ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவர் மடத்தின் ஸ்ர&

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,954
Likes
22,076
Location
Germany
#1



சென்னையில் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவர் மடத்தின் ஸ்ரீரங்க ராமானுஜ மகா தேசிகர் மரணம் அடைந்தார்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்தவர் இவர்.

தமிழாசிரியராக இருந்தார்.

தமிழ் மீது பற்றுக் கொண்டிருந்தார்.

கருத்தரங்கங்களில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றியுள்ளார்.

அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னையில் இருந்து வந்தார்.

இந்நிலையில் அவர் இன்று மரணமடைந்தார்.

அவரது உடல் இன்று மாலை சென்னையிலிருந்து ஸ்ரீரங்கத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அங்கு பக்தர்கள், தமிழ் ஆர்வலர்கள், மடாதிபதிகள், ஜீயர்கள் ஆகியோரின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.

அவரது உடலுக்கு நாளை இறுதி சடங்கு நடைபெறுகிறது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,954
Likes
22,076
Location
Germany
#2
Re: ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவர் மடத்தின் ஸ்&#29

[h=1]‘ஸ்ரீராமானுஜர் 1000’ சிறப்பு மலர் வெளியீடு[/h]
ஸ்ரீராமானுஜரின் 1000-வது பிறந்த ஆண்டின் முன்னோட்டமாக ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ‘ஸ்ரீராமா னுஜர் 1000’ என்ற சிறப்பு மலரை தயாரித்துள்ளது. இந்த சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரம வளாகத் தில் நேற்று நடந்தது. சிறப்பு மலரை ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீரங்க ராமானுஜ மகாதேசிகன் சுவாமி வெளியிட, முனைவர் இரா.அரங்கராஜன் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.


 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,954
Likes
22,076
Location
Germany
#3
Re: ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவர் மடத்தின் ஸ்&amp

வைணவ சமயம் (Vaishnavism) திருமாலை (விஷ்ணுவை) முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும். இச்சமயம் வைணவம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படுகிறது. இச்சமயம் இந்து சமயத்தின் ஆறு உட்பிரிவுகளுள் ஒன்றாகும்.

உலகில் தீமைகள் ஓங்கும் போது இறைவன் அவதாரம் எடுத்து அவற்றை அழிப்பார் என்பது வைணவ நம்பிக்கை

வைணவக் கடவுளான திருமால் எண்ணற்ற அவதாரங்கள் எடுத்துள்ளதாகவும் நம்புகிறார்கள்.


. திருமாலின் எண்ணற்ற அவதாரங்களில் குறிப்பிடத்தக்க மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், இராமன், பலராமன், கிருஷ்ணன், கல்கி என்ற பத்து அவதாரங்கள் தசவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த சமயத்தின் முக்கிய நூல்கள் வேதம், உபனிஷத்து, பகவத் கீதை, பஞ்சரந்தர ஆகமம், மகாபாரதம்,இராமாயணம், பாகவத, விஷ்ணு, கருட , நாரதிய, பத்ம , வராஹ புராணங்கள் ஆகும்.


குப்தர் போன்ற அரசர்களின் காலத்தில் செல்வாக்கு பெற்று தெற்காசியா முழுவதும் வைணவம் பரவியிருந்தது


இராமானுஜர் பரப்பிய விசிஷ்டாத்வைதம் என்ற தத்துவத்தில் ஆதி பரம்பொருள் நாராயணன் என்ற திருமாலே. அவன்தான் உபநிடதங்கள் கூறும் பிரம்மம். அவன் குணம் என்ற குன்றேறித் தாண்டியவன் என்று உபநிடதங்கள் கூறுவதன் உட்பொருள் அவனிடம் எல்லா நல்ல குணங்களும் இருக்கின்றன என்பதாம். அறம், ஞானம், சக்தி, அன்பு இவை யாவும் முடிவிலாத அளவுக்கு அவனிடம் உள்ளன. அவன் உயிரினங்களிடம் வைத்திருக்கும் அபார கருணையினால் அவ்வப்பொழுது அவதரித்து இடர் போக்கி தன்னுடன் சேர்ந்துகொள்ள வழி வகுக்கிறான். பிரம்மமும் ஜீவனும் உயிரும் உடலும் போல. ஜீவர்களனைவரும், மற்றும் பிரபஞ்சமனைத்தும் பிரம்மத்தின் உடலாகும்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,954
Likes
22,076
Location
Germany
#4
Re: ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவர் மடத்தின் ஸ்&#29




[h=2]ஸ்ரீ[/h]விசிஷ்டாத்வைதத்தில் ஸ்ரீ என்ற அன்னை தத்துவம் மையத்திலுள்ளது. இதனால் தான் இந்த சமயப் பிரிவுக்கே ஸ்ரீவைஷ்ணவம் என்ற பெயர். அன்னை தத்துவத்தை "தாயார்" என்று வைணவர்கள் அன்பொழுக அழைப்பர். இராமானுஜருடைய எல்லா நூல்களிலும் (முழுவதும் வேதாந்தம் பேசும் ஸ்ரீபாஷ்யத்தைத் தவிர) ஸ்ரீ என்ற மகாலட்சுமி, திருமாலின் மார்பில் அவருடன் என்றும் இருப்பதாகவே பேசப்படும். யாண்டும் கூட இருப்பவள் என்று பொருள்படும் அனபாயினி என்ற வடமொழிச் சொல்லை அடிக்கடி காணலாம். இராமானுஜருக்குப் பின் வந்தவர்கள் அன்னை ஸ்ரீயின் அருள் இல்லாமல் கடவுளிடம் நம் வேண்டுதல் செல்லாது என்பர். அதனாலாயே இன்றும் வைணவத் திருக்கோயில்களில் ஆசாரியனை தொழுத பின் தாயார் ஆகிய திருமகளை தொழுது பின் கோயில் மூலவரை தொழும் வழக்கமுள்ளது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,954
Likes
22,076
Location
Germany
#5
Re: ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவர் மடத்தின் ஸ்&amp




[h=2]வைணவ ஆச்சாரியர்கள்[/h]
புராண காலத்திலேயே தொடங்கிய ஸ்ரீவைஷ்ணவம், ஆழ்வார்கள் காலத்துப் பிரபந்தங்களில் பெருமை பெற்றது. ஒன்பதாவது நூற்றாண்டில் இப்பிரபந்தங்கள் நாதமுனிகள் என்பவரால் தேடி ஒருங்கிணைக்கப்பட்டு புத்துயிர் பெற்றது. அதனால் நாதமுனிகளே தற்கால ஸ்ரீவைஷ்ணவத்தின் முதல் ஆச்சாரியாராகக் கருதப்படுகிறார்.

நாதமுனிகளுக்குப்பிறகு ஆச்சாரிய பதவியில் வந்தவர்களில் சரித்திரப் பிரசித்தி பெற்றவர்கள் மூவர். இராமானுஜர், பிள்ளை லோகாச்சாரியர், வேதாந்த தேசிகர்.


இராமானுசரும், வேதாந்த தேசிகரும், மணவாளமாமுனிகளும் தமிழை இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று வழிகளிலும் ஆந்திரம், கர்நாடகம், ஒரிசா வரை ஆன்மீகத்தை பரப்பியுள்ளனர்

அரங்கத்துறையும் இறைவனின் அருளும், அனுமதியும் பெற்று ஆகம வழிபாட்டிலும், கோயில் திருவிழாக்களிலும் ஆழ்வார்களின் தமிழ் தேனை நடைமுறைக்கு கொண்டுவந்தனர்.

தமிழ் பாசுரங்ளை சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், ஒரியா மொழிகளில் எழுதி வைத்து, அந்த தேசத்து வைணவப்பெருமக்களால் இசைக்கப்பட்டு வந்தது. வேதம், ஆகம வழிபாட்டில் சமஸ்கிருதத்தை ஓதும்போது பிழை இல்லாமல் இயம்புவது கடும்பயிற்சி இல்லாமல் இயலாது. ஒலிப்புப் பிழை ஏற்படின் தவறான பொருளாக அமையும். இவ்வாறு ஏற்படும் பிழைப்பொருளைக்கூட பைந்தமிழ் பாசுரங்களை இசைத்து பாடுவதால் அப்பிழையைக்கூட கடவுள் பொறுப்பதாக கூறியதால், தமிழின் மேன்மையை அறிந்த இராமானுசர் அனைத்து வைணவ ஆலயங்கள், இல்லங்களிலும் பூஜை முறைகளில் பசுந்தமிழ் பாசுரங்களை நடைமுறைக்கு கொண்டுவந்தார். திருவிழாக்களின் போதும், கோயில்களின் அனைத்து வழிபாடுகளிலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து திருத்தி அமைத்தார். இல்லறச் சடங்குகளிலும் ஆழ்வார்களின் பாசுரங்களை வேதத்துக்கு இணையாக வைணவர்கள் ஓதிவரும் வழக்கம் இன்றளவும் உள்ளது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,954
Likes
22,076
Location
Germany
#6
Re: ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவர் மடத்தின் ஸ்&#29

[h=2]வைணவ பிரிவுகள்[/h]
வைணவ சமயத்தில் ஸ்ரீவைணவம், பிரம்ம வைணவம், ருத்ர வைணவம், குமார வைணவம் என பிரிவுகள் உண்டு. ஸ்ரீவைணவத்தில் வடகலை, தென்கலை, ராமாநந்தி, ஸ்வாமிநாராயண் என்று நான்கு பிரிவுகள் உள்ளன. பிரம்ம வைணவத்தில் தத்வவாதம், கெளடீய வைணவம் என்று இரு பிரிவுகள் உள்ளன.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,954
Likes
22,076
Location
Germany
#7
Re: ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவர் மடத்தின் ஸ்&#29

[h=2]திருமண்[/h]திருமண் இட்டுக் கொள்வதில் இரண்டு யோக முறைகள் உண்டு:

  • வடகலை திருமண்காப்பு: பாதம் இல்லாமல் போடும் வடகலை நாமம்



  • தென்கலை திருமண் காப்பு: பாதம் வைத்துப் போடும் தென்கலை நாமம்
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,954
Likes
22,076
Location
Germany
#8
Re: ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவர் மடத்தின் ஸ்&#29



திருச்சி ஶ்ரீரங்கம் ஶ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம். 1700-ம் வருடம் தொடங்கப்பட்ட ஶ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் 11 வது பட்டமாக, கடந்த 1989-ம் வருடம் ஜூன் மாதம் 1-ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார் ஶ்ரீமுஷ்ணம் ஶ்ரீமத் ஆண்டவன் ஶ்ரீரங்கராமானுஜ மகாதேசிகன் ஜீயர் சுவாமிகள்.


ஆயுர்வேதம், ஜோதிடம், இசை, சிற்பம் போன்ற கலைகளிலும் செய்யுள்கள் இயற்றுவதிலும் புலமை பெற்றிருந்தார். தமிழ் மட்டுமல்லாமல், சம்ஸ்கிருதம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் சிறந்து விளங்கினார்.

ஶ்ரீராமாநுஜரால் தோற்றுவிக்கப்பட்டதும், ஸ்வாமி ஶ்ரீநிகமாந்த மகாதேசிகனால் மேம்படுத்தப்பட்டதுமான ஶ்ரீவைஷ்ணவம் மற்றும் பிரபத்தி மார்க்கத்தைப் பரப்புவதில் பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். மேலும், ஶ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் சார்பில் பள்ளிக்கூடமும் கல்லூரியும் ஏற்படுத்தி, கல்வித்துறையிலும் அரும்பணியாற்றினார்.

சுமார் 30 ஆண்டுகளாக ஶ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் 11 வது பட்டமாக அரும்பணியாற்றிய ஶ்ரீமத் ஆண்டவன் மகாதேசிகர் சுவாமிகள் 19.03.201/ மதியம் 12.45 மணியளவில் காலமானார்.

ஶ்ரீசுவாமிகளின் பிருந்தாவன பிரவேசம் நாளை காலை 9 மணிக்கு மேல் ஶ்ரீரங்கம் கொள்ளிடக் கரையில் நடைபெறும்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,954
Likes
22,076
Location
Germany
#9
Re: ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவர் மடத்தின் ஸ்&#29




 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,954
Likes
22,076
Location
Germany
#10
Re: ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவர் மடத்தின் ஸ்

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஜீயர் உடல் நல்லடக்க

Advertisement




திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் 11வது பட்டமாக திகழ்ந்த ஸ்ரீரங்க ராமானுஜ மகாதேசிக சுவாமிகள், உடல் நலக்குறைவு காரணமாக, நேற்று சென்னையில் முக்தி அடைந்தார்.


அவரது உடல், அமர்ந்த நிலையில் கொண்டு வரப்பட்டு, ஸ்ரீரங்கம் கொள்ளிடம் கரையில் உள்ள மடத்தில், பக்தர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அகோபில மடம் ஜீயர், மன்னார்குடி செண்டலங்கார ஜீயர், விஷ்வ இந்து பரிஷத் செயல் தலைவர் வேதாந்தம்ஜி மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஜீயர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.




திருப்பதி தேவஸ்தான தலைமை அர்ச்சகர் சேஷாத்திரி தலைமையில், தேவஸ்தானத்தில் இருந்து மாலை கொண்டு வரப்பட்டு, ஜீயர் உடலுக்கு சாற்றி, அஞ்சலி செலுத்தப்பட்டது. பெங்களூருவில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட சீடர்களுடன் வந்த நித்தியானந்தாவும், ஜீயரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.


சம்பிரதாயப்படி, வேதபாராயணம் பாடப்பட்டு, கூடையில் அமர்ந்த நிலையில் வைத்து, சீடர்களால் தலையில் சுமந்து செல்லப்பட்ட ஸ்ரீரங்க ராமானுஜ மகாதேசிக சுவாமிகள் உடல், கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ள பெரிய ஆசிரம வளாகத்தில், (பிருந்தாவன பிரவேசம்) நல்லடக்கம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரம மேலாளர் வீரராகவ தேசிகன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.