ஹெபடைடிஸ் பி என்றால் என்ன ?

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,204
Likes
20,714
Location
Germany
#1
ஹெபடைடிஸ் பி என்றால் என்ன ?கல்லீரலை தாக்குவதற்கு ஹெபடைடிஸ் ஏ முதல் ஜி வரை பல வைரஸ்கள் இருக்கின்றன. இதில் மிகவும் அபாயகரமான வைரஸ் எதுவென்றால் ஹெபடைடிஸ் -பி மற்றும் ஹெபடைடிஸ் -சி ஆகிய வைரஸ்கள் தான். இந்த வைரஸ்கள் கல்லீரல் சுருக்க நோய், கல்லீரலில் புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டவை. கல்லீரல் சுருக்க நோய் தீவிரமாக இருந்தால், எதை சாப்பிட்டாலும் செரிக்காது, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாக அமையும்.

உடலில் ஹெபடைடிஸ் -பி வைரஸ் இருந்தால் என்ன அறிகுறி ?

மஞ்சள்காமாலை
உடல் சோர்வு
காய்ச்சல்
அடர் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல்
அடிக்கடி வாந்தி ஏற்படுதல்.

ஹெபடைடிஸ் வைரஸை பொறுத்தவரையில் அவற்றை தடுக்க இப்போது தடுப்பூசிகள் வந்துவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும், எந்த வயதிலும் போட்டுக்கொள்ளலாம். இதன் மூலம் ஹெபடைடிஸ் வைரஸ் காரணமாக கல்லீரல் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியும்.

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக கல்லீரல் செயலிழப்பு ஏற்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகி விடுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் ஆல்கஹால். மது அருந்துவதால் கல்லீரல் சுருக்கம் ஏற்பட்டு நிறைய பேர் கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டு, மரணமடைகின்றனர்.

கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்ட பின்னர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வது சாதாரண விஷயம் அல்ல. இதில் பல பக்க விளைவுகள் இருக்கின்றன. தவிர, 20 லட்சத்துக்கும் அதிகமாக செலவாகும். சிகிச்சைக்கு பிறகும் வாழ்நாள் முழுக்க மாத்திரை, மருந்துகள் எடுத்துகொள்ள வேண்டியிருக்கும். எனவே ஆல்கஹால் அருந்துவதை தவிர்ப்பதே சிறந்த தீர்வு என்கின்றனர் மருத்துவர்கள்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.