ஸ்ரீ கிருஷ்ண லீலைகள் - Sri Krishna Leela

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,764
Likes
2,622
Location
Bangalore
#1
1527009414279.png

அந்த கருப்பு பயல் துரு துரு வென்று இருப்பவன்.ஒரு இடத்தில் நிற்காமல் அலைபவன். அவனுக்கு என்று ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். அத்தனை பேரும் சாமான்யமானவர்கள் அல்ல. கண் பார்த்ததை கை எடுக்கும்.
இவர்கள் அனைவருக்கும் லீடர் அந்த கருப்பு பயல். ஐந்திலிருந்து எட்டுக்குள் தாண்டாத வயசு அனைவருக்கும். சாதுவாக இருப்பவனையும் தயார் செய்து விடுவான் அந்த கருப்பு பயல். ஒரு வீடு பாக்கியில்லாமல் அந்த தெரு அதற்கடுத்த தெரு எதிர் தெரு அதன் பின்னால், என்று அந்த சிறிய கிராமத்தின் அனைத்துதெருவுக்கும் செல்வார்கள். எதற்கு? வீட்டில் கொஞ்சம் அசந்து இருக்கும் சமயம் பார்த்து அந்தந்த வீட்டில் சேமித்து வைத்திருக்கும் வெண்ணையை அபேஸ் செய்ய. ஒரு தடவை இரண்டு தடவை வேண்டுமானால் கோட்டை விட்டு ஏமாறலாம். விழித்து கொண்ட தாய்மார்கள் இந்த பயல்கள் கைக்கு எட்டாமல் உயரே உத்தரத்தில் ஒரு கயிற்றில் உரி கட்டி அதற்குள் வெண்ணை, பால் சட்டிகளை வைத்து விடுவார்கள். இந்த கும்பலுக்கு இதனால் பெரும் ஏமாற்றம். என்னடா செய்யலாம் என்று யோசித்தார்கள். இருக்கவே இருக்கிறானே தலைவன். அவன் யோசனை கொடுத்தான்.

எந்த வீட்டில் கொஞ்சம் அசந்து போய் இருக்கிறார்கள் என்று பார்த்து வந்து சொல்லுங்கள்" என்றான் கருப்பு பயல். அன்று இரண்டு வீடு தேறியது. ஆறடி உயரத்தில் வெண்ணை சட்டி உரியிலே தொங்க அந்த வீட்டுக்காரி குள த்துக்கு சென்று இருந்தாள். விடுவார்களா தக்க சமயத்தை. இந்த ஐந்தாறு பயல்களும் அந்த வீட்டில் நுழைந்தனர். லீடர் ஐடியா குடுக்க, ஒருவன் வாசலில் காவல் யாராவது வருகிறார்களா என்றுபார்க்க. ஒருவன் கையில் ஒரு பாத்திரத்துடன். திருடிய வெண்ணையை சேமிக்க; இரு பெரிய பயல்கள் மண்டியிட்டு குனிந்து நிற்க அனைவரிலும் சிறிய தலைவன் அவர்கள் மேல் ஏறி உயரே இருக்கும் வெண்ணை சட்டியில் கை விட்டு அள்ளி கீழே கொடுக்க பாத்திரக்காரனிடம் அது போய் சேரும். அடுத்த நிமிடம் அனைவரும் ஒதுக்குபுறமாக யமுனை நதியின் கரையோரம் வழக்கமாக சந்திக்கும் பகுதியில் ஒரு மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டு வெண்ணையை பாகப்பிரிவினை செய்வார்கள். கேட்கவேண்டுமா. பெரும் பங்கு கருப்பு பயலுக்கு தான்!

1527009427320.png
இது தொடர்ந்து நடப்பதால் அனைத்து கோபியர்களும் அந்த கருப்பு பயல் வீட்டுக்கு வந்தனர். அவன் தாயிடம் முறையிட்டு இந்த கொள்ளையை எப்படியாவது நிறுத்த.

இதோ வந்துவிட்டார்கள் திமு திமு வென்று. அவன் தாய் யசோதைக்கு புரிந்து விட்டது. அனைவரும் வந்தால் அது அந்த பயல் சம்பத்தப்பட்ட ஒரு கம்ப்ளைன்ட் தானே வழக்கம்போல.

அவன் அவர்களை பார்த்த கணத்திலேயே புரிந்து கொண்டான் நண்பர்கள் போட்டு கொடுத்து விட்டார்கள் என்று. ஒன்றுமறியாதவனாக தன் தாய் பின்னால் சென்று நின்று கொண்டு கட்டிக்கொண்டு நின்றான்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.