப்எம் போன்றவை வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் வால்யூம் பட்டன், டார்ச் மற்றும் லாக் / அன்லாக் பட்டன் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் ஈசிஃபோன் கிரான்ட் விலை ரூ.3,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயனர்கள் இந்த மொபைல் போனினை சீனியர்வொர்ல்டு அதிகாரப்பூர்வ வலைத்தளம், ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் உள்ளிட்டவற்றில் விற்பனை செய்யப்படுகிறது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,263
Likes
3,171
Location
India
#34
பிரத்யேக கேமரா ஷட்டர் கொண்டிருக்கும் கேலக்ஸி நோட் 9

1529383581169.png

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 9-ம் தேதி அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் குறித்து ஏற்கனவே வெளியான தகவல்களில் கேலக்ஸி நோட் 8 போன்ற வடிவமைப்பு, மேம்படுத்தப்பட்ட கேமரா மாட்யூல், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 512 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என கூறப்பட்டது.

சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க பிரத்யேக பட்டன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. தற்சமயம் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் டிஜிட்டல் அசிஸ்டன்ட் சேவையான பிக்ஸ்பியை இயக்க பிரத்யேக பட்டன் வழங்கப்பட்டிருக்கிறது.

தென் கொரியாவில் இருந்து வரும் தகவல்களின் படி சாம்சங் நிறுவனம் பெர்ஃப்க்ட் கேப்ச்சர் டெக்னாலஜி (Perfect Capture Technology) பெயரில் காப்புரிமை பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதே தகவல்களில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் பிரத்யேக கேமரா அல்லது ஸ்கிரீன் கேப்பச்சர் கன்ட்ரோல்களை வழங்கும் பட்டன் கொண்டிருக்கும் என்றும் இந்த பட்டன் ஸ்மார்ட்போனின் இடதுபுறத்தில் பொருத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த பட்டன் கொண்டு பிரைமரி கேமரா அல்லது திரையின் மூலம் வீடியோக்களை பதிவு செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது. சமீப காலங்களில் ஸ்மார்ட்போன்களில் வழக்கமாக காணப்படும் பட்டன்கள் மற்றும் அவசிய போர்ட்களும் நீக்கப்படும் நிலையில், சாம்சங் வித்தியாச முயற்சியாக இருக்கும் வகையில் புதிய பட்டனை சேர்க்க இருக்கிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, 18:5:9 ரக ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 அல்லது சாம்சங் எக்சைனோஸ் 9810 சிப்செட், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது.
 
Joined
Aug 9, 2012
Messages
17,263
Likes
3,171
Location
India
#35
லீபோன் டேசென் 6ஏ இந்தியாவில் அறிமுகம்

1529467969358.png

லீபோன் நிறுவனத்தின் டேசென் 6ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5.7 இன்ச் ஹெச்டி பிளஸ் 2.5D விளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் மீடியாடெக் MT6737H சிப்செட், 3 ஜிபி ரேம். ஆன்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 0.3 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கபப்ட்டுள்ளது. ஃபேஸ் அன்லாக் வசதி கொண்டிருக்கும் டேசென் 6ஏ ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டிருக்கிறது.லீபோன் டேசென் 6ஏ சிறப்பம்சங்கள்:


- 5.7 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6737H 64-பிட் பிராசஸர்
- மாலி-T720 GPU
- 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 7.0 நௌக்கட்
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- 0.3 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
- 3000 எம்ஏஹெச் பேட்டரி

லீபோன் டேசென் 6ஏ ஸ்மார்ட்போன் கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் லீபோன் டேசென் 6ஏ விலை ரூ.7,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
#36
முன்பணம் இல்லாமல் ஐபோன் X வாங்கலாம்

1529493841145.png


ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் ஐபோன்களில் தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு முன்பணம் இல்லாமல், குறைந்த வட்டியில் மாத தவனை முறை வசதி வழங்கப்படுகிறது.

ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ், ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் X போன்ற மாடல்களுக்கு இந்த சலுகை பொருந்தும் என்பதோடு பயனர்கள் 18 மாதங்களுக்கு மாத தவனை செலுத்த வேண்டும். இந்தியாவில் வழங்கப்பட்ட தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளின் கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

இத்துடன் கேப்பிட்டல் ஃபர்ஸ்ட், ஹெச்டிபி நிதி சேவைகள் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி சார்பில் வழங்கப்பட்ட டெபிட் கார்டுகளுக்கும் தவனை முறை வசதி வழங்கப்படுகிறது.

மேலும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ஆக்சிஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹெச்எஸ்பிசி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இன்ட் வங்கி, ஜெ&கே வங்கி, கோடாக் மஹேந்திரா வங்கி, ஆர்பிஎல் வங்கி, ஸ்டேன்டர்டு சேட்டர்டு வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் யெஸ் பேங்க் உள்ளிட்ட வங்கிகளின் கிரெடிட் கார்டுகளுக்கும் மாத தவனை முறை வசதி வழங்கப்படுகிறது.அனைத்து சலுகைகள் மற்றும் முழு விவரங்கள் இந்தியாஸ்டோர் (indiaistore.com) வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இதில் மாத தவனையை கணக்கிட பிரத்யேக கால்குலேட்டர் இடம்பெற்றிருக்கிறது. ஆப்பிள் இந்த சலுகையை அறிவித்திருக்கும் ஐபோன் மாடல்கள் மற்றும் அவற்றுக்கான மாத தவனை சார்ந்த விவரங்களை இந்த வலைத்தளத்தில் தெரிந்து கொள்ள முடியும்.

இத்துடன் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு, சிட்டி கிரெடிட் கார்டு, ஹெச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு, ஹெச்டிஎஃப்சி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் ஸ்டான்டர்டு சேட்டர்டு கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதலாக 5% கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்முறை அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகையில் 18 மாதங்களுக்கு தவனை முறையை தேர்வு செய்வோருக்கு மட்டும் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் ஒரு கார்டுக்கு இரண்டு பரிமாற்றங்களை செய்ய அனுமதிக்கப்படுகிறது, இதற்கான கேஷ்பேக் தொகை பரிமாற்றம் நடைபெற்றதில் இருந்து 120 நாட்களுக்குள் கிரெடிட் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஃப்லைன் விற்பனை மையங்களில் வழங்கப்படும் இந்த சலுகை ஜூன் 15-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. தற்சமயம் ஆப்பிள் மற்றும் சிட்டிபேங்க் இணைந்து ஐபேட், மேக்புக் மற்றும் ஆப்பிள் வாட்ச் சாதனங்களை வாங்குவோருக்கு ரூ.10,000 வரை கேஷ்பேக் வழங்குகிறது. இந்த சலுகை சிட்டிபேங்க் கார்டுகளை வைத்திருப்போருக்கு மட்டும் ஜூலை 31, 2018 வரை வழங்கப்படுகிறது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,263
Likes
3,171
Location
India
#37
இந்தியாவில் மெய்சு எம்6 ஸ்மார்ட்போன் அறிமுகம்

1529641345783.png

மெய்சு நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அந்நிறுவனம் அறிமுகம் செய்த எம்5 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக புதிய எம்6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

5.2இன்ச் ஹெச்டி 2.5D வளைந்தி கிளாஸ் ஸ்கிரீன், 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் 64-பிட் மீடியாடெக் MT6750 பிராசஸர், ஆன்ட்ராய்டு 7.0 நௌக்கட் மற்றும் ஃப்ளைம்ஓஎஸ் 6 (FlymeOS 6) இயங்குதளம், 13 எம்பி பிரைமரி கேமரா, 4-கலர் RGBW ஃபிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பாலிகார்போனேட் பாடி, மெட்டல் ஃபிரேம் மற்றும் மெட்டாலிக் கோடுகளை கொண்டிருக்கும் எம்6 ஸ்மார்ட்போனின் ஹோம் பட்டனில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட்போனினை 0.2 நொடிகளில் அன்லாக் செய்யக்கூடிய கைரேகை சென்சார், 4ஜி வோல்ட்இ சப்போர்ட் மற்றும் 3070 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.மெய்சு எம்6 சிறப்பம்சங்கள்:

- 5.2 இன்ச் 1280x720 பிக்சல் ஹெச்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் மீடியாடெக் MT6750 பிராசஸர்
- மாலி T860 GPU
- 2 ஜிபி ரேம்
- 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 7.0 நௌக்கட் மற்றும் ஃப்ளைம் ஓஎஸ் 6.0
- 13 எம்பி பிரைமரி கேமரா, 4-கலர் RGBW ஃபிளாஷ், PDAF, f/2.2
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3070 எம்ஏஹெச் பேட்டரி

மெய்சு எம்6 ஸ்மார்ட்போன் பிளாக், சில்வர், புளு மற்றும் கேல்டு என நான்கு நிறங்களில் கிடைக்கிறது. 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மெய்சு எம்6 இந்தியாவில் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூ.7,699 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,263
Likes
3,171
Location
India
#38
விற்பனையில் சியோமி முதலிடம் என்றாலும் 'இதில்' சாம்சங் தான் 'கில்லி'

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி காலாண்டு வரையிலான விற்பனையில் இந்தியாவில் முதலிடம் பிடித்திருக்கும் நிலையில், இன்ஸ்டால் பேஸ் அடிப்படையில் சாம்சங் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்தியாவை சேர்ந்த சைபர் மீடியா ரிசர்ச் (சி.எம்.ஆர்.) எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி இந்திய சந்தையில் பயன்படுத்தப்படும் சாதனங்களில் சாம்சங் நிறுவன சாதனங்கள் மட்டும் 30.8% ஆக இருக்கிறது. கடந்த இரண்டு காலாண்டுகளில் சியோமி, விவோ மற்றும் ஒப்போ போன்ற நிறுவனங்கள் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

சியோமி, விவோ மற்றும் விவோ நிறுவன சாதனங்களை முறையே 8.53%, 5.63% மற்றும் 5.02% பேர் பயன்படுத்தி வருகின்றனர். அதிகம் பேர் பயன்படுத்தும் நிறுவனங்களில் ஒற்றை இந்திய நிறுவனமாக மைக்ரோமேக்ஸ் இருக்கிறது. மைக்ரோமேக்ஸ் நிறுவன மொபைல்போன்களை 8.63% பேர் பயன்படுத்துகின்றனர்.


கோப்பு படம்

சி.எம்.ஆர். பிக் டேட்டா அனாலடிக்ஸ் திட்டமான மொபைலிஸ்டிக்ஸ் நடத்திய மற்றொரு ஆய்வில் இந்தியாவின் ஏழு மாநிலங்களில் மட்டுமே ஸ்மார்ட்போன் சந்தை 50%-க்கும் அதிகமாக இருக்கிறது. இந்த ஆய்வில் மொபைல் போன்கள், ஸ்மார்ட்போன் மற்றும் ஃபீச்சர் போன்களின் மார்ச் மாதம் வரையிலான எண்ணிக்கை கணக்கிடப்பட்டன.

மொத்தம் 41.5 கோடி மொபைல் போன் இன்ஸ்டாலேஷன்களில், ஸ்மார்ட்போன் மட்டும் 45.7% மொபைல் சந்தையை ஆக்கிரமித்து இருக்கும் நிலையில் இந்தியாவில் தொடர்ந்து ஃபீச்சர்போன் விற்பனை அமோகமாக இருந்து வருகிறது.

ஸ்மார்ட்போன் விற்பனையில் கேரளா மாநிலம் 64.7% விற்பனையை பெற்று முதலிடம் பிடித்திருக்கிறது. இதில் அசாம் மாநிலம் 26.8% விற்பனையுடன் பட்டியலில் இறுதி இடத்தில் இருக்கிறது. கேரளாவை தொடர்ந்து பாதிக்கும் அதிக ஸ்மார்ட்போன் விற்பனையை பதிவு செய்த மாநிலங்களின் பட்டியலில் டெல்லி (54.3%), குஜராத் (58.3%), இமாச்சல் பிரதேசம் (53.6%), மகாராஷ்ட்ரா (55.4%), பஞ்சாப் (57.4%) மற்றும் தமிழ் நாடு (53.8%) இருக்கின்றன.

அசாம், மத்திய பிரதேசம், பீகார், சட்டீஸ்கர் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் மொபைல் பயன்படுத்துவோரில் மூன்றில் ஒருவருக்கும் குறைவானோர் மட்டுமே ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வருவது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
 
Joined
Aug 9, 2012
Messages
17,263
Likes
3,171
Location
India
#39
விரைவில் இந்தியா வரும் நோக்கியா X6

1529735243250.png

நோக்கியா மொபைல் போன்களை அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்து வரும் ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா X6 ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் சீனாவில் வெளியிட்டது.

நோக்கியாவின் முதல் நாட்ச் ரக டிஸ்ப்ளே கொண்ட X6 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், இதன் வெளியீடு குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. சமீபத்தில், நோக்கியாவின் அதிகாரப்பூர்வ சர்வதேச வலைத்தளத்தில் நோக்கியா X6 ஸ்மார்ட்போன் ஷாப் நௌ (Shop Now) பட்டனுடன் இடம்பெற்று பின் விரைவில் எடுக்கப்பட்டது.

இந்நிலையில், நோக்கியா X6 ஸ்மார்ட்போன் நோக்கியா மொபைல் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவிடப்பட்டது. இந்திய வலைத்தளத்தில் மொபைல் போனின் யூசர் கைடு, ஸ்மார்ட்போனின் அனைத்து தகவல்களுடன் இடம்பெற்றிருந்தது. இதில், "இந்த ஸ்மார்ட்போன் மத்திய டெலிகாம் துறையின் அனைத்து விதிமுறைகளுக்கும் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. என குறிப்பிடப்பட்டுள்ளது.நோக்கியா X6 சிறப்பம்சங்கள்:


- 5.8 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி+ 19:9 ரக டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
- அட்ரினோ 509 GPU
- 4 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, ஆன்ட்ராய்டு பி அப்டேட்
- 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ், f/2.0, 1.0um பிக்சல்
- 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, 1.2um பிக்சல்
- 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, 1.0um பிக்சல்
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3060 எம்ஏஹெச் பேட்டரி
- குவால்காம் க்விக் சார்ஜ் 3.0

நோக்கியா X6 ஸ்மார்ட்போனில் நாட்ச் ரக டிஸ்ப்ளே, செங்குத்தாக பொருத்தப்பட்ட டூயல் பிரைமரி கேமரா , கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

இதன் 4 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி மாடல் விலை CNY 1,299 (இந்திய மதிப்பில் ரூ.14,800), 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் விலை CNY 1,499 (இந்திய மதிப்பில் ரூ.16,000), 6 ஜிபி ரேம், 64 ஜிபி வேரியன்ட் விலை CNY 1,699 (இந்திய மதிப்பில் ரூ.18,100) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.