ஹெட் ஏக் கொடுக்கும் ஹெட் போன்!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஹெட் ஏக் கொடுக்கும் ஹெட் போன்!



பொதுவாக மனிதனின் காதுகளின் உட்பகுதியில் இருந்து தினமும் ஒரு குண்டுமணி அளவுக்கு மெழுகு வடிவில் இருக்கும் அசுத்தம் வெளியேறும். இது இயற்கையானது. தொடர்ச்சியாக ஹெட்செட் பயன்படுத்தும்போது, காதில் இருந்து வெளிவரும் அழுக்கானது காதுகளின் உட்பகுதியிலேயே கொஞ்சம் கொஞ்சமாகத் தங்க ஆரம்பிக்கும். அது நாளடைவில் அவர்களுக்கு அரிப்பையும் நமைச்சலையும் தரும். அதுபோன்ற வேளைகளில் 'பட்ஸ்’ பயன்படுத்தும்போது காது புண்ணாகிவிடும் வாய்ப்பு உள்ளது. இதற்கு 'டெலிபோன் இயர்’ என்றே பெயர் இருக்கிறது.

தொடர்ச்சியாக ஹெட்செட் பயன்படுத்துபவர்களுக்கு 'சென்ஸரி நியூரல் லாஸ்’ எனப்படும் பாதிப்பு ஏற்படும். இதனால் கேட்கும் திறன் குறைய ஆரம்பிக்கும், காதுக்குள் இரைச்சல் கேட்கும்.

அதிக அதிர்வினால் செவி மடலும் பாதிப்படையும். காரணமே இல்லாமல் காது வலி ஏற்படும். இவை எல்லாம் ஒன்று சேர்ந்து கேட்கும் திறனைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைப்பதோடு நாளடைவில் காது கேட்கும் திறன் முற்றாகப் பழுதாகும். இதைக் குணமாக்க சிகிச்சை முறைகளே கிடையாது. ஒரே தீர்வு காது கேட்கும் கருவி பொருத்திக்கொள்வதுதான். சாதாரணமாக வயதாவதன் காரணமாகத்தான் இந்த பாதிப்புகள் ஏற்படும். ஆனால் ஹெட்செட் பழக்கத்தினால் தற்போது இளவயதிலேயே இந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படுகின்றன

 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,539
Location
Hosur
#2
பகிர்வுக்கு நன்றி லக்ஷ்மி... நவீன கண்டுபிடிப்புகள் எல்லாமே ஓரளவுக்கு நம் உடலுக்கு தீமை பயப்பவையாகவே இருக்கிறது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.