ஹெல்த்தி லைஃப் ஸ்டைல் - Healthy Life Style!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஹெல்த்தி லைஃப் ஸ்டைல்
கீர்த்தனா, இயற்கை மற்றும் அக்குபஞ்சர் மருத்துவர்

ஆரோக்கியம் காக்க...

மனதை லேசாக்குங்கள். மனம் சரியில்லாததால்தான் நிறைய உடல் பிரச்னைகள் ஏற்படுகின்றன. நல்ல உணவு, சுவாசம், பாஸ்ட்சர் (Posture) போன்றவை சரியாக இருந்தால், உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைத்துவிடும். மனம் ஆரோக்கியம் பெற அளவான, ஆழ்ந்த தூக்கம் அவசியம்.


சுய பரிசோதனை செய்யுங்கள்

தூங்கி எழுந்தவுடன் புத்துணர்வாக உணர வேண்டும். விழித்ததும் சிறுநீரும் மலமும் கழிக்கும் நிலையில் உடல் இருப்பது அவசியம். நகத்தை அழுத்திப் பார்த்தால், சிவப்பாக ரத்த ஓட்டம் தெரிய வேண்டும். இவை ஆரோக்கியத்தின் அடையாளம்.


ஒரு நாளை திட்டமிடுவது எப்படி?காலை எழுந்தவுடன் கசப்புச் சுவையுடன் அந்த நாளைத் தொடங்கினால், இதயம், நரம்பு மண்டலம் வலுப்பெறும். கசப்பை சுவைத்தால், மாரடைப்பு, நரம்புகளின் பாதிப்பு வராது. வேப்பங்குச்சி, வேலங்குச்சி போன்ற கசப்பும் துவர்ப்பும் கலந்த சுவை, நம்மை நோய்களிலிருந்து காப்பாற்றும்.

தூங்கி எழுந்தவுடன் ஓய்வெடுத்த உறுப்புகளைப் புத்துணர்வு செய்வதற்கு, ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தலாம். இதனால், குடலுக்கு லேசான அசைவு கிடைக்கும். கறிவேப்பிலைச் சாறு, இரவில் ஊறவைத்த வெந்தயத் தண்ணீர் போன்றவை அருந்தலாம். கல்லீரலைத் தூண்டிவிடும் செயல்கள் இவை.

காலை உணவைத் தவிர்த்தால், பல உபாதைகளுக்கு ஆளாகும் வாய்ப்புகள் அதிகம். புரதம் நிறைந்த காலை உணவாக இருந்தால், அன்றைய நாள் முழுவதுக்குமான ஆற்றல் கிடைத்துவிடும்.

காலை 11.30 மணி அளவில் நட்ஸ், உலர்பழங்கள், பழங்கள், பழச்சாறு, சூப் போன்றவை சாப்பிடலாம். மாலை 5 மணிக்கு ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த ஃப்ளாக்ஸ் விதைகள், பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள், பழங்கள் சாப்பிடலாம்.

காலை, மாலை உடற்பயிற்சி செய்தல், கீழே உட்கார்ந்து சாப்பிடுதல், அருகில் இருக்கும் கடைக்கு நடந்து செல்லுதல், வீட்டுப் படிகளில் ஏறி இறங்குதல், இயந்திரத்தின் உதவி இன்றி வீட்டை சுத்தப்படுத்துதல் போன்ற வேலைகளில் ஈடுபடலாம்.

பிரபஞ்சத்தில் இருந்து நேரடியான ஆற்றலை ஈர்க்கும் சக்தி தியானத்துக்கு உண்டு. மூச்சுக் காற்றைக் கவனிக்கவும். நாளடைவில் எண்ண ஓட்டங்கள் குறையும். இதுவும் தியானம் செய்யும் உத்தி ஆகும்.உடல் தரும் 'அலர்ட்’

வாயில் துர்நாற்றம் வீசினால், வாய் மற்றும் வயிற்றுப் புண் இருக்கலாம்.

உடலில் நீர்த்தன்மை குறைந்தால், முகத்தில் பொலிவு குறைந்து, சோர்வாகத் தெரியும்.

நாக்கில் வெள்ளைப் படிமம் இருந்தால், அது செரிமானப் பிரச்னையாக இருக்கலாம். மிகவும் சிவப்பாக இருந்தால், அல்சர். மஞ்சளாக இருந்தால், பித்தம். வெளிர் நிறம் எனில், ரத்தசோகையாக இருக்கலாம்.

இளநரை வந்தால், உடலில் பித்தம் அதிகமாகி இருக்கலாம்.

பருக்கள், சருமப் பிரச்னைகள் வந்தால், வயிறு சுத்தமாக இல்லை என்பதை உணர்ந்துகொள்ளலாம்.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.