ஹெல்த்...ஹெல்த்..

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஹெல்த்...ஹெல்த்..


ஃபேக்ட்

*குறைந்தபட்சமாக வாரம் 16 கிலோமீட்டர் நடந்தாலே, இதய நோய் அபாயம் கணிசமாகக் குறைகிறது. தினம் இரண்டரை கிலோமீட்டர்தான்!

*எதிலும் பிடிப்பில்லாத நிலை, மனச்சோர்வு, தலைவலி, அஜீரணம், மூளை அழற்சி, சோம்பல், தூக்க மயக்கம் போன்றவை ஏற்படும் போது பொதுவாக கொட்டாவி வரும்.

*ஒவ்வொரு சிறுநீரகத்திலும் ஏறக்குறைய 10 லட்சம் சிறுநீர் வடிப்பிகள் உள்ளன. இவற்றை அலகுகள் அல்லது தொழில் பிரிவுகள் என்று
கணக்கிடுகிறார்கள்.

*நம் உடலில் தண்ணீருக்கு அடுத்து அதிகம் காணப்படுவது புரதம் (புரோட்டீன்).

*ஏசி அறையில் இருப்பவர்களுக்கு தாகம் எடுக்காவிட்டாலும், மற்றவர்களை விட சற்று அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும்.

*சருமத்தின் மேற்பகுதியில் லட்சக்கணக்கான எண்ணெய் சுரப்பிகள் இருக்கின்றன.

*டானிக் என்பது கிரேக்க சொல். தொடர்ந்து திசுக்களுக்கு சக்தி அளிக்கும் சத்து என்பதால் இந்தப் பெயர்.

*கேரட்டில் உள்ள பீட்டாகரோட்டீன் நிறமிக்கு புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் உண்டு.

*அமெரிக்காவில் கண்விழித்திரை மாற்று, சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைகளே மிக அதிக அளவில் செய்யப்படுகின்றன.

*குடலுக்குள் காணப்படும் புழுக்கள் வைட்டமின் ஏவை உறிஞ்சி விடுகின்றன.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.